கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 8 மார்ச், 2012

அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day)

ஆண்டுதோறும் மார்ச் 8 ம் திகதியன்று உலகு எங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.1789 ஆம் ஆண்டு ஜூன் 14ம் திகதி சுதந்திரத்துவம் சமத்துவம் பிரநிதிநி த்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சி யின் போது பாரி ஸிலுள்ள பெண்கள் போர்க் கொடி உயர்த்தினர் ஆணுக்கு நிகராக பெண் கள் சமுதாயத் தில் உரிமைகள் பெறவேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம் எட்டுமணிநேரவேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண் கள் பெண் அடிமைகளாக நடத்தப் படுவதில் இருந்து விடுதலை வேண்டுமென பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர் கையில்கிடைத்த ஆயுதங் களை எடுத்து கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண் டனர். புயல் ஆகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்கு வேன் என்றும் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான் ஆயிரக் கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதர வாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரை புரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டு ம் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என மிரட்டிய அரசனின் மெய் க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன் றனர் இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப் பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப் பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித் து எழுந்தவர்களைச் சமாதானப்படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான் என்ற செய்தி ஐரோப் பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங் களில் ஈடுபட்ட னர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்ட ங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமை யைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில் புருஸ்ஸியனில் இரண்டாவது குடி அரசை நிறுவிய லூயிஸ்பிளாங்க், பெண்களை அரச சபை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்ய வும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ம் நாள் தான் அனைத்து உலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.


அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்தனர்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 4 மார்ச், 2012

ராசி பலன்கள் 04/03/12-10/03/12


ரயில் விபத்து

போலந்தில் நடந்த ரயில்  விபத்து