250 வருட பழமையான ஜேர்மனிய அரசமாளிகை.
ஞாயிறு, 31 ஜனவரி, 2010
திருக்குறள் அதிகாரம்- 2
வான் சிறப்பு
(5)
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கருத்து
பெய்யாமல் நின்று வாழ்வைக் கெடுப்பதும்
மழை:மழை இல்லாது கெட்டவருக்குத்
துணையாக நின்று அவ்வாறே காக்க
வல்லதும் மழை.
Labels:
திருக்குறள்
தமிழ் இலக்கணம்
எழுத்துக்கள்
தொடர்ச்சி
இடையினம்
வல்லினம்,மெல்லினம் ஆகிய
இரண்டுக்கும் இடைப்பட்ட வகையில்
உச்சரிக்கபடுவதால் இவற்றை
இடையினம் என அழைக்கப்படும் .
இப்படிப்பட்ட இடையின எழுத்துக்கள்
ஆறு உள்ளன .
அவையாவன -ய்,ர்,ல்,வ்.ழ்.ள் ஆகும்
அவையாவன -
தொடர்ச்சி
இடையினம்
வல்லினம்,மெல்லினம் ஆகிய
இரண்டுக்கும் இடைப்பட்ட வகையில்
உச்சரிக்கபடுவதால் இவற்றை
இடையினம் என அழைக்கப்படும் .
இப்படிப்பட்ட இடையின எழுத்துக்கள்
ஆறு உள்ளன .
அவையாவன -ய்,ர்,ல்,வ்.ழ்.ள் ஆகும்
அவையாவன -
Labels:
தமிழ்கல்வி
English Poems and Rhymes -2
Pancake
Making a pancake
stir a pancake
Pop it in the pan
Fry the pancake
Toes the pancake
Catch it if you can .
Making a pancake
stir a pancake
Pop it in the pan
Fry the pancake
Toes the pancake
Catch it if you can .
Labels:
ஆங்கிலக்கல்வி
ஆறுமுக நாவலர்
ஆறுமுக நாவலர்
இவர் 1822 ம் ஆண்டு டிசம்பர் மாதம்
இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள
யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற இடத்தில்
பிறந்தார் .இவர் தமிழுக்கும் சைவ
சமயத்திற்கும் அரும்பெரும் தொண்டு
ஆற்றினார்.இவரின் தந்தையார் பெயர்
கந்தப்பிள்ளை ,தாயார் பெயர் சிவகாமி
அம்மையார் அத்துடன் பெற்றோர் இவருக்கு
இட்டபெயர் ஆறுமுகம் என்பதாகும் ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாட்டின் புகழ்மிக்க
சைவ ஆதினமாக விளங்கிய திருவாடுதுறை
ஆதினம் இவரின் சைவத்தமிழ்ப் பணியை
பாராட்டி "நாவலர்"பட்டம் வழங்கி
கௌரவித்தது
Labels:
பெரியார்
சனி, 30 ஜனவரி, 2010
அகத்திய முனிவர்
அகத்தியம் என்ற நூலை எழுதிய
அகத்திய முனிவர் இவராவார்
அத்துடன் இவர் சங்க காலத்தில்
வாழ்ந்தவராக கருதப்படுகிறார்
இவரின் மாணாக்கரில்
ஒருவர் தொல்காப்பியர் ஆவார்
Labels:
சங்ககாலம்
வீரமாகாளி அம்மன்.
ஸ்ரீ-லங்காவின் வட மாகாணத்தில் உள்ள
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரமாகாளி
அம்மன் ஆலயத்தில் உள்ள அம்மன்.
Labels:
சமயகல்வி
பஜ்ஜி வகைகள்-1
சுவையானதும் வித்தியாசமானதுமான பஜ்ஜி
செய்ய உங்களுக்கு விருப்பமா அப்படியானால்
உடனே பீன்ஸ் (போஞ்சிக்காய்) பஜ்ஜியை செய்யவும்.
பீன்ஸ்(போஞ்சிக்காய்)பஜ்ஜி
தேவையான பொருட்கள்
பீன்ஸ்(போஞ்சிக்காய்)-தேவையானளவு
மிளகாய்த்தூள் -தேவையானளவு
மஞ்சள்தூள் -சிறிதளவு
உப்பு -தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு
கொதித்த தண்ணீர் -தேவையானளவு
செய்முறை
(1 )பீன்ஸ்களை (போஞ்சிக்காயை) எடுத்து ஒரு
அங்குல நீளத்திற்கு சரிவாக வெட்டி வைக்கவும்.
(2 ) அதன் பின்பு வெட்டிய பீன்ஸ் (போஞ்சிக்காய்)
உப்பு ,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,சூடான
தண்ணீர் ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து
சிறிது நேரம் வைக்கவும்.
(3 )பின்பு சூடான தண்ணீர் ஆறியதும் பீன்ஸ்களை
(போஞ்சிக்காயை)எடுத்து பஜ்ஜி மாவில் போட்டு
நன்றாக அவற்றை தோய்த்து அதன் பின் அதை
சூடான எண்ணையில் பொன்னிறமாக பொரித்து
எடுக்கவும்.
(4 )பொரித்து எடுத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும்.
(5)ஒரு தட்டில் சூடானதும் சுவையானதுமான பீன்ஸ்
(போஞ்சிக்காய்)பஜ்ஜியை வைத்து பரிமாறவும் .
Labels:
சமையல் குறிப்புக்கள்
வெள்ளி, 29 ஜனவரி, 2010
தமிழ் இலக்கணம்
எழுத்துக்கள்
தொடர்ச்சி
மெல்லினம்
ஒரு எழுத்தை உச்சரிக்கும் போது
வெளியே வருகின்ற காற்றை
இரண்டு உதடுகளினாலும் முற்றாகத்
தடை செய்து திடிரென மூக்கு வழியாக
அவ் எழுத்துக்களை வெளியே
விடப்படுகின்றன. இப்படியாக வெளியே
வருகின்ற எழுத்துக்களை மெல்லின
எழுத்துக்கள் என அழைக்கப்படுகிறது.
மூக்கை பொத்திக் கொண்டு இவ்
எழுத்துக்களை அல்லது ஒலிகளை
உச்சரிக்க முடியாது. ஆகவே தான்
இவ் எழுத்துக்களை அல்லது ஒலிகளை
மூக்கொலிகள என அழைக்கப்படும்.
இவ்வெழுத்துக்கள் ஆறு காணப்படுகின்றன.
அவையாவன -ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகும்.
Labels:
தமிழ்கல்வி
வியாழன், 28 ஜனவரி, 2010
தமிழ் இலக்கணம்
எழுத்துக்கள்
தொடர்ச்சி
(1 ) வல்லினம்
ஒரு எழுத்தை உச்சரிக்கும் போது
வெளியே வருகின்ற காற்றை
இரண்டு உதடுகளினாலும் முற்றாகத்
தடை செய்து திடிரென வாய் வழியாக
அவ் எழுத்துக்களை வெளியே
விடப்படுகின்றன. இப்படியாக வெளியே
வருகின்ற எழுத்துக்களை வல்லின
எழுத்துக்கள் எனப்படும்.அத்துடன் இவ்
எழுத்துக்களை வெடிப்பொலிகள் அல்லது
தடை ஒலிகள் என்றும் கூறுவார்கள்.
அவையாவன க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகும் .
Labels:
தமிழ்கல்வி
அப்பம் வகைகள்-3
பால் அப்பம்
சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும்
,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து
நிறைந்ததுமான உணவுபொருட்களில் ஒன்று
சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும்
,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து
நிறைந்ததுமான உணவுபொருட்களில் ஒன்று
பால் அப்பம் ஆகும்.
தேவையான பொருட்கள்
வெள்ளைஅரிசி - 1கப் (துருவியது )
தேங்காய் - அரை மூடி
தேங்காய் இளநீர் - தேவையானளவு
பாண்துண்டுகள் - (2 -3 )
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
முட்டை - 1 (விரும்பினாள்)
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
தண்ணீர் - தேவையானளவு
எண்ணைய் - தேவையானளவு
செய்முறை
(1 )ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் நீரில்
ஊறவிடவும்.
(2 ) இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் ,
தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3
மணித்தியாலம் ஊறவிடவும்.
(3 )அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறிய
பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு
அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு
பாண்துண்டு, இப்படியே மாறி மாறி போடவும்
(கிரைண்டர் கப்பின் முக்கால் பகுதிக்கு).
(4 )அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர்
ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு
(ஓரளவு நறுவலாக ) அரைக்கவும்.
(5 )இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும்.
(அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட்
சேர்க்கவும் )
(6 )அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில்
போட்டுமூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும்.
(7 ) 4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில்
உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்பமாவில்
ஒரு முட்டையை உடைத்து போட்டு கலக்கவும்).
(8 ) அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய்
பாலை அல்லது பசுப்பாலை விட்டு அதில் தேவையான
அளவு சீனியை (சக்கரையை )போட்டு நன்றாக கரைத்து
வைக்கவும் .
(9)அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட
குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும்.
(10)அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி
முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும்.
(11 )அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில்
அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள
சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது
நேரம் மூடி வைக்கவும் .
(12 )சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில்
இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும்.
(அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா
பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும்
ஓரளவு தடிப்பாகவும்).
(13 )அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து
அதன் மூடியினால் மூடி ஓரளவு வேக வைக்கவும்.
(14 ) அப்பம் ஓரளவு வேந்த பின்பு சீனி (சக்கரை) சேர்த்து
கலக்கி வைத்திருக்கும் பாலில் ஒரு தேக்கரண்டி
எடுத்து அதனை அப்பத்தின் நடுவில் ஊற்றி வேக
விடவும்.
(15)முட்டை அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்)
தாட்சியினைஅடுப்பில் இருந்து எடுத்த பின்பு
அப்பதாட்சியில்இருந்து பால் அப்பத்தை கலற்றிய
பின்பு மேசையில்ஒரு தாளை விரித்து அல்லது
முறத்தில்(சுளகில்)அப்பத்தை வைக்கவும்.
(16 )இப்படியே தேவைப்படும் எல்லா முட்டை
அப்பத்தையும் செய்துவைக்கவும்
(17 )அதன்பின்பு ஒருதட்டில் பால் அப்பத்தை
வைத்து பரிமாறவும்.
கவனிக்க வேண்டியவை
(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகமாக
இருக்கும்.
(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய
பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை
துருவவும்
(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும்
(குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால் ஈஸ்ட்
போட்டால் இலகுவாக புளித்துவிடும்)
(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை
இலகுவாக கலற்றி எடுக்கலாம்,
(உ)அப்பத்தை திருப்பி போடக்கூடாது அப்பம்
முறுகலாக இருக்கவேண்டும். '
மற்றைய முறை
வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி
(சிவத்தபச்சை)உபயோகிக்கலாம்.
எச்சரிக்கை
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.
ஆயத்த நேரம்
4 மணித்தியாலம்
சமைக்கும் நேரம்
1 மணித்தியாலம்
Labels:
சமையல் குறிப்புக்கள்
புதன், 27 ஜனவரி, 2010
தமிழ் இலக்கணம்
எழுத்துக்கள்
தொடர்ச்சி
(2 )மெய்யெழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்களை வாயினால்
உச்சரிக்கும் போது வாயில் உள்ள
காற்றினால் உச்சரிக்கும் எழுத்து
தடைப்பட்டு பின்பு அவை வெளியே
வருமாயின் அவற்றை தான் மெய்
எழுத்துக்கள் என அழைக்கப்படும்.
இப்படி வரும் மெய்யெழுத்துக்கள்
18 ஆகும் .
அவையாவன -க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,
ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகும்.
அத்துடன் மெய் எழுத்துக்களுக்குரிய
மாத்திரையின் அளவு 1 /2 ஆகும்.
மெய்யெழுத்துக்களை 3 வகையாக
பிரிக்கலாம்.
அவையாவன
(1 )வல்லினம்
(2 )மெல்லினம்
(3)இடையினம் ஆகும்.
Labels:
தமிழ்கல்வி
அப்பம் வகைகள்-2
முட்டை அப்பம்
சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும் ,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து நிறைந்ததுமான ஒர் உணவுபொருளே முட்டை அப்பம் ஆகும்.
தேவையான பொருட்கள் வெள்ளைஅரிசி - 1கப் (துருவியது )தேங்காய் - அரை மூடி தேங்காய் இளநீர் - தேவையானளவு பாண்துண்டுகள் - (2 -3 ) சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி உப்பு - தேவையானளவு முட்டை - தேவையானளவு ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்) தண்ணீர் - தேவையானளவு எண்ணைய் - தேவையானளவு செய்முறை (1 )ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர் ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் நீரில் ஊறவிடவும். (2 ) இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் , தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3 மணித்தியாலம் ஊறவிடவும். (3 )அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறியபின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு பாண்துண்டு, இப்படியே மாறி மாறி போடவும்(கிரைண்டர் கப்பின் முக்கால் பகுதிக்கு). (4 )அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர் ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு (ஓரளவு நறுவலாக ) அரைக்கவும். (5 )இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும். (அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட் சேர்க்கவும் ) (6 )அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில் போட்டுமூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும். (7 ) 4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில் உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்பமாவில் ஒரு முட்டையை உடைத்து போட்டு கலக்கவும்). (8)அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும். (9 )அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும். (10 )அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில் அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது நேரம் மூடி வைக்கவும் . (11 )சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில் இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும். (அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும் ஓரளவு தடிப்பாகவும்). (12 )அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து அதன் மூடியினால் மூடி ஓரளவு வேக வைக்கவும். (13 ) அப்பம் ஓரளவு வேந்த பின்பு ஒருமுட்டையை உடைத்து அதனை அப்பத்தின் நடுவில் ஊற்றி சிறிது மிளகும் உப்பும் போட்டு வேகவிடவும். (14 )முட்டை அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்) தாட்சியினைஅடுப்பில் இருந்து எடுத்த பின்பு அப்பதாட்சியில்இருந்து முட்டை அப்பத்தை கலற்றியபின்பு மேசையில்ஒரு தாளை விரித்து அல்லது முறத்தில்(சுளகில்)அப்பத்தை வைக்கவும். (15 )இப்படியே தேவைப்படும் எல்லா முட்டை அப்பத்தையும் செய்துவைக்கவும் (16 )அதன்பின்பு ஒருதட்டில் முட்டை அப்பத்தை வைத்து மிளகு குழம்பு ,உறைப்பு கறி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் பரிமாறவும். கவனிக்க வேண்டியவை (அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகாமாக இருக்கும். (ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை துருவவும் (இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும் (குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால் ஈஸ்ட் போட்டால் இலகுவாக புளித்துவிடும்) (ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை இலகுவாக கலற்றி எடுக்கலாம், (உ)அப்பத்தை திரூப்பி போடக்கூடாது அப்பம் முறுகலாக இருக்கவேண்டும். ' மற்றைய முறை வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி (சிவத்தபச்சை)உபயோகிக்கலாம். எச்சரிக்கை சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். ஆயத்த நேரம் 4 மணித்தியாலம் சமைக்கும் நேரம் 1 மணித்தியாலம்
Labels:
சமையல் குறிப்புக்கள்
செவ்வாய், 26 ஜனவரி, 2010
குழம்பு (கூட்டு)வகைகள்-2
கோழி இறைச்சி குழம்பு
தேவையானபொருட்கள்
கோழி இறைச்சி -500கிராம்
பால் -தேவையானளவு
மிளகாய்த்தூள் -தேவையானளவு
வெங்காயம்(வெட்டியது ) -அரைப்பாதி
பெருஞ்சீரகம்(சோம்பு)-அரை தேக்கரண்டி
கடுகு-அரை தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு
கரம்மசாலத்தூள் -சிறிதளவு (விரும்பினாள்)
கருவப்பிலை(நறுக்கியது) -சிறிதளவு
உள்ளி(வெட்டியது) -2 பற்கள்
மஞ்சள்தூள் -சிறிதளவு
வெட்டிய தக்காளிப்பழம்(சிறிய) -1
செய்முறை
1 .ஓரு பலகையில் கோழி இறைச்சியை
வைக்கவும் .
2 .அதன் பின்பு ஓரு கூரான கத்தியால் அதன்
தோலை அகற்றிவிட்டு தேவையான
அளவில் துண்டுகளாக வெட்டவும்.
3 . வெட்டிய துண்டுகளை ஓரு பாத்திரத்தில்
போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள்
தூளை போட்டு கழுவவும்.
4 . கழுவிய பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.
5 .அதன் பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை)வைத்து அதில் எண்ணெய்
விட்டு சூடாக்கவும்.
6 .எண்ணெய் சூடானதும் அதில் கடுகை
போட்டு வெடிக்க விடவும் .
7 .கடுகு வெடித்ததும் அதில் வெங்காயம்,
உள்ளி (பூண்டு),கருவப்பிலை,வெட்டிய
தக்காளிப்பழம்(விரும்பினாள் ) சோம்பு
(பெருஞ்சீரகம்)ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.
8 .தாளித்த பின்பு அதில் வெட்டி மஞ்சள்தூள்
போட்டு கழுவிய கோழி இறைச்சி
துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி
சிறிது நேரம் மூடி வேக விடவும்.
9 , அதன் பின்பு அதில் சிறிதளவு தண்ணீர்,
மிளகாய்த்தூள்,கரம்மசாலத்தூள்
ஆகியவற்றை போட்டு ஓரளவு
வேகவிடவும் .
10 .கோழி இறைச்சி துண்டுகள் ஓரளவு
வெந்ததும் அதனுடன் பாலை விட்டு
கலந்து வேகவிடவும்.
11 . கோழி இறைச்சி வெந்து கறி ஓரளவு
தடிப்பானதும் கறியை அடுப்பிலிருந்து
இறக்கவும்.
12 .அதன் பின்பு சுத்தமான சுவையான
செய்வதிற்கு இலகுவான கோழி
இறைச்சி கறி தயாராகிவிடும்.
13 . பின்பு ஓரு தட்டில் சோற்றினை
(சாதம்),இடியப்பம்,பரோட்டா,ரொட்டி
பாண் துண்டுகள் ,சப்பாத்தி,புட்டு,இட்லி,
ஆகியவற்றில் ஒன்றினை வைத்து
அதனுடன் கோழி இறைச்சி குழம்பு(கூட்டு)
கறியையும் வைத்து பரிமாறவும் .
Labels:
சமையல் குறிப்புக்கள்
கொய்யாப்பழம்
கொய்யா மரத்தின் வேர்ப்பகுதி ,இலைகள்,
பட்டைப்பகுதி,செங்காய் இவையாவற்றிலும்
மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன .
கொய்யாமரத்தின் இலைகளை அரைத்து
வெட்டுகாயம்,புண் ஆகியவற்றின் மேல்
தடவினால் காயம் மிக விரைவாக
மாறிவிடும் அத்துடன் கொய்யாமரத்தின்
இலைகள் அல்சர்,பல்வலிக்கு நல்ல
மருந்தாகும்,கொய்யாகாயை தினமும்
சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள
சக்கரையின்அளவு பெருமளவுகுறையும்
என வைத்தியர்கள் கூறுகின்றனர் .
கொய்யாவின் இலைகளிருந்து
தயாரிக்கப்படும் கஷாயமானது இருமல்
தொண்டை ,இதயம் ஆகியவற்றில்
நோய்களுக்கு நல்ல மருந்தாகும்
அத்துடன் இளம் கொய்யாமரத்தின்
புது கிளைகளிருந்து தயாரிக்கப்படும்
கஷாயம் காய்ச்சலை குணப்படுத்தும்
கொய்யா மரத்தின் கிளைகளிருந்து
தயாரிக்கப்படும்கஷாயம் குழந்தைகளுக்கு
வரும் மந்தம்,இழுப்பு,காக்காய் வலிப்பு
போன்ற நோய்களுக்கு நல்லமருந்தாகும்.
Labels:
தாவரங்கள்
தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் - 1
எழுத்துக்கள்
தொடர்ச்சி
நெடில்
அல்லது
நெட்டெழுத்து
இவ் எழுத்துக்களை வாயினால்
உச்சரிக்கும் போது கூடிய அளவு
மாத்திரையை எடுப்பவையே நெடில்
அல்லது நெட்டெழுத்தாகும்.அதாவது
வாயினால் உச்சரிக்கும் போது
இரண்டு மாத்திரைஅளவை எடுக்கும்
எழுத்துக்களே இவை ஆகும். இப்படிப்
பட்ட எழுத்துக்கள் ஏழு உண்டு.
அவையாவன-
ஆ,ஈ,ஊ.ஏ,ஜ,ஓ,ஔ ஆகும்
எழுத்துக்கள்
தொடர்ச்சி
நெடில்
அல்லது
நெட்டெழுத்து
இவ் எழுத்துக்களை வாயினால்
உச்சரிக்கும் போது கூடிய அளவு
மாத்திரையை எடுப்பவையே நெடில்
அல்லது நெட்டெழுத்தாகும்.அதாவது
வாயினால் உச்சரிக்கும் போது
இரண்டு மாத்திரைஅளவை எடுக்கும்
எழுத்துக்களே இவை ஆகும். இப்படிப்
பட்ட எழுத்துக்கள் ஏழு உண்டு.
அவையாவன-
ஆ,ஈ,ஊ.ஏ,ஜ,ஓ,ஔ ஆகும்
Labels:
தமிழ்கல்வி
திங்கள், 25 ஜனவரி, 2010
விடுகதைகள் - 8
விடுகதைகள்-8
(22)வெளிச்சத்தில் தொடர்வான்:இருட்டில்
மறைந்திடுவான்.
அவன் யார்?
(23)ஆடி வருவாள்: பாடி வருவாள்:வந்த
இடம் தெரிந்ததும் வந்த வேகத்தில்
திரும்பி விடுவாள். அவள் யார்?
(24)பாடத் தெரிந்தவன் பாட்டுக்கு
பாம்பு வரும் அவன் யார்?
(விடை - தவளை)
(22)வெளிச்சத்தில் தொடர்வான்:இருட்டில்
மறைந்திடுவான்.
அவன் யார்?
(23)ஆடி வருவாள்: பாடி வருவாள்:வந்த
இடம் தெரிந்ததும் வந்த வேகத்தில்
திரும்பி விடுவாள். அவள் யார்?
(24)பாடத் தெரிந்தவன் பாட்டுக்கு
பாம்பு வரும் அவன் யார்?
(விடை - தவளை)
Labels:
விடுகதைகள்
தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் - 1
எழுத்துக்கள்
தொடர்ச்சி
குறில்
அல்லது
குற்றெழுத்துக்கள்
எழுத்துக்களை வாயினால் உச்சரிக்கும்
போது குறைவான மாத்திரை அளவை
எடுக்கும் எழுத்துக்களையே குறில்
எனப்படும் அதாவது ஒரு மாத்திரையின்
அளவையே எடுப்பவை குறில் ஆகும் .
மிகவும் விரைவாக குறில் எழுத்துக்களை
உச்சரிக்க முடியும். இப்படிப்பட்ட
எழுத்துக்கள் ஜந்து உண்டு.
அவையாவன - அ,இ,உ,எ,ஒ ஆகும்.
ஆய்த எழுத்துக்கு 1/2 மாத்திரை ஆகும்.
எழுத்துக்கள்
தொடர்ச்சி
குறில்
அல்லது
குற்றெழுத்துக்கள்
எழுத்துக்களை வாயினால் உச்சரிக்கும்
போது குறைவான மாத்திரை அளவை
எடுக்கும் எழுத்துக்களையே குறில்
எனப்படும் அதாவது ஒரு மாத்திரையின்
அளவையே எடுப்பவை குறில் ஆகும் .
மிகவும் விரைவாக குறில் எழுத்துக்களை
உச்சரிக்க முடியும். இப்படிப்பட்ட
எழுத்துக்கள் ஜந்து உண்டு.
அவையாவன - அ,இ,உ,எ,ஒ ஆகும்.
ஆய்த எழுத்துக்கு 1/2 மாத்திரை ஆகும்.
Labels:
தமிழ்கல்வி
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
அறுகம்புல்லின் சிறப்பு-3
தொடர்ச்சி
அதனைக் கேட்டு யாசகம் பெற
வந்திருந்த அந்தணர் மகிழ்ச்சி
அடைந்தார்.அதன் பின்பு அந்தணர்
அரசன் முன் சென்றார். அந்தணரைக்
கண்ட அரசன் அந்தனரிடம் உமக்கு
என்ன வேண்டும்? என்று கேட்டார்.
அதற்கு வந்த அந்தனரோ எனக்கு
மிக மிக பசியாக இருக்கின்றது.
ஆகவே எனது பசிக்கு உணவு
வேண்டும் என்றார்.மன்னரும் தனது
காவலாளிகளை அழைத்து பசியோடு
வந்திருக்கும் இந்த அந்தணருக்கு
தேவையான உணவை பரிமாறச்
சொன்னான் .
(தொடர்ச்சி)
அதனைக் கேட்டு யாசகம் பெற
வந்திருந்த அந்தணர் மகிழ்ச்சி
அடைந்தார்.அதன் பின்பு அந்தணர்
அரசன் முன் சென்றார். அந்தணரைக்
கண்ட அரசன் அந்தனரிடம் உமக்கு
என்ன வேண்டும்? என்று கேட்டார்.
அதற்கு வந்த அந்தனரோ எனக்கு
மிக மிக பசியாக இருக்கின்றது.
ஆகவே எனது பசிக்கு உணவு
வேண்டும் என்றார்.மன்னரும் தனது
காவலாளிகளை அழைத்து பசியோடு
வந்திருக்கும் இந்த அந்தணருக்கு
தேவையான உணவை பரிமாறச்
சொன்னான் .
(தொடர்ச்சி)
Labels:
சமயகல்வி
விடுகதைகள் - 7
விடுகதைகள்-7
(19)போட்டாதை எடுக்கமுடியாது: என்றாலும்
பூமிக்கது அழுக்காச்சு.
அது என்ன?
(20)அழைக்கும்போது உரக்கக் குரல் கொடுப்பான்:
பேசும்போது காதுக்குள் கிசுகிசுப்பான்.
அவன் யார்?
(21)மெல்லியதாய் இருக்கும் தண்ணீரின் மேலேயே
மிதக்கும்:ஆயிரம் பேர் சேர்ந்தாலும் அதை தூக்க
முடியாது.
அவன் யார்?
(19)போட்டாதை எடுக்கமுடியாது: என்றாலும்
பூமிக்கது அழுக்காச்சு.
அது என்ன?
(20)அழைக்கும்போது உரக்கக் குரல் கொடுப்பான்:
பேசும்போது காதுக்குள் கிசுகிசுப்பான்.
அவன் யார்?
(21)மெல்லியதாய் இருக்கும் தண்ணீரின் மேலேயே
மிதக்கும்:ஆயிரம் பேர் சேர்ந்தாலும் அதை தூக்க
முடியாது.
அவன் யார்?
Labels:
விடுகதைகள்
தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் - 1
எழுத்துக்கள்
தொடர்ச்சி
மாத்திரை
ஒரு எழுத்தை உச்சரிக்கும் கால
அளவை அதாவது எழுத்தை
உச்சரிக்கும் நேரத்தை மாத்திரை
என அழைக்கப்படும்.
ஒரு மாத்திரை
அல்லது
நொடி மாத்திரை
"இயல்பு எழும் மாந்தர் இமை,
ஒரு மாத்திரை அல்லது நொடி
மாத்திரை" ஆகும் என இலக்கண
நூல்கள் கூறுகின்றன.அதாவது
ஒரு மாத்திரை என்பது சராசரி
மனிதனின் கண் இமைக்கும்
காலம் அல்லது விரல் நொடிக்க
எடுக்கும் காலம் ஆகும்.
எழுத்துக்கள்
தொடர்ச்சி
மாத்திரை
ஒரு எழுத்தை உச்சரிக்கும் கால
அளவை அதாவது எழுத்தை
உச்சரிக்கும் நேரத்தை மாத்திரை
என அழைக்கப்படும்.
ஒரு மாத்திரை
அல்லது
நொடி மாத்திரை
"இயல்பு எழும் மாந்தர் இமை,
ஒரு மாத்திரை அல்லது நொடி
மாத்திரை" ஆகும் என இலக்கண
நூல்கள் கூறுகின்றன.அதாவது
ஒரு மாத்திரை என்பது சராசரி
மனிதனின் கண் இமைக்கும்
காலம் அல்லது விரல் நொடிக்க
எடுக்கும் காலம் ஆகும்.
Labels:
தமிழ்கல்வி
சனி, 23 ஜனவரி, 2010
பூனையும் நரியும் -3
பூனையும் நரியும்-3
தொடர்ச்சி
அதை கேட்டதும் நரி தனது மனதில் புதிதாக இக்காட்டிற்கு வந்திருக்கும் இந்த சிங்கனுடன் நான் நட்பாக இருந்தால் என்னையும் பார்த்து மற்றவர்கள் பயப்பிடுவார்கள் அல்லது என்னுடன் நண்பார்களாக இருப்பார்கள் இதனால் எனக்கு தேவையான பல வேலைகளை அவர்களை வைத்தே இலகுவாக செய்யலாம் அத்துடன் மற்றவர்கள் எனக்கு நல்ல மரியாதை தருவார்கள் என நினைத்தது. அதன் பின்பு பூனையை பார்த்து நான் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகின்றேன் என்று கூறி அதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீகள் என்று கேட்டது அதற்கு பூனை நான் யோசித்து விட்டு நாளை வந்து கூறுகின்றேன் என்றது .
(தொடரும்)
தொடர்ச்சி
அதை கேட்டதும் நரி தனது மனதில் புதிதாக இக்காட்டிற்கு வந்திருக்கும் இந்த சிங்கனுடன் நான் நட்பாக இருந்தால் என்னையும் பார்த்து மற்றவர்கள் பயப்பிடுவார்கள் அல்லது என்னுடன் நண்பார்களாக இருப்பார்கள் இதனால் எனக்கு தேவையான பல வேலைகளை அவர்களை வைத்தே இலகுவாக செய்யலாம் அத்துடன் மற்றவர்கள் எனக்கு நல்ல மரியாதை தருவார்கள் என நினைத்தது. அதன் பின்பு பூனையை பார்த்து நான் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகின்றேன் என்று கூறி அதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீகள் என்று கேட்டது அதற்கு பூனை நான் யோசித்து விட்டு நாளை வந்து கூறுகின்றேன் என்றது .
(தொடரும்)
Labels:
சிறுவர் பகுதி
விடுகதைகள் - 6
விடுகதைகள்-6
(16)பகலெல்லாம் ஊரைச் சுற்றுவான்:
இரவில் கதவோரம் காத்து கிடப்பான்.
அவன் யார்?
(17)வாழ் நீண்ட குருவிக்கு வாயுண்டு:
வயிறில்லை.
அது என்ன?
(18 )உயிரில்லாத நீதிபதி: ஒழுங்காய்த்
தீர்ப்பு வழங்குகின்றான்.
அவன் யார்?
(16)பகலெல்லாம் ஊரைச் சுற்றுவான்:
இரவில் கதவோரம் காத்து கிடப்பான்.
அவன் யார்?
(17)வாழ் நீண்ட குருவிக்கு வாயுண்டு:
வயிறில்லை.
அது என்ன?
(18 )உயிரில்லாத நீதிபதி: ஒழுங்காய்த்
தீர்ப்பு வழங்குகின்றான்.
அவன் யார்?
Labels:
விடுகதைகள்
தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் - 1
எழுத்துக்கள்
தொடர்ச்சி
(1 )உயிர் எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்களை வாயினால்
உச்சரிக்கும் போது வாயிலிருந்து
எவ்வித தடையுமின்றி வெளிவரும்
எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள்
என அழைக்கப்படும். வாயினால்
உச்சரிக்கும் போது எவ்வித
தடையும் இன்றி வெளிவரும்
உயிர் எழுத்துக்கள் 12 ஆகும்.
அவையாவன -
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஜ,ஒ,ஓ,ஔ
ஆகும்.
ஆயித எழுத்து இது உயிர்
எழுத்துக்களில் கடைசி
எழுத்தாகும்- அவையாவன- ஃ
எழுத்துக்கள்
தொடர்ச்சி
(1 )உயிர் எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்களை வாயினால்
உச்சரிக்கும் போது வாயிலிருந்து
எவ்வித தடையுமின்றி வெளிவரும்
எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள்
என அழைக்கப்படும். வாயினால்
உச்சரிக்கும் போது எவ்வித
தடையும் இன்றி வெளிவரும்
உயிர் எழுத்துக்கள் 12 ஆகும்.
அவையாவன -
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஜ,ஒ,ஓ,ஔ
ஆகும்.
ஆயித எழுத்து இது உயிர்
எழுத்துக்களில் கடைசி
எழுத்தாகும்- அவையாவன- ஃ
Labels:
தமிழ்கல்வி
வெள்ளி, 22 ஜனவரி, 2010
தேயிலைதோட்டம்
இந்த தேயிலைத்தோட்டம் இலங்கையில் உள்ளது.
இங்கு பல பெண்கள் தேயிலை கொழுந்துகளை
பறித்து கொண்டிருக்கின்றார்கள்.இலங்கையின்
ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாக தேயிலை
காணப்படுகிறது.தேயிலையின் ஏற்றுமதி மூலம்
இலங்கை அன்னிய செலவாணியை பெற்று
கொள்ளுகிறது.
இங்கு பல பெண்கள் தேயிலை கொழுந்துகளை
பறித்து கொண்டிருக்கின்றார்கள்.இலங்கையின்
ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாக தேயிலை
காணப்படுகிறது.தேயிலையின் ஏற்றுமதி மூலம்
இலங்கை அன்னிய செலவாணியை பெற்று
கொள்ளுகிறது.
Labels:
தாவரங்கள்
பழமொழிகள்-6
அல்லது
முதுமொழிகள்
(23 )போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
(24 )அழுத பிள்ளை பால் குடிக்கும்.
(25 )பார்த்தால் பசு பாய்ந்தால் புலி.
.
முதுமொழிகள்
(21 ) யாதும் ஊரே யாவரும் கேளீர்.
(22 )காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.
(23 )போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
(24 )அழுத பிள்ளை பால் குடிக்கும்.
(25 )பார்த்தால் பசு பாய்ந்தால் புலி.
.
Labels:
பழமொழிகள்
தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் - 1
எழுத்துக்கள்
ஒரு மொழிக்கு அடிப்படையாக வரும்
ஒலிகளின் வடிவத்தை தான் எழுத்து
எனப்படும்.
தமிழ்
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின்
எண்ணிக்கை - 247 ஆகும். அவை
முழுவதையும் இரண்டு வகையாக
பிரிக்கலாம்.அவையாவன
(1 )முதல் எழுத்துகள்
(2 ) சார்பு எழுத்துகள் ஆகும்
முதல் எழுத்துகள்
முதல் எழுத்துகள் என்பது தமிழ் மொழியின்
அடிப்படை மொழிகள் அல்லது எழுத்துகள்
ஆகும் இது இரண்டு வகைப்படும்
அவையாவன
(1 )உயிர் எழுத்து
(2 )மெய் எழுத்து
எழுத்துக்கள்
ஒரு மொழிக்கு அடிப்படையாக வரும்
ஒலிகளின் வடிவத்தை தான் எழுத்து
எனப்படும்.
தமிழ்
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின்
எண்ணிக்கை - 247 ஆகும். அவை
முழுவதையும் இரண்டு வகையாக
பிரிக்கலாம்.அவையாவன
(1 )முதல் எழுத்துகள்
(2 ) சார்பு எழுத்துகள் ஆகும்
முதல் எழுத்துகள்
முதல் எழுத்துகள் என்பது தமிழ் மொழியின்
அடிப்படை மொழிகள் அல்லது எழுத்துகள்
ஆகும் இது இரண்டு வகைப்படும்
அவையாவன
(1 )உயிர் எழுத்து
(2 )மெய் எழுத்து
Labels:
தமிழ்கல்வி
விடுகதைகள் - 5
விடுகதைகள்-5
(13)செம்பு நிறைய சிகப்பு முத்துக்கள்.
அவன் யார்?
(14)உனக்குச் சொந்தமானது:ஆனால்
உன்னை விட அதிகமாக மற்றவர்களே
உபயோகிப்பர்.
அது என்ன?
(15)தலையைச் சீவினால் கறுப்பு நாக்கை
நீட்டுவான்.
அவன் யார்?
(13)செம்பு நிறைய சிகப்பு முத்துக்கள்.
அவன் யார்?
(14)உனக்குச் சொந்தமானது:ஆனால்
உன்னை விட அதிகமாக மற்றவர்களே
உபயோகிப்பர்.
அது என்ன?
(15)தலையைச் சீவினால் கறுப்பு நாக்கை
நீட்டுவான்.
அவன் யார்?
Labels:
விடுகதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








































