கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 25 டிசம்பர், 2009

பயனுள்ளசமையல் குறிப்புகள்-4

   பயனுள்ளசமையல்குறிப்புகள்- 4

(1 ) கிரேவிவகைகளில் உறைப்பு(காரம் )அதிகமாக
    காணப்பட்டால் சிறிதளவு தக்காளி,சிறிதளவு
    வெங்காயம் ஆகியவற்றை சிறிய  சிறிய
    துண்டுகளாக  வெட்டி வதக்கி அரைக்கவும்.
    அதன் பின்பு வதக்கி அரைத்ததை  ஏற்கனவே
    உறைப்பு (காரம்) அதிகமான கிரேவி வகைகளில்
    கலந்தால் ஏற்கனவே கிரேவியில் காணப்படும்
   அதிகமான  உறைப்பு (காரம் ) ஆகியவை
   சரியாகிவிடும் .

(2 )குழம்பு வகைகளில் உறைப்பு (காரம் ) அதிகமாகி
     விட்டால் அந்த குழம்பு வகைகளை  அடுப்பில்
    வைத்து அதனுடன் அரைத்த தேங்காய்பால்,சிறிதளவு
    தேசிக்காய்சாறு  (எலும்பிச்சை சாறு ) ஆகியவற்றை
    கலந்து சிறிதளவு நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால்
    அதில் காணப்படும் அதிகமான காரம் குறைந்துவிடும்

1 கருத்து:

  1. இக் கலைகழகத்தினை பார்வையிட்டு தங்களுடைய கருத்தினை கூரியமைக்கு இக்கலை கழகம் உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறது

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.