கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 26 டிசம்பர், 2012

பிரான்ஸ் மொழியில் உணவு பொருட்கள்

Meat, Poultry, and Deli Products

Bacon - Lard maigre (lardons)

Beef - Boeuf

Boudin - Boudin

Chicken - Poulet

Cured ham - Jambon de pays

Dry sausage - Saucisson

Duck - Canard

Duck Confit - Confit de canard

Duck mousse - Mousse de canard

Goose - Oie

Goose liver - Foie gras

Ham - Jambon blanc

Lamb - Agneau

Lard - Saindoux

Mutton - Mouton

Organ meats - Abats

Pork - Porc

Rabbit - Lapin

Rillettes - Rillettes

Sausage - Saucisse

Turkey - Dinde

Veal - Veau

Wild Boar - Sanglier

திங்கள், 24 டிசம்பர், 2012

குரங்குகள் பரிணாம வளர்சி

குரங்குகள் பரிணாம வளர்சி /உணவுகளை  சுத்தம் பண்ணும் முறை

சனி, 8 டிசம்பர், 2012

ஞாயிறு, 11 நவம்பர், 2012

தமிழும்தமிழர் நாகரிகமும்-15

அவற்றுள் அடங்கும் ஜப்பனிய வேந்தர் பெயர்களை ஒப்பாய்வோம். Annie 549-476 BC அன்னி சங்க இலக்கியங்களில் பயிலும் ஒரு மன்னன் பெயர். Koan 392-291 BC காயன் ஏற்கென்வே ஆயப்பட்டது.  Korei 290-215 BC காரி Anko 453-456 AD அங்க > அங்கன்,அங்கு, அங்கி என எதியோபியா, சி. வெ. நாகரிகங்களில் வழங்குகிறது. Ankan 531-535AD அங்கன்- அன் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் அங்கு சாமி, அங்கப்பன், அங்கய்யன் வழங்குகின்றன. சி.வெ. ல் அங்கு, அங்கன் பயில்கிறது. எதியோபிய மன்னன் ஒருவனுக்குAngabo I 4142 BC எனப்பெயர்."

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


தமிழும்தமிழர் நாகரிகமும்-14

பல்லங்கி மாயன், எகிபது, போன்ற நாகரிகங்களிலும் ஒற்றை எழுத்தாகவே வழங்குகிறது. எகிபதில் ஒரு பொதுமகன் பெயர் கா அப்பர் என்பது. குய்யி - சி..வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் குய் எனறும் அன் ஈறு பெற்று குய்யன் என்றும் வழங்குகிறது. அசுடெக் மாயன் நாகரிக மன்னர்கள் பெயர் Cui tal huac 1520AD குய் தள் குய் அக் & Cua uhtec mac 1520-1525 AD குய்ய உக் திக் மாக் என்பது. பதவி வரிசையில் 67ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda Takeo 1976-78 பக்குட தக் ஈய > பக் உடை தக்கன் ஈயன் பதவி வரிசையில் 91 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda yasuo 2007-2008. தமிழில் பக் எனறால் பை என பொருள் பக் உடை என்றால் பை போன்ற உடை எனப்பொருள். சங்க இலக்கியத்தில் பயிலும் ஆசிவக மதத் தலைவர் பெயர் பக்குடை நன் கணியார் என்பது. இப்போது பதவியில் உள்ள பிரதமர் பெயர் Kan Naoto 2010 முதல் தமிழில் கான் நவ் அத்த > கானன் நவ்வன் அத்தன் என செம்மையாக படிக்கலாம். கானன் - அன் ஈறு பெறாமல் கான் என்றும், அன் ஈறு பெற்று கானன் என்றும் சி.வெ. பயில்கிறது. கானவன் இதன் மற்றொரு வழக்கு. கானவன் தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் இடம்பெறுகிறது. அத்தன் -அத்தர், அத்தி என பிற நாகரிகங்களில் வழங்கும். சென்னை ஜப்பானிய துணைத் தூதரக தலைவர் பெயர் Takayuki Kitagawa தமிழில் தக்கை உக்கி கித்த கவ்வ > தக்கை உக்கி கித்தன் கவ்வன் இதன் செம்மை வடிவு. தக்கை- தக்கன், தக்கி, தக்கு எனவும் வழங்கலாம். உக்கி தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் உக்கன் பயின்று வந்துள்ளது. கித்தன் ஈரானின் தென்மேற்கே அமைந்த ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Hita I 2270 BC> ஹ திரிபு. மற்றொரு மன்னன் பெயர் Attar Kittah 1370 BC கித்தன் ஈலத்தில் பயின்றாலும் சி.வெ. இப்பெயர் இல்லை. கவ்வன் - சி.வெ.முத்திரையில் மட்டும் காணப்படுகிறது. இனி ஜப்பான், கொரியா, சீனம் ஆகிய நாகரிகங்களில் மன்னர்களுக்கு இறந்தபின்பு பெயர் (PosthumusNames) வைப்பது ஒரு வழக்கம். 

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 10 நவம்பர், 2012

தமிழும்தமிழர் நாகரிகமும்-13

இன்றும். மாறன் பாண்டியர்குரிய பெயர். பதவி ஏற்பில் 41 ஆம்இடத்தை பிடிப்பவர் பிரதமர் koiso Kuniaki 1944-45 தமிழில் காய் த குன்னி அக்கி > காயன் த குன்னி அக்கி என செம்மையாக படிக்கலாம். காயன் - ஆதாம் ஏவாள் மகன் Cain, மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காயன்குளம் கேரளத்தின் ஓர் ஊர். குன்னி - அன் ஈறு பெறாமல் குன் எனவும், அன் ஈறு பெற்று குன்னன் எனவும் சி.வெ. முத்திரைகளில் பயில்கிறது. இன்றும் குன்னிராமன் என்ற பெயருள் ளோர் உண்டு. அக்கி - அக்கன், அக்கல், அக், அக்கம் என பலநாகரிகங்களில் வழங்குகிறது. பல்லங்கி என்ற இடத்தில் அமைந்த மாயன் நாகரிக மன்னர் பெயர் Ahkal Mo Nahb II 565 -570 AD அக்கல் மா நக்கவன். பதவி ஏற்பில் 46 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Katayama Tetsu 1947-48 தமிழில் கத்த யாம திட்டு > கத்தன் யாமன் திட்டு என செம்மையாக படிக்கலாம். திட்டன் எனபதே திட்டு என வழங்குகிறது. திட்டன்குடி > திட்டக்குடி. பதவி ஏற்பில் 61 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Satu Eisaku 1964-72 தமிழில் சாத்து இசக்கு > சாத்தன் இயசக்கன் என செம்மையாக படிக்கலாம். சாத்தன் - சி.வெ. முத்திரைகளிலும், சங்க இலக்கியங்களிலும் பயிலும் பெயர். சாத்தய்யா, சாத்தப்பன் இற்றை வழக்கு. இசக்கு இசக்கிமுத்து என இக்கால் நெல்லையில் வழங்குகிறது. இந்த இசக்கு மேற்கு நாகரிகங்களிலும் வழங்குகிறது. பதவி ஏற்பு வரிசையில் 64 ஆம் இடத்தை பிடிப்பவர் Tanaka kakuei 1972-74 தமிழில் தன் அக்க கா குய்யி > தன்னன் அக்கன் கா குய்யி என செம்மையாக படிக்கலாம். தன்னன் - அன் ஈறு பெறாமல் தன் என்றும், அன் ஈறு பெற்று தன்னன் எனறும் சி.வெ. முத்திரைகளில் வழங்குகிறது. தன்னவன் இதன் மற்றொரு வடிவம். கா - சி.வெ. ல் ஒற்றை எழுத்தாகவே பயில்கிறது. ஆங்கில U எழுத்தின் இரு மேல் ஓரங்களிலும் இரு கோடுகள் பெற்று ஏராளமாக காணப்படுகிறது. இக் கா 'திரு' என்பதைப் போல் மதிப்புரவாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 8 நவம்பர், 2012

தமிழும் தமிழர் நாகரிகமும்-12

 அண்மையில் வடலூர் அருகே மருங்கூர் என்ற இடத்தில் 'அதியகன்' என பெயர் பொறித்த பிராமி எழுத்து பானைஓடு கண்டெடுக்கப்பட்டது. இதை அத்தி+அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். பதவி ஏற்பு வரிசையில் 25 & 28 இடங்களை பிடிப்பவர் பிரதமர் Wakatsuki Reijiro 1926-27-31 இதில் வக்க என்ற தமிழ்ப் பெயர் உள்ளது. தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் வக்கன் என்ற பெயர் பயின்றுள்ளது. வ கரம் ப கரமாகி இப்பெயர் எகிபதின் 24 ஆம் ஆள்குடியில் ஒரு மன்னனுககு Bakenranef 720-715 BC வக்கன் அரணி என வழங்குகிறது. பதவி ஏற்பு வரிசையில் 32 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Hiroata Koki 1936-37 தமிழில் கீர அத்த காக்கை > கீரன் அத்தன் காக்கை என செம்மையாக படிக்கலாம். கீரன் ஹகர திரிபு பெற்று எதியோபியாவிலும் எகிபதிலும் வழங்குகிறது. நக்கீரன், கீரனூர் ஆகியன இதன் தமிழ் மரபிற்கு சானறு. அத்தன் தேவாரத்தில் பயில்கிறது. காக்கை - ஈழமன்னன் பண்டார வன்னியனை ஆங்கிலர்க்கு காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன். எகிபதின் 5ஆம் ஆள்குடி மன்னன் பெயர் Neferirkare Kakai 2477-2467BC. பதவி ஏற்பு வரிசையில் 34 & 38 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Konoe Fumimaro 1937-39 & 1940-41தமிழில் கானை உமி மாற > கானை உமி மாறன் என செம்மையாக படிக்கலாம். கானை - சி.வெ. முத்திரையில் அரிதாக வழங்கும் பெயர் இது கான், கானன் என சிந்து முத்திரையில் பரவலாக வழங்குகிறது. உமி - உமன் என தமிழக பானைஓட்டு சிந்து எழுத்துகளில் பயில்கிறது; உமி>வுமி>புமி>Fumi என திரியும். உமன் மேற்கு நாகரிகங்களில் உமர்(Omar) எனவழங்குகிறது. 

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


தமிழும் தமிழர் நாகரிகம்-11

தக்கன் - 1940 ல் கோவை சூளூரில் கிட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலத்தில் தக்க இன்னன் என்ற பெயர் எழுத்ப்பட்டுள்ளது. பதவி ஏற்பு வரிசையில் 3 & 9 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் yamagata Aritomo 1888-91 & 1898-1900எனபவர். தமிழில் யாம கத்த அரி தாம > யாமன் கத்தன் அரி தாமன் என செம்மையாக படிக்கலாம். யாமன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். பின்பு யா > ஆ எனத் திரிந்து ஆமன் என சங்க இலக்கியத்தில் பயில்கின்றது. கத்தன் - சி.வெ. முத்திரையில் பயிலும் பெயர், அரி - அரியான் என அன் ஈறு பெற்று அரியான் குப்பம் என பதுச்சேரியில் ஓர் ஊருக்கு பெயராகி உள்ளது. தாமன் -- பல மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் எனற ஏரி உள்ளது. பதவி ஏற்பு வரிசையில் 16 & 22 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Yamamoto gonbee 1913-1914 தமிழில் யாம மத்த கான்வி > யாமன் மத்தன் கானவன் என செம்மையாக படிக்கலாம். சி. வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் மத் என்றும், ஈறு பெற்று மத்தன் எனறும் இப் பெயர் பயின்று வந்துள்ளது. பண்டைய போனீசிய திரை Ancient tyrian நாகரிக மன்னன் பெயர் Mattan இவன் பெயரில் அன் ஈறு இடம் பெறுவது தமிழ் அடையாளத்தை தெளிவாக சுட்டுகிறது. அன் ஆண் பால் ஈறு பல நாகரிகங்களில் அர்,அல், அம், ஐ, இ எனவும் முடிகிறது. அவவாறே கானவன் என்ற பெயர் கானவி என ஜப்பானில் வழங்குகிறது. பதவி வரிசையில் 20 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Takahashi Korekiyo தமிழில் தக்க கத்தி(ஹ>க, ஷ > த மூலம்) காரி கய்ய > தக்கன் கத்தி காரி கய்யன் என செம்மையாக படிக்கலாம். கத்தன் எனபதே கத்தி ஆகியது. காரி -- கடை ஏழு வள்ளல்களுல் ஒருவன் மலையமான் திருமுடிக் காரி, காரிக் கிழார் ஒரு புலவர். எகிபது நாகரிகத்தில் 4 ஆம் ஆள்குடியில்(Dynasty) ஒரு மன்னன் பெயர் MenKaure 2490- 2472 BC மேன் காரி. தமிழில் மேன் உயர்வான, மேலான என பொருள் தரும்; அன் ஈறு பெற்று மேனன் என்றாகும். 7 & 8 ஆம் ஆள்குடியில் பல மன்னர் காரியை பட்டமாகவே கொண்டுள்ளனர். அவருள் ஒருவன் Netri Kare 2150 BC நெற்றி காரி.    பதவி ஏற்பு வரிசையில் 24 & 26 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Kato Takaaki தமிழில் காத்த தக்க அக்கி > காத்தன் தக்கன் அக்கி என செம்மையாக படிக்கலாம். காத்தன் - சி.வெ. முத்திரையில் இடம் பெறுகிறது; காத்தன்குடி ஈழத்தில் உள்ள ஓர் ஊர் பெயர்; காத்தமுத்து என இக்காலும் பெயர் தமிழில் வழங்குகிறது. அக்கன் என்பதே அக்கி ஆகியது. அன் ஈறு பெறாமல் அக் என பல நாகரிகங்களில் பயில்கின்றது. எதியோபியாவில் ஒரு மன்னன் பெயர் Gari Ak I (4404 BC) காரி அக். 6,400 ஆண்டுகள் பழமையான பெயர் இது. அக்கன் பிற நாகரிகங்களில் அக்கல் எனவும் வழங்கும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 6 நவம்பர், 2012

தமிழும் தமிழர் நாகரிகம்-10

இப் பண்டை நாகரிகங்களை தோற்றுவித்த தமிழர் ஒரு பொதுவான மூல இடத்தை விட்டகன்று இவ் இடங்களில் குடியேறி இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது, அதோடு தமிழ் மொழி 10,000 ஆண்டுகள் மேலான பழமை மிக்கது  கிறித்தவ, இசுலாமிய மதப் பரவலால் மேற்கின் பண்டை நாகரிக தமிழ் பெயர்கள் அவ் இடங்களில் மறைந்தாலும் கிழக்கு நாகரிக இடங்களில் இன்றும் வழங்குகிறது ஜப்பான் நாகரிகம் இதற்கு ஒரு சிறந்த சான்று. சில ஜப்பானிய பிரதமர் பெயர்களையும் மன்னர் பெயர்களை யும் எடுத்துக் கொள்வோம். வங்காளி, இந்தோனேசிய மொழிகள் போல ஜப்பானிய மொழியிலும் 'அ' கரம் 'ஒ' கரமாகியுள்ளது. அதோடு 'க'கரம் 'ஹ' கரமாகவும், 'வ'கரம் 'ப' கரமாகவும், 'த' கரம் ச, ஜ. ஷ வாக திரிந்து உள்ளது. இத் திரிபுகளின் மூல ஒலி கொண்டு படித்தால் தமிழ்ப் பெயர்கள் விளங்கத் தோன்றும். பதவி ஏற்பு வரிசையில் 2 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் kuroda kiyotaka 1888-89 எனபவர். தமிழில் குறு ஆத கய்ய தக்க > குறு ஆதன் கய்யன் தக்கன் என செம்மையாக படிக்கலாம். குறு - இளமைப் பொருள், ஆதன் - சேரர் பெயர், கய்யன் - பண்டை மேற்கு நாகரிகங்களில் இடம் பெறுகிறது. 

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 5 நவம்பர், 2012

தமிழும் தமிழர் நாகரிகமும்-9

தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் - கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர். Bawawlதமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo - தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர். Barawas - தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும். Serada தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன். Azegan Malbagad தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் - கருமைக் கருத்து, பகடு - எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம். கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion - திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின. தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும். மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன். மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம். இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்.. ஜப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்; சிந்து எழுத்துகளை பேராசிரியர் இரா. மதிவாணன் படித்துக் காட்டி 20 ஆண்டுகள் ஆன பின்னும் அது புகழ் பெற்ற ஆய்வாளர்களால் இன்னும் ஏற்கபடாமலேயே உள்ளது. ஈரெழுத்து சான்று இல்லாயினும் அவர் படித்த முறை சரியே. மெஹர்கார் சிந்து நாகரிகம் 9,000 ஆண்டுகள் தொன்மையான வை என்பதால் சிந்து வெளி முத்திரைப் பெயர்கள் பிற நாகரிகங்களில் உள்ளனவா? என்பதை அறிய அதற்கு மேற்கே அமைந்த எதியோபியா, எகிபது, போனீசியா, அக்காடு, ஈலம், பாபிலோன் நாகரிக மன்னர்களின்  பெயர்களை ஆராய்ந்த போது அவை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கிய மாந்தர் பெயர்களோடும், தமிழ்நாட்டு பானை ஓட்டு சிந்து எழுத்துப் பொறிப்பு பெயர்களோடும் ஒத்தாக இருந்தது அத்துடன் கிழக்கு நாகரிகங்க ளான சீனம்,கொரியா, ஜப்பான் போன்ற நாட்டு நாகரிகமன்னர் பெயர்கள்களில் .பல தமிழ் வடிவில் இருந்தது . இப்பெயர் ஒற்றுமை யானது தமிழர் நாகரிகம் பிற எல்லா நாகரிகங்களுக்கும் தாய் நாகரிகம் என்பதையும் அறிய கூடியதாக இருந்தது. 

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


தமிழும் தமிழர் நாகரிகமும்-8,

ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Ishki bal - தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் - ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் - வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte - தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும். Tomadyan Piyankhi III - தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர். Elalion Taake - தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் Liu Eloulou தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios - தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை - தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் - தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம். Atserk Amen III தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு - வெற்றி, செருக்கு -- பெருமிதம். ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள். இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர். தமிழில் காள > காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது. Stiyo - தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 4 நவம்பர், 2012

தமிழும் தமிழர் நாகரீகமும்-7


Ramenkoperm - தமிழில் இராமன் கோப்பெரும் என்பது செப்பமான வடிவம். கோப்பெரும் பெண்டு சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர். சோழன் ஒருவன் கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான். Pino stem - தமிழில் பிண்ண சேம் > விண்ணன் சேமன் என செப்பமாக படிக்கலாம். வ - ப திரிபு. விண்ணன் - சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர் இடம்பெறுகிறது. கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் தமிழில் விண்ண > விண்ணன். சேமன் - சிந்து முத்திரையயில் வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis) பெற்று சேமன் ஆனது. விழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர் உள்ளது. Hanyon I - தமிழில் கான் யாண் > கானன் யாணன் என செப்பமாக படிக்கலாம். இங்க ககரம் ஹகரமாகியது. சிந்து வெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு பெயரும் வழங்குகின்றன. சீனத்தின் கிழக்கு Han குடியில் ஒரு மன்னன் பெயர் Yan Kang - தமிழில் யாண் கான். ன்>ங் என மூக்கொலி பெறும். SeraI (Tomai) - தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser - தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில். இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று. Nicauta Kandae(queen) - தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது. Erda Amen Awseya - தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan -தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் - கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye தமிழில் சேயன் கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் - தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது. Gasiyo Eskikatir - தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். 

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 3 நவம்பர், 2012

தமிழும் தமிழர் நாகரிகமும்-6


Sanuka - தமிழில் சாண் உக்க > சாணன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். யகர சகர திரிபில் யாணன் சாணன் என திரிந்தது. சாணன் உக்கன் சிந்து வெளிப் பெயர்கள். ஈரானின் ஈலம் நாகரிக மன்னன் பெயர் .Ukku-Tanish  என்பது . பாபிலோன் மன்னன் பெயர் Nabu Suma Ukin II  சீன நாகரிகத்தில் Shang ஆள்குடி மன்னன் கோவில் பெயர் Tai Zangதமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்>ங் என மூக்கொலி பெறும்.

  Wiyankihi I - தமிழில் வய்யங்கி > வய்யன்+ அங்கி என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் ஒரு மன்னன் பெயர் வய் ஆவி என்பது. சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு மன்னனுடைய இயற்பெயர் அதே ஆள்குடியில் இன்னொரு மன்னனுக்கு ஆட்சிப் பெயர் Xiao xin  - தமிழில் வய்ய வய்யன் என்பது. சீனத்தில் வய் > Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.


வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வெள்ளி, 2 நவம்பர், 2012

தமிழும் தமிழர் நாகரீகமும்-5


Mandes  - தமிழில் மாந்தி என்பது செப்பமான வடிவம். உகர ஈறு பெற்று மாந்து எனவும், ஐகாரம் பெற்று மாந்தை எனவும் ஆகும். மாந்தரன் > மாந்து + அரன் ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர் நகரம்.

  Amoy - தமிழல் ஆமை > ஆமன் இதன் செப்பமான வடிவம். யா > ஆ திரிபு, யானை - ஆனை, யாந்தை - ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்று ஆமை ஆனது. குட்டாமன் - குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும் வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார் > முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.

இசுரேலின் யூதேய அரசன் பெயர் Amon  . Titon Satiyo  - தமிழில் திட்டன் சாத்தைய > திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம். திட்டன் - திட்டன் குடி > திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிக அரசியின் பெயர் Dido காசுமீர அரசிப் பெயர் Dida அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன. சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் - சிந்து வெளி முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae .சாத்தை > ஐகார ஈறு பெற்றுள்ளது.

  

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 1 நவம்பர், 2012

திருவிழாக்கள்

தமிழும் தமிழர் நாகரீகமும்-4

Etiyopus I  - தமிழில் எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என செப்பமாக படிக்கலாம். எட்டி - வணிகர்க்கு உயர்ந்தோன் எனும் பொருளில் பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. யாப்பன் - ஒரு பழந்தமிழ் பெயர். தென் அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒருமன்னன் பெயர் . Pachacutec Inca Yupanqui .- தமிழில் பச்சகுடி யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன் அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன் அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும் தமிழக்த்தில் வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.

Lakndun Nowarari. தமிழில் இள கந்தன் நவ்வர் அரி என்பது செப்பமான வடிவம். இள - இளமைப் பொருள். சங்க இலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி என வழங்குகிறது. ஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன் அத்திளா > அத்தி+இள எனபான். சிந்துவெளி முத்திரையில் அத்திள வழங்குகிறது. கந்தன் - சிந்துவெளி முத்திரையில் அருகி வழங்குகிறது. இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும். புகார் நகரின் அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் - சிந்துவெளி முத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும் காணப்படுகிறது. இங்கு அர் ஈறு பெற்றுள்ளது. அரி > அரியா இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர் ஊர் அரியான்குப்பம் > அரியாங்குப்பம்.

  Senuka I  - தமிழில் சேன் உக்க > சேனன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். சேனன் - சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்) சென்னியில் பயில்கின்றது. உக்கன் - சிந்து வெளி முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து மட் பாண்டத்தில் உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது. Aktis Sanis - தமிழில் அஃகுதி சாணி > அஃகுதை சாணன் என செப்பமாக படிக்கலாம். அஃகுதை - சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெயர். சாணன் - இகர ஈறு பெற்று சாணி ஆகியது. யகர சகர திரிபில் யாணன் > சாணன் ஆகும். யாணனும் சாணனும் சிந்து முத்திரைப் பெயர்கள். சீனத்தில் Yang உண்டு.

  

புதன்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 31 அக்டோபர், 2012

தமிழும் தமிழர் நாகரிகமும்-3

Wan Una - தமிழில் வண் உன்ன வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் - சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang  - தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் - தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு. எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas  - தமிழில் உன்ன > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.

Piori - தமிழில் பய் ஓரி > வய் ஓரி > வய்யன் ஓரி என செப்பமாக படிக்கலாம். வய் - வெம்மை, வைதல் என்பதன் வேர், வய்யன் - சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டு அருகே வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீன நாகரிகத்தில் Xi, Bi என திரிந்து பேரளவில் வழங்குகிறது.

Kosi Yope (queen) - தமிழில் அரசி காதி யாப்பி > காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம். தகரம் சகர இன ஒலியான ஸகரமாக திரிந்துள்ளது. காத்தி - தமிழக ஊர்புறங்களில் பெண் பெயராக வழங்குகிறது. ஆண் பால் பெயரான காத்தன் சிந்து வெளி முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால் பெயர் கூட காணப்படவில்லை. யாப்பி - இது ஒரு முது பழந்தமிழ்ச் சொல். ஆண் பால் பெயர் யாப்பன் என்பது.


செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 29 அக்டோபர், 2012

தமிழும் தமிழர் நாகரிகம்-2


முதலாமவர் O r i or aram - தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.

Gariak  தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் - வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.

Elaryan  - தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் - ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் - அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது

Eylouka (QUEEN) - தமிழில் அரசி எயில் அக்கா எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.

Kam  தமிழில் காம் காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல. இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.

Elektron  - தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji  தமிழில் எல்லு அப்பய்ய தி எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் - அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி - சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.

Manturay  - தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர - மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.

Azagan - தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.

Ramen Phate - தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல். வால்மீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிப்து மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர்.

Ramesses - தமிழில் இராமி சே இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் - சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் என்றும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.


ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 27 அக்டோபர், 2012

தமிழும் தமிழர் நாகரிகமும்-1

தமிழர் நாகரிகம்
தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.

உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.

எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.

தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக்காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின. அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம்.

இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தம் 21 பேர் ஆண்டுள்ளனர்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


சரஸ்வதி


மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள். லட்சுமி, பார்வதி தேவியர் பல்வேறு வண்ணங்களில் புடவை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் ஏன் தெரியுமா?சரஸ்வதி ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே பணிவும் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் படாடோபமாய் ஆடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைப் பார்த்ததும் இருப்பவர் அனைவரும் வரவேற்று மரியாதை செய்வர். கல்வி கற்றவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்பதை உணர்த்தவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள்.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

அங்கூர் வாட் அல்லது அங்கோர் வாட் (Angkor Wat)

அங்கூர் வாட் அல்லது அங்கோர் வாட் (Angkor Wat) 
என்பது, அங்கூர், கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் தொகுதியாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது.வாட் என்பது கோயில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல்.
ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழவுள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினூடாக முதலாவது வெளி மண்டபத்தை அணுகலாம்.

அங்கூர் வாட் கோயில், கம்போடியா
முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச் சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களினதும் சுவர்களில் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த terrace இன் மீது அமைந்து ஒன்றுடனொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு "நூலகங்கள்" அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன. அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன. கம்போடியாவைக் குறிக்கும் சின்னமாக விளங்கும் இக்கோவிலின் படம் அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம் பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 25 அக்டோபர், 2012

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்


தமிழர் பண்பாடு

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..
நன்றி - தமிழ்க்குடில்
தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்  

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

யாழ்ப்பாணம்


குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்

பகுதி- 3

முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்கமுடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை” என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.முல்லைத்தீவில் நின்று பண்டார வன்னியனின் வரலாற்றுத் தோளுரசியதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டார வன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர்களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் .

யாழ்ப்பாணம்

பண்டாரவன்னியன்- பகுதி- 2
பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவை யும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டாள். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னனாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்க வில்லை.ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம்காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனுப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.இது ஒரு புறமிருக்க. வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்த மறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமல் வெள்ளையர்கள் புறமுதுகு காட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத் தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டார வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்க வேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வன்னியன்.
இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது..இந்த கூத்தில் ஓரிரு சம்பவங்களை பார்க்கலாம்…தம்பி பெரியமைனர்— “அண்ணா நமது வன்னி நாட்டைக்கைப்பற்று நோக்கம் அந்த வெள்ளைக்கார கும்பலுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நமது சகோதரர்களாகிய சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற பெரும்படைகளை அனுப்பியிருக்கிறார்கள். இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்களமக்களுக்கு துணையாகவும் ஆங்கிலேயருக்கு எதிராகவும் வீறு கொண்டு சீறியெழும் எங்கள் படைகளை அனுப்பிவைத்தால் நன்மையாக இருக்கும்.”
பண்டரா வன்னியன்: “ஆகா நல்லது தம்பி கைலாயா உமது யோசனை என் தம்பி கைலாய வன்னியன்.”“அண்ணா கண்டிக்கு நமது படைகளை அனுப்புவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சிங்கள மக்களை காப்பற்ற உதவி புரிந்ததாக இருக்கும். அடுத்தது இந்த சந்தர்பத்தில் நமது படை பலத்தை வெள்ளையருக்கு காட்ட கூடியதாயிருக்கும்.சுணங்கமால் நமது படைகளை கண்டிக்கு அனுப்புதல் நலம்.”பண்டாரவன்னியன்: “தம்பி பெரியமைனர் நமது நாட்டில் விளைகின்ற ஏலம் கறுவா கராம்பு முதலிய திரவியங்களை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் வெள்ளைக்கார கும்பலுக்கு இடம் கொடுக்கலாகாது. எமது உடன் பிறப்பாகிய சிங்கள மக்களையும் கண்டி நாட்டையும் காப்பற்றியாக வேண்டும். எனவே தயங்காது நமது படைகளைக் கண்டிக்கு ஆயத்தம் செய்வாயாக…”கட்டப்பொம்மன் பாணியில் தேசாதிபதியுடனான சந்திப்பிலிருந்து ஒரு பகுதிதேசாதிபதி: வன்னியர் வேந்தே நாங்கள் பரஸ்பர அன்பு கொண்டாடி தங்களுடன் சிநேகதர்களாக நடக்க ஆசைப் படுகிறோம்.பண்டாரவன்னியன்: அதற்கு எந்தவித தடையுமில்லை தேசாதிபதி: நாங்கள் காக்கை வன்னியனிடமிருந்து கரிகட்டு மூலையை யும் முல்லைத்தீவையும் பெற்றுக்கொண்டோம்.பண்டராவன்னியன்: அதனால் என்ன காக்கைவன்னியன் கொடை வள்ளல். தருமபூபதி பாரிக்கும் அடுத்தவன், இல்லாதருக்கு உள்ளதை கொடுத்தான். இதில் என்ன அதிசயம்தேசாதிபதி:அதிசயம் இல்லாமலில்லை யாழ்ப்பாண நாடும் வன்னிபிரதேசத்தில் ஒருபகுதியும் எமது ஆங்கில ஆட்சிக்குட் பட்டது என்பது கருத்து. நீங்கள் மாத்திரம் தனித்து வாழ்வதில் அர்த்த மில்லை. பண்டராவன்னியன்:அப்படியானால்  அந்த அர்த்தத்துக்கு பயன் சொல்லிகொடுக்கவா அழைத்தீர்கள். தேசாதிபதி:அப்பிடியில்லை பணிந்து வாழ்ந்தால் பலனுண்டு பண்டராவன்னியன்:பணிந்து வாழ்தல் எங்கள் பரம்பரையிலையே கிடையாது..தோசாதிபதி:ஆணவமாக பேசினால் ஆபத்து நேரிடும்.பண்டரா வன்னியன்: ஆபத்து உங்களைத் தான்  நாடி வருகின்றது என்னையில்லை தேசாதிபதி:வாயை அடக்கி பேசு பண்..வன்னியன்: ஆண்டவனுக்கு அஞ்சாத பண்டாரனா ஆங்கிலேயனுக்கு அடங்க போகிறான் தே–பதி:வாயை பெரும் அழிவை தேடப் போகிறீர் பண்-வன்னி: அதற்க்காக நீங்கள் ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறீர் தேசாதிபதி: ஆங்கிலேயரை பகைத்தால்பண்டார:அழிவென்று சொல்லுகிறீர்கள் அதற்கு அஞ்சுபவனல்ல நான்தேசா:பாம்புடன்  விளையாடுகிறீர் பண்டார:பாம்புக்கும் பருந்தாயிருப்பேனன்றி விருந்தாகயிருக்கமாட்டன்

யாழ்ப்பாணம்


பண்டார வன்னியன் – பகுதி 1

ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.
இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.
முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள் . அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.
வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.
பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

சனி, 6 அக்டோபர், 2012

பத்து தலை நாகம்


யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து விலங்கியல் நிபுணர்கள் படையெடுத்திருக்கின்றனர். இலங்கை மிருக காட்சிசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் குழுவொன்றே யாழ்ப்பாணம் சென்றுள்ளது.

 எனினும் இது திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்ட கணணி போட்டோ சொப் மூலமான புகைப்படமே என ஆதாரங்களுடன் வல்லுனர்கள் கூறுகின்றனர். கொழும்பிலிருந்து வெளிவருகின்ற தேசிய நாளிதழ் ஒன்று தனது அடுத்தடுத்த பதிப்புகள் இரண்டில் பத்து தலை நாகம் தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தது. எனினும் உள்ளுரில் இது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

திட்டமிட்ட வகையில் வர்த்தக நோக்கம் கருதியதாக புற் தரையின் மத்தியில் ஒரு பத்துத்தலை நாகம் ஒன்று இருப்பதைப் புகைப்படம் மூலம் எடுத்து குடாநாட்டில் 10 முதல் 50 ரூபா வரை விற்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று பலரது கைத்தொலைபேசிகளுக்கும் கட்டணம் அறவிடப்பட்டு இது பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இது திட்டமிட்ட வகையில் வர்த்தக நேக்கில் பரப்பப்பட்டு வருவதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் அலட்டிக் கொள்ளாது கொழும்பு தேசிய நாளிதழ் ஒன்று பத்து தலை நாகம்  நடமாடுவதாக செய்திகளை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் கொழும்பிலிருந்து நிபுணர்கள் குழுவொன்று சென்று தேடுதல்களை நடத்தியிருந்தது.

சுழிபுரம் பகுதியில்; இது தொடர்பில் தங்கியுள்ளவர்கள்; கருத்துக் கூறிய பொழுது  இது தொடர்பில் தலைமை அலுவலகமே கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் தமது முயற்சி இதுவரை வெற்றி பெற்றிருக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

குறித்த 10 தலைநாக பாம்புகளைக் கண்டதாகக் கூறியவர்கள் தொடர்பில் தேடுதல்களை மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட போது அவ்வாறு தாம் எதனையும் கண்டிருக்கவில்லை எனவும் தகவல்களையே அறிந்ததாகவும் மாறி மாறிக் கூறி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இது திட்டமிட்ட வகையில் கணணி மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியாக இருக்கலாம் என்றே அவதானிகள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணம்

கூழங்கைச் சக்கரவர்த்தி
யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தியாவான். வையாபாடல் இப் பெயரின் வடமொழியாக்கமான கோளுறு கரத்துக் குரிசில் என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும். இவன் கை ஊனமுற்று இருந்த காரணத்தால், “கூழங்கையன்” என அழைக்கப்பட்டுப் பின்னர் “கூழங்கைச் சக்கரவர்த்தி” அல்லது “கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி” எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
“மணற்றிடர்” என்று அன்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணனே, இந்தியாவிலிருந்து,  தசரதன் மைத்துனனான குலக்கேது என்பவனின் மகனான கூழங்கைச் சக்கரவர்த்தியைக் கூட்டிவந்து முடிசூட்டினான் என வையாபாடல் கூற, சோழ வம்சத்தில் வந்த திசையுக்கிர சோழனுடைய மருமகனான சிங்ககேது என்பவனுடைய மகனே இவனெனவும்,  யாழ்பாடியின் பின் அரசனில்லாதிருந்த யாழ்ப்பாணத்தை ஆள இந்தியாவிலிருந்து இவனைப் பாண்டிமழவன் என்னும் ஒருவன் அழைத்து வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறும். வையா பாடலின்படி இவனுடைய ஆட்சித் தொடக்கம் கலியுக ஆண்டு 3000 (கி.மு. 101) ஆகும். தற்கால ஆய்வாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
தமிழ்ப் படைகளின் உதவியுடன் இலங்கைமீது படையெடுத்து அப்போதைய தலைநகரமான பொலநறுவையைத் துவம்சம் செய்த கலிங்க மாகன் எனும் கலிங்கத்து இளவரசனே காலிங்கச் சக்கரவர்த்தி என்னும் பெயருடன் தனியரசு நடத்தினான் என்றும் இப்பெயரே திரிபடைந்து கூழங்கைச் சக்கரவர்த்தியானதென்பதும், சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் போன்றோருடைய கருத்து. தற்போது இதற்குப் போதிய ஆதரவு இல்லை.
கூழங்கைச் சக்கரவர்த்தியின் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்பதே தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் காலக் கணக்கு ஆகும்.
இவ்வரசனே நல்லூர் நகரைக் கட்டியவன் என வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இன்னொரு இடத்திலிருந்தே ஆண்டான் என்றும், 15 ஆம் நூற்றாண்டிலேயே நல்லூர் கட்டப்பட்டது என்பதும் சிலருடைய கருத்து. எனினும் நல்லூர் மட்டுமே ஆரியச்சக்கரவர்த்திகளுடைய தலைநகராக அமைந்திருந்ததென்பதே இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஜான்சிராணி லட்சுமிபாய்


ஜான்சிராணி லட்சுமிபாய் 
ஜான்சிராணி லட்சுமிபாய் (பலிதான தினம்: ஜூன் 17)

ஜான்சிராணி. 1835 ம் ஆண்டு நவம்பர் மாதம் . 19 ம் திகதி  இந்தியாவில் உள்ள வாரணாசி என்ற இடத்தில் வசித்த  மௌரியபந்தர் - பகீரதிபாய் என்ற பிராமணக் குடும்ப தம்பதிக்குப் மகளாகப் பிறந்தார் இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. இவர் தனது 4வது  வயதில் தனது தாயை இழந்தார். . மணிகர்ணிகா சிறு வயதிலேயே குதிரையேற்றமும், வாள்வீச்சும் கற்றுக் கொண்டார் மணிகர்ணிகாவை இவரது தந்தை.  ஜான்சியை ஆண்ட கங்காதரராவ் என்பவருக்கு 1842 ல்  திருமணம் செய்து கொடுத்தார் அதன் பின்னர் மணிகர்ணிகா லட்சுமிபாய், ஜான்சியின் ராணியானார் 1851 ல் அவருக்குப் பிறந்த மகவு 4 மாதங்களில் இறந்து போனது. 1853ல் கங்காதரராவ் உடல்நலமிழந்தார். இதனால் தனது நாட்டின் வாரிசு வேண்டித் தனது தூரத்து உறவினச் சிறுவனான தாமோதர ராவ் என்பவனைத் தத்தெடுத்தார். நவ. 21, 1853 ல் மன்னர் இறந்தார். மன்னர் கங்காதரராவ் மறைந்தபின், அவளது வளர்ப்பு மகன் தாமோதரரா வை ஆட்சியில் அமர்த்த எண்ணினாள் ஜான்சி ராணி. கணவரும் விரைவில் இறந்துபோக தனிமரமான மணிகர்ணிகா, (1853 இல்) ஜான்சிராணியானார். அப்போதைய ஆங்கிலேய கவர்னர் டல்ஹௌஸி பிரபு, வாரிசு இல்லாத ராஜ்ஜியங்களை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவர முயன்றார். அதற்காக, கிழக்கு இந்திய கம்பெனியின் 'டாக்டிரின் ஆப் லேப்ஸ்' என்ற சட்டத்தின் படி, இந்த தத்துப் பிள்ளையை அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டு ஜான்ஸி நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தார். "ஒரு மன்னருக்கு வாரிசு இல்லையென் றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம்" என உரிமை கொண்டாடி வந்த பிரித்தானியர் ஜான்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் ஜான்சி ராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்தார். ஜனவரி 1858 ல் பிரித்தானியப் படையினர் ஜான்சியை நோக்கி முன்னேறி இரு வாரங்களில் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் ராணி தனது வளர்ப்பு குழந்தையை மடியில் சுமந்தபடியே ஆண் வேடம் பூண்டு வெளியேறி 1857 கிளர்ச்சியில் பங்கெடுத்த தந்தியாதோபே என்பவருடன் இணைந்தாள் (இவரும்பின்னர் பிரித்தானியரால்  தூக்கிலிடப்பட்டார்). வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமி ட்டது. 'கோட்டாகி சேராய்' என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்து ஜான்சிரா ணி போரிட்டார். வெள்ளையர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடி  யாமல் தோல்வியுற்றார், ஜான்சி ராணி. பிரித்தானியர் குவாலியரை மூன்று நாட்களுக்குப் பின்னர் கைப்பற்றினர். இதனால் கடும் கோபமடைந்த பிரித்தா னியர், அரண்மனையைச் சூறையாடி பொருட்களை கொள்ளையடித்த னர். ஜான்சி ராணியையும் அரண்மனையை விட்டு விரட்டினர். கடைசியில் தனது நாட்டை மீட்க வெள்ளையர்களை எதிர்த்துப் போராடத் துணிந்தாள் லட்சுமி பாய். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்ஸி ராணி லட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழிநடத்திச் சென்று பெரும் ஆற்றலு டனும், மிகத் துணிச்சலுடனும் போர் புரிந்தார். பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் இந்திய விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார். இந்தியப் பெண்களின் வீரம் உலகில் வேறு யாருக்கும் சளைத்ததல்ல என்று ஆங்கிலேயே அரசுக்கு நிரூபித்துக் காட்டியவர் ஜான்சி ராணி லட்சுமிபாய். வியாபாரம் செய்யவந்த வெள்ளையன் சிறுகச் சிறுக நாட்டை ஆக்கிரமித்து, ராஜ விவகாரங்களில் தலையிடத் துவங்கிய கால கட்டத்தில், ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இந்திய மன்னர்களில் முதன்மையானவர் ஜான்சிராணி லட்சுமிபாய். நாட்டின் உரிமைக்காக போர் நடத்தி தன் இன்னுயிரையும் போர்க்களத்தில் அவர் இழந்தார். அதன் காரண மாகவே, இன்றும் நமது மகளிரின் லட்சியநாயகியாக இவர் போற்றப்படுகிறா ர். . 1858, ஜூன் 17 ம் தேதி, போர்முனையில் காயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார் ஜான்சிராணி லட்சுமிபாய். அப்போது அவருக்கு வயது 22 மட்டுமே. பாரத விடுதலைக்காக நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரில் ஜான்சிராணி யின் வீரம் செறிந்த போர் பிரதான இடம் வகிப்பதாகும். அந்தப் போர் தோல்வி யுற்றாலும், பின்னாளில் சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உந்துசக்தியாகத் திகழ்ந்தது. ஜான்சிராணியின் வீரம் நமது நாட்டுப் பெண்களுக்கு என்றும் உந்து சக்தியாகத் திகழும்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 15 ஆகஸ்ட், 2012

புதன்கிழமை வாழ்த்துக்கள்


மாவீரன் செண்பகராமன்.


மாவீரன் செண்பகராமன்.

எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான். என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இத்தனைக்கும் செண்பகராமன் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்காய் போற்களமாடிய வீரர்கள் யார் என்று எமது தமிழ் சகோதரர்களிடம் ஒரு கேள்வி கேட்டால்; உடனே சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் என ஒரு பட்டியலை தருவார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன் தமிழர்கள் ஒருவரும் போராடவில்லையா? அல்லது அவர்களின் போராட்டத்தில் வீரியம் இல்லையா? எண்ணற்ற தமிழ் மறவர்கள் விடுதலைக்காக வீரகாவியமானார்கள். வெள்ளையனின் பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் முன்னால் வாளும் வேலும் கொண்டு போராடினால் சாவு நிச்சயம் என்று தெரிந்தும்; அடிமையாக வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் போராடிய வீரபாண்டிய கட்டப்பொம்மன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்ற எண்ணற்ற தமிழ் மறவர்களையெல்லாம் பார்க்க உங்களுக்கு வீரர்களாக தெரியவில்லையா? இப்படி தமிழர்கள் இருப்பதால் தான் தமிழினத்தின் வரலாறு மண்ணோடு மண்ணாகிப் போகிறது. தமிழர்களாகிய நாங்கள் கூட தமிழ் வீரர்களை நினைவு கூறாவிட்டால் வேறு எவன் நினைவு கூறுவான்? கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் கேட்டுப்பாருங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் யார் என்று? ஒரு பத்து போராவது சரியான பதில் தருவார்களா? இல்லை நண்பர்களே நாங்கள் தான் எங்கள் வரலாற்றை பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் காலம் எம் வரலாற்றை மறந்துவிடும். இன்னும் ஒரு ஆச்சரியத்தை உங்களுக்கு தருகிறேன்.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” (PRO INDIA) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.
‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜேர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜேர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜேர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜேர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜேர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜேர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப் படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன். இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான் பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு. அதோடு என் உயிர் பிரிந்த பின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்த வேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்த செண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தை விட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்