| தேவையான பொருட்கள் பச்சைஅரிசி - 1 சுண்டு சீனி(சர்க்கரை) -தேவையானளவு ஏலக்காய்ப்பொடி -2 தே.கரண்டி தே.எண்ணெய் -1போத்தல் |
|
செய்முறை
(1 )பச்சையரிசியை ஓரளவு சூடான
தண்ணீரில் அரை மணித்தியாலம்
ஊறவிடவும் .
(2 )ஊற வைத்த அரிசியை
கிரைண்டரில் (மிக்ஸியில்) ,உரலில்
போட்டு மாவாக அரைக்கவும்.
(3 )அரைத்த மாவை அரிதட்டினால்
மூன்று தடவை அரிக்கவும்.
(4 ) அரித்த மாவை ஒரு பாத்திரத்தில்
போடவும் .
(5 )மாவை அரித்த பின்பு கிடைக்கும்
குறுணலில் இருந்து சிறிய குறுணலை
எடுத்து விட்டு அதில் காணப்படும்
தேவையற்ற பொருட்களை அகற்றவும்.
(6 ) அகற்றிய பின்பு அரித்த மாவை போட்டு
வைத்திருக்கும் பாத்திரத்தில் மாவிற்கு
மேலே நெல் உமி அகற்றிய கப்பி
குருணல், ஏலக்காய்த்தூள்,சீனி(சக்கரை)
ஆகியவற்றை போட்டு காற்று உட்புகாதவாறு
நன்றாக மூடி வைக்கவும்.
(7 )அடுத்த நாள் பாத்திரத்திலுள்ள மாவை
நன்றாக கைகளால் குழைக்கவும் (குழைக்கும்
போது எந்த பொருளையும் மாவுடன்
சேர்க்ககூடாது அத்துடன் எந்த ஆயுதமும்
பாவிக்ககூடாது).
(8)அதன் பின்பு (2 -3 )மணித்தியாலம் இப்
பாத்திரத்தை மூடிவைக்கவும் .
(9)அதன் பின்பு குழைத்த மாவை ஓரளவு
உருண்டைகளாக்கிய பின்பு அதனை
லேசாக அமர்த்தவும் .
(10)அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதில் எண்ணெய் விட்டு
நன்றாக கொதிக்கவிடவும்.
(11)எண்ணெய் கொதித்ததும் அதில்
உருட்டி அமர்த்தி வைத்திருக்கும்
மாவை போட்டு பொரிய விடவும்.
(12 )பொரிந்த பின்பு அவற்றை ஓரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
(13 )இதனைப்போல எல்லாவற்றையும்
செய்து பொரித்தெடுக்கவும் .
(14 )இப்போது சுத்தமான சுவையான
அரியதரம் தயாராகி விட்டது .
(15 )ஓரு தட்டில் சுவையான அரியதரங்களை
வைத்து பரிமாறவும். |
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
தகவல் -7
தகவல் -7
(1)அரசியலின் தந்தை அரிஸ்டோட்டல்
(2)ஆறு இல்லாத நாடு -சவூதி அரேபியா
(1)அரசியலின் தந்தை அரிஸ்டோட்டல்
(2)ஆறு இல்லாத நாடு -சவூதி அரேபியா
Labels:
செய்திக்குறிப்புக்கள்
விடுகதைகள் - 10
விடுகதைகள் -10
(25)வரும் போது வெண்சிகப்பு!
வளர வளர தகதகப்பு !
போகும் போது கடும் சிகப்பு !
அது என்ன?
(26)மழைக்காலம் வந்துவிட்டால்
மகராசி பாட்டெடுப்பாள்
அவள் யார் ?
(27)அடர்ந்த காட்டில் இருண்ட
மனிதன் அவன் யார்?
(விடை - பேன்)
(25)வரும் போது வெண்சிகப்பு!
வளர வளர தகதகப்பு !
போகும் போது கடும் சிகப்பு !
அது என்ன?
(26)மழைக்காலம் வந்துவிட்டால்
மகராசி பாட்டெடுப்பாள்
அவள் யார் ?
(27)அடர்ந்த காட்டில் இருண்ட
மனிதன் அவன் யார்?
(விடை - பேன்)
Labels:
விடுகதைகள்
சங்கீதம்-10
தொடர்ச்சி
ஆரோகணம்
ஸ்வரங்கள் கீழே இருந்து
சுருதியில் கூடிக்கொண்டு
செல்வது ஆரோகணம்
எனப்படும் .ஆரோகனத்தின்
வேறு பெயர்களாவன
1 .ஆரோசை ஏற்றம்
2 ,ஏறுவரிசை
ஆரோகணம்
ஸ்
நி
த
ப
ம
க
ரி
ஸ
Labels:
சங்கீதகல்வி
திருக்குறள் அதிகாரம் -5 -1
இல்வாழ்க்கை
(1)
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை .
கருத்து
இல்லறத்தில் வாழ்பவன் என்று
சொல்ப்படுவன்.அற இயல்புடைய
மூன்று பேருக்கும் நல்லொழுக்க
வழியில் உறுதியான துணையாவான்.
(1)
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை .
கருத்து
இல்லறத்தில் வாழ்பவன் என்று
சொல்ப்படுவன்.அற இயல்புடைய
மூன்று பேருக்கும் நல்லொழுக்க
வழியில் உறுதியான துணையாவான்.
Labels:
திருக்குறள்
சனி, 27 பிப்ரவரி, 2010
பயனுள்ள குறிப்புக்கள்,-8
சப்பாத்தியின் மேலே சிறிது எண்ணையை
தடவிய பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
வைத்து மூடிய பின்பு அப்பாத்திரத்தை மேல்
பிரிட்ஜில் வைத்தல் சப்பாத்தி பழுதாகாமல்
இருக்கும்.
கடலையை வறுப்பது போல கூழ்
வற்றலையும் எண்ணெய் இல்லாமல்
மணலில் வறுத்து எடுக்கலாம்(பெரிதாகவே
பொறியும்)
Labels:
பயனுள்ளகுறிப்பு
ஒத்தகருத்துச்சொற்கள் -1
ஒத்தகருத்துச் சொற்கள்
(1)அகிலம் -பூமி
(2) அமர்தல் - இருத்தல்
(3) அடவி - காடு
(4) அரமியம் - நிலாமுற்றம்
(5) அரமியம் - ,உட்பரிகை
(6) அனல் -நெருப்பு
(7) அப்பா-தந்தை
(8) அம்மா-தாய்
ஓரு சொல்லின் பொருளுக்கு ஒத்த
பொருளைத் தரும் சொல் அச்
சொல்லுக்கு ஒத்த கருத்து சொல்
ஆகும்.
(1)அகிலம் -பூமி
(2) அமர்தல் - இருத்தல்
(3) அடவி - காடு
(4) அரமியம் - நிலாமுற்றம்
(5) அரமியம் - ,உட்பரிகை
(6) அனல் -நெருப்பு
(7) அப்பா-தந்தை
(8) அம்மா-தாய்
(9) அஃகம் - தானியம்
(10) அகங்காரம் - செருக்கு
(10) அகங்காரம் - செருக்கு
Labels:
சொற்கள்
சிறுவர் பாடல்கள் - 4
எறும்பு
ஓடும் எறும்பே நில்நில்
ஓடி விளையாடச் சொல்சொல்
ஊரும் எறும்பே நில்நில்
உழைத்து வாழச் சொல்சொல்
சின்ன எறும்பே நில்நில்
சேர்ந்து படிக்க சொல்சொல்
புற்று எறும்பே நில்நில்
பூக்கள் மலரச் சொல்சொல்
கடிக்கும் எறும்பே நில்நில்
சுறுசுறுப்பை எமக்குச் சொல்சொல்
Labels:
சிறுவர் பகுதி
உலகநீதி
ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம்
போகாத இடம்தனில் போகவேண்டாம்
போகவிட்டு புறம்சொல்லித் திரியவேண்டாம்
வாகாரு குறவடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.
கருத்து
படிக்காமல் ஒருநாளும் இருக்ககூடாது
எவர் மீது அவதூறான சொற்களை சொல்லக்
கூடாது ;தாயை மறக்க கூடாது:
வஞ்சகர்களுடைய சிநேகிதம் கூடாது :
செல்லத்தகாத இடங்களுக்கு போக கூடாது:
ஒருவரை பார்க்கும் போது அவரை புகழ்ந்தும்
அவரை பார்க்காத போது இகழக்கூடாது.
Labels:
உலக நீதி
திருக்குறள் அதிகாரம் -4
அறன் வலியுறுத்தல்
(10)
செயற்பால தோரும் அரனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
கருத்து
ஒருவன் செய்ய வேண்டியது அறச்செயலே
செய்யாமல் தவிர்க்க வேண்டியது தீச்செயலே .
(10)
செயற்பால தோரும் அரனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
கருத்து
ஒருவன் செய்ய வேண்டியது அறச்செயலே
செய்யாமல் தவிர்க்க வேண்டியது தீச்செயலே .
Labels:
திருக்குறள்
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-1)
தொடர்ச்சி
உயிர் மெய் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் ,மெய் எழுத்துக்கள்
ஆகிய இரண்டு எழுத்துகளும் சேர்ந்த
பின்பு வரும் புதிய எழுத்தே
உயிர் மெய் எழுத்தாகும் அத்துடன் இது
ஓரு சார்பு எழுத்தாகும்.
அவையாவன
மெய் எழுத்து+உயிர் எழுத்து =சார்பு எழுத்து
ஆகும் .
அவையாவன
(1)மெய் எழுத்து -க்
உயிர் எழுத்துக்கள் -அ, ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,
ஜ,ஒ,ஓ,ஔ.
மெய்யெழுத்து + உயிரெழுத்து = சார்புஎழுத்து
க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ
க் + உ = கு
க் + ஊ = கூ
க் + எ = கெ
க் + ஏ = கே
க் + ஜ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஔ = கௌ
உயிர் மெய் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் ,மெய் எழுத்துக்கள்
ஆகிய இரண்டு எழுத்துகளும் சேர்ந்த
பின்பு வரும் புதிய எழுத்தே
உயிர் மெய் எழுத்தாகும் அத்துடன் இது
ஓரு சார்பு எழுத்தாகும்.
அவையாவன
மெய் எழுத்து+உயிர் எழுத்து =சார்பு எழுத்து
ஆகும் .
அவையாவன
(1)மெய் எழுத்து -க்
உயிர் எழுத்துக்கள் -அ, ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,
ஜ,ஒ,ஓ,ஔ.
மெய்யெழுத்து + உயிரெழுத்து = சார்புஎழுத்து
க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ
க் + உ = கு
க் + ஊ = கூ
க் + எ = கெ
க் + ஏ = கே
க் + ஜ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஔ = கௌ
Labels:
தமிழ்கல்வி
சங்கீதம்-9
தொடர்ச்சி
பன்னிரண்டு ஸ்வர ஸ்தானங்கள்
1 .ஸட்யம்-ஸ
2 .சுத்தரிஷபம்-ரி 1
3 .சதுஸ்ருதிரிஷபம் -ரி 2
4 .சாதாரண காந்தாரம் -க 1
5 .அந்தர காந்தாரம் -க 2
6 .சுத்த மத்யமம் -ம 1
7 .பிரதி மத்யமம் -ம 2
8 .பஞ்சமம் -ப
9 .சுத்ததைவதம் -த 1
10 .சதுஸ்ருதி தைவதம் -த 2
11 .கைசிகி நிஷாதம் -நி 1
12 .காகவி நிஷாதம் -நி 2
Labels:
சங்கீதகல்வி
சங்கீதம்-8
தொடர்ச்சி
பன்னிரண்டு
ஸ்வரஸ்தானங்கள்
ஸ்வரதானங்கள் ஏழு(7)வகைப்படும்
ஸ- ஸட்சம்
ரி-ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்யமம்
ப-பஞ்சமம்
த-தைவதம்
நி-நிஷாதம்
இந்த 7 ஸ்வரங்களும் இரு வகையாக
பிரிக்கப்பட்டுள்ளன
அவையாவன
பிரக்ருதிஸ்வரம்
விக்ருதிஸ்வரம்
பிரக்ருதிஸ்வரம் என்றால் கோமள,
தீவிர சுருதி பேதமற்ற ஸ்வரங்களான
ஸட்ஜம்,பஞ்சமம் ஆகும் .
விக்ருதிஸ்வரங்கள் என்றால் கோமள
தீவிர சுருதி பேதமுள்ள ஸ்வரங்களான
ரிஷபம் ,காந்தாரம்,மத்யமம்,தைவதம்,
நிஷாதம் ஆகிய ஸ்வரங்கள் முறையே
ஒவ்வொன்றும் கோமள ஸ்வர
ஸ்தானமாகவும்,தீவிர ஸ்வர
ஸ்தானமாகவும் மாறுகின்றன .ரி,க,ம,
த,நி ஆகிய ஜந்து (5)ஸ்வரங்களும்
முறையே ஒவ்வொன்றும் இரண்டு
ஸ்வரங்களாக மாறும் போது 5 தர 2
சமன் 10 ஸ்வரதானங்களாக ஆகின்றன
இவற்றுடன் பிரக்ருதி ஸ்வரங்கலாகிய
ஸட்யம்,பஞ்சமம் ஆகிய இரண்டு
ஸ்வரங்களையும் சேர்க்க மொத்தம் 12
ஸ்வரஸ்தானங்களாக மாறுகின்றன.
Labels:
சங்கீதகல்வி
திருக்குறள் அதிகாரம் -4
அறன் வலியுறுத்தல்
(9 )
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல .
கருத்து
அறத்தோடு வாழ்வதால் வரும் இன்பமே
இன்பமாகும் :அறத்தோடு பொருந்தாமல்
வருவனவெல்லாம் இன்பம் இல்லாதவை .
புகழும் இல்லாதவை .
Labels:
திருக்குறள்
வியாழன், 25 பிப்ரவரி, 2010
சங்கீதம்-7
வினாக்கள்
(1)சங்கீதம் என்றால் என்ன?
(2)நாதம் என்றால் என்ன?
(3)நாதத்தின் பிரிவுகள் எவை?
(4)நாதத்தின் பிரிவுகளை விளக்குக?
(5)சுருதி என்றால் என்ன?
Labels:
சங்கீதகல்வி
தமிழ் இலக்கணம்
தொடர்ச்சி
சார்பெழுத்துக்களும்
அதன் வகைகளும்
12 உயிர் எழுத்துக்களும் 18 மெய்
எழுத்துக்களும் தமிழ் மொழிக்கு
அடிப்படையான எழுத்துக்கள்
ஆகவே தான் இவற்றை முதல்
எழுத்துக்கள் என அழைக்கப்படுகிறது
இவை தவிர்ந்த உயிர்மெய்
எழுத்துக்களும்,ஆய்த எழுத்துக்களும்
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றதாக
தமக்கு உரிய மாத்திரையை விட
நீண்டு அல்லது குறுகி ஒலிக்கும் உயிர்
அல்லது மெய் எழுத்துக்களும்
சார்பெழுத்துக்கள் எனப்படும்.இவ்
சார்பெழுத்துக்கள் 10 வகையுள்ளதாக
நன்னூல் கூறுகின்றது .
Labels:
தமிழ்கல்வி
சங்கீதம்-6
தொடர்ச்சி
விக்ருதிஸ்வரங்கள்
விக்ருதிஸ்வரங்கள் என்பது
கோமள தீவிர சுருதி பேதமுள்ள
ஸ்வரங்களாகும்.இவை
அசைவுள்ள ஸ்வரங்களாகும் .
இவற்றைத் தமிழில் செயற்கை
ஸ்வரங்கள் என அழைப்பார்கள் .
அவையாவன .
1 .ரிஷபம்
2 .மத்யமம்
3 .நிஷாதம்
4 .காந்தாரம்
5 .தைவதம்
Labels:
சங்கீதகல்வி
திருக்குறள் அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
(8 )
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
கருத்து
ஒருவன் அறம் செய்யத் தவறிய
நாள் உண்டாகாமல் அறத்தைச்
செய்வானானால், அதுவே
அவனுடைய பிறப்பாகிய நாள்
வரும் வழியை அடைக்கும்
கல்லாகும்.
(8 )
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
கருத்து
ஒருவன் அறம் செய்யத் தவறிய
நாள் உண்டாகாமல் அறத்தைச்
செய்வானானால், அதுவே
அவனுடைய பிறப்பாகிய நாள்
வரும் வழியை அடைக்கும்
கல்லாகும்.
Labels:
திருக்குறள்
புதன், 24 பிப்ரவரி, 2010
சலாட் வகைகள் -4
வல்லாராய் சலாட்
தேவையான பொருட்கள் வல்லாரை -தேவையானளவு பால் -சிறிதளவு வெங்காயம்(நறுக்கியது)-1 /2பாதி பச்சைமிளகாய்(நறுக்கியது)-தேவையானளவு தேசிக்காய்சாறு(எலுமிச்சம்பழ சாறு)-சிறிதளவு உப்பு -தேவையானளவு மிளகுத்தூள் -தேவையானளவு செய்முறை 1 .ஓரு பாத்திரத்தில் வெட்டிய வல்லாரை ,நறுக்கிய வெங்காயம்,நறுக்கிய பச்சைமிளகாய்,உப்பு,மிளகுத்தூள் பால்,தேசிக்காய் (எலுமிச்சம்பழ) சாறு ஆகியவற்றை அதில் போட்டு நன்றாக கலந்து சிறிது நேரம் ஊறவிடவும். 2 .அதன்பின்பு சுத்தமான சுவையான சத்தான வல்லாரை சலாட் தயாராகி விடும். 3 .அதன் பின்பு ஓரு தட்டில் சோற்றினை(சாதம்) வைத்து அதனுடன் வல்லாரை சலாட்டினை வைத்து பரிமாறவும்.
Labels:
சமையல் குறிப்புக்கள்
திருக்குறள் அதிகாரம் -4
அறன் வலியுறுத்தல்
(7)
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்தான் இடை .
கருத்து
அறத்தின் பயன் இன்னது என்று
பல்லக்கைச் சுமப்பவனிடத்தும்,
அதில் ஏறிச் செல்வோனிடத்தும்
சொல்ல வேண்டாம்.
(7)
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்தான் இடை .
கருத்து
அறத்தின் பயன் இன்னது என்று
பல்லக்கைச் சுமப்பவனிடத்தும்,
அதில் ஏறிச் செல்வோனிடத்தும்
சொல்ல வேண்டாம்.
Labels:
திருக்குறள்
சங்கீதம்-5
தொடர்ச்சி
பிரக்ருதிஸ்வரங்கள்
பிரக்ருதிஸ்வரங்கள் என்பது
கோமள,தீவிர சுருதி பேதமற்ற
ஸ்வரங்கள் ஆகும் .இவற்றை
தமிழில் இயற்கை ஸ்வரங்கள்
என்று அழைக்கப்படும் .
அவையாவன
1 .ஸட்ஜம்
2 .பஞ்சமம்
Labels:
சங்கீதகல்வி
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் -4
அறன் வலியுறுத்தல்
(6)
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை .
கருத்து
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
இராது அறத்தைச் செய்யுங்கள் .அவ்வறம்
உடல் அழியுங் காலத்தில் அழியாத
துணையாகும்
(6)
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை .
கருத்து
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
இராது அறத்தைச் செய்யுங்கள் .அவ்வறம்
உடல் அழியுங் காலத்தில் அழியாத
துணையாகும்
Labels:
திருக்குறள்
இனிப்புவகைகள்-3
அரியதரம் அரியதரம் இலங்கை மக்களால் மிகவும்
விரும்பி உண்ணப்படும் இனிப்புவகை
ஆகும் அரியதரம் இலங்கை மக்களால்
கொண்டாடப்படும் திருமணம் போன்ற
கலாச்சார வைபவங்களில் மிகமிக
முக்கிய இடத்தை வகிக்கிறது. அத்துடன்
இந்த இனிப்பானது அரிசிமாவை அரித்து
(சலித்து) செய்வதாலும் தரமாக
இருப்பதாலும் இதற்கு பழமையான
காலத்து மக்களால் அரியதரம் எனப்
பெயர் சூட்டப்பட்டது.
|
Labels:
சமையல் குறிப்புக்கள்
சங்கீதம்.4
தொடர்ச்சி
ஸ்வரம்
இயற்கையாகவே ரசனையைக்
கொடுக்கும் தொனியுடன் கூடிய
அட்சரங்களை ஸ்வரங்கள் என
அழைக்கின்றோம்.இவைகள்
முறையே ஸரிகமபதநி என்றும்
அதாவது
ஸ-ஸட்ஜம்
ரி .ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்யமம்
த-தைவதம்
நி-நிஷாதம்
என்றும் வடமொழியில் கூறுவார்கள்
இந்த ஸ்வரங்களை தமிழிசையில்
ஸ-குரல்
ரி-துத்தம்
க-கைக்கிளை
ம-உழை
ப-இளி
த-விளரி
நி-தாரம்
என அழைக்கப்படுகின்றது .
ஸ்வரங்கள் ஏழு(7 ) வகைப்படும்
அவையாவன
ஸ-ஸட்ஜம்
ரி-ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்திமம்
ப-பஞ்சமம்
த-தைவதம்
நி-நிஷாதம்
இந்த ஏழு(7)ஸ்வரங்களும்
இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன
அவையாவன
1 .பிரக்ருதிஸ்வரங்கள்
2 .விக்ருதிஸ்வரங்கள் ஆகும்
Labels:
சங்கீதகல்வி
Poems And Rhymes For Children -7
Running
Run,run O what fun !
Out of doors
In the sun
Down the road.
Run,run O what fun !
Out of doors
In the sun
Down the road.
Labels:
ஆங்கிலக்கல்வி
திங்கள், 22 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் -4
அறன் வலியுறுத்தல்
(5)
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர் பிற .
கருத்து
மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தல்
வேண்டும் :அவ்வளவே அறம்; மற்றவை
ஆரவாரத் தன்மையுடையவை .
Labels:
திருக்குறள்
திருக்குறள் அதிகாரம் -4
அறன் வலியுறுத்தல்
(4)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
கருத்து
பொறாமை ,ஆசை,சினம்,கடுஞ்சொல் ஆகிய
நான்கு குற்றங்களுக்கும் இடம் இன்றி ,
அவற்றை ஒழித்து நடப்பதே அறம் .
(4)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
கருத்து
பொறாமை ,ஆசை,சினம்,கடுஞ்சொல் ஆகிய
நான்கு குற்றங்களுக்கும் இடம் இன்றி ,
அவற்றை ஒழித்து நடப்பதே அறம் .
Labels:
திருக்குறள்
Poems And Rhymes For Chidren-6
Butterfly Butterfly
Butterfly butterfly
Where do you fly?
So quick and so high
In the blue, blue, sky.
Butterfly butterfly
Where do you fly?
So quick and so high
In the blue, blue, sky.
Labels:
ஆங்கிலக்கல்வி
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
பழமொழிகள்-11
அல்லது
முதுமொழிகள்
(46)குறைகுடம் தளும்பும். நிறைகுடம் தளும்பாது .
(47)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .
(48)பழகப் பழகப் பாலும் புளிக்கும் .
(49)அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்.
(50)ஊருடன் ஒத்து வாழ்.
முதுமொழிகள்
(46)குறைகுடம் தளும்பும். நிறைகுடம் தளும்பாது .
(47)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .
(48)பழகப் பழகப் பாலும் புளிக்கும் .
(49)அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்.
(50)ஊருடன் ஒத்து வாழ்.
Labels:
பழமொழிகள்
திருக்குறள் அதிகாரம் -4
அறன் வலியுறுத்தல்
(3)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல் .
கருத்து
இயன்ற வகையில் அறச்செயலை எக்
காரணத்தாலும் இடைவிடாமல் செல்லும்
இடமெல்லாம் செய்தல் வேண்டும் .
(3)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல் .
கருத்து
இயன்ற வகையில் அறச்செயலை எக்
காரணத்தாலும் இடைவிடாமல் செல்லும்
இடமெல்லாம் செய்தல் வேண்டும் .
Labels:
திருக்குறள்
சனி, 20 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் -4
அறன் வலியுறுத்தல்
(2)
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு .
கருத்து
அறத்தை விடப் பெருக்கத்தை தருவதும்
இல்லை,அவ்வறத்தை போற்றாமல்
மறப்பதை விடக் கெடுதியானதும் இல்லை
(2)
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு .
கருத்து
அறத்தை விடப் பெருக்கத்தை தருவதும்
இல்லை,அவ்வறத்தை போற்றாமல்
மறப்பதை விடக் கெடுதியானதும் இல்லை
Labels:
திருக்குறள்
சலாட் வகைகள் -3
Labels:
சமையல் குறிப்புக்கள்
திருக்குறள் அதிகாரம் -4
அறன் வலியுறுத்தல்
(1 )சிறப்புஈனும் செல்வமும்ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவளோ உயிர்க்கு .
கருத்து
அறம் சிறப்பையும் கொடுக்கும்.செல்வத்தையும்
கொடுக்கும் ஆதலால் அறத்தைவிட மேலான
செல்வம் உயிகளுக்கு யாது உளது?
(1 )சிறப்புஈனும் செல்வமும்ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவளோ உயிர்க்கு .
கருத்து
அறம் சிறப்பையும் கொடுக்கும்.செல்வத்தையும்
கொடுக்கும் ஆதலால் அறத்தைவிட மேலான
செல்வம் உயிகளுக்கு யாது உளது?
Labels:
திருக்குறள்
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் -3
நீத்தார் பெருமை
(10 )
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
கருத்து
எல்லா உயிர்களிடத்தும் செம்மையான
அருளைக் கொண்டு நடத்தலால்,அந்தணர்
என்போர் அறத்தை உடையவர் ஆவார்.
Labels:
திருக்குறள்
வியாழன், 18 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் -3
நீத்தார் பெருமை
(9 )குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது .
கருத்து
நற்பண்புகளாகிய மலையின் உச்சியில் ஏறி
நின்ற பெரியாரின் கோபம் ஒரு கணப்
பொழுதே நிற்குமானாலும் ,அதைத் தடுத்து
காத்தல் முடியாது .
(9 )குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது .
கருத்து
நற்பண்புகளாகிய மலையின் உச்சியில் ஏறி
நின்ற பெரியாரின் கோபம் ஒரு கணப்
பொழுதே நிற்குமானாலும் ,அதைத் தடுத்து
காத்தல் முடியாது .
Labels:
திருக்குறள்
புதன், 17 பிப்ரவரி, 2010
பேய்களின் ஊர்வலம் -ஜெர்மனி
பொதுவாக எல்லா நாட்டினரும் பேய்களின்
திருவிழாவை வெவ்வேறு மாதங்களில்
வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள் .
ஜேர்மனிய மக்கள் இவ்விழாவை மாசி
மாதத்தில் கொண்டாடுவார்கள் இவ்
விழாவில் பங்குபற்றும் ஜேர்மனிய மக்கள்
விதவிதமான உடைகளை அணிந்து
ஊர்வலமாக செல்வார்கள் ஊர்வலத்தினை
காண வரும் சிறுவர்களுக்கு இனிப்புக்களை
வழங்கி மகிழ்வார்கள் .
Labels:
அலங்காரங்கள்
திருக்குறள் அதிகாரம் -3
நீத்தார் பெருமை
(8 )
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் .
கருத்து
நிறைந்த கல்வி,ஒழுக்கம் உடைய
சான்றோர்களின் பெருமையை ,உலகில்
அழியாமல் விளங்கும் அவர்களுடைய
மந்திர மொழிகளே காட்டி விடும் .
(8 )
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் .
கருத்து
நிறைந்த கல்வி,ஒழுக்கம் உடைய
சான்றோர்களின் பெருமையை ,உலகில்
அழியாமல் விளங்கும் அவர்களுடைய
மந்திர மொழிகளே காட்டி விடும் .
Labels:
திருக்குறள்
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் -3
நீத்தார் பெருமை
(7 )
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஜந்தின்
வகைதெரிவான் சுட்டே உலகு.
கருத்து
சுவை ,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்று
சொல்லப்பட்ட ஜந்தினுடைய
தன்மைகளையும் அறிபவனிடத்தில்
உலகம் உள்ளது .
(7 )
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஜந்தின்
வகைதெரிவான் சுட்டே உலகு.
கருத்து
சுவை ,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்று
சொல்லப்பட்ட ஜந்தினுடைய
தன்மைகளையும் அறிபவனிடத்தில்
உலகம் உள்ளது .
Labels:
திருக்குறள்
திங்கள், 15 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் - 3
நீத்தார் பெருமை
(6)செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் .
கருத்து
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய
வல்லவர் பெரியவர் ,செய்வதற்கு அரிய
செயல்களைச் செய்ய முடியாதவர் சிறியவர் .
(6)செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் .
கருத்து
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய
வல்லவர் பெரியவர் ,செய்வதற்கு அரிய
செயல்களைச் செய்ய முடியாதவர் சிறியவர் .
Labels:
திருக்குறள்
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் - 3
நீத்தார் பெருமை
(5)
ஜந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி .
கருத்து
ஜம்பொறிகளையும் அடக்கியவனின்
வலிமைக்கு, பெரிய வானுலகத்தாருக்குத்
தலைவனாகிய இந்திரனே போதிய
சான்று ஆவான் .
(5)
ஜந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி .
கருத்து
ஜம்பொறிகளையும் அடக்கியவனின்
வலிமைக்கு, பெரிய வானுலகத்தாருக்குத்
தலைவனாகிய இந்திரனே போதிய
சான்று ஆவான் .
Labels:
திருக்குறள்
வெள்ளி, 12 பிப்ரவரி, 2010
பொதுஅறிவு
1.உலகில் மிக நீளமான ஆறு எது?
(விடை - நைல் நதி)
2.உலகில் மிக மிக உயரமான
மலைச்சிகரம்எது?
(விடை - எவரெஸ்ட் சிகரம்)
3.உலகில் மிகப் பெரிய பாலைவனம்
எது?
(விடை - சகாராப் பாலைவனம்)
4.உலகில் மிகப் பெரிய அகலமான
நதி எது?
(விடை - மிசிசிபி)
5.உலகில் அதிக சனத்தொகை
கொண்ட நாடு எது?
(விடை -சீனா)
6.பறக்காத பறவை எது ?
(விடை - பெங்குவின்)
7.மிகப் பெரிய பறவை எது?
(விடை - தீக்கோழி)
8.நீந்தத் தெரியாத மிருகம் எது?
(விடை - ஒட்டகம்)
9.இறக்கை இல்லாத பறவை எது?
(விடை - கிவி)
(விடை - நைல் நதி)
2.உலகில் மிக மிக உயரமான
மலைச்சிகரம்எது?
(விடை - எவரெஸ்ட் சிகரம்)
3.உலகில் மிகப் பெரிய பாலைவனம்
எது?
(விடை - சகாராப் பாலைவனம்)
4.உலகில் மிகப் பெரிய அகலமான
நதி எது?
(விடை - மிசிசிபி)
5.உலகில் அதிக சனத்தொகை
கொண்ட நாடு எது?
(விடை -சீனா)
6.பறக்காத பறவை எது ?
(விடை - பெங்குவின்)
7.மிகப் பெரிய பறவை எது?
(விடை - தீக்கோழி)
8.நீந்தத் தெரியாத மிருகம் எது?
(விடை - ஒட்டகம்)
9.இறக்கை இல்லாத பறவை எது?
(விடை - கிவி)
Labels:
பொதுஅறிவு
ஒலிம்பிக்போட்டிகள்
நவீன ஒலிம்பிக் போட்டிகள் கி.பி
1896 ஆம் ஆண்டு ஏதென்சில்
ஆரம்பமாகின 1900ஆம் ஆண்டு
இரண்டாவது ஒலிம்பிக் போட்டி
பாரிஸில் நடை பெற்றது 29 வது
2008 ஆம் ஆண்டு சீனாவில்
நடைபெற்றது
Labels:
விளையாட்டுகல்வி
திருக்குறள் அதிகாரம் -3
நீத்தார் பெருமை
(4 )
உரனென்னும் தோட்டியான் ஒரைத்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து .
கருத்து
அறிவு என்னும் அங்குசத்தால் ஜம்
பொறிகளாகிய யானைகளை
அடக்கிக் காப்பவன் ,மேன்மை
உடைய வீட்டிற்கு விதை ஆவான் .
(4 )
உரனென்னும் தோட்டியான் ஒரைத்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து .
கருத்து
அறிவு என்னும் அங்குசத்தால் ஜம்
பொறிகளாகிய யானைகளை
அடக்கிக் காப்பவன் ,மேன்மை
உடைய வீட்டிற்கு விதை ஆவான் .
Labels:
திருக்குறள்
பூச்சிகளை விழுங்கும் தாவரம்
பூச்சிகளை விழுங்கும் பிட்சர்
தாவரங்கள் இந்தோனேசியா
ஆவுஸ்திரேலியா,மலேசியா
ஆகிய வெப்ப மண்டல
பகுதிகளில் காணப்படுகின்றன
பிட்சா தாவரத்தின் பூக்கள்
ஒருபெரியசாடியின் வடிவத்தில்
இருக்கும்.இலைகளின்உதவியால்
சுரக்கும் வாசனையான படலம்
பூக்களின் உட்புறத்தில் படிந்து
கொள்கிறது .வேர்களினால்
உறிஞ்சப்படும் நீரில் இந்த
வாசனையுள்ள படலம் கரைந்து
பூவின் அடியில் தங்கிவிடுகிறது
சிறு பிராணிகள் இவ்வாசனையால்
கவரப்பட்டு நீரை குடிப்பதற்காக
இந்த சாடி வடிவிலுள்ள பூவிற்குள்
செல்லும் போது பூ மூடிக்கொள்கிறது.
அதன் பின்பு இப்பூவினுள் அகப்பட்ட
பிராணிகளின் உடல் சிதைக்கப்பட்டு
பிட்சர் தாவரத்தினால் உறிஞ்சிக்
கொள்ளப்படுகிறது.
Labels:
விஞ்ஞானகல்வி
வினா விடை
சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ?
பூமியின் புவியீர்ப்பு விசையை
காட்டிலும் சந்திரனில் ஈர்ப்புவிசை
ஆறுமடங்கு குறைவு.பூமியில்
புவியீர்ப்பு விசை அதிகமாக
இருப்பதினால் தான் பூமி காற்று
மண்டலத்தை இழுத்து பிடித்து
வைத்திருக்கிறது. ஆனால்
சந்திரனில் ஈர்ப்புவிசை
குறைவாக இருப்பதினால் தான்
சந்திரனால் காற்று மண்டலத்தை
இழுத்து பிடித்து வைத்திருக்க
முடியவில்லை அதனால் தான்
சந்திரனில் காற்று இல்லை.
Labels:
விஞ்ஞானகல்வி
தகவல் -6
தகவல் -6
சூரியன் பற்றிய உண்மைகளைக்
கண்டறிவதிற்காக ஜரோப்பிய
விண்வெளி நிறுவனமும்
அமெரிக்காவின் நாசாநிறுவனமும்
இரண்டு விண்கலங்களை அனுப்ப
இருக்கின்றன .ஜரோப்பா அனுப்பும்
விண்கலத்திற்குசோலார்ஆர்ப்பிட்டர்
என்று பெயர் இரண்ட்டாயிரத்தி
பதினேழாம்ஆண்டில்இந்தவிண்வெளி
அனுப்பபடுகிறது .இந்த விண்கலம்
சூரியனை சுற்றி வந்து அதன்
துருவக்காட்சிகளை காட்டும்.
இரண்டாவது விண்கலத்தை
அமெரிக்காவின் நாசாநிறுவனம்
அனுப்புகிறது இதற்கு சோலார்
புரோப் பிளஸ் என்று பெயர்.
இது சூரியனின் வெளிப்புறத்தை
ஆராயும் என்று விண்வெளி
ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர் .
சூரியன் பற்றிய உண்மைகளைக்
கண்டறிவதிற்காக ஜரோப்பிய
விண்வெளி நிறுவனமும்
அமெரிக்காவின் நாசாநிறுவனமும்
இரண்டு விண்கலங்களை அனுப்ப
இருக்கின்றன .ஜரோப்பா அனுப்பும்
விண்கலத்திற்குசோலார்ஆர்ப்பிட்டர்
என்று பெயர் இரண்ட்டாயிரத்தி
பதினேழாம்ஆண்டில்இந்தவிண்வெளி
அனுப்பபடுகிறது .இந்த விண்கலம்
சூரியனை சுற்றி வந்து அதன்
துருவக்காட்சிகளை காட்டும்.
இரண்டாவது விண்கலத்தை
அமெரிக்காவின் நாசாநிறுவனம்
அனுப்புகிறது இதற்கு சோலார்
புரோப் பிளஸ் என்று பெயர்.
இது சூரியனின் வெளிப்புறத்தை
ஆராயும் என்று விண்வெளி
ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர் .
Labels:
செய்திக்குறிப்புக்கள்
திருக்குறள் அதிகாரம் - 3
நீத்தார் பெருமை
(3 )இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு .
கருத்து
இம்மை,மறுமைகளின் தன்மையை ஆராய்ந்து
அறிந்து இப்பிறப்பில் துறவறத்தைக்
கொண்டவருடைய பெருமையே உலகில் உயந்தது .
(3 )இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு .
கருத்து
இம்மை,மறுமைகளின் தன்மையை ஆராய்ந்து
அறிந்து இப்பிறப்பில் துறவறத்தைக்
கொண்டவருடைய பெருமையே உலகில் உயந்தது .
Labels:
திருக்குறள்
வியாழன், 11 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் - 3
நீத்தார் பெருமை
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
கருத்து
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமை
அளவைக் கண்டு சொல்லுதல், உலகில்
பிறந்து இறந்தவர்களை எண்ணிக்
கணக்கிடுதல் போன்றதாகும்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
கருத்து
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமை
அளவைக் கண்டு சொல்லுதல், உலகில்
பிறந்து இறந்தவர்களை எண்ணிக்
கணக்கிடுதல் போன்றதாகும்.
Labels:
திருக்குறள்
புதன், 10 பிப்ரவரி, 2010
திருக்குறள் அதிகாரம் - 3
நீத்தார் பெருமை
(1)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
கருத்து
ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று
ஒழித்தவர்களின் பெருமையைச்
சிறப்பாகக் கூறுவதே நூல்களின்
முடிவு .
Labels:
திருக்குறள்
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



.jpg)

.jpg)
.jpg)

















