கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

வீதி,சுரங்கப்பாதை புகையிரதம் - ஜேர்மனி

தாவரங்கள்

விளையாட்டுப் பாடல்கள் - 1

குழந்தை சற்று வளர்ந்ததும் தானாகவே
நிமிர்ந்து இருக்கும் குழந்தைக்கு
சாய்ந்தாடம்மா என்ற பாடலை பாடும்
போது குழந்தை சாய்ந்தாடி குதுகலிக்கும்
இந்த ஆட்டத்தை மற்றவர்களும்  பார்த்து
குதூகலிப்பார்கள். 

புதிய அருஞ்சொற்கள் - 1

(1)அறிவியல் - விஞ்ஞானம்

(2)ஆணைக்குழு - அதிகாரம்
                                 பெற்றகுழு

(3)ஆர்பாட்டம் - எதிர்ப்பு

(4)ஆர்ப்பாட்டம் - ஆரவாரம்

(5)இயக்கம் - பொது இலச்சியத்தின்
                         பொருட்டு செயற்படுகை

அறுகம்புல்லின் சிறப்பு - 7

தொடர்ச்சி   அரசன் கூறியதை கேட்ட காவலாளி
அரண்மனையின் தானியக்கிடங்கு
இருக்கும் இடத்திற்கு சென்றான்.
அதன் பின்பு அங்கு கணக்குகளை
பார்த்துகொண்டிருக்கும் கணக்கு
பிள்ளையிடம் "ஜயா" அரசர்
என்னிடம் "அந்தணரின் பசியை
நான் போக்கவேண்டும்" ஆகவே
நீ தானியக்கிடங்கினுள் இருக்கும்
இடத்திற்கு சென்று அங்கு இருக்கும்
கணக்குப்பிள்ளையிடம் நான்
கூறியதாக கூறி அந்தணரின் பசிக்கு
பரிமாற போதுமான அளவு  உணவினை
தயாரிக்க தேவையான சகல ´
பொருட்களையும்  கணக்குப் பிள்ளை
இடம்  பெற்றுக் கொண்டு வந்து
சமையல் செய்யும் இடத்தில்
கொடுத்து உடனடியாக கொடுத்து
சமையல் செய்து எடுத்து வந்து
அந்தணருக்கு  பரிமாறு  கூறினார்.
ஆகவே நீங்கள் எனக்கு தேவை
யான சகல சமையல் பொருட்க
ளையும்  உடனே தாருங்கள். நான்
உடனடியாக அந்தணருக்குரிய    
உணவினை சமைக்க தேவையான
பொருட்களை  கொண்டு சென்று
கொடுக்க வேண்டும்  என்றான்
இதைக்கேட்ட  கணக்குப்பிள்ளை
திகைத்தார் .   

தொடரும்

பூனையும் நரியும்- 7

தொடர்ச்சி


அதன் பின்பு பூனையும் நரியும்
பல மணித்தியாலங்கள் மிக
மிக சந்தோஷமாக கதைத்து 
விளையாடிக் கொண்டும்
இருந்தது அதன் பின்பு பூனை
நரியிடம் நான் இப்போது எனது 
இருப்பிடத்திற்கு செல்லப் 
போகிறேன் என்றது இதை கேட்ட 
நரிக்கு மனதில் கவலை ஏற்பட்டது
அத்துடன் அது தனது மனதில்
இவ்வளவு நேரமாக நான் மிக 
சந்தோசமாக இந்த சிங்கனுடன் 
விளையாடிக்கொண்டிருந்தேன் 
இனி இவர் தனது இருப்பிடம் 
செல்லப்போகிறார் அதன் பின்பு 
நான் இவரை பிரிந்து நாளை வரை 
தனியாக இருக்கவேண்டும் என 
நினைத்து கவலைப்பட்டது ,

 தொடரும்   

வியாழன், 29 ஏப்ரல், 2010

பயனுள்ள குறிப்புக்கள் - 10

பப்படம்(அப்பளம்),வடகம் ஆகிய
வற்றை பொரிக்க முன்பு அதனை
பொரிக்க பயன்படும் கொதித்த
எண்ணையில் சிறிதளவு மஞ்சள்
தூளை தூவிக் கலந்த பின்பு
பொரித்தால் அவை நிறம் மணம்,
சுவையுடன் நன்றாக இருக்கும்     

கணிதம் வகுப்பு - 5

ஆறு

ஒத்தகருத்துச் சொற்கள் - 25

(241)ஆசீர்வாதம் - வாழ்த்து
(242)ஆடகம் - பொன்
(243)ஆடவன் - ஆண்மகன்
(244)ஆடை - சீலை
(245)ஆடை - பால் ஏடு
(246)ஆடை -உடை
(247)ஆட்கொள்ளல் - அடிமையாதல்
(248)ஆட்சேபம் - மறுப்பு
(249)ஆணவம் - செருக்கு
(250 )ஆணித்தரம் - உறுதி










 

மருத்துவகுறிப்புகள் - 17

நகச்சுத்து - 2

சிறிதளவு வேப்பிலை,சிறிய மஞ்சள்துண்டு
ஆகியவற்றை சேர்த்து அரைத்து நகச்சுத்து
வந்த இடத்தில் வைத்து கட்டினால் உரிய
பலன் கிடைக்கும் .

தகவல் - 27

முதன் முதலில் ஓட்டினார் இல்லாத 
தானியங்கி சுரங்கபாதை புகையிரதம்
சிங்கப்பூரில் அறிமுகமாகியது.

சங்கீதம் வினாவிடை-20

(58)கீதம்,வாத்தியம் இரண்டும்
       சேர்ந்தது எது?
     (விடை - சங்கீதம்)

(59)சிரவணக் கலை எது?
      (விடை - சங்கீதம்)

(60)சிவனின் கையில் இருக்கும்
      இசைக்கருவி எது?
     (விடை - டமருகம்  )

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 21

ஏதாவது பாடத்தில் குறைவான  புள்ளிகளை
எடுத்திருந்தால் அப்படி புள்ளிகள் குறைவாக
இருப்பதிற்கு காரணம் என்ன என்பதை
ஆராய்ந்து அதனை சரி செய்தால் அந்த
பாடத்தில் கூடிய புள்ளிகளை பெற்று
கொள்ளலாம்.

தொகைநிலைத் தொடர்கள் -1

(1)இருசுடர் - சூரியன்,சந்திரன்
(2)இருதிணை - உயர்திணை ,அஃறினை
(3)இருக்குறவர் - தாய்,தந்தையர்
(4)இருமரபு - தாய்மரபு,தந்தைமரபு
(5)இருநிதி - சங்கநிதி ,பதுமநிதி

எதிர்கருத்துச் சொற்கள் - 15

(141)உண்மை - இன்மை
(142)உண்மை - பொய்மை
(143)உதயம் - அஸ்தமனம்
(144)உதித்தல் - மறைதல்
(145)உத்தமம் -அதமம்
(146)உத்தமன் -அதமன்
(147)உருகுதல் - இறுகுதல்
(148)உரூபி - அரூபி
(149)உபகாரம் -அபகாரம்
(150)உம்பர் - இம்பர்

திருக்குறள் அதிகாரம் .- 10 - 1

இனியவை கூறல்

(1)

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

கருத்து 

அன்புடன் கலந்து வஞ்சனையில்லாத மெய்ப்
பொருள் கண்டவர்களின் வாய்ச் சொற்கள்
இனிய சொற்களாகும் .

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

ஒத்தகருத்துச் சொற்கள் - 24

(231)ஆகாரம் - சுரங்கம்
(232)ஆகவம் - போர்
(233)ஆகவம் - சீலை
(234)ஆகாரம் - உணவு
(235)ஆக்கினை - துன்பம்
(236)ஆக்கினை - கட்டளை
(237)ஆசனம் - இருக்கை
(238)ஆசாடபூதி - மோசக்காரன்
(239)ஆசாரம் - ஒழுக்கம்
(240)ஆசி - வாழ்த்து

விஞ்ஞானகல்வி

வெடிப்பொருட்கள் தயாரிப்பதிற்கு
பயன்படும் உணவுப்பொருள் 
நிலக்கடலை (கச்சான்) ஆகும்

பெருக்கல் வாய்ப்பாடு - 4

கணிதம் வகுப்பு - 4

ஆறு

கணிதம் - பாலர்வுகுப்பு

பட்டர் பழம்(Butter Fruit)

பூனையும் நரியும்- 6

தொடர்ச்சி

நரி கூறியதை மௌனமாக கேட்டு
கொண்டிருந்த பூனை தனது மனதில்
நரியை நான் திருமணம் செய்தால்
இரை தேடி அலைய தேவையில்லை
அத்துடன் சுவையான உணவை
எனது இருப்பிடத்தில் இருந்து கொண்டு
உண்ணலாம் யாரிடமும் போய் அடிபட,
கடிபட தேவையில்லை நல்ல சொகுசாக
இருக்கலாம் என நினைத்தது என்றாலும்
உடனே தனது பதிலை நரியிடம் பூனை
கூறவில்லை சிறிது நேரம் பேசாமல்
யோசனை செய்து கொண்டிருப்பதாக
பாசாங்கு செய்தது சிறிது நேரத்தின்
பின்புநரியிடம் உன்னை திருமணம்
செய்வதை பற்றியோசித்து விட்டு
நாளை கூறுகின்றேன் என்றது.

தொடரும் .

தகவல் - 26

பூங்கா நகரம் என்று சிக்காகோ
அழைக்கப்படுகிறது

மருத்துவகுறிப்புகள் - 16

நகச்சுத்து - 1

மருதாணி இலையை அரைத்து
நகச்சுத்து உள்ள இடத்தில் வைத்து
மூன்று தடவை கட்டினால் நகச்சுத்து
மிக விரைவாக  குணமடையும்.
  

சங்கீதம் வினாவிடை-19

(55) பிலஹரி ராகத்தின் ஆரோகண
       அவரோகணம் என்ன?
       (விடை - ஸரிகபதஸ்
                         ஸ்நிதபமகரிஸ)

(56) 29 வது மேளமாகிய தீர
       சங்கராபரணத்தின் ஜன்னிய
       ராகம் என்ன?
      (விடை - பிலஹரி)

(57) லலித கலைகளில் சிறந்தது
       எது?
       (விடை - சங்கீதம் )

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 20

பாடசாலையில் ஆசிரியர் படிப்பிக்கும்
போது முழுக்கவனத்துடன் பாடத்தினை
கவனித்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்
பாடசாலை விட்டு வீடு திரும்பியதும்
அன்றைய தினமே ஆசிரியர் படிப்பித்த
பாடத்தை திருப்பி பார்த்து அதில் உள்ள
தலைப்பு,பக்க தலைப்பு போன்ற பல
குறிப்புகளை நன்றாக மனதில் குறித்து
வைத்து கொள்ளுங்கள்.

எதிர்கருத்துச் சொற்கள் - 14

(131)ஈகை -ஏற்கை
(132)ஈடுபாடு - முரண்பாடு
(133)ஈடேற்றம் - வீழ்ச்சி
(134)ஈதல் - ஏற்றல்
(135)ஈவார் - ஈயார்
(136)ஈரம் - வரட்சி 
(137)ஈரம் - உலர்வு
(138)உசிதம் - அநுசிதம்
(139)உடன்பாடு - எதிர்மறை
(140)உடைப்பு - அடைப்பு

ஒத்தகருத்துச் சொற்கள் - 23

(221)அனுமதி - சம்மதம்

(222)அன்பு - காதல்
(223)அன்னதாழை - அன்னாசி
(224)அன்னப்பால் - கஞ்சி
(225)அன்னம் - சோறு
(226)அன்னை - தாய்
(227)ஆ - பசு
(228)ஆகம் - உடல்
(229)ஆகம் -நெஞ்சு
(230)ஆகாரம் - உறைவிடம்

திருக்குறள் அதிகாரம் - 9-10

விருந்தோம்பல்

(10)
மோப்பக் குலையும் அனிச்சம் முகந்திரித்து
நோக்கக் குலையும் விருந்து .

கருத்து
அனிச்ச மலர் முகர்ந்த அளவில் வாடும்;
விருந்தினர்,முகம் வேறுபட்டுப் பார்த்த
அளவிலேயே வாடிவிடுவர் .

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

அன்னமின்னாப்பழம்

பூனையும் நரியும்- 5

தொடர்ச்சி

நரி பூனைக்கு விருப்பமான உணவு
வகைகளை பரிமாறிய பின்பு பூனை
அருகில் சென்று  எனக்கு  உங்களை
திருமணம் செய்து கொள்ள விருப்பம்
உங்களுக்கு என்னை திருமணம்
செய்து கொள்ள விருப்பமா? என்றது 
அதற்கு பூனை சற்று நேரம் அமைதியாக
யோசனை செய்தது இதனை பார்த்த நரி
தனது மனதில் இந்த சிங்கனுக்கு
என்னைப்பற்றி ஒன்று தெரியாததினால்
தான் என்னை திருமணம் செய்ய
யோசிக்கின்றார் என நினைத்தது
அதன் பின்பு நரி பூனையிடம் தன்னை
பற்றி கூறியது அதன் பின்பு அத்துடன்
பூனையிடம் என்னை நீங்கள் திருமணம்
செய்துகொண்டால் இரை தேட நீங்கள்
வெளியே செல்லத் தேவையில்லை
நானே வெளியில் சென்று உங்களுக்கும்
தேவையான நல்ல சத்தான இரையை
தேடிக்கொண்டு வந்து தருகின்றேன் என்றது.

தொடரும்  

தகவல் - 25

கோட்டைகள் மிக மிக   அதிகமுள்ள நாடு
ஸ்பானியா ஆகும் இங்கு 6000 க்கும் மேற்பட்ட
 கோட்டைகள் உள்ளன.

மருத்துவகுறிப்புகள் - 15

பித்தவெடிப்பு - 3

அடுப்பில் ஒரு பாத்திரத்தை 
வைத்து அதில்  நன்னாரிவேர்
10 கிராம் தண்ணீர் - 1 டம்ளர் 
ஆகியவற்றை போட்டு நன்றாக 
கொதிக்கவைத்து (அரை டம்ளர் 
ஆகும்வரை)வடிகட்டி அதனுடன் 
பனங்கற்கண்டு சேர்த்து தினமும் 
குடித்து வந்தால் பித்தவெடிப்பு 
மாறிவிடும் (நன்னாரிவேரை 3  - 4
தடவை பயன்படுத்தலாம்).

சங்கீதம் வினாவிடை-18

(52)"இந்த இன்பம்"என்ற பாடலின்
       வகை யாது?
       (விடை - கீர்த்தனை)

(53)"இந்த இன்பபம்" என்ற கீர்த்தனை
       அமைந்துள்ள ராகம் என்ன?
       (விடை - பிலஹரி)

(54)"இந்த இன்பம் " என்ற பாடல்
        அமைந்துள்ள தாளம் யாது?
        (விடை - ரூபகம்)

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 19

பாடங்களை படிக்கும் போது
முக்கியமானவற்றை பலவித
கலர் பென்சில்களால் அல்லது
பலவித கலர் பேனைகளால்
கோடிட்டு வைத்தால் தேவையான
போது அவற்றை எடுத்து படிக்கலாம்
அத்துடன் அப்படி கோடிடுபவை
மனதில் நன்றாக பதிந்துவிடும் . 

எதிர்கருத்துச் சொற்கள் - 13

(121)இளையோர் - முதியோர்
(122)இறத்தல் - பிறத்தல்
(123)இறப்பு - பிறப்பு
(124)இறுக்கம் - தளர்வு
(125)இனியது - இன்னாதது
(126)இன்கண் - புன்கண்
(127)இன்சொல் - வன்சொல்
(128)இன்பம் - துன்பம்
(129)இன்மை - உண்மை
(130)இன்னார் - இனியார்

ஒத்தகருத்துச் சொற்கள் -22

(211)அற்கன் - சூரியன் ,கதிரவன்

(212)அற்றம் -அச்சம் ,சோர்வு
(213)அனந்தம் -அளவின்மை
(214)அனவரதம் -எப்பொழுதும்
(215)அனல் - தீ
(216)அனுசாரம் - ஒழுக்கமின்மை
(217)அனுகூலம் - காரியசித்தி
(218)அனுக்கிரகம் - அருள்
(219)அனுச்சை - விடை
(220)அனுட்டானம் -நிலைநிறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 9 - 9

விருந்தோம்பல்
(9)
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு .

கருத்து 
பொருள் இருக்கும் காலத்தில் வறுமை
என்பது,விருந்தினனரப் போற்றுதலைப்
புறக்கணிக்கும் அறியாமையாகும்;அது
அறிவிலியிடம் உள்ளதாகும் .

வாகனங்கள்

பெருக்கல் வாய்ப்பாடு - 3

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

தையற்கலை

பெருக்கல் வாய்ப்பாடு - 2

தகவல் - 24

உலகின் மிகப்பெரிய தங்கச்சந்தை
லண்டனில் அமைந்துள்ளது.

பின்னல் கலை -11 (Ripping Back)

கணிதம் வகுப்பு - 3

தமிழ்எழுத்து பயிற்சி - 3

சிறுவர் பாடல்கள் - 18

பள்ளிக்கூடம் திறக்கும் காலம்
பாலர் பையைத் தூக்கும் காலம்
மணியின் ஓசை கேட்கும் காலம்
மாணவர்கள் கூடும் காலம்
வாத்தியாரை பார்க்கும் காலம்
வகுப்பு மாறி இருக்கும் காலம்
புத்தகங்கள் வாங்கும் காலம்
புரட்டிப் புரட்டிப் படிக்கும் காலம் .

மருத்துவகுறிப்புகள் - 14

பித்தவெடிப்பு -2

வெள்ளை கரிசலாங்கண்ணி
இலையை தூளாக்கி அதனுடன்
ஒரு சிட்டிகை தேன் சேர்த்து
ஒரு மண்டலம் சாப்பிட்டு
வந்தால் பித்தவெடிப்பு
குணமாகும்.

சங்கீதம் வினாவிடை-17

(49)"ராவே"என்ற ஸ்வரஜதி
       அமைந்துள்ள ராகம் என்ன?
      (விடை - ஆனந்தபைரவி)

(50)ஆனந்தபைரவி ராகத்தின்
      ஆரோகண அவரோகணம்
       என்ன?
       (விடை - ஸகரிகமபதபஸ்
                          ஸ்நிதபமகரிஸ)

(51)பல்லவி,அனுபல்லவி,சரணங்கள்
      என்ற அங்கங்களை கொண்ட
      உருப்படி எது?
      (விடை - ஸ்வரஜதி)

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 18

எல்லாப் பாடங்களுக்குரிய மாதிரி
வினாத்தாள்,முதல் வருட வினாத்
தாள்கள்,பழைய வினாத்தாள்கள்
ஆகியவற்றை நன்றாக விளங்கி
படித்தால் எந்த எந்த பாடங்களில்
என்னஎன்ன  பகுதிகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து படிக்க
வேண்டும் அத்துடன் எப்படிப்பட்ட
வினாக்கள் வரும் என்பதை விளங்கிக்
கொள்ளலாம் அதன் பின்பு அவற்றை
நன்றாக  படிக்கலாம் .    

எதிர்கருத்துச் சொற்கள் -12

(111)இலாபம் - நட்டம்
(112)இல்பொருள் - உள்பொருள்
(113)இல்லறம் - துறவறம்
(114)இல்லை - உண்டு
(115)இழிவு - உயர்வு
(116)இழுக்கம் - விழுக்கம்
(117)இளக்கம் - கடினம்
(118)இளமை - முதுமை
(119)இளவல் - மூத்தோன்
(120)இளவேனில் - முதுவேனில்

ஒத்தகருத்துச் சொற்கள் -21

(201)அறிஞர் - அறிவாளி
(202)அறிவியல் - விஞ்ஞானம்
(203)அறிவுரை - புத்திமதி
(204)அறுதி - முடிவு
(205)அறுதி -வரையறை
(206)அறுதியிடல் - நிச்சயித்தல்
(207)அறுபதம் -வண்டு
(208)அறுமை - ஆறு
(209)அறைகூவல் - போருக்கழைத்தல்
(210)அறைபோதல்- வஞ்சனை செய்தல்

திருக்குறள் அதிகாரம் 9 - 8

விருந்தோம்பல்
(8)
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

கருத்து 
விருந்தினரை உபசரித்து  அதன் பயனை
அடையாதவர் தம் பொருளை வருந்திக்
காத்து(பின் இழந்து)ஆதரவு அற்றவர்
களானோம் என இரங்குவர். 

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

திங்கள், 26 ஏப்ரல், 2010

சிறுவர் பாடல்கள் - 17 ( குவாகுவா வாத்து)

பழங்கள்,காய்கறிகள்,தாவரங்கள்

பெருக்கல் வாய்ப்பாடு - 1

பின்னல்கலை - 12

தகவல் - 23

பரிதிமாற் கலைஞர் முதல்
முதலில் தமிழ்மொழியை
செம்மொழியாக்க வேண்டும்
என்று குரல் எழுப்பினார் .

சித்திரக்கல்வி

சிறுவர் பாடல்கள் - 16

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றி  உள்ள நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி
குட்டிப் பாப்பா தன்னோடு
குதித்து ஓடும் நாய்க்குட்டி
கண்ணைப் போல வீட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டி. 

மருத்துவகுறிப்புகள் - 13

பித்தவெடிப்பு -1

பித்த வெடிப்பு ஏற்பட்டால் 
மருதாணி இலையை
அரைத்து பித்தவெடிப்பு
ஏற்பட்ட இடத்தில் பத்து
போட்டால் பித்தவெடிப்பு
குணமாகும் .

சங்கீதம் வினாவிடை-16

(46)"ராவே" என்ற ஸ்வரஜதியை
       இயற்றியவர் யார்?
      (விடை - சோபனத்ரி)

(47)"ராவே"என்ற பாடல் அமைந்துள்ள
      தாளம் எது?
     (விடை - ஆதி)

(48)"ராவே" என்ற பாடலின் வகை
       யாது?
      (விடை - ஸ்வரஜதி)

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 17

எல்லா பாடத்தையும்  படிக்கும்
போது அதிலிருந்து  சிறு சிறு
குறிப்புகளை எடுத்து ஒரு
அப்பியாசப்புத்தகத்தில் எழுதி
வைத்தால் பரீட்சைக்கு படிக்கும்
போது அல்லது அப்பாடத்தில்
ஏற்படும் சந்தேகத்தின் போதும் 
அதனை திருப்பி பார்க்க
வசதியாக இருக்கும்.

திசைசொற்கள் - 17

பாளிமொழிச்சொற்கள் -2
(8)தூபி
(9)நட்டம்
(10)பிக்கு
(11)பிக்குணி
(12)போதி
(13)விகாரை
(14)வேதிகை

எதிர்கருத்துச் சொற்கள் -11

(101)இயற்பெயர் - புனைபெயர்
(102)இரகசியம் - பரகசியம்
(103)இரசம் - விரசம்
(104)இரண்டகம் - நேர்மை
(105)இரவல் - சொந்தம்
(106)இரவலர் - புரவலர்
(107)இரவு - பகல்
(108)இருள் - ஒளி
(109)இருமை - ஒருமை
(110)இலட்சணம் - அவலட்சணம்

ஒத்தகருத்துச் சொற்கள் -20

(191)அழுக்காறு - பொறாமை

(192)அழுங்கு - ஆமை
(193)அளகம் - கூந்தல்
(194)அளக்கர் - கடல்
(195)அளி - வண்டு
(196)அளை - வளை
(197)அளை - தயிர்
(198)அறங்கடை - பாவம்
(199)அறம் - தர்மம்
(200)அறிகுறி - அடையாளம்

 

திருக்குறள் அதிகாரம் 9 - 7

விருந்தோம்பல்
(7)
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

கருத்து
"விருந்தோம்புதலாகிய வேள்வியின்"
பயன் இன்ன அளவினை உடையது
என்று கூறத்தக்கதன்று;விருந்தினரின்
தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

காகிதப்பூக்கள்

தமிழ்எழுத்து பயிற்சி - 2

கணிதம் வகுப்பு - 2

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

தமிழ்எழுத்து பயிற்சி - 1

கைத்தையல் - Whip Stitch

கணிதம் வகுப்பு - 1

இட்லி வகைகள் - 1

தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு - 1 சுண்டு
ரவை(பொன்னிறவறுவல்) - 2சுண்டு
ஜஸ்கட்டிகள் - தேவையானளவு
அப்பச்சோடா/Hefe  - சிறிதளவு(விரும்பினாள்)
உப்பு - தேவையானளவு

செய்முறை  


(1)ஒருபாத்திரத்தில் உளுத்தம்பருப்பை 
     போட்டு அதனுடன் நக சூடான
     தண்ணீரை(உளுத்தம்பருப்பிற்கு
     மேலே தண்ணீர் இருக்கவேண்டும்)
     விட்டு அரை மணித்தியாலம்
      ஊறவைக்கவும்.

(2) அரைமணித்தியாலத்தின் பின்பு
     கிரைண்டரில்(மிக்சியில்)ஊறிய
     உளுத்தம்பருப்பு ,தண்ணீர்
     ஆகியவற்றை சேர்த்து இட்லி
     பதத்திற்கு (நன்றாக அரைக்க
     கூடாது) அரைக்கவும்.

(3)அதன் பின்பு அரைத்தவற்றை
     ஒருபாத்திரத்தில் போடவும் .

(4 )பின்பு கிரைண்டரில்(மிக்சியில்)
     பொன்னிறமாக வறுத்த ரவை,
     தண்ணீர் ஆகியவற்றை போட்டு
     நன்றாக  அரைக்கவும் (கட்டி
    இல்லாமல்) .

(5)அரைத்தபின்பு அரைத்த ரவையை
    உளுந்து போட்ட பாத்திரத்தில்
     போட்டு நன்றாக கலக்கவும் .

(6)அதன் பின்பு அதனுடன் ஜஸ்
    கட்டிகளை சேர்த்து கலக்கவும் .

(7)பின்பு இதனுடன் அப்பச்சோடா
    /Hefe (விரும்பினாள்) சேர்த்து
     கலக்கவும் .

(8) அப்பச்சோடா/Hefe சேர்த்து
     இருந்தால் 6 மணித்தி
     யாலங்ககள் புளிக்கவிடவும்.
    (கலக்காவிட்டால் அடுத்தநாள்
     வரை புளிக்கவிடவும்)

(9)அதன் பின்பு உப்பு போட்டு
    கலக்கவும்.

(10)பின்பு இட்லிப்பானையின்
     அரைவாசிக்கு தண்ணீர்விட்டு
     இப்பாத்திரத்தை அடுப்பில்
     வைக்கவும்.

(11)அதன் பின்பு அதனுள் இட்லி
      தட்டுகளை வைத்து மூடி
      சூடாக்கவும் .

(12)இட்லி தட்டுகள் சூடாகியதும்
      மூடியை திறந்து இட்லி
      தட்டுகளை வெளியே எடுத்து
     அதனுள் தேவையான அளவு
     அரைத்த மாவை போட்டு இட்லி
     பானையில் வைத்து வேகவிடவும்.

(13)இட்லிவெந்தபின்பு அடுப்பில் உள்ள
      பாத்திரத்தில்  இருந்து இட்லி தட்டை
     வெளியே எடுத்து  அதில் இருக்கும்
     இட்லிகளை எடுத்து  ஒரு பாத்திரத்தில்
     போட்டு வைக்கவும்.

(14)அதன் பின்பு சுவையான சுத்தமான
     சத்தான இட்லிகள் தயாராகிவிடும் .

(15)இட்லிகள் தயாரான பின்பு ஒரு
      தட்டில் தேவையான இட்லிகளை
      வைத்து  அதனுடன் சம்பல்,சட்னி,
      சாம்பார்,ஏதாவது கறி ஆகியவற்றில்
      ஒன்றைவைத்து பரிமாறவும் .

  

  

     
   

மருத்துவகுறிப்புகள் - 12

பக்கவிளைவு இல்லாத


பழசிகிச்சை -6

பப்பாசிப்பழம்

பப்பாசிப்பழத்தில் உயிர்சத்து ´ஏ´
அதிகம் காணப்படுகிறது இது
தோலுக்கு அழகையும் ஆரோக்
கியத்தையும் கொடுக்கிறது
அத்துடன் செரிமானத்திற்கும்
நல்லது ,கடினமான உணவு
வகைகளை சாப்பிட்ட பின்பு
சிறிதளவு பப்பாசிப்பழத்தை
சாப்பிட்டால் விரைவில்
ஜீரணமாகும் அத்துடன்
தினமும் பப்பாசிப்பழத்தை
சாப்பிடுகிறவர்களுக்கு பல்வலி
மலசிக்கல் ஆகிய நோய்கள்
ஏற்படாது.

பழமொழிகள்-14

(61)செயல்கள் சொற்களைவிட
       அதிக ஆற்றலுடையவை .

(62)மன்னன் எவ்வழியோ
      மக்களும் அவ்வழியே.

(63)ஒரு காசு பேணின்
       இரு காசு தேறும் .

(64)ஆபத்தில் உதவுபவனே
       உண்மையான நண்பன் .

(65)உன்னைத்திருத்து உலகம்
      தானாகவே திருந்திவிடும்.

சிறுவர் பாடல்கள் - 15

சின்ன சின்ன மோட்டார்
சிங்கார மோட்டார்
நாலு சக்கர மோட்டார்
நான் ஏறும் மோட்டார்
பாம் பாம் மோட்டார்
பம்படிக்கிற மோட்டார்

தகவல் - 22

1792 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை
சேர்ந்த    பேரன்ஸ் லாரன்ஸ்
என்பவர் அம்புலன்ஸ் வாகனத்தை
 அறிமுகம் செய்தார்.

சங்கீதம் வினாவிடை-15

(43)"வசனமிக வேற்றி"என்ற பாடல்
       அமைந்துள்ள தாளம் எது?
       (விடை - ஆதி)

(44)"வசனமிக வேற்றி"என்ற பாடல்
        பாடப்பட்ட தலம் எது?
       (விடை - பழனி)

(45)"வசனமிக வேற்றி"என்ற திருப்புகழை
       பாடியவர் யார்?
       (விடை- அருணகிரிநாதர்)

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 16

படிக்கும் பாடத்தை திரும்ப
திரும்ப சொல்லிக் கொண்டு
இருப்பதை விட ஒருமுறை
அதனை எழுதிப் பார்த்து
திருத்தி விட்டால் அவை
மனதில் ஆழமாக பதியும் .

திசைசொற்கள் - 16

பாளிமொழிச்சொற்கள் -1 

(1)ஆணை
(2)உபாசகர்
(3)சதுக்கம்
(4)சமணம்
(5)சீலம்
(6)சேதியம்
(7)துக்கம்

எதிர்கருத்துச் சொற்கள் -10

(91)   இடம் - வலம்
(92)   இணக்கம் - பிணக்கம்
(93)   இணைதல் - பிரிதல்
(94)   இணைத்தல் - பிரித்தல்
(95)   இணைந்து - தனித்து
(96)   இம்மை - மறுமை
(97)   இயக்கம் -நிலைபேறு
(98)   இயல்பு - விகாரம்
(99)   இயற்கை - செயற்கை
(100) இயற்சொல் - திரிசொல்

ஒத்தகருத்துச் சொற்கள் -19

(181)அவலம் - துன்பம்

(182)அவலம் - அழுகை
(183)அவனி - உலகம்
(184)அவா - மிக்கஆசை
(185)அவா - பேராசை
(186)ஆவி - வேள்விப்பொருள்
(187)அவிச்சை - அஞ்ஞானம்
(188)அவை - சபை
(189)அவ்வை - தாய் ,தவப்பெண்
(190)அழும் - பிணம் 

திருக்குறள் அதிகாரம் 9-6

விருந்தோம்பல்

(6)
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு .

கருத்து
வந்த விருந்தினரை உபசரித்து வரக் கூடிய
விருந்தினரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்
தேவர்க்கு நல்ல விருந்தாவான் .

சனி, 24 ஏப்ரல், 2010

துணிப்பூக்கள்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

டிக்கா மசாலா

புதிய கணிதம்

மருத்துவகுறிப்புகள் - 11

பக்கவிளைவு இல்லாத

பழசிகிச்சை- 5

 மாம்பழம்




























முக்கனிகளில் முதன்மையாக
விளங்குவது மாம்பழமாகும்
இதில் உயிர்சத்து - எ நிறைந்து
காணப்படுகிறது ஞாபக சக்தியை
அதிகரிக்க மாம்பழ சாற்றுடன்
பால் ,தேன் கலந்து தினமும்
குடித்து வரவும் அத்துடன் கல்
அடைப்பு நோய் உள்ளவர்கள்
தினமும் மாம்பழ சாற்றுடன்
கரட் சாற்றினை கலந்து குடித்தால்
நிவாரணம் பெறலாம் ,கபம்
பித்தம் ஆகியவற்றை வராமல்
செய்யக்கூடிய சக்தி மாம்பழத்துக்கு
உண்டு .மாம்பழத் தோலை
சுவைத்தால் வாய் துர்நாற்றம்
இரத்தம் கசிதல் போன்றவை
அகலும் .

பழமொழிகள்-13

(56)கலை கலைகளுக்காகவே

(57)துன்பம்தான் ஒழுக்கத்தின்
      உரைகல்

(58)காக்கைக்கும் தன்குஞ்சு
      பொன்குஞ்சு

(59)போதுமென்ற மனமே
      பொன்செய்யும் மருந்து.

(60)ஆத்திரக்காரனுக்கு புத்தி
      மத்திமம்.

சிறுவர் பாடல்கள் - 14

லட்டு

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு
எட்டில் பாதி பிட்டு
எடுத்தான் மீதம் கிட்டு
மீதம் உள்ள லட்டு
முழுவதும் தங்கை பட்டு
போட்டால் வாயில், பிட்டு
கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு!

தகவல் - 21

ஆபிரகாம்லிங்கன் தபால்துறை
ஊழியராக இருந்து அதன் பின்பு
அமெரிக்காவின் ஜனாதிபதியானார் 

சங்கீதம் வினாவிடை-14

(40)"வசனமிகவேற்றி மறவாதே"என்ற
       பாடலின் வகை யாது?
       (விடை - திருப்புகழ்)

(41)சந்தங்களைப் பிரதான மார்க்கமாகக்
       கொண்ட உருப்படி யாது?
       (விடை - திருப்புகழ்)

(42)"வசனமிகவேற்றி" என்ற பாடல்
       அமைந்துள்ள ராகம் யாது?
       (விடை -ஸிம்மேந்திர மத்தியமம்)  

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 15

படிக்க தொடங்கும் முன்பு
பசியாக இருந்தால் வயிறு
நிறைய சாப்பிடாமல் பசிக்கு
தேவையானளவு சாப்பிடுங்கள்
அத்துடன் தண்ணீர் குடிக்க,வேறு
தேவைகளுக்கு செல்ல என
அடிக்கடி எழுந்து செல்லாமல்
அவை யாவற்றையும் முன்பே
செய்துமுடியுங்கள்.அதன் பின்பே
படிக்க தொடங்குங்கள் .

திசைசொற்கள் - 15

இந்துஸ்தானி மொழிச்சொற்கள்-2

(1)பயில்வான்
(2)பாக்கி
(3)பேட்டி
(4)மகஜர்
(5)மஹால்
(6)மசூதி
(7)மசோதா

எதிர்கருத்துச் சொற்கள் -9

(81)ஆவேசம் - சாந்தம்
(82)ஆரம்பம் - முடிவு
(83)ஆரோகணம் - அவரோகணம்
(84)ஆர்தல் - குறைதல்
(85)ஆர்ப்பாட்டம் - அமைதி
(86)இகம் - பரம்
(87)இகல் - நட்பு
(88)இசை - வசை
(89)இசைதல் - மறுத்தல்
(90)இச்சை - வெறுப்பு

ஒத்தகருத்துச் சொற்கள் -18

(171)அல்லல் - துன்பம்

(172)அவகாசம் - காலக்கெடு
(173)அவசம் - பரவசம்
(174)அவதாரம் - பிறப்பு
(175)அவதானம் -நிதானம்
(176)அவதூறு - பழிச்சொல்
(177)அவதூறு -நிந்தனை
(178)அவயம் - உறுப்பு
(179)அவயான் - பெருச்சாளி
(180)அவரோகணம் - இறங்குதல்

திருக்குறள் அதிகாரம் 9 - 5

விருந்தோம்பல்

(5)
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் .

கருத்து
விருந்தினரை உண்பித்து எஞ்சிய உணவை
உண்கின்றவனுடைய விளைநிலத்தில்
விதையும் விதைக்க வேண்டுமோ?

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

பழமொழிகள்-12

(51 )ஒரு பானைச் சோற்றுக்கு
       ஒரு சோறு பதம் .

(52)வினை விதைத்தவன் வினை அறுப்பான்
      திணை விதைத்தவன் திணை அறுப்பான்

(53)பாம்பின் கால் பாம்பறியும்

(54)எரிகிற நெருப்பில் எண்ணெய்   ஊற்றாதே

(55)ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில்
      கண்ணாயிரு.

சிறுவர் பாடல்கள் -13

எங்கும் இருக்கும் ஆண்டவனே!
எம்மைக் காக்கும் இறையனே
அம்மா அப்பா ஆனவனே
அன்பு உள்ளம் கொண்டவனே
நன்றாய் உலகில் நான் வாழ
நல்ல கல்வி தந்திடுவாய்
உத்தமனாக நான் வாழ
இறைவா நீயும் அருள் செய்வாய்.

ஆறு

ஓமான் தேசியகொடி

தகவல் - 20

கி.பி 1900 ம் ஆண்டு இங்கிலாந்து
நாட்டில் முதன்முதலாக இராணுவ
வீரர்களின் சீருடை அறிமுகம்
செய்யப்பட்டது. 

சங்கீதம் வினாவிடை-13

(37)"அங்கமும் வேதமும்" என்ற
       தேவாரம் அமைந்துள்ள
        தாளம் எது?
      (விடை - ஆதி)

(38)"அங்கமும் வேதமும்"என்ற
     தேவாரத்தை பாடியவர் யார்?
     (விடை - திருஞானசம்பந்தர்)

(39)"அங்கமும் வேதமும்" என்ற
       தேவாரத்தை திருஞானசம்பந்தர்
       பாடிய தலம் யாது?
      (விடை - திருமருகல்)

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 14

நண்பர்கள் அல்லது அம்மா,அப்பா
சகோதர்கள் என்று யாருடனாவது
சண்டை போட்டிருந்தால் அந்த
கவலையுடன் படிக்காமல் சண்டை
போட்டவர்களுடன் சமாதானமாகி
விட்டு அத்துடன் மனக்குழப்பங்க
ளுக்கு விடுதலை கொடுத்து விட்டு
படியுங்கள் இப்படி செய்யாமல்
படித்தீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு
தான் கஷ்டப்பட்டு படித்தாலும் நீங்கள்
படிக்கும் பாடம் உங்கள் மனதில் பதியாது .

திசைசொற்கள்-14

இந்துஸ்தானி மொழிச்சொற்கள்-1

(1)ஆசாமி
(2)இஸ்திரிப்பெட்டி
(3)உசார்
(4)கறார்
(5)கசானா
(6)சிபாரிசு
(7)சொக்காய்
(8)தாசில்
(9)தாலுக்கா
(10)பஞ்சாயத்து

எதிர்கருத்துச் சொற்கள் - 8

(71)ஆசை - நிராசை
(72)ஆட்சேபம் -அங்கீகாரம்
(73)ஆண்டான் - அடிமை
(74)ஆத்திகன் - நாத்திகன்
(75)ஆதரவு - அநாதரவு
(76)ஆதாரம் -நிராதாரம்
(77)ஆதி - அந்தம்
(78)ஆபாசம் - தூய்மை
(79)ஆயாசம் - அநாயாசம்
(80)ஆயுதன் - நிராயுதன்

ஒத்தகருத்துச் சொற்கள் -17

(161)அலக்கண் -துன்பம்

(162)அலங்கல் - மாலை
(163)அலங்கை - துளசி
(164)அலங்கோலம் - அவலட்சணம்
(165)அலமரல் -மனச்சுழற்சி
(166)அலவன் - ஆண் நண்டு
(167)அலவு - ஆண்பனை
(168)அலுங்கு - எறும்புதின்னி
(169)அல்குதல் -குறைதல்
(170)அல்லங்காடி -அந்திச்சந்தை

திருக்குறள் அதிகாரம் 9 - 4

விருந்தோம்பல்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்லிருந்து ஓம்புவான் இல்

கருத்து
முகம் மலர்ந்து நல்லமுறையில்
விருந்தினரை காப்பவனது வீட்டில்
இலக்குமி மனம் மகிழ்ந்து வாழ்வாள்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

வியாழன், 22 ஏப்ரல், 2010

மாமரம்

 

சிறுவர் பாடல்கள் -12

அணிலே, அணிலே, ஓடி வா
அழகு    அணிலே   ஓடி  வா
கொய்யாமரம் ஏறி வா
கொய்யாப்பழம் கொண்டு வா
பாதிப்பழம் உன்னிடம்
மீதிப்பழம் என்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம் .

கைத்தையல் - blanket stitch

புருனை தருசலாம் தேசியகொடி

தகவல் - 19

ஒலிம்பிக் விளையாட்டில்
உள்ள நீச்சல் நடைபெறும்
நீச்சல் தடாகத்தின் ஆழம்
6 மீற்றர் ஆகும் 

சங்கீதம் வினாவிடை-12

(34)மோகன ராகத்தின் ஆரோகண
      அவரோகணம் யாது?
     (விடை -ஸரிகபதஸ்
                       ஸ்தபகரிஸ)

(35)"அங்கமும் வேதமும்"என்ற
       தேவாரத்தின் பண் யாது ?
       (விடை - நட்டபாடை)

(36)"அங்கமும் வேதமும் " என்ற
       தேவாரம் அமைந்துள்ள ராகம்
       எது ?
      (விடை - கம்பீரநாட்டை)

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-13

உங்களுடைய மூளைக்கு திறன்
அதிகமாக இருக்கலாம் ஆனால்
அதன் கவனம் ஒன்றின் மட்டும்
குவியும் போது அதில் பலன்
அதிகமிருக்கும் எனவே பாடத்தை
படித்துக்கொண்டு திரைப் பாடலை
கேட்டு கொண்டிருந்தாள் பாடமும்
மனதில் பதியாது பாடலும் மனதில்
பதியாது (ஒரு சிலருக்கு மட்டும்
ஒரே நேரத்தில் இவை இரண்டும்
மனதில் பதியும்) .

பற்றிக் அலங்காரம் -2

திசைசொற்கள்-13

இந்திமொழிச்சொற்கள்
(1)அச்சா
(2)சமாச்சாரம்
(3)தயார்
(4)வாபஸ்(வாபசு)

எதிர்கருத்துச் சொற்கள் -7

(61)அற்பாய்சு - தீர்க்காயுசு
(62)அனுகூலம் - பிரதிகூலம்
(63)அனுக்கிரகம் - நிக்கிரகம்
(64)அனுசரணை - மறுப்பு
(65)அனுசிதம் -உசிதம்
(66)அன்பு -வன்பு
(67)ஆக்கினை -கருணை
(68)ஆக்கம் - கேடு
(69)ஆக்கல் - அழித்தல்
(70)ஆசி - சாபம்

ஒத்தகருத்துச் சொற்கள் -16

(151)பாதி - இடை

(152)அரைஞான் - இடுப்புக்கயிறு
(153)அர்ச்சித்தல் -வணங்குதல்
(154)அர்த்தமண்டபம் - கருவறை
(155)அர்ப்பணம் - ஒப்பிடுதல்
(156)அலகு - நெல்மணி
(157)அலகு - கூறு
(158)அலகு - சொண்டு
(159)அலகு - பிரிவு
(160)அலகை - பேய்

திருக்குறள் அதிகாரம் 9-3

விருந்தோம்பல்
(3)
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்த பாழ்படுதல் இன்று .

கருத்து
தன்னை நாடி வரும் விருந்தினரை
நாள்தோறும் உபசரிப்பவனுடைய
வாழ்க்கை வருந்திக் கெடுவதில்லை .

புதன்கிழமை வாழ்த்துக்கள்

புதன், 21 ஏப்ரல், 2010

றோசாப்பூ

சிறுவர் பாடல்கள் - 11

துருக்கி நாட்டு தேசியகொடி

சங்கீதம் வினாவிடை-11

(31)"வரவீனா"என்ற பாடலின்
       வகை யாது?
      (விடை - சஞ்சாரி கீதம்)

(32)"கணநாதா"என்ற பாடலின்
       வகை யாது?
      (கீதம்)

(33)"அங்கமும் வேதமும்" என்ற
     பாடலின் வகை யாது?
   (விடை -தேவாரம் )

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-12

நீங்கள் எந்த பாடத்தை படிக்க
விரும்புகிறீர்களோ அந்த பாடத்தை
விருப்பத்துடன் படியுங்கள் அதன்
பலன் பல மடங்காக உங்களுக்கு
கிடைக்கும்.உங்களுக்கு விருப்பம்
இல்லாத ஏதாவது ஒரு பாடத்தை
நீங்கள் படிக்க வேண்டி இருக்கும் 
அத்துடன் அந்த பாடம் கடினமாக
இருக்கும்  என்று நினைத்து
கொண்டு அந்த பாடத்தை படிக்க
மனமில்லாமல் நீங்கள் படிப்பதை
விட என்னால் இப்பாடத்தை 
இலகுவாக படிக்கமுடியும்,அத்துடன்
இப்பாடத்தை என்னால் படிக்க
முடியாவிட்டால் யாரால் படிக்க
முடியும் என நினைத்து கொண்டு
படித்தால் உங்களால் அப்பாடத்தில்
ஜெயிக்க முடியும்.

விஞ்ஞானகல்வி -1

பற்றிக் அலங்காரம் - 1

தகவல் - 18

புனைப்பெயர்

 ஒருவர் தன்னுடைய தயாரிப்புக்களில்
அதாவது கதை,கட்டுரை,கவிதை,ஜோக்
போன்றபலவற்றினை எழுதிவெளியிடும்
போதுஇதனை எழுதியவர்என்றஇடத்தில்
தங்களுடையபுனைப்பெயரைஎழுதுவார்கள் .
இப்பெயரை பொதுவாக எழுத்தாளர்களே
உபயோகப்படுத்துவார்கள் எழுத்தாளர்கள்
தங்களுடைய சொந்த கதைகளையோ
அல்லது கட்டுரைகளையோ எழுதி
மற்றவர்கள் பார்வையிட வெளியிடும்
போது இதனை எழுதியவர் என்று எழுதும்
போது தங்களுடைய சொந்த பெயரை
எழுதாமல் தங்களுக்கு விரும்பிய
வேறு ஒரு பெயரை தாங்களே
தங்களுக்கு சூட்டிக் கொண்டு அப்
பெயரையே  தங்களுடைய தயாரிப்புகளில்
எழுதுவார்கள். அப்படிச் சூட்டப்படும்
வேறு பெயர் தான்  புனைப்பெயராகும்.
இப்பெயரை  முதன் முதலில் சீனாவில்
உள்ள  எழுத்தாளர்களே தங்களுடைய
எழுத்துக்களை வெளியிடும் போது
தங்களுடைய உண்மையான   பெயரை
எழுதாமல் தங்களுக்கு தாங்களே
புனைப்பெயரை சூட்டிக்கொண்டு
அப்பெயரையே எழுதினார்கள்.

திசைசொற்கள்-12

பாரசீகமொழிச்சொற்கள்
(1)சபாசு
(2)சர்க்கார்
(3)சிப்பந்தி
(4)ஜமுக்காளம்
(5)சுமார் 
(6) சால்வை

எதிர்கருத்துச் சொற்கள் -6

(51)அவசரம் - நிதானம்
(52)அவசம் - வசம்
(53)அவசியம் - அனாவசியம்
(54)அவமதித்தல் - மதித்தல்
(55)அவித்தை - வித்தை
(56)அழகு -குரூரம்
(57)அழித்தல் - ஆக்கல்
(58)அழிதல் - ஆதல்
(59)அழுகை - சிரிப்பு
(60)அறம் - மறம்

ஒத்தகருத்துச் சொற்கள் -15

(141)அருணோதயம் -வைகறை

(142)அருமை -ஆபூர்வம்
(143)அரும்பல் -முளைத்தல்
(144)அரும்பு - இளமீசை
(145) அரும்பு - மொட்டு
(146)அருவம் - உருவமற்றது
(147)அருவர் - தமிழர்
(148)அருவி - சிற்றாறு
(149)அருள் - திருவருள்
(150)அரை - பாதி

திருக்குறள் அதிகாரம் 9 - 2

விருந்தோம்பல்
(2)
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

கருத்து
உண்பது சாவா மருந்தேயானாலும்,
விருந்தினர் வீட்டின் புறத்தே இருக்க,
தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது
அன்று.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சங்கீதம் வினாவிடை -10

(28)"வரவீனா"கீதம் அமைந்துள்ள
       ராகம் எது ?
       (விடை - மோகனம்)

(29)வரவீனாகீதம் அமைந்துள்ள
      தாளம் எது?
      (விடை - சதுஸ்ரரூபகம்)

(30)"வரவீனா"என்ற கீதத்தில்
       வரும் கடவுள் யார்?
      (விடை - சரஸ்வதி )

பாவற்காய்


 

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-11

எந்த நேரத்தில் படித்தால் மிகவும்
சிறப்பாக படிக்கமுடியும் என நீங்கள்
நினைக்கின்றீர்களோ அந்த நேரத்திலே
தினமும் படியுங்கள் அப்படி படித்தீர்கள்
என்றால் படிப்பில் ஜெயிக்க முடியும். 

பௌதீகவியல் -1

 

துணியலங்காரம் - 2

திசைசொற்கள்-11

மராட்டி மொழிச் சொற்கள்
(1)அட்டவணை
(2)அபாண்டம்
(3)குண்டம்
(4)சாம்பார்
(5)சாவடி
(6)பட்டாணி
(7)வில்லங்கம்

எதிர்கருத்துச் சொற்கள் -5

(41)அமிழ்தல் - மிதத்தல்
(42)அமைதி - ஆரவாரம்
(43)அருமை -எளிமை
(44)அருள் - மருள்
(45)அர்த்தம் -அநர்த்தம்
(46)அலங்கோலம் - கோலம்
(47)அலர் - முகிழ்
(48)அலர்தல் - குவிதல்
(49)அல்லங்காடி - நாளங்காடி
(50)அல்வழி - நல்வழி

ஒத்தகருத்துச் சொற்கள் -14

(131)அரவு-பாம்பு

(132)அரிச்சுவடி-அரிவரி
(133)அரிச்சுவடு - ஏடு
(134)அரி - வண்டு
(135)அரி - சிங்கம்
(136)அரினை - கள்
(137)அரியணை -சிங்காசனம்
(138)அருக்கன் -சூரியன்
(139)அருங்கலம் - ஆபரணம்
(140)அருணன் - கதிரோன்

தகவல் -17

எரிமலைகள் மிக மிக
அதிகமாக காணப்படும்
நாடு இந்தோனேசியா
ஆகும் .

திருக்குறள் அதிகாரம் 9 -1

விருந்தோம்பல்
(1)
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு .

கருத்து
வீட்டில் இருந்து பொருட்களைக் காத்து
வாழ்வதெல்லாம் விருந்தினரை வரவேற்று
உதவி செய்வதற்கேயாகும்.

திங்கள்கிழமைவாழ்த்துக்கள்

திங்கள், 19 ஏப்ரல், 2010

துணியலங்காரம் - 1

நக அலங்காரம் -2

தமிழ் இலக்கணம் -(உயிர்மெய்எழுத்து -18)

மெய்எழுத்து - ன் உயிர் எழுத்துக்கள் - அ,அ,இ,ஈ,உ,ஊ, எ,ஏ,ஜ்,ஒ,ஓ,ஔ உயிர் + மெய் = உயிர்மெய் ன் + அ = ன ன் + ஆ = னா ன் + இ = னி ன் + ஈ = னீ ன் + உ = னு ன் + ஊ = னூ ன் + எ = னெ ன் + ஏ = னே ன் + ஜ் = னை ன் + ஒ = னொ ன் + ஓ = னோ ன் + ஔ = னௌ

தமிழிலக்கணம் -20

பின்னல் கலை -11

எதிர்கருத்துச் சொற்கள் -4

(31)அந்தகாரம் - வெளிச்சம்
(32)அந்தரங்கம் - பகிரங்கம்
(33)அந்தி - விடியல்
(34)அந்நியர் - உறவினர்
(35)அபசாரம் -உபசாரம்
(36)அபராதம் -சன்மானம்
(37)அபராதி -நிரபராதி
(38)அபூர்வம் -மிகுதி
(39)அமிர்தம் - ஆலம்
(40)அமிலம் - காரம்

ஐஸ்லாந்து எரிமலை

தகவல் -16

சேக்ஸ்பியரின் மேக்மத் என்ற 
நூலை ராவீந்திரநாத்தாகூர்
தனது 14  வயதில் மொழி
பெயர்த்தார்.
   

திசைசொற்கள்-10

சிங்கள மொழிச் சொற்கள் 

(1)தோடை
(2)வற்றாளை
(3)முருங்கை 

ஒத்தகருத்துச் சொற்கள் -13

(121)அயில் - வேல்

(122)அரங்கம் - சபை
(123)அரசன் - மன்னன்
(124)அரசிறை - கப்பம்
(125)அரசு - அரசன்
(126)அரசு - அரசியல்
(127)அரணியம் - காடு
(128)அரமியம் -நிலாமுற்றம்
(129)அரம்பை -தெய்வப்பெண்
(130)அரவிந்தம்-தாமரை

சங்கீதம் வினாவிடை - 9

(25)15  வது மேளராகம் என்ன?
      (விடை -மாயாமாளவகௌளை)

(26)மாயாமாளவகௌளை ராகத்தின்
   பழைய பெயர் என்ன ?  
   (விடை-மாளவகௌளம்)

(27)மாயாமாளவகௌளை ராகம்
      அமைந்த சக்கரம் எது?
     (விடை - அக்கினி)

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

திருக்குறள் அதிகாரம் -8 -10

அன்புடைமை 

(10)
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு .

கருத்து
உயிருக்கு இருப்பிடம் அன்பின் வழியாக
வரும் அறம்,அவ்வன்பு இல்லாதவருக்கு
உள்ள உடம்பானது எலும்பாலும் தோலாலும்
போர்த்தப்பட்ட வெற்றுடம்பே ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்




இளமைப் பெயர்கள் -2

தொடர்ச்சி  

(6)பசு - கன்று
(7)பாம்பு - குட்டி
(8)பூனை - குட்டி
(9)மாடு - கன்று
(10)மான் - கன்று

பின்னல் கலை -10 (Dropping Stitch)

எதிர்கருத்துச் சொற்கள் -3

(21)அடைப்பு - திறப்பு
(22)அலங்காரம் -அலங்கோலம்
(23)அணுகல் - விலகல்
(24)அணு - மலை
(25)அணைத்தல் -கொளுத்துதல்
(26)அண்மை - சேய்மை
(27)அதமம் -உத்தமம்
(28)அதிஷ்டம் - துரதிஷ்டம்
(29)அநேகம் - ஏகம்
(30)அந்தம் -அநந்தம்

இலைதுளிர்கால நிகழ்ச்சிகள் ஜேர்மனி









தகவல் -15

(1)இலங்கையின் இலவசக்
     கல்வியின் தந்தை
     சி,டபிள்யூ,டபிள்யூ கன்னங்கர
      ஆவார் .

(2)இலங்கையின் இயற்கைத்
    துறைமுகம் திருகோணமலை
   ஆகும் .

(3)இலங்கையின் செயற்கைத்
    துறைமுகம் கொழும்பு ஆகும்.

சங்கீதம் வினாவிடை - 8

(22)"கணநாதா" என்ற கீதத்தில் வரும்
      கடவுள் யார்?
     (விடை- விநாயகர்)

(23)மாயாமாளவகௌளை ராகத்தின்
     ஆரோகண அவரோகணம் என்ன?
     (விடை -ஸரிகமபதநிஸ்
                     ஸ்நிதபமாரிஸ)

(24)மாயாமாளவ கௌளை ராகம்
      அமைந்துள்ள மேள எண்?
      (விடை -15 )    

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-10

யாருடனும் சேர்ந்து படிக்காமல்
தனியாக படித்தால் படிக்கும்
பாடங்கள் எல்லாம் நன்றாக
மனதில் பதியும் என்று நீங்கள்
நம்பினால் அப்படியே தொடர்ந்து
படியுங்கள் அல்லது சேர்ந்து
படித்தால் தான் மனதில் பதியும்
என்றால் அதற்கு ஏற்றமாதிரி
நன்றாக  படிக்ககூடிய நண்பர்களுடன்
சேர்ந்து  படியுங்கள்.

திசைசொற்கள்-9

தெலுங்கு மொழிச் சொற்கள் 

(1)கொலுசு
(2)சந்தடி
(3)சலவை
(4)விருது

ஒத்தகருத்துச் சொற்கள் -12

(111)அம்பலம் - வெளி
(112)அம்பலம் - மேடம்
(113)அம்பி - தோணி
(114)அம்பிகை - பார்வதி
(115)அம்புயம் - தாமரை
(116)அம்புலி - சந்திரன்
(117)அம்மணம் - நிர்வாணம்
(118)அம்மை - தாய்
(119)அயனம் - பிறப்பு
(120)அயில் - கூர்மை

திருக்குறள் அதிகாரம் 8 -9

அன்புடைமை 
(9)
புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

கருத்து
உடலின் உள் உறுப்பாகிய அன்பு
இல்லாதவரின் உடலில் உள்ள
புறத்து உறுப்புகள் எல்லாம்
என்ன பயன் செய்யும்?

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

சனி, 17 ஏப்ரல், 2010

இளமைப் பெயர்கள் -1

(1)ஆடு - குட்டி
(2)எருமை - கன்று
(3)கரடி - குட்டி
(4)கீரி - பிள்ளை
(5)குதிரை - குட்டி

தமிழிலக்கணம் -19

எதிர்கருத்துச் சொற்கள் -2

(11)அசல் - நகல்,பிரதி
(12)அசாதாரணம் -சாதாரணம்
(13)அசுரர் - சுரர்
(14)அஜீரணம் - ஜீரணம்
(15)அசைவு - நிலைப்பாடு
(16)அச்சம் - தைரியம்
(17)அடக்கம் - செருக்கு
(18)அடக்கவொடுக்கம்-தான்தோன்றித்தனம்
(19)அடர்த்தி -பரவல்
(20)அடி - நுனி,முடி 

தமிழ் இலக்கணம் -(உயிர்மெய்எழுத்து -17)

மெய் எழுத்துக்கள் -ற்
உயிர்  எழுத்துக்கள் - அ,ஆ,இ,ஈ,உ.ஊ,
                                          எ,ஏ,ஜ்,ஒ,ஓ,ஔ

மெய்  + உயிர்  = உயிர்மெய்
      ற்  +       அ   =   ற
      ற்  +       ஆ =  றா
      ற் +       இ   =  றி
      ற்  +       ஈ    =  றீ
      ற் +       உ   =  று
      ற் +      ஊ   =  றூ
      ற் +        எ   =  றெ
      ற் +        ஏ   =  றே
      ற் +        ஜ்   =  றை
      ற் +        ஒ   =  றொ
      ற் +        ஓ   =   றோ
      ற் +    ஔ    =  றௌ
  

சிறுவர் பாடல்கள் - 10

பச்சைக் கிளியே வாவா
பாலும் சோறும் தின்னவா
கொச்சி மஞ்சள் பூசவா
கொஞ்சி விளையாட வா .

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-9

எங்கு படிக்கவேண்டும்?
எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்
ஆனால் படிக்கும் சூழல் அமைதியாகவும் 
சுத்தமானதாகவும்  கவனத்தை
சிதறடிக்காததாகவும் இடமாக
இருத்தல் அவசியமாகும்.

தகவல் 14

(1)இலங்கையின் தேசியபறவை
     காட்டுக்கோழி ஆகும்.

(2)இலங்கையின் தேசியமரம்
     நாகமரம் ஆகும்.

(3)இலங்கையின் தேசியமலர்
     நீலோற்பலம் ஆகும் .

சங்கீதம் வினாவிடை -7

(19)"சிவபெருமானே " என்ற கீதத்துக்குரிய
       கடவுள் யார்?
       (விடை-சிவபெருமான்)

(20)"கணநாதா"என்ற கீதம் அமைந்துள்ள
       ராகம் எது?
      (விடை - மாயாமாளவ கெளளை)

(21)"கணநாதா"என்ற கீதம் அமைந்துள்ள
       தாளம் என்ன?
     (விடை -சதுஸ்ரரூபகம்)

திசைசொற்கள்-8

அராபிய சொற்கள்

(1)இலாகா 
(2)சைத்தான் 
(3)தகவல் 
(4)வசூல் 

ஒத்தகருத்துச் சொற்கள் -11

(101)அபிராமி - பார்வதி

(102)அபிலாசை - விருப்பம்
(103)அபூர்வம் - அருமை
(104)அப்பு - நீர்
(105)அமரர் - தேவர்
(106)அமராவதி - இந்திரனுடைய நகரம்
(107)அமர் - போர்
(108)அமலன் - குற்றமற்றவன்
(109)அமுது - சோறு
(110)அமைதி - அடக்கம்

திருக்குறள் அதிகாரம் 8 -8

அன்புடைமை 
(8)
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று .

கருத்து
உள்ளத்தில் அன்பு இல்லாது வாழும்
உயிர் வாழ்க்கை ,கொடிய பாலை
நிலத்தில் பட்ட மரம் தளிர்த்ததை
போன்றது .

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்



தமிழ் இலக்கணம் (உயிர்மெய்எழுத்து-16 )

மெய்எழுத்து- ள்
உயிரெழுத்துக்கள் -அ,ஆ,இ,ஈ,உ,ஊ,
                                     எ,ஏ,ஜ்,ஒ,ஓ,ஔ,

மெய் + உயிர் = உயிர்மெய்
     ள்   +     அ   =  ள
     ள்  +      ஆ  =  ளா
     ள்  +      இ   =  ளி
     ள்  +       ஈ   =  ளீ
     ள் +       உ =  ளு
     ள்  +      ஊ =  ளூ
     ள் +       எ   = ளெ 
     ள் +       ஏ   =  ளே
     ள் +       ஜ் =  ளை
     ள் +       ஒ =  ளொ
     ள் +       ஓ = ளோ
     ள் +      ஔ = ளௌ

தமிழிலக்கணம் -18

தகவல்-13

உலகில் அகலமான பாலம்
அவுஸ்திரேலியாவில் உள்ள
சிட்னியில் அமைந்துள்ள
ஹார்பல் பாலம் ஆகும் .

எதிர்கருத்துச் சொற்கள் -1

(1)அகங்கை - புறங்கை
(2)அகம் - புறம்
(3)அகவல் -அணுகல்
(4)அகழ்தல் -தூர்த்தல்
(5)அகற்றுதல் - இணைத்தல்
(6)அகிம்சை -இம்சை
(7)அங்கீகரித்தல் -நீராகரித்தல்
(8)அங்கீகாரம் -பகிஷ்கரிப்பு
(9)அசட்டுத்தனம் - சாமர்த்தியம்
(10)அசதி - சுறுசுறுப்பு

பின்னல் கலை -8

சிறுவர் பாடல்கள் - 9

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
கோவில் புறாவே சாய்ந்தாடு.

தகவல் -12

(1)மிகப்பெரிய பறவை
    தீக்கோழி ஆகும் .

(2)நீந்த தெரியாத மிருகம்
    ஒட்டகம் ஆகும்.

(3)இறக்கை இலாத பறவை
    கிவி ஆகும்.

சங்கீதம் வினாவிடை -6

(16)"சிவபெருமானே"என்ற கீதம்
      அமைந்துள்ள தாளம் எது?
      (விடை-ஆதி)

(17)"சிவபெருமானே"என்ற பாடலின்
       வகை எது?
      (விடை-சஞ்சாரி கீதம்  )

(18)மத்தியமாவதி ராகத்தின் ஆரோகண
       அவரோகணம் என்ன?
       (விடை-ஸரிமபநிஸ்
                       ஸ்நிபமரிஸ)