கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 14 டிசம்பர், 2023

வெள்ளி, 8 ஜூன், 2018

ஈரானிய சுகந்திரத்தின வாழ்த்துக்கள்

ஈரானிய சுகந்திர தினத்திற்கு ஈரானியமக்களுக்கும் அங்கு வாழுகின்ற மக்கள் யாவருக்கும் கலைகழகத்தின் வாழ்த்துக்கள்

புதன், 21 மார்ச், 2018

கிரேக்கநாட்டின் சுகந்திரதின வாழ்த்துக்கள்(25-03)


கிரேக்க நாட்டின் சுகந்திர தினத்திற்கு கிரேக்கநாட்டை சேர்ந்த மக்களுக்கும் அங்கு வாழுகின்ற மக்களுக்கும் கலைகழகத்தின் வாழ்த்துக்கள்.

சனி, 17 மார்ச், 2018

இத்தாலிநாட்டின் சுகந்திரத்தின வாழ்த்துக்கள்













"இத்தாலி நாட்டின் சுகந்திரத்தினதிற்காக
 இத்தாலி நாட்டுக்குரிய,அங்கு வாழுகின்ற
 மக்கள் யாவருக்கும் கலைகழகத்தின்
 வாழ்த்துக்கள்"

ஞாயிறு, 5 மார்ச், 2017

கடிதம்

  1. அனுப்புனர், பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.
  2. யாருக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது என்பதைப் பொருத்து எப்படி அழைப்பது என்று முடிவு செய்து எழுத வேண்டும்.
  3. தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரசு அதிகாரி என்றால் மதிப்பிற்குரிய ஐயா எனஅழைக்க வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் அன்புள்ள என அழைக்க வேண்டும். வேறு வெளியாட்களாக இருப்பின் அன்புடையீர் என அழைக்க வேண்டும்.
  4. கடிதத்தின் பொருள் என்ன என்பதை எழுத வேண்டும்உள்ளடக்கம் - நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ, அதை சுருக்கமாக எழுதிட வேண்டும்.
  5. இறுதியில் ஊர், நாள் ஆகியவற்றை கடிதத்தின் வலது மூலையில்எ ழுதிட வேண்டும்.
  6. இடது மூலையில் யாருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்பதைப்பொறுத்து தங்களின் பணிவான, அன்பான, உண்மையான என்று எழுதிட வேண்டும்.
  7. தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரசு அதிகாரி என்றால் தங்களின் பணிவான என நிறைவு செய்திட வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் தங்களின் அன்பான என முடித்திட வேண்டும். வேறு வெளியாட்களாக இருப்பின் தங்களின் உண்மையான என நிறைவு செய்திட வேண்டும்.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் என்பது அதனை செம்மொழியாக அழைப்பதில் இருந்தே வெளிப்படையாக தெரிந்து விடக்கூடும்.
தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் பறைசாற்றும் தமிழின் ஆழத்தை அதன் சிறப்பை, எளிமையை. அந்த வகையில் தமிழ் என்றாலே ஓர் தனித்துவமே.
அதேபோன்று தமிழில் ஓர் தனி எழுத்து கூட ஓர் சொல்லாக வடிவம் பெற்று பொருள் தரும் தன்மை எம் மொழியின் சிறப்பு.
247 தமிழ் எழுத்துக்களில் பல எழுத்துக்கள் ஓர் எழுத்து சொல்லாக காணப்படுகின்றன. ஓர் எழுத்து சொல் என்பது ஒரே ஒரு எழுத்து ஒரு சொல்லாக மாற்றம் அடைந்து பொருள் தருவது ஆகும்.
ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். தமிழ் கவிகளில் இவற்றைக் காணமுடியும்.
அதாவது “அ” எனும் இந்த தனி எழுத்து “எட்டு சிவன், விஷ்ணு, பிரம்மா” போன்ற பொருள்களைத் தரும். அவ்வாறான தனி எழுத்து, சொல்லாக மாறி பொருள் அமைகின்ற எழுத்துக்களைப் பார்க்கலாம்.
  • அ - எட்டு சிவன், விஷ்ணு, பிரம்மா
  • ஆ - பசு, ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
  • ஈ - கொடு, பறக்கும் பூச்சி
  • உ - சிவன்
  • ஊ - தசை, இறைச்சி
  • ஏ - அம்பு
  • ஐ - ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
  • ஓ -வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
  • கா - சோலை, காத்தல்
  • கூ - பூமி, கூவுதல்
  • கை - கரம், உறுப்பு
  • கோ - அரசன், தலைவன், இறைவன்
  • சா -இறப்பு, மரணம், பேய், சாதல்
  • சீ - இகழ்ச்சி, திருமகள்
  • சே - எருது, அழிஞ்சில் மரம்
  • சோ - மதில்
  • தா - கொடு, கேட்பது
  • தீ - நெருப்பு
  • து - கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
  • தூ - வெண்மை, தூய்மை
  • தே -நாயகன், தெய்வம்
  • தை - மாதம்
  • நா - நாக்கு
  • நீ -நின்னை
  • நே - அன்பு, நேயம்
  • நை - வருந்து, நைதல்
  • நொ - நொண்டி, துன்பம்
  • நோ - நோவு, வருத்தம்
  • நௌ - மரக்கலம்
  • பா - பாட்டு, நிழல், அழகு
  • பூ - மலர்
  • பே - மேகம், நுரை, அழகு
  • பை - பாம்புப் படம், பசுமை, உறை
  • போ- செல்
  • மா - மாமரம், பெரிய, விலங்கு
  • மீ - ஆகாயம், மேலே, உயரம்
  • மு -மூப்பு
  • மூ - மூன்று
  • மே - மேன்மை, மேல்
  • மை - அஞ்சனம், கண்மை, இருள்
  • மோ - முகர்தல், மோதல்
  • யா - அகலம், மரம்
  • வா - அழைத்தல்
  • வீ - பறவை, பூ, அழகு
  • வை - வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
  • வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல்

ஞாயிறு, 26 ஜூன், 2016

மொனாக்கோ.

 உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ. 

கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் உள்ள வாட்டிகனுக்கு அடுத்து உலகில் உள்ள குட்டி நாடு இது.

மொத்தமே 499.2 ஏக்கர்தான் இந்த நாட்டின் பரப்பளவு. 

நம்ம ஊரில் உள்ள ஒரு கிராமத்தைவிட சிறிய நாடு.

 மொத்த சாலை தூரம் - 4.4 கிலோமீட்டர்தான். 

கடலோரப் பகுதி - 4.1 கிலோ மீட்டர்.

 நிலப்பரப்பு பட்டியலில் உலக அளவில் மொனாக்கோவுக்கு 248வது இடம். (110 ஏக்கர் பரப்புக் கொண்ட வாட்டிகன் 249வது இடம்)

 ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு அருகே மொனாக்கோ உள்ளது.

இந்த நாட்டின் மக்கள் தொகை தற்போது 36, 371.

மக்கள்தொகை குறைவாக இருப்பதாலோ என்னவோ, இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு ஆயுள் கொஞ்சம் அதிகம். இங்கு சராசரியாக மக்கள் 90 வயதுவரை வாழ்கிறார்கள்.

 பிரான்ஸுடன் இணைந்து இருந்த இந்த நாடு 1861-ம் ஆண்டில் தனி நாடானது.

இங்கு மக்கள்தொகை குறைவாக இருப்பதால் வெளிநாட்டு மக்கள் குடியேற முன்பு அதிகம் அனுமதிக்கப்பட்டார்கள்.

மக்கள் தொகை இருமடங்காகி விட்டதால் நாட்டின் பரப்பளவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளார்கள். எப்படித் தெரியுமா? 

கடலிலேயே பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டி வருகிறார்கள்.
உச்சக்கட்டமாக கடலுக்குள் பாதாளம் அமைத்து அங்கு ஒரு நகரை உருவாக்கவும் மொனாக்கோவில் திட்டமிட்டுவருகிறார்கள்.