புதன், 30 ஜூலை, 2014
செவ்வாய், 29 ஜூலை, 2014
திங்கள், 28 ஜூலை, 2014
ஞாயிறு, 27 ஜூலை, 2014
சனி, 26 ஜூலை, 2014
தமிழ் மொழி
தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்.
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நிர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த உர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
பயிருக்கு வேர் .
தமிழ் எங்கள் இளமைக்கு பால்
ஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்கு பால்
இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வாண்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்
சுடர் தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்கு தோல்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாழ்
வயிரத்தின் வாழ்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்

உயிருக்கு நேர்

Labels:
தமிழ் மொழி
வெள்ளி, 25 ஜூலை, 2014
வியாழன், 24 ஜூலை, 2014
புதன், 23 ஜூலை, 2014
செவ்வாய், 22 ஜூலை, 2014
திங்கள், 21 ஜூலை, 2014
ஞாயிறு, 20 ஜூலை, 2014
சனி, 19 ஜூலை, 2014
வெள்ளி, 18 ஜூலை, 2014
வியாழன், 17 ஜூலை, 2014
புதன், 16 ஜூலை, 2014
செவ்வாய், 15 ஜூலை, 2014
திங்கள், 14 ஜூலை, 2014
ஞாயிறு, 13 ஜூலை, 2014
சனி, 12 ஜூலை, 2014
வெள்ளி, 11 ஜூலை, 2014
வியாழன், 10 ஜூலை, 2014
புதன், 9 ஜூலை, 2014
வாழைப்பழம்
மஞ்சள் ஆடையும் மென் மேனியுமாக வசீகரிக்கும்
வாழைப்பழம், நமக்கு மிகவும் பிடித்தமான பழங்களில்
ஒன்று. பச்சை, பூவன், மலை, கற்பூரவல்லி, ரஸ்தாளி,
மொந்தன், நேந்திரம்.. என சுவை சொட்டும் இதன்
வகைகள் ஏராளம்;அது தரும்சருமபலன்களும் தாராளம்!
வயோதிகத்தைத் தள்ளி வைத்து, இளமையை தக்க
வைத்து நம் வனப்பைக் கூட்டும் வாழைப்பழத்தின் அழகு
பலன்களைப் பார்ப்போமா?
வெயிலின் உக்கிரத்தால் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது 'வாழைப்பழ பேஸ்ட்'..
ஒரு வாழைப்பழத்துடன் (வெறும் வாழைப்பழம் என்றால், அது பூவன் பழத்தையே குறிக்கும்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.
இந்த வாழை - வெள்ளரி கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும்.
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.
ஒரு சிறிய வாழைப்பழத்தைக் கூழாக்கி, இரண்டு டேபிள்ஸ்பூன் சீஸ் அல்லது ஏடு படிந்த கெட்டித் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஓட்ஸ்-மாவு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை வாரத்தில் மூன்று முறை குளிப்பதற்கு முன் முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து, காய்ந்ததும் குளிக்கவும். சருமத் தின் வறட்சி, சுருக்கங்கள் நீங்கி பொலிவு கூடும்.
ஒரு டீஸ்பூன் பால், மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன்பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின் ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்தின் மெருகு கூடி பளபளப்பாகும்.
கொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதா? அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர்!
கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைக்க, அடர்த்தி குறைந்து நீர்த்துவிடும். அதனுடன் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு, 2 டீஸ்பூன் வெந்தய பவுடர், ரெண்டு டீஸ்பூன் புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் 'பேக்' போடவும். பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசவும். ஓரிரு வாரத்தில் முடி உதிர்வது தடைபடுவதுடன், நுனி பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்.
'' 'இயற்கை குளுக்கோஸ்' என்று கொண்டாடப்படும் வாழைப்பழம், நமக்கு விட்டமின் ஏ மற்றும் விட்டமின் ஈ சத்துகளை அள்ளித் தருகிறது
.
இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெறும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும். மூட்டு வலி, வாத நோய் இருப்பவர்கள் பச்சை வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
தினமும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடல் நிலை சரியில்லாமல் போய் மெள்ள மெள்ள மீண்டு வருபவர்கள் தினம் ஒரு பூவன்பழம் சாப்பிட்டால் உடல் சோர்வு, தளர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
மஞ்சள்காமாலை நோய் நீங்கிய பின்னும் கண்களில் தேங்கும் மஞ்சளை நீக்கும் வல்லமை படைத்தது ரஸ்தாளி பழம் தினமும் ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட, அம்மை நோய் விட்டுச் சென்ற கொப்புளங்களின் வீரியம் குறையும். இதையே வெளிப்புற மருந்தாகவும் மாற்றலாம்.
ஒரு பேயன் வாழைப்பழத்-துடன் சிறு கொத்து வேப்பந்தளிர், கொஞ்சம் இளநீர், கஸ்தூரி மஞ்சள் பவுடர்.. இவற்றை சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகளின் மீது பற்றுப் போட்டு வந்தால், சுவடே இல்லாமல் வடுக்கள் மறையும்.
செவ்வாழையில் விட்டமின் ஏ சத்து கொட்டிக் கிடக்கிறது.
இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சொரி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தி சருமத்தை சீராக்கும்.
நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் தளர்வையும் நீக்குவதோடு, எலும்பை பலப்-படுத்தி பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை தடுக்கும் வல்லமையும் செவ்வாழைக்கு உண்டு.
நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.
வயிறு நிறைந்திருக்கும்போது வாழைப் பழம் சாப்பிட்டால், அது தொண்டையி-லேயே தங்கி விடும். இதனால் சிலருக்கு சளி ஏற்படுகிறது. எனவே, வாழைப்பழம் சாப்பிட்டபின் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் பருகுங்கள். சளி ஏற்படாது.''

பழங்கள்
தண்ணீர்
அடடா வெயில்டா... அனல் வெயில்டா!
வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது! வியர்வை, தாகம், அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்க’த் துவங்கிவிடும். வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
''நிறைவாக நீர் அருந்தினாலே போதும்!'' என்கிறார் கள் அனைத்துத் தரப்பு மருத்துவர்களும். பாரம்பரிய சித்த மருத்துவரான கே.பி.சுப்ரமணியன்
மருத்துவரான கே.பி.சுப்ரமணியன் இயற்கையான முறையில் தண்ணீரை உடலுக்குள் இயக்கும் 'ஏ.சி’-யாக மாற்றும் பக்குவத்தைச் சொல்லித் தருகிறார். ''வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால் தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள். அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும் வெறும் தண்ணீராக மட்டுமே குடிக்காமல், இயற்கை யிலேயே குளிர்ச்சியான பொருட்களைக் கலந்து பருகினால், வெயிலின் பாச்சா உங்களிடம் பலிக்காது.
தண்ணீர்ப் பானையில் வெட்டி வேர், விளாமிச்சை வேரைப் போட்டு வைத்தால், நல்ல குளிர்ச்சியும் வாசமும் கிடைக்கும். வெந்தயத்தை வறுத்து ஆறிய பிறகு, தண்ணீரில் போட்டுப் பருகினால், வெயிலால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உண்டாகும் புண்கள் குணம் அடையும். 'நன்னாரி உண்டால், பொன்னாகும் மேனி’ன்னு சொல்வாங்க. நன்னாரியின் நடுவில் இருக்கிற தண்டை நீக்கிவிட்டு, சிறு வேர் போல இருக்கும் பட்டையைத் தண்ணீரில் போட்டு வைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். எலுமிச்சம் பழத்தில் விரல் அளவுக்குத் துளை யிட்டு தண்ணீர் பானைக்குள் போட்டு வைத்துப் பருகினால் குளிர்ச்சி க்குக் குறைவு இருக்காது.
வெயில் காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்¬னகளுக்குத் தண்ணீரோடு துளசி அல்லது அதிமதுரம் சேர்த்துப் பருகலாம். இவற்றின் விலை அதிகபட்சம் அஞ்சு ரூபாயாக இருக்கும். உள்ளங்கையில் ஊட்டியும் கொடைக்கானலும் இருக்கும்போது எந்த வெயிலையும் சமாளிக்கலாம் என்கிறார் உற்சாகமாக டயட்டீஷியன் ஷைனி சந்திரன் உடலின் புறத் தோற்றப் பராமரிப்பு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
''வேலை செய்யும் சூழல், வெளியேறும் வியர்வை யின் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு தண்ணீர் அருந்தினால், வெயில் காலத் தொந்தரவுகளைத் தவிர்க்க முடியும். ரசாயனக் குளிர்பானங்களைத் தவிர்த்து, மோர், தர்பூசணி, இளநீர், ரசம் ஆகியவற் றை அருந்துங்கள். இது எதுவும் கிடைக்கப் பெறாத வர்கள், ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தினாலே போதும். ஒரே மூச்சில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல், கொஞ்சங் கொஞ்சமாக அதிக முறை தண்ணீர் குடிப்பது நல்லது. விளையாட்டு வீரர்கள், அதிக வேலைப் பளுகொண்டவர்கள் தங்கள் சிறுநீரின் நிறத்தைப் பார்த்து, அதற்குத் தக்கபடி தண்ணீர் பருகலாம். சிறுநீர் இளமஞ்சள் நிறத்தில் இருந்தால், வழக்கமான அளவில் தண்ணீர் பருகலாம். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், உடனடியாக அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். திரவ உணவுகளை அதிகப்படுத்துவதாகச் சொல்லி, சிலர் காபி, டீ ஆகியவற்றை அதிகமாகப் பருகுவார் கள். அது தவறு. தண்ணீர் மட்டுமே நமக்கான நீர் சமநிலையையும் சக்தியையும் கொடுக்கும். காபி, டீ, ஆல்கஹால் போன்ற மற்ற திரவங்கள் வேறு பல பிரச்னைகளை உருவாக்கவே செய்யும்.
வெயிலால் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு, அரிப்பு போன்றவற்றைத் தடுக்க குளியல்தான் ஆயுதம். வாரம் இரு முறை விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம் நிலவாத காலம் என்பதால், தண்ணீர் உபயோகத்தை அதிகப் படுத்தி, உடலை எப்போதும் குளிர்ச்சி யாக வைத்திருங்கள். கை, கால், முகத்தை அடிக்கடி நல்ல தண்ணீரில் கழுவினாலே, தோல் பாதிப்புகளை வருமுன் காக்க முடியும். வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறி, சிறுநீர் வெளியேறுவது குறைந்தால், நீர்க்குத்தல் ஏற்படும். அதிக அளவு தண்ணீர் பருகுவதுதான் அதைத் தவிர்க்க ஒரே தீர்வு!'' என்கிறார் எளிய மருத்துவமாக!
Labels:
தண்ணீர்
செவ்வாய், 8 ஜூலை, 2014
திங்கள், 7 ஜூலை, 2014
சனி, 5 ஜூலை, 2014
வெள்ளி, 4 ஜூலை, 2014
வியாழன், 3 ஜூலை, 2014
புதன், 2 ஜூலை, 2014
செவ்வாய், 1 ஜூலை, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)