கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

இனிப்புவகைகள்-3

அரியதரம்
அரியதரம் இலங்கை மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் இனிப்புவகை ஆகும் அரியதரம் இலங்கை மக்களால் கொண்டாடப்படும் திருமணம் போன்ற கலாச்சார வைபவங்களில் மிகமிக முக்கிய இடத்தை வகிக்கிறது. அத்துடன் இந்த இனிப்பானது அரிசிமாவை அரித்து (சலித்து) செய்வதாலும் தரமாக இருப்பதாலும் இதற்கு பழமையான காலத்து மக்களால் அரியதரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
தேவையான பொருட்கள் பச்சைஅரிசி - 1 சுண்டு சீனி(சர்க்கரை) -தேவையானளவு ஏலக்காய்ப்பொடி -2 தே.கரண்டி தே.எண்ணெய் -1போத்தல்
செய்முறை
(1 )பச்சையரிசியை ஓரளவு சூடான தண்ணீரில் அரை மணித்தியாலம் ஊறவிடவும் . (2 )ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் (மிக்ஸியில்) ,உரலில் போட்டு மாவாக அரைக்கவும். (3 )அரைத்த மாவை அரிதட்டினால் மூன்று தடவை அரிக்கவும். (4 ) அரித்த மாவை ஒரு பாத்திரத்தில் போடவும் . (5 )மாவை அரித்த பின்பு கிடைக்கும் குறுணலில் இருந்து சிறிய குறுணலை எடுத்து விட்டு அதில் காணப்படும் தேவையற்ற பொருட்களை அகற்றவும்.
(6 ) அகற்றிய பின்பு அரித்த மாவை போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில் மாவிற்கு மேலே நெல் உமி அகற்றிய கப்பி குருணல், ஏலக்காய்த்தூள்,சீனி(சக்கரை) ஆகியவற்றை போட்டு காற்று உட்புகாதவாறு நன்றாக மூடி வைக்கவும். (7 )அடுத்த நாள் பாத்திரத்திலுள்ள மாவை நன்றாக கைகளால் குழைக்கவும் (குழைக்கும் போது எந்த பொருளையும் மாவுடன் சேர்க்ககூடாது அத்துடன் எந்த ஆயுதமும் பாவிக்ககூடாது). (8)அதன் பின்பு (2 -3 )மணித்தியாலம் இப் பாத்திரத்தை மூடிவைக்கவும் . (9)அதன் பின்பு குழைத்த மாவை ஓரளவு உருண்டைகளாக்கிய பின்பு அதனை லேசாக அமர்த்தவும் . (10)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அதில் எண்ணெய் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். (11)எண்ணெய் கொதித்ததும் அதில் உருட்டி அமர்த்தி வைத்திருக்கும் மாவை போட்டு பொரிய விடவும். (12 )பொரிந்த பின்பு அவற்றை ஓரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். (13 )இதனைப்போல எல்லாவற்றையும் செய்து பொரித்தெடுக்கவும் . (14 )இப்போது சுத்தமான சுவையான அரியதரம் தயாராகி விட்டது . (15 )ஓரு தட்டில் சுவையான அரியதரங்களை வைத்து பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.