கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 31 டிசம்பர், 2009

அப்பம் வகைகள்-1

அப்பம்

சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும் ,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து நிறைந்ததுமான ஒர் உணவுபொருளே அப்பம் ஆகும்.



தேவையான பொருட்கள்

வெள்ளைஅரிசி - 1கப்
(துருவியது )தேங்காய் - அரை மூடி
தேங்காய் இளநீர் - தேவையானளவு
பாண்துண்டுகள் - (2 -3 )
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
முட்டை - 1 (விரும்பினால்)
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
தண்ணீர் - தேவையானளவு
எண்ணைய் - தேவையானளவு

  செய்முறை 

(1 )ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர் ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் நீரில் ஊறவிடவும்.

 (2 ) இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் , தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3 மணித்தியாலம் ஊறவிடவும்.

 (3 )அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறியபின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு பாண்துண்டு, இப்படியே மாறி மாறி போடவும்(கிரைண்டர் கப்பின் முக்கால் பகுதிக்கு).

 (4 )அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர் ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு (ஓரளவு நறுவலாக ) அரைக்கவும்.

 (5 )இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும். (அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட் சேர்க்கவும் )

 (6 )அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில் போட்டுமூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும்.

 (7 ) 4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில் உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்பமாவில் முட்டைபோட்டு கலக்கவும்).

 (8)அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும்.

 (9 )அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும்.

 (10 )அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில் அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது நேரம் மூடி வைக்கவும் .

 (11 )சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில் இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும். (அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும் ஓரளவு தடிப்பாகவும்).

 (12 )அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து அதன் மூடியினால் மூடி வேக வைக்கவும்.

 (13 )அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்)தாட்சியினை அடுப்பில் இருந்து எடுத்த பின்பு அப்பதாட்சியில் இருந்து அப்பத்தை கலற்றிய பின்பு மேசையில் ஒரு தாளை விரித்து அல்லது முறத்தில்(சுளகில்) அப்பத்தை வைக்கவும். 

(14 )இப்படியே எல்லா அப்பத்தையும் செய்துவைக்கவும்

 (15 )அதன்பின்பு ஒருதட்டில் அப்பத்தை வைத்து அதனுடன் மிளகு குழம்பு ,உறைப்பு கறி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் பரிமாறவும்.


கவனிக்க வேண்டியவை

(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகாமாக இருக்கும்.
(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை துருவவும்
(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும் (குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால் ஈஸ்ட் போட்டால் இலகுவாக புளித்துவிடும்)
(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை இலகுவாக கலற்றி எடுக்கலாம்,
(உ)அப்பத்தை திரூப்பி போடக்கூடாது அப்பம் முறுகலாக இருக்கவேண்டும். ' மற்றைய முறை வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி (சிவத்தபச்சை)உபயோகிக்கலாம்.

 எச்சரிக்கை
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். 

ஆயத்த நேரம்
 4 மணித்தியாலம் சமைக்கும் நேரம் -1 மணித்தியாலம்

மூதுரை

நீதி நூல் -1


மூதுரை - 3
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க 
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே -நல்லார் 
குணங்கள் உரைப்பதுவும் நன்றே  அவரோடு 
இணங்கி இருப்பதுவும் நன்று 


கருத்து 

நல்லவரைக் காண்பதும் நன்மை தரும் 
நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்பதும் 
நன்மை தரும் .நல்லவர்களின் சிறப்பு 
இயல்புகளை பேசுவதும் நன்மை தரும் 
நல்லவர்களோடுசேர்ந்து இருப்பதும் 
நன்மையே தரும் 


தமிழ் - தமிழ் அகராதி - 2

அகராதி - 2 

 தமிழ் சொற்களுக்குரிய தமிழ் கருத்துகள் 

(6 )அஃபோதம் -      நிலாமுகிப்புள்

(7 )அஃ றினை -      பகுத்தறிவற்ற உயிர்களும் ,
                                  உயிர் அற்றனவும்

(8 ) அகக்கண் -       ஞானம்,உள் அறிவு

(9 )அகக்கூத்து -    முக்குணம் பற்றிய நடிப்பு

(10 ) அகங்காரம் - இறுமாப்பு ,யாவெனம்

புதன், 30 டிசம்பர், 2009

தோசை வகைகள்-1

மச
மசாலைத்தோசை

மசாலைத்தோசை சுவையானதும் சத்தானதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும் ஆகும் ஆகவே இதை செயது சாப்பிட்டு இதன் சுவையை அறியவும்

  தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 1கப்
பச்சரிசி - 1கப்
உளுத்தம்பருப்பு - 1 /2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
மஞ்சள்தூள் -சிறிதளவு
தண்ணீர் - தேவையானளவு
கிழங்குபிரட்டல்கறி - தேவையானளவு


செய்முறை

(1 )பாத்திரம் ஒன்றில் புழுங்கல்அரிசி,பச்சையரிசி, தண்ணீர் ஆகியவற்றைகலந்து இரண்டு மணி த்தியாலம் ஊறவைக்கவும்.

 (2 )இன்னொரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு, வெந்தயம்,தண்ணீர் ஆகியவற்றை கலந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

 (3 )இவையாவும் ஊறியபின்பு ஊறிய உளுத்தம் பருப்பு,வெந்தயம்,தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு பொங்க பொங்க அரைக்கவும்.

 (4 )அரைத்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

 (5 )பின்பு ஊறவைத்த புழுங்கல்அரிசி,பச்சரிசி, தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு நைசாக அரைக்கவும்.

 (6 )பின்பு அதை எடுத்து முதலில் வெந்தயம் உளுந்து அரைத்து போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் போடவும்.

 (7 )அதன் பின்பு அரைத்து பாத்திரத்தில் போட்டு வைத்திருக்கும் யாவற்றையும் புளிக்கவைக்கவும்.

 (8 )அடுத்த நாள் அதற்கு உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்றாக கலக்கவும். 

(9 )அதன்பின்பு அடுப்பில் தோசைக்கல்லை(வாணலியை) வைத்து சூடாக்கவும்.

(10 )தோசைக்கல்(வாணலி) சூடானதும் ஒருதுணியில் (அல்லது ஒரு சிறியஉருளைக்கிழங்கினை பாதியாக வெட்டி அதன்தோல்பாகத்தில் முள்ளுக்கரண்டியை செருகவும் ) சிறிதளவு நல்லெண்ணையில் தோய்த்து எடுத்து அதை அதனை தோசைக்கல்லில் தடவும்.

 (11 )அதன் பின்பு கரைத்து புளிக்கவைத்துள்ள மாவில் ஒரு குழிக்கரண்டி எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி அதனை நன்றாககரண்டியால் தடவி தோசையை வேகவிடவும்.

 (12 )தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன் மேல் கிழங்கு பிரட்டல் கறியை வைத்து அதன் இரு பக்கமும் மடித்த பின்பு மடித்த தோசையை திருப்பிபோட்டு வேகவிடவும்.

 (13 )தோசையின் இரு பக்கமும் நன்றாக வெந்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். (14 )இதேபோல மற்றைய தோசைகளையும் சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில் வைக்கவும்.

 (15 )அதன் பின்பு ஒரு தட்டில் தேவையானளவு தோசைகளை வைத்து பரிமாறவும்.

  எச்சரிக்கை 
உழுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

  பரிமாறும் அளவு 
   (1-3) நபர்களுக்கு

  ஆயத்த நேரம்
  ( 1 - 2 ) மணித்தியாலம்

  சமைக்கும் நேரம்
   1மணித்தியாலம்

மூதுரை

நீதி நூல்-1



மூதுரை-2

நல்லார் ஒருவர்க்குச்   செய்த உபகாரம் 
கல்மேல் எழுத்துப்போல் காணுமே -அல்லாத 
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் 
நீர்மேல் எழுத்துக்கு நேர் 


கருத்து 

நல்ல குணங்கள் உள்ள ஒருவருக்கு செய்த 
உதவியானது கல்லில் எழுதபட்ட எழுத்து 
போல் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் 
அதாவது உதவியை பெற்ற நல்லவர்கள் 
எப்போதும் தாங்கள்  பெற்ற உதவியை 
நினைவில் வைத்திருப்பார்கள் ஆனால் 
நல்ல குணங்கள் அற்ற ஒருவருக்கு செய்த 
உதவியானது நீர் மேல் எழுதபட்ட எழுத்து 
போன்றது அதாவது நல்ல குணங்கள் 
அற்றவர்கள் தாங்கள் பெற்ற உதவியை 
உடனே மறந்து விடுவார்கள் 

கொன்றைவேந்தன்

கொன்றை வேந்தன்





(1 )அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.


(2 )ஆலயம் தொழுவது சாலவும் நன்று.


(3 )ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.


(4)எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். 


(5 )சீரைத் தேடின் ஏரைத் தேடு.


(6 )தந்தை சொல் மிக்க மந்திரமில்லை 


(7 )தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை. 


(8 )மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.


(9 )மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.


(10 )முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

தகவல் - 4

தகவல் - 4


(1 )உலகிலே மிக அதிகமான நூல்களை 
     இயற்றியவர் அலெக்ஸாண்டர் டுமாஸ் 
     என்பவர் இவர் இயற்றிய நூல்களின் 
     மொத்த தொகை 1200 ஆகும் .


(2 )நைல் நதியின் நீளம் 6695 கிலோமீற்றர்
      ஆகும் 


(3)இரவு நேரங்களில்  ஒட்டகம் எவ்வளவு 
    பசியோடிருந்தாலும் மாலை ஆறு 
    மணிக்கு பிறகு உணவைஉட்கொள்ளாது.


(4)பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின் 
   நீளத்தைப் போன்று இருமடங்கு பெரியது.  
      

செவ்வாய், 29 டிசம்பர், 2009

எழுதுகருவிகள்


எழுதுகருவிகள் - 4

போல்பொயின்ட்பேனா 
1) 1888ல் அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஜெ 
  லாயிடு என்பவர் போல் பொயின்ட் 
 பேனாவை  முதன் முதலில் கண்டுபித்தார்.
 பின்பு போல் பொயின்ட் பேனாவிற்கான 
 காப்புரிமத்தை  பெற முயற்சித்தார்.னால்
 ஜான்   ஜெ லாயிட்டினால்  தான் கண்டு  
 பிடித்த போல் பொயின்ட் பேனாவுக்குரிய  
 மை (ink) உட் செலுத்தும் முறையை கண்டு
 பிடிக்க முடியவில்லை இதனால்  ஜான் ஜே 
 லாயிடுக்கு  போல் பொயின்ட்  பேனாவிற்கு 
 உரிய காப்புரிமம்  கிடைக்கவில்லை.

2) பவுண்டன் பேனாவிற்கு கடும்  போட்டியாக
  காணப்படுகின்ற  போல் பொயின்ட் பேனாவை
 ஹங்கேரியைச் சேர்ந்த லாடிஸ்லோ பைரோ
 என்பவர் 1938 ம்  ஆண்டு  கண்டு பிடித்தார். 
 அத்துடன்  முதன் முதலாக இவர் அச்சுக்கு  
 உபயோகிக்கும்    மையை (ink) தான் கண்டு
 பிடித்த போல் பொயின்ட்  பேனாவிற்கு 
 பயன்படுத்தி பார்த்தார்.  அவர்  பயன்படுத்திய 
 மை (ink) உடனே காய்ந்து விட்டது.   அதன் 
 பின்பு பென் நிப்பின் முனையில் உள்ள   பந்து 
 மை (ink) மீது பட்ட நிலையில் உருளும்போது
  எழுதும் வகையில் அமைத்தார்.   அதன் பின்பு
 இதே ஆண்டில்  இதற்குரிய  காப்புரிமையை
 பெற்றார் .அத்துடன் இவர் தான் கண்டு பிடித்த
 போல் பொயின்ற் பேனாவை 1938 -1943  ம்
 ஆண்டுகளில் கண்டுபிடித்து.

(3 )1943  ம் ஆண்டில் மாட்டின் நிறுவனம் போல் 
  பொயின்ட் பேனாவை  இங்கிலாந்தில் மட்டும்
  தயாரிப்பதிற்கான உரிமையை லாடிஸ்லோ 
  பைரோ என்பவரிடமிருந்து பெற்றது. பின்பு 
  மாட்டின் நிறுவனம்  1944 ல் போல் பொயின்ட் 
  பேனாவை செய்யும்  தொழிற் சாலையை
  நிறுவியது.  பின்பு மாட்டின் நிறுவனம் 1945 ம் 
  ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று  பொது
  மக்களிடம் போல் பொயின்ட்பேனா விற்பனை
  செய்யபட்டது . 


(4 )  1953 ம் ஆண்டில் பிரான்ஸ்ஸைச் சேர்ந்த 
    மார்கெல்பிச் என்பவர் இங்கிலாந்தில் முதன் 
    முதலாக  யூஸ் அன்ட்   துறோ  என்ற போல் 
    பொயின்ட் பேனாவைத் தயாரித்தார்



திங்கள், 28 டிசம்பர், 2009

திருக்குறள் அதிகாரம் - 2

திருக்குறள் அதிகாரம் - 2
வான் சிறப்பு-2

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

கருத்து
உண்பவருக்கு நன்மையாகிய உணவுகளை உண்டாக்கி ;
பருகுவாருக்குத் தானும் உணவாகி இருப்பது மழை



தமிழ் - தமிழ் அகராதி - 1

அகராதி -1

(தமிழ்சொற்களுக்குரிய  தமிழ்கருத்துகள்)

(1 ) அ -            அழகு (சுட்டு எதிர் மறை
                          உருபு ஆகவரும் இடைச்
                         சொல்

(2 )அஃகம்-       தானியம் ,வினைப்பொருள் ,
                          முறைமை ஊறுநீர்

(3 )அஃகல்-        நுணுகுதல்,கழித்து
                           போதல்,குவிதல்,
                           சுருங்கல்,குறைதல்
                           வற்றுதல்

(4 ) அஃகுல்லி- சிற்றுண்டி,பிட்டு

(5 ) அஃகுள் -    கக்கம்,அக்குள்

சங்கீதம்-2

நாதம் நாதத்தின் மறுபெயர் இசையொலி ஆகும் இந்த நாதமே சங்கீதத்திற்கு ஆதாரமாகும் நாதத்திலிருந்து சுருதிகளும்,சுருதிகளில் இருந்து ஸ்வரங்களும் ஸ்வரங்களில் இருந்து ராகங்களும் உருவாகின்றன நாதம் இரண்டு வகைப்படும் அவையாவன (1 )ஆகநாதம் (2 ) அனாகநாதம் (1 )ஆகநாதம் மனிதனுடைய முயற்சியினால் உற்பத்தி யாக்கப்படும் நாதம் ஆகநாதம் எனப்படும் நாம் கேட்கும் சங்கீதம் ,வாத்தியங்களினால் வாசிக்கப்படும் சங்கீதம் ,பாடும் சங்கீதம் நாம் படிக்கும் சங்கீத சாஸ்த்திரங்கள் இவை எல்லாம் ஆகநாதத்தை பற்றியதே ஆகும். (2 ) அனாகநாதம் மனிதனுடைய முயற்சி இல்லாமல் இயற்கையினாலே கேட்கப்படும் நாதம் அனாகநாதம் ஆகும் அனாகநாதத்தின் மர்மங்களை யோகிகள் நன்கு அறிவார்கள் கடல் அலைகள் எழுப்பும் சங்கீதம் ஆனாகநாதம் எனப்படும்

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

விடுகதைகள் - 1

விடுகதைகள் - 1

(1 )கூவி அழைப்பான்; கூடி வாழ்வான் 
      அவன் யார் ?

(2 )அவனுக்கு வீடு,மற்றவர்களுக்கு வலை 
      அது என்ன ?

(3 )கண்ணீர் விட்டே கடைசிவரை ஒளி
     தருவான்  அவன் யார் ?

பழமொழிகள்-2


அல்லது 

முதுமொழிகள் 

(1 ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

(2 ) அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

(3 )அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

(4 )அடாது செய்பவர் படாது படுவர்

(5 )அழத பிள்ளை பால் குடிக்கும்



பழமொழிகள்-1

எமது முன்னோர்கள் தமது அனுபவத்தின் மூலம்
கண்டறிந்த உண்மைகளை அழகிய தொடர்களாகத்
தந்துள்ளனர்.அவை பொருட்செறிவு மிகுந்தவை .
நாம் அவற்றை பழமொழிகள் என அழைக்கின்றோம்
பழமொழிகளை முதுமொழிகள் எனவும் கூறுவார்
ஒருவர் தான் சொல்லவந்த விடயத்தை வலியுறுத்தி
கூறுவதிற்கும் பழமொழிகள் உதவுகின்றன எமது
தமிழ் மொழியிலே ஆயிரக்கணக்கான பழமொழிகள்
உள்ளன

மூதுரை

















நீதி நூல் -1

மூதுரை-1

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி 
என்று தருங்கோல் என வேண்டா -நின்று 
தளரா வளர் தெங்கு தான் உண்ட நீரைத் 
தலையாலே தான் தருத லால் 
கருத்து 
"தென்னை மரம் சிறியதாக இருக்கும் போது
அதற்கு நாம் தண்ணீர் ஊற்றுகிறோம்அது 
வளர்ந்து காய்த்து எமக்கு இளநீரை தருகிறது"
அதாவது நாம் தென்னை மரத்தின் அடியில் 
ஊற்றிய தண்ணீருக்கு நன்றியாக அது தனது 
தலையால் இளநீரை எமக்கு தருகிறது
அதனைப்போல நாம் மற்றவர்களுக்கு உதவுதல் 
வேண்டும் அவ்வாறு உதவிசெய்தால் நாம் 
எதிர்பார்க்காமலே எங்களுக்கு தேவையான 
உதவி கிடைக்கும் ஆனால் நாம் எப்போதும் 
பயன் கருதாமல் மற்றவர்களுக்கு உதவ முன் 
வர வேண்டும்.

மூதுரை

















நீதி நூல்-1

மூதுரை 

ஔவையார் இயற்றிய நீதி நூல்களில் ஒன்று 
மூதுரை ஆகும் இதில் முப்பத்தொரு பாடல்கள் உண்டு
இப்பாடல்கள் வெண்பாக்களால் ஆனவை இப் பாடல்கள் 
எமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல 
நல்ல ஒழுக்க நெறிகளை பற்றி கூறுகிறது.   

திருக்குறள் அதிகாரம் - 2

திருக்குறள் அதிகாரம் - 2

வான் சிறப்பு - 1
(1 ) வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
         தான் அமிழ்தம் என்றுணரற் மாற்று


கருத்து 
மழை தவறாது பெய்ய உலகம் நிலைபெற்று 
வருவதால் ,மழை உலக உயிர்களுக்கு 
அமிழ்தம் என்று அறியத்தக்கது 

சங்கீதம்-1

சங்கீதம் "கழுத்திற்குச் சங்கு என்று ஒரு பெயர் உண்டு. கீதம் என்பது பாடலை குறிக்கும் " "பொதுவாக சங்கிலும் கீதம் இருக்கிறது. அதனை ஒலிப்பதால் வருவது சங்க நாதம்”ஆகும் " கழுத்துப் பகுதியான தொண்டையிலிருந்து வரும்
கீதம்தான் சங்கீதம் ஆகும் .இச் சங்கீதமானது லலித
கலைகளுள் சிறந்தது,செவிக்கும்மனதிற்கும் இன்பம்
தரவல்லது என இசையின்பெருமையை பலபெரியவர்
கள் புராணநூல்கள் வாயிலாக எடுத்து கூறியுள்ளனர்.
மனிதர்கள்மட்டுமன்றி மிருகங்கள் அனைத்தையும்
வசப்படுத்தகூடிய தன்மை சங்கீததத்திற்கு உண்டு.
அத்துடன் தெய்வங்களின் தோற்றங்கள் இசையின்
பெருமையை எடுத்து காட்டுகின்றன. அதற்கு உதாரணமாக சிவனின் கையில் உடுக்கையும் சரஷ்வதியின் கையில் வீணையும் கண்ணனின் கையில் புல்லங்குழலும் இருப்பதை நாங்கள் காணலாம்.அத்துடன் உடல் நோய்களை மாற்றும் சக்தி இசைக்கு இருக்கின்றது என பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்து கூறியுள்ளனர் நாம் இசையை கேட்பதினாலும், கற்று கொள்வதினாலும் எமது உள்ளத்தில் சாந்தம்,அமைதி மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகிய பல சிறந்த பண்புகளை உருவாக்கி கொள்ளலாம்.

இனிப்பு வகைகள்-2

லவேரியா லவேரியாவில் மாச்சத்து, இனிப்புசத்து, புரதச்சத்து கொழுப்புச்சத்து போன்ற பல சத்துகள் உள்ளது .இந்த லவேரியாவை இலங்கையில் வாழ்கின்ற சிங்களமக்கள் மிகமிக விரும்பி உண்பார்கள் அத்துடன் லவேரியா சிங்கள மக்களின் பாரம்பரிய உணவாகும்.லவேரியாவில் கல்சியம், இரும்பு, காபோவைதரேட் விற்றமின் B1,B2,B3,B6,B9 மக்னீசியம் ,பொஸ்பரஸ், பொட்டாசியம் சோடியம் ஆகியசத்துக்கள் காணப்படுகின்றன. தேவையான பொருட்கள் தோல்நீக்கிவறுத்துகுற்றிய பாசிப்பயறு -1 சுண்டு தேங்காய்ப்பூ - 3 சுண்டு சக்கரைதூள் /கற்கண்டு தூள்- 1 சுண்டு ஏலக்காய்த்தூள் - 2 தேக்கரண்டி வறுத்துஅரித்தஅரிசிமா - 2 சுண்டு(நிரப்பி) உப்பு -தேவையானளவு எண்ணைய்- 6 மேசைக்கரண்டி மஞ்சள்தூள் - தேவையானளவு எண்ணைய்பூசிய வாழையிலை - 36 துண்டுகள் செய்முறை (1 ) அடுப்பில் பாத்திரத்த்தை வைத்து அதில் தோல் நீக்கிவறுத்துகுற்றிய பாசிப்பயறு, தண்ணீர் ஆகியவற்றை போட்டு அவிய விடவும் . (2 )பாசிப்பயறு முக்கால் பதமாக அவிந்த பின்பு அடுப்பில் உள்ள அந்த பாத்திரத்தை இறக்கி அதில் உள்ள தண்ணீரை வடிக்கவும் . (3 )தண்ணீரை வடித்தபின்பு முக்கால்பதம் அவிந்த பாசிப்பயறை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்ப்பூ,சக்கரை/கற்கண்டு ஆகியவற்றை போட்டு கரண்டியினால் நன்றாக கலக்கவும் . (4 )பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சக்கரை/கற்கண்டு முற்றாக கரையும் வரை நன்றாக கிளரவும். (5 )சக்கரை /கற்கண்டு நன்றாக கரைந்து பாகு தடிக்கத் தொடங்கும் போது ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். (6 )நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போடவும் . (7 ) பின்பு வேறொரு பாத்திரத்தில் அரிசிமா,உப்பு நீர்,எண்ணைய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும் . (8 )கலந்த பின்பு அதனுடன் தேவையானளவு கொதித்த நீரை விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக குழைக்க வேண்டும்.(இடியப்ப பதம் ) (9 )பின்பு குழைத்த மாவை இடியப்ப உரலில் போட்டு அதை எண்ணைய்பூசிய வாழையிலைதுண்டில் மெல்லிய இடியப்பங்களாக பிழியவும். (10 )இடியப்ங்களாக பிழிந்தவற்றின் நடுவில் 1மேசைக் கரண்டி பாசிப்பயற்று கலவையை வைத்து இலை யுடன் சேர்த்து பாதியாக மடித்து விளிம்பு பகுதிகளை மெதுவாக அமர்த்தவும். (11 )அடுப்பில் இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தை வைத்து அதில் தேவையானளவு தண்ணீர் விட்டு சூடாக்கவும். (12 ) தண்ணீர் சூடான பின்பு ஏற்கனவே செய்து மடித்து வைத்துள்ள இடியப்பங்களை இடியப்ப தட்டில் இரண்டு இரண்டாக வைத்து ஆவியில் அவிக்கவும் . (13 ) அவித்து எடுத்த பின்பு அதை ஆறவிடவும். (14 )ஆறிய பின்பு சுவையான சத்தான லவேரியா தயாராகிவிடும் (15 ) அதன் பின்பு அதை பரிமாறலாம். மாற்று முறை (1)வாழையிலைக்கு பதிலாக சாப்பாடு கட்டும் தாள்கள் அல்லது சாதாரண தாள்கள் பயன்படுத்தலாம். (2)ஏலக்காய்த்தூளுக்கு பதிலாகஅரைத்தேக்கரண்டி) மிளகுத்தூள்,(அரைதேக்கரண்டி) சீரகம் சேர்த்து பயன்படுத்தலாம். எச்சரிக்கை சக்கரை நோயாளர்,இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். பரிமாறும் அளவு (10 - 16 )நபர்களுக்கு ஆயத்த நேரம் 1 மணித்தியாலங்கள் சமைக்கும் நேரம் 1 மணித்தியாலங்கள்

சனி, 26 டிசம்பர், 2009

கிழங்கு வகைகள் -1


            











கரட்
கரட்டினை மஞ்சள் முள்ளங்கி எனவும்
அழைப்பர் இது மஞ்சள்சிகப்பு(ஓரஞ் )
நிறத்தில்வேரில் திரண்டு கொழுத்த
நீளமான கூம்பினைப்போல உள்ள ஒரு 
வேர்கிழங்கு . கரட் மத்திய ஆசியாவினை
தனது பிறப்பிடமாக கொண்டது. ஆனால்
கரட் 3000 ஆண்டுகளுக்கு முன்பு 
ஆப்கானிஸ்த்தானின் சில பகுதிகளில் 
பயிரிடப்பட்டன.  இது  அம்பெலிஃபெரா என்ற
 தாவர குடும்பத்தைச் சேர்ந்தது ஆரம்ப
காலங்களில் கரட் வெளிர்மஞ்சள், ஊதா, சிகப்பு
 போன்ற நிறங்களில் காணப்பட்டன.ஆனால்
 17 ஆம்நூற்றாண்டில் ஆரஞ்சுநிறமான கரட்டுகள் 
முதன் முதலில் நெதர்லாந்து நாட்டில்
பயிரிடப்பட்டன கரட்டில் பீட்டாக் காரோட்டீன்
எனப்படும் ஒருவகை சத்து அதிகமாக உள்ளது.
ஆகவே தான் நாங்கள் கரட்டை சாப்பிடும் போது
இதில் உள்ள பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து
 எமதுஉடலில்சென்று  உயிர்ச்சத்து  Aயாக மாறுகிறது
 கரட்டின் சாறு உடல்நலமருந்தாகவும் பயன்படுத்தப்
படுகிறது. கரட்டினை நாங்கள் சாப்பிட்டால்  எமது
கண்பார்வை  மேம்படும் கரட்டில் புற்றுநோய் தடுப்பு
குணங்கள்  இருப்பதாக  மருத்துவ ஆய்வுக்களில் 
கண்டறியப்பட்டு உள்ளது.  கரட் இயற்கையாகவே
இனிப்புச்சுவையானது ஆகவே தான் இதனைபச்சை
யாக சாப்பிட்டாலும்மிகவும் சுவையாக இருக்கிறது
ஆனால் கரட்டைசமைத்து சாப்பிடுவதை விட  பச்சை
யாக சாப்பிட்டால் இதில் காணப்படுகின்ற பலசத்துக்
கள் வீணாகாமல் எமக்கு கிடைக்கும். கரட்டில் உயிர்
சத்து 'ஏ' நிறைந்து உள்ளது இச்சத்து ஆரோக்கியமான கண்களுக்கும்,சருமத்திற்கும்,உடல்வளர்ச்சிக்கும் மிக
மிக  உதவும் கரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் என்ற
சத்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை
கரைக்கும் திறன் கொண்டது. எமது உடலில் உள்ள
அதிகப்படியான கொழுப்புகளை தினமும் கரட் சாப்பிடு
வதன் மூலம் சற்று குறைக்க இயலும், கரட் எமது
உடலில் உள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அதனை
விருத்தியும்  செய்கின்றது,எமது குடலில்  புண்கள்
உண்டாகாமல் தடுக்கின்றது,எமது வாயில் ஏற்படும்  
 துர்நாற்றத்தை போக்கும் வல்லமை கொண்டது.
அத்துடன் பாதி வேக வைத்த முட்டையுடன், கரட்
மற்றும்தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி
அதிகரிக்கும்.கரட்சாற்றுடன் தேசிக்காய்சாறு சிறிதளவு 
கலந்து சாப்பிடால் எமது உடலில் உள்ள பித்த
கோளாறுகள் காணாமல் சென்றுவிடும்,கரட்டில்
நார்ப்பொருள், கொழுப்புமாச்சத்து, புரதம் ,உயிர்சத்து
a ,b1,b2,b3,b6 ,c , கல்சியம்,இரும்பு, மக்னீசியம்,சோடியம்,
பொட்டாசியம், செம்பு, சக்தி, தாதுக்கள்,ஈரப்பதம்/நீர் நாகம்,குரோமியம்,குளோரின், கரோட்டீன், தையாமின்  
ரைப்போஃப்ளேவின், நியாசின்.போலிக்அமிலம்,கொலின் 
 ஆகிய சத்துகள் காணப்படுகின்றன.

சலாட் வகைகள்-2

கரட் சலாட் "கரட் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது கரட்டீன்,உயிர்சத்து போன்ற எல்லாவகை சத்துகளும் அடங்கிய உணவுபொருள் ஆகும்"

தேவையான பொருட்கள் கரட்- 1 00 கிராம் வெங்காயம் (பெரிய ) - 1 /2 பாதி பச்சை மிளகாய் - (1 - 2) தேசிக்காய்ஊறுகாய் - சிறிய துண்டு தக்காளிப்பழம்- அரைப்பாதி மிளகுத்தூள் -தேவையானளவு உப்பு -தேவையானளவு தேசிக்காய்ச்சாறு(லெமன்ஜுஸ்)- தேவையானளவு பால் / யோகற் - தேவையானளவு செய்முறை (1 )கரட்டின் தோலை சீவி அகற்றிய பின்பு கரட்டை பூ போல துருவவும் . (2பச்சை மிளகாயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும். ( 3 ) வெங்காயத்தை மிக சிறிய துண்டுகளக நறுக்கவும் . (4 ) தக்காளிப்பழத்தை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டவும். (5 ) அதன் பின்பு வெட்டியவற்றையும் ஒரு பாத்திரத்தில் போடவும். (6 ) பாத்திரத்தில் போட்டவற்றுடன் ஊறுகாய்,உப்பு,மிளகுத்தூள்,பால்/ யோக்கற்,தேசிக்காய்சாறு(லெமன்ஜுஸ்)சேர்த்து கலக்கவும். (7 ) கலக்கிய கலவையை 2 நிமிடங்கள் ஊறவிடவும். ( 8 ) இதோ சுவையான இலகுவான சத்தான கரட் சலாட் தயார். மாற்று முறை : நீங்கள் விரும்பினால் தக்காளிப்பழம்,தேசிக்காய் ஊறுகாய் இவையிரண்டையும் சேர்க்கலாம் அல்லது இவற்றில் ஒன்றை சேர்க்கலாம் அல்லது ஒன்றையும் சேர்க்காமல் விடலாம் (சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும் ). பரிமாறும் அளவு (2 - 3 ) நபர்களுக்கு ஆயத்த நேரம் 5 நிமிடம் சமைக்கும் நேரம் 7 நிமிடங்கள்

வெள்ளி, 25 டிசம்பர், 2009

கேக் ஜசிங் வகைகள்-1

பட்டர் ஜசிங்
தேவையான பொருட்கள்
நிறங்கள் (விரும்பியது ) -சிறு துளிகள் ஜசிங் சீனி - 200 கிராம் பட்டர் அல்லது மாஜரீன் - 100 கிராம் செய்முறை
(1 )அரிதட்டினால் ஜசிங்சீனியை கட்டியில்லாமல்
நன்றாக அரித்து(சலித்து ) ஒரு பாத்திரத்தில்
வைக்கவும் .
(2 )பின்பு ஒரு பாத்திரத்தில் பட்டரை(மாஜறீனை)
போட்டு ஒரு அகப்பையினால் அல்லது கேக்
பிட்டரினால் நன்றாக அடித்து மெதுமையாக்கவும் .
(3 )மெதுமையாக்கிய பின்பு அதனுடன் அரித்து
வைத்திருக்கும் ஜசிங் சீனி ,விரும்பிய நிறம்
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
(4 ) பின்பு ஜசிங் போடும் நொசிளில் அச்சை போட்டு
அதன் பின்பு அதில் கலந்த கலவையை போட்டு
விரும்பிய வடிவில் அலங்கரிக்கலாம்

பயனுள்ளசமையல் குறிப்புகள்-4

   பயனுள்ளசமையல்குறிப்புகள்- 4

(1 ) கிரேவிவகைகளில் உறைப்பு(காரம் )அதிகமாக
    காணப்பட்டால் சிறிதளவு தக்காளி,சிறிதளவு
    வெங்காயம் ஆகியவற்றை சிறிய  சிறிய
    துண்டுகளாக  வெட்டி வதக்கி அரைக்கவும்.
    அதன் பின்பு வதக்கி அரைத்ததை  ஏற்கனவே
    உறைப்பு (காரம்) அதிகமான கிரேவி வகைகளில்
    கலந்தால் ஏற்கனவே கிரேவியில் காணப்படும்
   அதிகமான  உறைப்பு (காரம் ) ஆகியவை
   சரியாகிவிடும் .

(2 )குழம்பு வகைகளில் உறைப்பு (காரம் ) அதிகமாகி
     விட்டால் அந்த குழம்பு வகைகளை  அடுப்பில்
    வைத்து அதனுடன் அரைத்த தேங்காய்பால்,சிறிதளவு
    தேசிக்காய்சாறு  (எலும்பிச்சை சாறு ) ஆகியவற்றை
    கலந்து சிறிதளவு நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால்
    அதில் காணப்படும் அதிகமான காரம் குறைந்துவிடும்

மருத்துவகுறிப்புக்கள்-2

(1 )குழந்தை கொழு கொழுவென ஆரோக்கியமாக
     வளர பாலில் 3 காய்ந்த திராட்சைகளைப் போட்டு
     வடிகட்டி கொடுத்து வந்தால் குழந்தை திடகாத்திரமாக
     இருக்கும்.

(2 )தேங்காய் பாலில் சிறிதளவு மிளகு தூளை கலந்து
      தலையில் தேய்த்த பின்பு சிறிது நேரம் கழித்து
      தலையை கழுவினால் பேன் அழிந்துவிடும் .

(3 )தோடம்பழ சாறுடன் சிறிது மிளகுத்தூள் ,சிறிது
      உப்பு ஆகியவற்றை கலந்து குடித்தால் வாந்தி
      நிற்கும் .

வியாழன், 24 டிசம்பர், 2009

இனிப்பு வகைகள்-1

மைசூர்பாகு

இனிப்பு பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும் இதில் மாச்சத்து , இலிப்பிட்டு,கொழுப்பு சத்து போன்ற பல சத்துகள் அடங்கியது அத்துடன் மிக மிக சுவையானதும் ஆகும்


தேவையான பொருட்கள்

கடலை மா - 1 / 2 சுண்டு
சீனி (சக்கரை ) -1 சுண்டு
நெய் - 150 கிராம்
தண்ணீர் - 1 /2 கப்


செய்முறை
  1. அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து அதில் சீனி (சக்கரை) ,தண்ணீர் ஆகியவற்றை போட்டு காச்சவும்.
  2. சீனி (சக்கரை )மெல்லிய கம்பி பதமாக வரும் வரை நன்றாக காச்சவும்.
  3. அதன் பின்பு இதனுடன் கடலை மாவை சிறிது சிறிதாக தூவி நன்றாக கலந்து கட்டிபடாமல் கிளறவும்.
  4. முழுவதும் நன்றாக கலந்த பின்பு நெய்யை இடையிடையே சேர்த்து கிளறவும்.
  5. அதன் பின்பு இக்கலவை தாட்சியில் (வாணலியில் ) ஒட்டாமல் திரளும் பதத்தில்வரும் போது இக்கலவை உள்ள தாட்சியை (வாணலியை ) இறக்கவும்.
  6. பின்பு இறக்கிய தாட்சியில் (வாணலியில் )உள்ள கலவையை நெய் பூசிய தட்டில் கொட்டி அழுத்தி பரப்பவும் .
  7. அழுத்தி பரப்பிய பின்பு சூடாக இருக்கும் போது தேவையான அளவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பயனுள்ளசமையல் குறிப்புகள் -3

பயனுள்ள 

சமையல் குறிப்புகள்-3

(1 )ஆட்டிறைச்சி,கோழி இறைச்சி  முற்றலாக
இருந்தால் அவை நன்றாக வேகாது எனவே
அவற்றுடன்   1 / 2 தேக்கரண்டி அப்பசோடா
போட்டு  அல்லது வினாகிரி சிறிதளவு விட்டு
வேக வைத்தால் நன்றாக வெந்து விடும்.

(2 ) ஆட்டிறைச்சி நல்ல இளம் ரோஸ் நிறத்தில்
இருந்தால் இளசு அதாவது நல்ல இறைச்சி,ஆனால்
சிகப்பு நிறத்தில் இருந்தால் முற்றல் இறைச்சி .

(3 )இறைச்சி வகைகளில் அதன் வாடை(மணம்)
    வராமல் இருக்க அதனை வெட்டிய பின்பு
     கழுவும் போது சிறிதளவு வினிகர் அல்லது
    சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கழுவ வேண்டும்.

திருக்குறள் அதிகாரம் - 1

திருக்குறள் அதிகாரம் - 1

கடவுள் வாழ்த்து -10

(10)பிறவிப் பெருகடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

கருத்து

இறைவனின் திருவடிகளை அடைந்தவரால்
பிறவியாகிய பெரிய கடலைக் கடக்கமுடியும்
மற்றவரால் கடக்கமுடியாது

திருக்குறள் அதிகாரம் - 1

திருக்குறள் அதிகாரம் - 1

கடவுள் வாழ்த்து -9
(9)கோள்இல் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை

கருத்து
எளிய குணங்களையுடைய இறைவனின் அடிகளை
வணங்காத உடல்கள் புலன் உணர்வற்ற பொறிகள்
போலப் பயன் அற்றவையாகும்

புதன், 23 டிசம்பர், 2009

திருக்குறள் அதிகாரம் - 1

திருக்குறள் அதிகாரம் - 1

கடவுள் வாழ்த்து -8

(8)
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீத்தல் அரிது

கருத்து

அறக்கடலாகவும் அருளாலனாகவும் விளங்கும்
இறைவனின் அடிகளை இடைவிடாமல்
நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்குப்
பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது 


திருக்குறள் அதிகாரம் - 1

திருக்குறள் அதிகாரம் - 1

கடவுள் வாழ்த்து - 7

(7 )
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

கருத்து

தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடை
விடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு
மனக்கவலையை நீக்குதல் இயலாது

திருக்குறள் அதிகாரம் -1

திருக்குறள் அதிகாரம் -1

கடவுள் வாழ்த்து - 6

(6 )
பொறிவாயில் ஜந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
 நெறிநின்றார் நீடுவாழ் வார்

கருத்து

ஜம்பொறிகளின் வழியாகப் பிறக்கும் ஜவகை
ஆசைகளையும் விட்ட இறைவனது பொய்யற்ற
ஒழுக்க நெறியில் நின்றவர் நெடுநாள் நிலை பெற்று
வாழ்வார்

பயனுள்ள சமையல்குறிப்பு - 2

(1 )உளுந்து வடைக்கு அரைக்கும் போது
ஒருசுண்டு உளுந்துடன் ஒருதேக்கரண்டி
கடலைப்பருப்பு சேர்த்து ஊறவைத்து
அரைத்து வடை செய்தால் நல்லமொறு
மொறுப்பான உளுந்து வடை சாப்பிடலாம்.

(2 )முறுக்கு ,பகோடா,சீடை ஆகியவை
செய்யும் மாவுடன் சிறிதளவு சோளம்
மாவை கலந்து குழைத்தால் நல்லா
மொறுமொறுப்பாகவும் சுவையாகவும்
இவை யாவும் காணப்படும்

சலாட் வகைகள்-1

பீன்ஸ்













சலாட்          

போஞ்சிக்காய்(பீன்ஸ்) புரோட்டின் சத்துடையது இது பொதுவாக அசைவம் சாப்பிடாதவர்கள் மிக அதிகமாக உண்ண வேண்டிய ஒரு சலாட் வகையாகும் .


தேவையான பொருட்கள்
போஞ்சிக்காய்(பீன்ஸ் ) - 100 கிராம்
வெங்காயம் - 1 /2 பாதி
தக்காளிப்பழம் - - 1 /2 பாதி
பச்சைமிளகாய் - 2
மிளகுத் தூள் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தேசிக்காய்சாறு(லெமன்சாறு)- 1
 தேக்கரண்டி வினாகிரி - 1 மேசைக்கரண்டி
சீனி(சக்கரை) - 1 தேக்கரண்டி

  செய்முறை

போஞ்சிக்காயை(பீன்ஸ்ஸை) நன்றாக கழுவி அவிக்கவும் .

பின்பு அவித்த போஞ்சிக்காயை(பீன்ஸ்ஸை) இரு முனையை வெட்டி சுத்தமாக்கவும்.

சுத்தமாக்கிய போஞ்சிக்காயை (பீன்ஸ்ஸை) மேலிருந்து கீழாக குறுக்காக வெட்டவும் பின்பு துண்டுகளாக வெட்டவும்.

 துண்டுகளாக வெட்டிய பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போடவும் .

 அதன் பின்பு பச்சை மிளகாயை மேலிருந்து கீழாக (இரண்டாக) வெட்டவும். 

தக்காளிப்பழத்தை ஒரளவு சிறியதுண்டுகளாக வெட்டவும்.

 வெங்காயத்தை மெல்லியதாக சிறியதாக வெட்டவும். 

பின்பு போஞ்சிக்காயை(பீன்ஸ்ஸை) வெட்டி போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில் வெட்டிய பச்சைமிளகாய்,வெட்டிய வெங்காயம்,வெட்டிய தக்காளிப்பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

 கலக்கியவற்றுடன் உப்பு,மிளகுத்தூள்,வினாகிரி, சீனி சேர்த்து கலக்கவும். 

பின்னர் கலக்கியவற்றை 5 நிமிடம் ஊறவிடவும். யாவும் ஊறியதும்

இலகுவான வித்தியாசமான சுவையுடைய போஞ்சிசலாட் தயாராகிவிடும் .