சனி, 30 ஜனவரி, 2010
பஜ்ஜி வகைகள்-1
சுவையானதும் வித்தியாசமானதுமான பஜ்ஜி
செய்ய உங்களுக்கு விருப்பமா அப்படியானால்
உடனே பீன்ஸ் (போஞ்சிக்காய்) பஜ்ஜியை செய்யவும்.
பீன்ஸ்(போஞ்சிக்காய்)பஜ்ஜி
தேவையான பொருட்கள்
பீன்ஸ்(போஞ்சிக்காய்)-தேவையானளவு
மிளகாய்த்தூள் -தேவையானளவு
மஞ்சள்தூள் -சிறிதளவு
உப்பு -தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு
கொதித்த தண்ணீர் -தேவையானளவு
செய்முறை
(1 )பீன்ஸ்களை (போஞ்சிக்காயை) எடுத்து ஒரு
அங்குல நீளத்திற்கு சரிவாக வெட்டி வைக்கவும்.
(2 ) அதன் பின்பு வெட்டிய பீன்ஸ் (போஞ்சிக்காய்)
உப்பு ,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,சூடான
தண்ணீர் ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து
சிறிது நேரம் வைக்கவும்.
(3 )பின்பு சூடான தண்ணீர் ஆறியதும் பீன்ஸ்களை
(போஞ்சிக்காயை)எடுத்து பஜ்ஜி மாவில் போட்டு
நன்றாக அவற்றை தோய்த்து அதன் பின் அதை
சூடான எண்ணையில் பொன்னிறமாக பொரித்து
எடுக்கவும்.
(4 )பொரித்து எடுத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும்.
(5)ஒரு தட்டில் சூடானதும் சுவையானதுமான பீன்ஸ்
(போஞ்சிக்காய்)பஜ்ஜியை வைத்து பரிமாறவும் .
Labels:
சமையல் குறிப்புக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.