கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 5 ஜனவரி, 2010

தோசை வகைகள்-3

தோசை 
தோசை சுவையானதும் சத்தானதும் சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ண
கூடியதும் ஆகும் ஆகவே இதை செயது சாப்பிட்டு
இதன் சுவையை அறியவும்

 தேவையான பொருட்கள் 
 புழுங்கலரிசி - 2 கப் பச்சரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 /2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
மஞ்சள்தூள் -சிறிதளவு
தண்ணீர் - தேவையானளவு

 செய்முறை 
 (1 )பாத்திரம் ஒன்றில் புழுங்கல்அரிசி,
       பச்சையரிசி, தண்ணீர் ஆகியவற்றை
      கலந்து இரண்டு மணித்தியாலம் ஊற
      வைக்கவும்.

 (2 )இன்னொரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு,
       வெந்தயம்,தண்ணீர் ஆகியவற்றை கலந்து
       15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

 (3 )இவையாவும் ஊறியபின்பு ஊறிய உளுத்தம்
       பருப்பு,வெந்தயம்,தண்ணீர் ஆகியவற்றை
       கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு பொங்க
       பொங்க அரைக்கவும்.

 (4 )அரைத்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
      போடவும்.

 (5 )பின்பு ஊறவைத்த புழுங்கல்அரிசி,பச்சரிசி,
      தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
      (மிக்ஸியில்) போட்டு நைசாக அரைக்கவும்.

 (6 )பின்பு அதை எடுத்து முதலில் வெந்தயம்
       உளுந்து அரைத்து போட்டு வைத்துள்ள
        பாத்திரத்தில் போடவும்.

 (7 )அதன் பின்பு அரைத்து பாத்திரத்தில் போட்டு
    வைத்திருக்கும் யாவற்றையும் புளிக்கவைக்கவும்.

 (8 )அடுத்த நாள் அதற்கு உப்பு,மஞ்சள் தூள் போட்டு
       நன்றாக கலக்கவும்.

 (9 )அதன்பின்பு அடுப்பில் தோசைக்கல்லை
      (வாணலியை) வைத்து சூடாக்கவும்.

(10 )தோசைக்கல்(வாணலி) சூடானதும் ஒரு
        துணியில்(அல்லது ஒரு சிறிய உருளைக்
       கிழங்கினை பாதியாக வெட்டி அதன்தோல்
       பாகத்தில் முள்ளுக்கரண்டியை செருகவும் )
      சிறிதளவு நல்லெண்ணையில் தோய்த்து
      எடுத்து அதை அதனை தோசைக்கல்லில்
      தடவும்.

 (11 )அதன் பின்பு கரைத்து புளிக்கவைத்துள்ள
        மாவில் ஒரு குழிக்கரண்டி எடுத்து தோசை
        க்கல்லில் ஊற்றி அதனை நன்றாககரண்டி
        யால் தடவி தோசையை வேகவிடவும்.

 (12 )ஒரு பக்கம் வெந்த பின்பு அதை திருப்பி
       போட்டு வேக விடவும். 

(13)தோசையின் இரு பக்கமும் நன்றாக வெந்த
     பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
    வைக்கவும்.

 (14)அதன் பின்பு சுவையான சத்தான தோசை
        தயாராகிவிடும் அதன் பின்பு தயாரான
      தோசையை எடுத்து ஒரு பாத்திரத்தில்
     வைக்கவும் .

 (15)இதேபோல மற்றைய தோசைகளையும்
       சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட
       பாத்திரத்தில் வைக்கவும்.

 (16)ஒருதட்டில் தேவையானளவு தோசைகளை
        வைத்து அதனுடன் சட்னி,சம்பல் குழம்பு,
        சாம்பார் இவற்றில் ஒன்றையோ அல்லது
        எல்லாவற்றையும் வைத்து பரிமாறவும்.

 எச்சரிக்கை
உழுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

ஆயத்த நேரம்
( 1 - 2 ) மணித்தியாலம்

சமைக்கும் நேரம் -
1மணித்தியாலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.