தேவையான பொருட்கள்
உளுத்தம்பருப்பு - 1 சுண்டு
ரவை(பொன்னிறவறுவல்) - 2சுண்டு
ஜஸ்கட்டிகள் - தேவையானளவு
அப்பச்சோடா/Hefe - சிறிதளவு(விரும்பினாள்)
உப்பு - தேவையானளவு
செய்முறை
(1)ஒருபாத்திரத்தில் உளுத்தம்பருப்பை
போட்டு அதனுடன் நக சூடான
தண்ணீரை(உளுத்தம்பருப்பிற்கு
மேலே தண்ணீர் இருக்கவேண்டும்)
விட்டு அரை மணித்தியாலம்
ஊறவைக்கவும்.
(2) அரைமணித்தியாலத்தின் பின்பு
கிரைண்டரில்(மிக்சியில்)ஊறிய
உளுத்தம்பருப்பு ,தண்ணீர்
ஆகியவற்றை சேர்த்து இட்லி
பதத்திற்கு (நன்றாக அரைக்க
கூடாது) அரைக்கவும்.
(3)அதன் பின்பு அரைத்தவற்றை
ஒருபாத்திரத்தில் போடவும் .
(4 )பின்பு கிரைண்டரில்(மிக்சியில்)
பொன்னிறமாக வறுத்த ரவை,
தண்ணீர் ஆகியவற்றை போட்டு
நன்றாக அரைக்கவும் (கட்டி
இல்லாமல்) .
(5)அரைத்தபின்பு அரைத்த ரவையை
உளுந்து போட்ட பாத்திரத்தில்
போட்டு நன்றாக கலக்கவும் .
(6)அதன் பின்பு அதனுடன் ஜஸ்
கட்டிகளை சேர்த்து கலக்கவும் .
(7)பின்பு இதனுடன் அப்பச்சோடா
/Hefe (விரும்பினாள்) சேர்த்து
கலக்கவும் .
(8) அப்பச்சோடா/Hefe சேர்த்து
இருந்தால் 6 மணித்தி
யாலங்ககள் புளிக்கவிடவும்.
(கலக்காவிட்டால் அடுத்தநாள்
வரை புளிக்கவிடவும்)
(9)அதன் பின்பு உப்பு போட்டு
கலக்கவும்.
(10)பின்பு இட்லிப்பானையின்
அரைவாசிக்கு தண்ணீர்விட்டு
இப்பாத்திரத்தை அடுப்பில்
வைக்கவும்.
(11)அதன் பின்பு அதனுள் இட்லி
தட்டுகளை வைத்து மூடி
சூடாக்கவும் .
(12)இட்லி தட்டுகள் சூடாகியதும்
மூடியை திறந்து இட்லி
தட்டுகளை வெளியே எடுத்து
அதனுள் தேவையான அளவு
அரைத்த மாவை போட்டு இட்லி
பானையில் வைத்து வேகவிடவும்.
(13)இட்லிவெந்தபின்பு அடுப்பில் உள்ள
பாத்திரத்தில் இருந்து இட்லி தட்டை
வெளியே எடுத்து அதில் இருக்கும்
இட்லிகளை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.
(14)அதன் பின்பு சுவையான சுத்தமான
சத்தான இட்லிகள் தயாராகிவிடும் .
(15)இட்லிகள் தயாரான பின்பு ஒரு
தட்டில் தேவையான இட்லிகளை
வைத்து அதனுடன் சம்பல்,சட்னி,
சாம்பார்,ஏதாவது கறி ஆகியவற்றில்
ஒன்றைவைத்து பரிமாறவும் .
ஞாயிறு, 25 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.