கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 26 ஜூன், 2016

மொனாக்கோ.

 உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ. 

கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் உள்ள வாட்டிகனுக்கு அடுத்து உலகில் உள்ள குட்டி நாடு இது.

மொத்தமே 499.2 ஏக்கர்தான் இந்த நாட்டின் பரப்பளவு. 

நம்ம ஊரில் உள்ள ஒரு கிராமத்தைவிட சிறிய நாடு.

 மொத்த சாலை தூரம் - 4.4 கிலோமீட்டர்தான். 

கடலோரப் பகுதி - 4.1 கிலோ மீட்டர்.

 நிலப்பரப்பு பட்டியலில் உலக அளவில் மொனாக்கோவுக்கு 248வது இடம். (110 ஏக்கர் பரப்புக் கொண்ட வாட்டிகன் 249வது இடம்)

 ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு அருகே மொனாக்கோ உள்ளது.

இந்த நாட்டின் மக்கள் தொகை தற்போது 36, 371.

மக்கள்தொகை குறைவாக இருப்பதாலோ என்னவோ, இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு ஆயுள் கொஞ்சம் அதிகம். இங்கு சராசரியாக மக்கள் 90 வயதுவரை வாழ்கிறார்கள்.

 பிரான்ஸுடன் இணைந்து இருந்த இந்த நாடு 1861-ம் ஆண்டில் தனி நாடானது.

இங்கு மக்கள்தொகை குறைவாக இருப்பதால் வெளிநாட்டு மக்கள் குடியேற முன்பு அதிகம் அனுமதிக்கப்பட்டார்கள்.

மக்கள் தொகை இருமடங்காகி விட்டதால் நாட்டின் பரப்பளவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளார்கள். எப்படித் தெரியுமா? 

கடலிலேயே பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டி வருகிறார்கள்.
உச்சக்கட்டமாக கடலுக்குள் பாதாளம் அமைத்து அங்கு ஒரு நகரை உருவாக்கவும் மொனாக்கோவில் திட்டமிட்டுவருகிறார்கள்.

செவ்வாய், 14 ஜூன், 2016

செவ்வாய், 7 ஜூன், 2016

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வியாழன், 28 ஏப்ரல், 2016

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

திங்கள், 25 ஏப்ரல், 2016

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

திங்கள், 18 ஏப்ரல், 2016

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

வியாழன், 14 ஏப்ரல், 2016

திங்கள், 11 ஏப்ரல், 2016

முழு கத்தரிக்காய் கிரேவி

சிறிய முழு கத்தரிக்காய் -15,
பூண்டு - 15 பற்கள், 
சின்ன வெங்காயம் -15, 
கறிவேப்பிலை - ஒரு ஆர்க் 

மசாலா அரைப்பதற்கு


வற்றல் - 15,

சோம்பு - ஒரு ஸ்பூன்,
சீரகம் - ஒரு ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப.

தாளிப்பதற்கு:

எண்ணெய் - 50 மில்லி,
கடுகு - ஒரு ஸ்பூன்,
சோம்பு - ஒரு ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்



கத்தரிக்காயின் காம்பை நீக்கி 4 ஆக லேசாக வகுந்து கொள்ளவும்.வரமிளகாய், சோம்பு, சீரகம்,உப்பு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வரமிளகாய், சேம்பு, சீரகம், உப்பு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அரதை்த மசாலவில் பாதியை வதக்கி (பச்சை வாடை போக) எடுத்துக்கெள்ளவும்.

பின்பு மேலும் சிறிது எண்ணெயை விட்டு வாணலில் கத்தரிக்காயை நன்கு வதக்கவும். ஆறியதும் வகுத்த பகுதியில் வதக்கி இருக்கும் மசாலவை வைத்து அமுக்கவும். பின் மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி,அதில் தாளிப்பவற்றை போட்டு சிவந்ததும் பூண்டு,வெங்காயம் வதக்கிய பின்பு அரைத்த மசாலாவின் மீதமுள்ள பாதியை போட்டு 5 நிமிடம் வதக்கி (அடுப்பு குறைந்த தணலில் இருக்கவும்) அதில் ஸ்டப் செய்த கத்தரிக்காய்களைப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
4 to remove the kettle slightly vakuntu kollavumvaramilakay brinjal, anise, cumin, salt Grind the grindstone or the mixer

தமிழ் இலக்கணம்-554


ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

பாப்கார்ன்சூப்

வெண்ணெய் – 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய குடைமிளகாய் – 2 டேபிள்
ஸ்பூன், பூண்டு – ஒரு பல்,
வேகவைத்த சோளம் – 1/2 கப்,
பால் – 1/2 கப், சோள மாவு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
சர்க்கரை – 1/4 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – தேவையான அளவு,
பாப்கார்ன் – 1 டேபிள்ஸ்பூன் (அலங்கரிக்க),
கொத்தமல்லி இலை – 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய குடைமிளகாய், சோளம் மற்றும் தண்ணீர் சேர்த்து 10-12 நிமிடம் கொதிக்கவிடவும். வெந்தபின் அதில் பாலில் சோளமாவை கரைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும். பாப்கார்ன் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து, பிரெட் டோஸ்ட் உடன் பரிமாறவும்.

திங்கள், 4 ஏப்ரல், 2016

செவ்வாய், 29 மார்ச், 2016

வெள்ளி, 25 மார்ச், 2016

வியாழன், 24 மார்ச், 2016

செவ்வாய், 22 மார்ச், 2016

திங்கள், 21 மார்ச், 2016

வெள்ளி, 18 மார்ச், 2016

வியாழன், 17 மார்ச், 2016

செவ்வாய், 15 மார்ச், 2016

திங்கள், 14 மார்ச், 2016

வெள்ளி, 11 மார்ச், 2016

வியாழன், 10 மார்ச், 2016

செவ்வாய், 8 மார்ச், 2016

திங்கள், 7 மார்ச், 2016

வியாழன், 3 மார்ச், 2016

செவ்வாய், 1 மார்ச், 2016

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

வியாழன், 25 பிப்ரவரி, 2016

புதன், 24 பிப்ரவரி, 2016

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

திங்கள், 22 பிப்ரவரி, 2016

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

வியாழன், 18 பிப்ரவரி, 2016

புதன், 17 பிப்ரவரி, 2016

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தமிழ் இலக்கணம்- 513


எந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது

ஜாதகம், பரிகாரம், ராசிப்பலன் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும், மனதின் ஒரு ஓரத்தில் இதன் மீது நம்பிக்கை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வதில்லை. எப்படி ராசியைக் கொண்டு, அந்த ராசிக்குரியவரின் குணத்தை சொல்ல முடிகிறதோ, அதேப் போல் எந்த ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை வழங்கும் என்பதையும் சொல்ல முடியும்.
அந்த நாளில் அந்த ராசிக்காரர்கள் தங்களது முக்கிய பணிகளை மேற்கொண்டால், வெற்றிக் கிட்டும். அது தொழிலாகட்டும் அல்லது சொந்த வாழ்க்கையாகட்டும், அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சரி, இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்று பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றிக்கிட்டும். நீங்கள் மற்றவர்களிடம் உங்களது திறமையை வெளிக்காட்ட நினைத்தால், இந்நாளில் மேற்கொள்ளுங்கள், இதனால் வெற்றி உங்களுக்கே.
ரிஷபம்
வெள்ளி, புதன், சனி மற்றும் திங்கள் போன்ற கிழமைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும். செவ்வாய் கிழமைகளில் ஊதாரித்தனமான செலவுகளைச் செய்யக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.
மிதுனம்
இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். மிதுன ராசிக்காரர்கள் எந்த ஒரு புதிய செயலையும் புதன் கிழமைகளில் மேற்கொண்டால் நல்லது நடக்கும். மொத்தத்தில் இந்த கிழமை உங்களுக்கு முன்னேற்றத்தை மட்டுமே தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகள் இன்பம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகள் வெற்றியை வாரி வழங்கும். புதன்கிழமை பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்கு உகந்தது. சனிக்கிழமை சாதகமில்லாத நாள். இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் விரதமிருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஞாயிற்று கிழமை சிறந்த நாள். இந்நாளில் உங்களது திறமையை முழுமையாக காணலாம். இந்நாளில் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் வெற்றியை மட்டுமே பரிசாகப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன், வெள்ளி, திங்கள் மற்றும் வியாழக் கிழமைகள் அதிர்ஷ்டத்தை வழங்கும் தினங்கள். ஞாயிறு, செவ்வாய், சனி போன்ற தினங்களில் எந்த ஒரு முக்கியமான மற்றும் புதிய விஷயத்தையும் மேற்கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால், தாங்க முடியாத அளவில் படுதோல்வியை சந்திக்கக்கூடும்.
துலாம்
இந்த ராசிக்கு வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் உங்களது ராஜதந்திர மனோபாவம், நிறைய மக்களுடன் பழகவும், அதிக புகழையும் வாங்கித் தரும். மொத்தத்தில் இந்நாள் உங்களை உயரச் செய்யும்.
விருச்சிகம்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான தினம். இந்நாளில் எந்த காரியத்திலும் வெற்றி கிட்டும். புதன் மற்றும் சனிக்கிழமைகள் சாதகமற்றது. இந்நாளில் எந்த ஒரு முக்கிய விஷயங்களையும் மேற்கொள்ள வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வியாழக்கிழமை அதிர்ஷ்டமான தினம். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக புலப்படும். எனவே நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கும் காரியங்களை இந்நாளில் மேற்கொள்வது வெற்றியைத் தரும்.
மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை உகந்தது. இந்நாளில் இவர்கள் செய்ய நினைக்கும் செயல்களை மேற்கொண்டால், அவர் இதுவரை நினைத்திராத பலன் கிடைக்கும். இந்நாளில் இவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் மற்றும் புத்துணர்ச்சியுடன் செயல்படக்கூடும். இதனால் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள் போன்ற தினங்கள் அதிர்ஷ்டமான நாட்கள். புதன் மற்றும் சனி அதிர்ஷ்டமற்ற நாட்கள். ஞாயிற்றுக்கிழமை கலவையானது.
மீனம்மீன ராசிக்காரர்களே! உங்களுக்கு வியாழக்கிழமை மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் உங்களது புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது மற்றும் இந்நாளில் நீங்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள்.

செவ்வாய்க்கிழமை


திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

எண்ஜோதிடப்படி உங்கள் எண்ணுக்குரிய குணங்கள்

எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சூரியன் (Sun)
எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார் வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள். அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். ஒன்றின் எண் ஆதிக்கம் நன்கு அமைந்திரந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குடன் விளங்குவார்கள். ஆனால் நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். (இந்த எண்காரர்கள் மட்டும்தான்). மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சுயநலமம், பண வேட்கையும் அதிகமாகக் கொண்டு இருப்பார்கள். அதிகாரம் காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள்.
கடின உழைப்பும், கண்டிப்பான நடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும். மனிதல் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள். புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றம் அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று அதற்காகச் செலவு செய்வர்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்காதவர்கள். தாங்கள் உதவுவதைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விளம்பரம் அடைய ஆசைப்பட மாட்டார்கள். சூரிய புத்திரன் கர்ணன் இவரது ஆதிக்கம் நிறைந்தவர்கள்.
எதிரியுடன் நேரடியாகப் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவார்களே தவிரக் குறுக்கு வழியைத் தேட மாட்டார்கள். இதனால்தான் சகுனியின் சதித் திட்டங்களை எல்லாம் கர்ணன் எதிர்த்துக் கொண்டே இருந்தான். தங்களின் இரக்க குணத்ததால் பல பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். ஆனால் நல்ல பெயரும் புகழும் நிச்சயம் அடைவார்கள். ‘‘இவர்தான் எனது நண்பன், இவர்தான் எனது எதிரி’’ என்று எதையும் மறைத்து வைக்காமல் கூறி விடுவார்கள். மிகுந்த ரோஷமும், எதையும் எடை போடும் குணமும் உண்டு. வாக்குறுதி கொடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றுவார்கள். பொதுவாகச் சோம்பேறித் தனமும், பொறாமையும் இவர்களுக்கு பிடிக்காது. அடுத்தவர் பொருட்களையும் சொத்துக்களையும் தீயென வெறுத்து ஒதுக்கி விடுபவர்கள் இவர்களே.
படிப்பறிவை விடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலை வாசஸ்தலங்களும், பெரும் பயணங்களும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எந்த வாணிகத்திலும், நேர்மையையும், வாக்குறுதியையும் கடைப்பிடிப்பார்கள். இலாபத்திற்காகத் தங்களது மனச்சாட்சியை ஒதுக்க மாட்டார்கள். தேவையானால் பெருந்தன்மையுடன் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் அலட்சியம் செய்தால் மட்டும் இவர்களால் தாங்க முடியாது. அவர்களை உண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவார்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் நடப்பார்கள்.
பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், நேராக வந்து மன்னிப்புக் கேட்டால், உடனே மன்னிக்கும் மாண்பு படைத்தவர்கள். மீண்டம் அவர்களுக்கு உதவியும் செய்வார்கள். பொதுவாகத் திருமணம் காலம் கடந்தே நடைபெறும். காதல் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும் என்றாலும், ஏமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கும், நேரம் ஒதுக்கி, அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அரசியலில் வெற்றி பெற, ஒரு புகழ்பெற்ற கட்சியோ, அல்லது இயக்கமோ இவர்களுக்குத் தேவை. காரணம் மக்களை ஆசை காட்டி ஏமாற்றும் வித்தைகள் இவர்களுக்குத் தெரியாது.
பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள். பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள். மக்களுக்குப் பிடிக்காத செயல்களையும், மக்களின் பிற்கால நன்மைகளுக்காகத் துணிந்து காரியங்களைச் செயல்படுத்துவார்கள். எண்ணின் பலம் குறைந்தால் மேற்சொன்ன பலன்கள் மாறுபடும். சோதிடம், ஆன்மீகம், வைத்தியம் போன்ற கலைகளில் ஈடுபடும் உண்டாகும். தனிமையில் அதிகமாகச் சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள்.
……………………………..
எண் 2 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சந்திரன் (Moon)
இந்த 2ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள். அம்பாளின் அருள் பெற்ற எண் இது. பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்த தேகத்தினர்தாம். இதில் பிறந்த ஆண்கள் சுருட்டை முடியையும், பெண்கள் நீண்ட முடியையும் கொண்டவர்கள்.
இவர்கள் எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கிறார்களோ, பல சமயங்களில் அதைவிடக் கடின சித்தராகவும் மாறிவிடுவார்கள். மனத்தினால் செய்யும் தொழில்களில் (கற்பனை, கவிதை, திட்டமிடுதல் போன்றவற்றில்) மிகவும் விருப்பமுடன் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால் பெரிதும் விரும்பப்படுவார்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன் பேசுவதால் இவர்களுக்கு மக்களாதரவு உண்டு. பெரும்பாலோருக்கு முன்னோர்கள் சொத்துக்கள் இருக்கும். இந்த எண்ணின் ஆதிக்கம் குறைந்தவர்கள் வீண்பிடிவாதம் கொண்டு தங்கள் வாழக்கையைத் தாங்களே கெடுத்துக் கொள்வார்கள்.
நீதிமன்ற வழக்குகளிலும் சிக்கலை தந்து விடும். முன்னோர் சொத்துக்களையும் இழக்க நேரிடும். மனதில் நிம்மதி இருக்காது. இவர்களின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கம் ஒரு பெண்ணே காரணமாக இருப்பாள். காரணம் இவர்களுக்குச் சந்தேகம் குணம் அதிகம் உண்டு. இதனால் முழுமையாக யாரையும், நம்பாமல் திரும்பத் திரும்ப மற்றவர்களடன் சந்தேகம் கொள்வதால்தான். இவர்களுக்கு எதிரிகள் உருவாகின்றனர். எதையும் பதட்டத்துடனும், ஒருவித சோம்பலுடனும் அணுகும் குணத்தினையும் மாற்றிக் கொண்டால் இவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள்.
முக்கிய காரியங்கள் எவற்றையும் சட்டென முடிக்காமல் காலரத்தைக் கழித்து விட்டு, பின்பு அவசரம் அவசரமாகச் செய்து முடிபார்கள். ஒரு மாதத்தின் இறுதியில்தான் அவசர அவசரமாக உட்கார்ந்து அந்தந்த மாதத்தின் வேலையை முடிப்பார்கள். தங்களது வாக்குறுதிகளை இவர்கள் காப்பாற்றுவது மிகவும் சிரமம். திருநெல்வேலி சென்றவுடன் அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்வார்கள். ஆனால் அனுப்ப மாட்டார்கள். சந்திர ஆதிக்கம் நன்முறையில் அமைந்திருந்தால் நல்ல திட்டங்கள் போட்டும் அவற்றில் வெற்றியும் அடைந்து விடுவார்கள். (உ&ம்) தேசத்தந்தை மகாத்மா காந்தி. தங்களிடம் பல திறமைகள் இருந்தும் துணிந்து செயல்பட விருப்பப்பட மாட்டார்கள். இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். காலையில் சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள். ஆனால் மாலைக்குள் ஊக்கம் குறைந்து, சோர்ந்துவிடும் இயல்பினர்.
……………………………..
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – குரு (Jupiter)
ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள். தனக்கு எதிரியான 6 எண்காரர்களுக்கும் இவர்கள் நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல், பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள்.
தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். முகஸ்துதி செய்வதன் மூலம் மற்றவர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைப்பார்கள். அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகௌரவம் பார்ப்பது இவர்களது குறைபாடாகும். இதனாலேயே பல நல்ல வாய்ப்புகளை இவர்கள் வாழ்க்கையில் இழந்திருப்பார்கள். இவர்கள் பழைய சாத்திரங்கள், பழைய பழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறப் பயப்படுவார்கள்.
பெயர் கெட்டு விடுமோ என்று பெரிதும் அஞ்சுவார்கள். உயிருக்குச் சமமாக கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள். இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும் அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பாலம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள். கோயில் நிர்வாகம், ஊர்த்தலைமை போன்ற பதவிகளில் கௌரவமாக (ஊதியம் பெறாமல்) வேலை செய்ய விரும்புவார்கள். அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். சில சமயங்களில் ஆவேசமாகவும் எதிர்ப்பார்கள். கையில் பணமிருந்தால் அழுகுக்காகவும், சிக்கனத்திற்காகவும் (தேவையைப் பற்றிக் கவலைப்படாமல்) பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வார்கள்.
சொத்துக்கள் விஷயத்திலும் விட்டுக் கொடுக்கும் குணம் அதிகம் உண்டு. ‘‘என் தம்பிதானே வைத்துக் கொள்ளப் போகிறான், வைத்துக் கொள்ளட்டும்.’’ என்று எதார்த்தமாக நினைப்பார்கள். தங்களத உரிமையை விட்டுக் கொடுத்து விடுவார்கள். இந்தக் குணத்தால் பல அன்பர்கள் பிற்காலத்தில் கவலைப்படுவார்கள். இவர்கள் தீனிப்பிரியர்கள். காபி, டீ, டிபன் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள். குரு ஆதிக்கம் நன்கு அமையப் பெற்றவர்கள். அன்பிலும், பக்தியிலும், சிறந்தவர்கள்.
ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக் காட்டுவார்கள். தேசப்பற்றும் நினைந்தவர்கள். பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தாயராவார்கள். பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்திருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள். ஆனால் குரு பலம் குறைந்தவர்கள் கடன் என்னும் பள்ளத்தில் விழுந்து விடுவார்கள். சிந்திக்காமல் பல காரியங்களில் இறங்கித் தாங்களே சிக்கிக் கொள்வார்கள். சில அன்பர்களுக்குக் காதல் தோல்விகளும் ஏற்பட்டிருக்கும்.
……………………………..
எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail)
இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான 4&ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை! சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன! மேலும் 1&ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது. வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ் என்னும் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இவர்கள் வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர்கள். நாவன்மை அதிகமுள்ள இவர்கள் வீட்டிலும், ரோட்டிலும், காபி, டீக்கடைகளிலும், கோவில்களிலும் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும், கையை ஆட்டி, குரலை ஏற்றி, இறக்கி, உணர்ச்சியுடன் பேசி மக்கள் மனதைக் கவருவார்கள். பல மணி நேரம் பேசும் இயல்பினர். ஒரு ஜனக்கூட்டம் எப்போதும் இவர்களைச் சுற்றியே நிற்கும். இவர்கள் இரகசியங்களைக் காப்பாற்ற மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும், வேலையையும்,அடுத்தவரிடம் சொல்லிப் புலம்பாது இருக்கமாட்டார்கள்.
இவர்களிடமிருந்தே திட்டத்தை அறிந்து கொண்ட இவர்களது நண்பர்கள் அந்தத் திட்டத்தை அவர்களே விரைந்து சென்று செயலாற்றி, வெற்றி பெற்று விடுவார்கள். எனவே இவர்கள் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில் நாகாக்க வேண்டும். மேலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், தங்களது நண்பர்களாலும், சுற்றத்தார்களாலும், மற்றும் நம்பியவராலும் செய்வினைகள் மற்றும் ஏவல் கோளாறுகளை இவர்களது வாழக்கையில் அனுபவிக்க நேரிடுகிறது! இதே யோகம் 2, 8 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களுக்கும் உண்டு. 13ம் எண் சில உண்மைகள் வெளிநாட்டு மக்கள் (ஏன் நம்மவர்கள் கூட) 13&ம் எண்ணைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள்.
உலகின் சரித்திரத்தில் பல இயற்கைச் சீற்றங்கள் 3&ம் தேதியில்தான் நடந்துள்ளன. நெப்போலியன் வீழ்ந்தது ஒரு 13ந் தேதியில்தான். கி.பி.2026 நவம்பர் 13 வெள்ளிக்கிழமையில், உலகின் மக்கள் தொகை 5000 கோடி என்ற அளவில் உயர்ந்து, திடீரென உலகம் வெடிக்க வாய்ப்புள்ளது எனறு அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியின் முடிவாகக் கூறியுள்ளனர். மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் அமிர்தசரஸில் 13.4.1919 அன்றுதான் நடந்தது! மேலும் 13 எண் பெயரில் வரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் பல ஜீவ மரணப் போராட்டங்களை அவசியம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். பெரும்பாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும், நான்காம் எண்ணில் பெயர் அமைந்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், அயராது உழைத்திட்ட போதிலும், ஏனோ மேலதிகாரிகளால் வெறுக்கப்படுகிறார்கள்.
அடிக்கடி இவர்கள் வீண் பழிகளைச் சந்திக்கின்றார்கள். பல அன்பர்கள் அரசாங்க வே¬யை இடையிலேயே இழந்துவிடும் அவயோகமும் உண்டு. அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் வண்டி வாகனங்களுக்குத் தவிர, மனிதனின் வாழ்க்கைக்கு இந்த 13&ம் எண் ஏற்றதல்ல! அதுமல்மல்ல 22&ஆம் எண்ணும், 13&ஐப் போன்றே பயப்பட வேண்டியதுதான் 22&ந் தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயர் எண் உள்ளவர்களில் பலர் திடீரெனத் தாழ்ந்து விடுவார்கள். பிறரால் வஞ்சிக்கப்படுவார்கள். பல அன்பர்கள் அடுத்துக் கெடுக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் இவர்களிடம் அன்பு பாராட்டியவர்களே செய்து விடுவார்கள் என்பது வேதனையான விஷயம் இந்த எண்ணின் தொடர்புடையவர்களின் வாழக்கையானது எவ்வளவு வேகமாக உயர்கிறதோ, அதே வேகத்தில் திடீரெனத் தாழ்ந்து விடும் என்பதையும் மறக்கக் கூடாது!
13, 22 எண்ணில் பிறந்தவர்கள் சுதந்திரப் பிரியர்கள். எவருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்கள். இவர்கள் தங்களது மேலதிகாரிகள், முதலளிகள் ஆலோசனைக்குக் கட்டுப்பட விரும்ப மாட்டார்கள். ரோஷமும், தன்மான உணர்வும் மிகுந்த இவர்களில், அடுத்தவர்களுக்கு அடிமையாக இருந்து முன்னேறுவதைவிட அந்த வேலையை விட்டு விலகி ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எதிர்த்து நிற்பார்கள். எனவேதான் இவர்களுக்குப் பல பிரச்சினைகளும், முன்னேற்றத் தடைகளும், தொழிலில் உண்டாகின்றன. தங்களது மேலதிகாரிகள், முதலாளிகள் போன்றோர்களை அனுசரித்துச் சென்றால் இவர்களும் மிகுந்த முன்னேற்றம் பெறலாம்.
……………………………..
எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – புதன் (Mercury)
இந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது! இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு பலனையும் கொடுக்காது. அதுமட்டுமன்று, அவர்களை நிச்சயம் பல தோல்விகளையும் வேதனைகளையும் ஆழ்த்திவிடும். ஆனால் 5 மட்டும் யாருக்கும் தீமை புரியாது!
சோதிட சாத்திரத்தல் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும் சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது! அதனால்தான் சந்திரனின் ஆதிக்கம் ஜாதகத்தில் பொதுவாக எல்லா இராசிகளுக்கு நன்மையான பலன்களையே கொடுக்கும். கோசார பலன்களும் சந்திரனின் நிலையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் எண்கணிதத்தில் 5ம் எண்ணே அத்தகைய ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண் வரிசையில் 5ம் எண்ணே மற்ற எண்களுக்கும் நடுவில் அமைந்துள்ளது என்பதே இதன் சிறப்புக்கும், நற்பலன்களுக்கும் காரணம். மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும்போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாக எடுத்துக் கொள்வார்கள்.
5ஆம் எண்காரர்களின் புத்தி அதாவது அறிவு மிகவும் அற்புதமானது! ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் (!) பிரஞ்சத்திலிருந்து இவர்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான்! அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் இதுதான் (5 எண்). மற்ற எண்காரர்களைக் காப்பதற்காகவே (விஷ்ணுவின் தொழில் மக்களைக் காத்தல் அல்லவா), 5ம் எண்ணின் பலம் உதவுகிறது! 9 எண்கள் வரிசையில் எந்த ஒரு கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி (காந்த சக்தி) இந்த 5ம் எண் நபர்களுக்கு உண்டு! எனவேதான் இந்த எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்று கூறவாக்£ள். காந்தமானது, எந்த அளவு இரும்பினையும், எளிதாக இழுத்து விடும் தன்மை உடையது. அதேபோன்றே, மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இலர். இவர்களுக்கு அடுத்த நிலையில்தான் 6ம் எண்காரர்கள் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கும் ஜனவசியம் இயற்கையாக உண்டு!
இவர்களது பேச்சில் கேலியும் (அடுத்தவ¬ப் புண்படுத்தாமல்) கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை (Presence) அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும் இந்த 5 எண்காரர்களுக்கு உண்டு. மேலும் இவர்களுக்கு காரில், ரயிலில், விமானத்தில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் எதிர்பாராத நண்பர்களும், அவர்களின் மூலம் நட்பு மற்றும் பரஸ்பர உதவியும் எளிதில் இவர்களுக்குக் கிடைத்துவிடும். எப்போதும் எடுப்பாகவும், அழகாகவும், ஆடைகளையும், அழகு சாதனங்களையும் அணிந்து கொள்ளும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள்.
இவர்கள் சாப்பிடுவதில் வேகமாக இருப்பார்கள். பேச்சிலும் நடையிலும் வேகம் உண்டு! பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் அரசர்களையும் கவர்ந்து விடுவார்கள். பிறர் முறையாகக் கணக்குகள் எழுதி வைத்துக் கொள்ள நினைக்கும் விபரங்களையும்கூட இவர்கள் மனதிலேயே நிலையாக வைத்துக் கொள்ளவும். விரும்பிய போது அவைகளை சரியாக எடுத்துக்காட்டியும் சொல்லுவார்கள். எப்போதுமே பெரிய மனிதர்களின் ஆதரவு இவருக்கு உண்டு. தங்களது சொந்தப் படைப்புக்களைவிட அடுத்தவர்களின் கருத்துக்களையும், விஷயங்களையும் தொகுத்து அவைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரும் அறிவுத் துறைகளில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்துவம் அஷ்டாவதானிகள் இவர்கள்தான். புகழ்பெற்ற உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியர், மெஸ்மரிசம் கண்டுபிடித்த மெஸ்மர் போன்றவர்களெல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே!
……………………………..
எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சுக்கிரன் (Venus)
ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே (விணீtமீக்ஷீவீணீறீ கீஷீக்ஷீறீபீ) நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள். இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்! சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும்.
மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள். இந்த 6ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பார்கள்.
இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது! இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போது முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இவர்களுக்க 5&ம் எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம் உண்டு.
இவர்கள் எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே! எனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே ஒரு வீட்டில் 6& எண் குழந்தைகள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பார்கள். மேலும் 6 எண்காரர்கள், தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவே விளங்குவார்கள். இவர்களின் காம உணர்ச்சிகள், காதல் ஆகியவை நிலையானவை! ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை! பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்கு இயற்கையிலேயே நிறைந்து காணப்படும்.
எப்போதும் இவர்கள் தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டு உழைப்பதில் அலட்சியம் காட்டும் குணம் இருக்கும். இதை இவர்கள் மாற்றிக் கொண்டால்தான் ‘விஜயலட்சுமி’ எப்போதும் இவர்களுடன் இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசிய ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான், பணம் எப்போதும் நீங்காமல் இவர்களுடன் இருக்கும். இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன் வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.
……………………………..
எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சுக்கிரன் (Venus)
ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே (விணீtமீக்ஷீவீணீறீ கீஷீக்ஷீறீபீ) நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள். இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்! சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும்.
மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள். இந்த 6ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பார்கள்.
இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது! இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போது முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இவர்களுக்க 5&ம் எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம் உண்டு.
இவர்கள் எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே! எனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே ஒரு வீட்டில் 6& எண் குழந்தைகள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பார்கள். மேலும் 6 எண்காரர்கள், தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவே விளங்குவார்கள். இவர்களின் காம உணர்ச்சிகள், காதல் ஆகியவை நிலையானவை! ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை! பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்கு இயற்கையிலேயே நிறைந்து காணப்படும்.
எப்போதும் இவர்கள் தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டு உழைப்பதில் அலட்சியம் காட்டும் குணம் இருக்கும். இதை இவர்கள் மாற்றிக் கொண்டால்தான் ‘விஜயலட்சுமி’ எப்போதும் இவர்களுடன் இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசிய ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான், பணம் எப்போதும் நீங்காமல் இவர்களுடன் இருக்கும். இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன் வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.
……………………………..
எண் 7 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – கேது (Dragon’s Head)
இப்போது இல்லற சந்நியாசிகளாக 7ம் எண்காரர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப் பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல் கெடுப்பானில்லை! இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண காலத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது! தங்களது பலவீனத்தை எப்படி போக்குவது என்ற சிந்தனையில் தேவர்கள் ஆழ்ந்தனர்.
மகா விஷ்ணுவின் ஆலோசனைப்படி தேவர்களும், அசுரர்களும் (இவர்கள் பாற்கடலைக் கடையச் சம்மதிக்க வைத்தது தனிக் கதை) ஒன்று சேர்ந்து, உலக நன்மைக்காகப் பாற்கடலை, மேருமலையை மத்தாகக் கொண்டு கடைந்தனர். பாற்கடலைக் கடையும்போது, திடீரென அதன் அச்சு சாய்ந்துவிட்டது! அதைச் சீர்ப்படுத்தவே தேவர்களின் பிராத்தனையின்படி திருமால் மச்ச அவதாரம் எடுத்து மேருமலையை நிமிர்த்திக் கொடுத்தார். தேவர்கள் மீண்டும் கடைவதற்கு உதவினார். பின்பு பாற்கடலில் இருந்த, முதன்முதலாகக் கொடிய விஷம் திரண்டு வந்தது! அதைப் பார்த்துப் பயந்து ஓடிய தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவரும் அந்த ஆலகால நஞ்சைத்தானே எடுத்து அதை அருந்தினார். ஆனால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, சிவபெருமானின் கண்டத்திலேயே (தொண்டை ஸ்ரீ அந்த நஞ்சை நிறுத்தி விட்டார்.
அன்றிலிருந்து சிவபெருமானும் திருநீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார்) பாற்கடலிலிருந்து இதன்பிறகு காமதேனு, லட்சுமி போன்ற தேவர்களும் மேலும் அரிய பொருகளும் பாற்கடலிருந்து தோன்றின! இறுதியாகத் தன்வந்திரி பகவான் தன் கையில் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். அதைத் தாங்களே பங்கு கொள்ள என்று தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் பிரச்சினை எழுந்தது! தேவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் ஓடினார்கள். அமுதத்தை தங்களுக்குப் பெற்றுத் தரும்படி வேண்டினார்கள். எனவே விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. தன்னுடைய அழகால் அசுரர்களின் மதியினை மயக்கினார்.
தேவர்களை ஒரு வரிசையாகவும், அசுரர்களை எதிர் வரிசையாகவும் அமர்த்தி, முதலில் மிகவும் சாமர்த்தியமாகத் தேவர்களுக்கு அளித்தார். இந்தச் சூழ்ச்சியைத் தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டு விஷ்வபாகு என்ற அசுரன் சாமர்த்தியமாகத் தேவர் உருவம் எடுத்துக் கொண்டு, சூரிய, சந்திரர்களிடையில் வந்து அமர்ந்து கொண்டார். பின்பு அமிர்தம் அவரது கைக்கு வந்தவுடனே, மிகவும் அவசர அவசரமாக உட்கொண்டார். சந்தேகமடைந்த சூரிய சந்திரர்கள் விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் சூழ்ச்சியைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்தனர். இதையறிந்த திருமாலும் அரக்கன் மேல் மிகவும் கோபம் கொண்டு, அமிர்தம் ஊற்றயி சட்டு வந்தால் (கரண்டி), அசுரனின் உடலைத் துண்டித்துவிட்டார். அமுதம் உண்டதால் அந்த அரக்கன் சாகவில்லை! பாம்புவின் உடலைப் பெற்றுச் சிரஞ்சீவியானான்.
விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் உடலானது பாம்புவின் தலையைப் பெற்றுக் கேது (Kethu) வானர், விஷ்வபாகுவின் தலையானது பாம்புவின் உடலைப் பெற்று இராகுவானது. நைசிர்க (இயற்கை) பலத்தில் இராகுவும், அதைவிடக் கேதுவும் பலம் பெற்றவர்கள். சூரியனைவிட இவர்கள் பலம் பெற்றவர்கள் (மற்ற ஆறு கிரகங்களைவிடப் பலம் வாய்ந்தவர் சூரியன்தான்) இந்த இராகு கேது பற்றிய புராணக்கதை வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சுருக்கமாக இந்தக் கதையை கொடுத்துள்ளேன். சிவபெருமான், ஆலகால நஞ்சை உண்ட பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தாண்டவம் ஆடினார். அம்பாளும் அவருடன் இணைந்து ஆடினார். இதையே பிரதோஷ கால நடனம் என்பார்கள். அந்த அரிய சிவபார்வதி நடனத்தைத் தேவர்கள் அனைவரும் கண்டு களித்தனர்.
தங்களது வேதனைகளையும், தோல்விகளையும், பாவங்களையும் தேவர்கள் போக்கிக் கொண்டனர். அந்தப் புண்ணியதினம்தான் பிரதோசம் என்று அழைக்கப்படுகிறது! திரயோதசி திதி வரும் தினத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரம் மிகவும் புண்ணியமானது. எந்த ஒரு பாவத்தையும் நீக்கி வல்லது! பிரதோஷ காலவிரதமே அனைத்து விரங்களயும்விட, மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கருதப்படுகிறது! இது புராண நூல் இல்லை என்றாலும், இராகு, கேதுகளின் பிறப்பைப் பற்றியும் வாசகர்கள் அறிந்து கொண்டால்தான் இராகு, கேதுக்களின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். வெளிநாட்டினருக்கு, இந்தக் கதை தெரிந்ததால்தான் இராகுவை Dragons Tail என்றும், கேதுவை Dragons Head . என்றும் அழைத்தனர். இந்த எண் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது! மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்டுப்பட்டவை! ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வ வல்லமை மிகுத் எண்ணாக உள்ளது! இவர்களது பேச்சில் எப்போதும் பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும் 7ம் எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும், வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும்.
ஆனால் நடு வயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும் கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்த பணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத் திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதை ஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள். இவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும். தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும். உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ) ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த 7ம் எண்ணில் பிறந்தவர்களே! இவர்களுக்குச் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும்! இவர்கள் உலகப் பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன் எடுத்துரைப்பார்கள்.
பொருளாதார நிலை 7ம் எண் அன்பர்களுக்குத் திருப்திகரமாக இருக்காது! வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரு. கேது பகவான் கொடுக்க ஆரம்பித்தால் அதை வேறு யாரும்(கிரகங்கள்) அழிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பது சோதிட உண்மையாகும். எப்படியும் நல்ல வளமான வாழ்க்கையைத் தங்களது வாழ்நாளில் அடைந்து விடுவார்கள். 7ம் எண்ணின் பலம் குறைந்த அன்பர்கள் பலர் உயர் கல்வி அமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதிம் கிடைப்பது மிகுந்த தடைப்படும். பெரும்பாலான 7&¢ம் எண்காரர்கள் இதனை நினைத்து வேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடைகின்றனர்.
பல இலட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காணாத நபர்களின் எண்கள் 7 ஆக இருப்பதைக் காணலம். அதே போன்று இந்த எண்காரர்கள் தொழில் திடீரென தாழ்ந்து மஞ்சள் கடிதம் (Insolvency Petition) கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கும் ஆளாகின்றார்கள். ஆனால் இந்த அன்பர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன் வாழ்க்கையில் போராடுவார்கள். 3ம் எண்காரர்கள், போன்று இவர்களும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். அண்ணன் சொத்து எடுத்துக் கொண்டாரா, பரவாயில்லை! மனைவி அவமதிக்கிறாளா& என் தலைவிதி! என்று இருப்பார்கள். உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு! மனத்தில் கற்பனை வளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க் கிடைக்கும்.
தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது! ஒன்பது எண்களிலும் 9ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதை அடுத்து இந்த 7ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன! பொதுவாகத் தங்கள் மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எதிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள். அவர்களின் செய்நன்றியைப் பிரதிபலனாக எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதே இவர்களின் உயர்ந்த குணமாகும்.
……………………………..
எண் 8 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சனி (saturn)
மனிதர்கள் எப்போதும் இன்பத்தையே தேடி ஓடுகிறார்கள். “சுவையாக இருக்கிறது” என்று அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு, அதன் பின்பு செரிமாணம் ஆகாமல், வயிறு சரியில்லை, சர்க்கரை நிலை உடம்பில் ஏறிவிட்டது என்று தவிப்பவர்கள்தான் இன்றைய உலகில் அதிகம்! அரிய நெல்லிக்கனியானது சாப்பிடும்போது கசக்கும். ஆனால் சாப்பிட்ட பின்பு மிகவும் இனிக்கும். மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும் இந்தக் கனி மிகவும் சிறந்தது! இருப்பினும் நெல்லிக்கனியைச் சாப்பிடும்போது கசப்பு என்ற காரணத்திற்காகப் பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை! அது மட்டுமன்று மனிதன் மற்ற எல்லாவற்றையும்விடத் தன் நாக்கிற்கே அடிமையாக இருக்கிறான்! நினைத்துப் பாருங்கள்! தொண்டைக்குக் கீழ் எந்த உணவுப் பொருள்கள், பானங்கள் சென்றாலும் ஒன்றுதான்.
நாக்கிற்கு கீழே சென்றுவிட்டால், எந்தப் பொருளுக்கும் எந்தச் சுவையும் இல்லை! இருப்பினும் மக்கள் தங்களின் உடல்நலம் பாராது நாக்கின் சுவைக்காகவே ருசியாகச் செய்து சாப்பிடுகிறார்கள். மக்களின் இரசனைதான் என்னே? அதைப் போன்றே மற்ற 8 எண்களும், மனிதனை தூண்டிவிட்டு அவனை இகலோக … வாழ்க்கையில் சுகங்களில் ஆழ்த்தி விடுகிறது! மனிதனும் தனக்கு யோகம் வந்துவிட்டது என்று மகிழ்கிறான்! ஆனால் சனிபகவான் ஒருவர்தன் மற்ற கிரகங்களின் தன்மையைக் கவர்ந்து ஒருவன் மற்ற ஜென்மம் வரை தொடர்ந்து செய்த வினைகளை ஆராய்ந்து, அவனது செயல்களுக்கு ஏற்ப முதலில் தீய பலன்களையும், பின்பு நல்ல பலன்களையும் தவறாமல் கொடுத்துவிடுகிறார்! மற்ற நவக்கிரகங்களைப் போல், சனீசுவரரை ப்ரீதி செய்து, எளிதில் இவரது தண்டனையிலிருந்து தப்ப முடியாது! 8&ஆம் எண்ணில் பிறக்கும்போதே, மனிதன் விதியில் வசப்படுகிறான், 8&ம் எண் பிறவி எண்ணாக வரும் போது.
வாழ்க்கையில் கடும் போராட்டத்தையும், உடலில் அல்லது மனத்தில் ஏதாவது சிறிய நோயையும் கொடுத்து விடுகிறத. ஆனால் விதி எண்ணாக வரும்போது, அவனது முயற்சிகளையும், ஊக்கத்தையும் தனது காலத்தில் (30 வயதுக்கு மேல்) கொடுத்து அவனைத் தடுமாற வைத்து விடுகிறது! அவனது சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் அனைவரிடமும் கெட்ட பெயர் அல்லது அவமானம் அடைய நேரிடுகிறது! பின்பு அவனை தன்வழியே போராடும் குணத்தை 8 எண் வாரி வழங்குகிறது! புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், புதிய ஊர் என்று ஒரு புதிய அற்புத வழியைத் திறந்து விடுகிறது! எனவே மக்களும், தங்களது கடுமையான உழைப்பால் வாழ்க்கையின் உச்சியை 45 வயதுக்கு மேல் எப்படியும் அடைந்து விடுகிறார்கள்.
இதுவே அனுபவ உண்மை ஆகும். பள்ளியில் தனது போதனையாலும் தேவைப்பட்டால் தண்டனையாலும் ஒரு மாணவனைச் சீர்திருத்தும் ஆசிரிய¬ப் போன்றவரே சனீசுவரராவார். எனவே 8ம் எண் விரும்பத் தக்கதேயன்றி வெறுக்கத்தக்கதன்று! சில அன்பர்கள் கோடீசுவரர்கள் குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். இவர்கள் என்னதான் வசதி மிகுந்த நிலையில் வாழ்ந்திடினும், வண்டுகள் துளைத்த மாங்கனியைப் போல் உள்ளக் குடைச்சல்கள் நிறைந்தவர்கள்! மனத்தில் ஏதாவது ஒரு சோகத்தையும், வியாதியையும் வைத்துக் கொண்டு, மனதில் நிம்மதியில்லையே என்று அலைவார்கள். “பாசமாவது ஒன்றாவது. அது வீதயில்தான் கிடைக்கிறது” என்று புலம்புவார்கள். ஏதாவது ஒரு பெரிய குறை அல்லது குறைபாடு மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.
குழந்தையில்லை, மனைவியால் இன்பமில்லை. நண்பனால் சுகமில்லை என்று எதையாவது நினைத்துத் தங்களை வருத்திக் கொள்வார்கள். வாழ்க்கையினை வெறுத்து முதியோர் இல்லம், ஆன்மீக மடங்கள், அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் இருப்பவரும், அதனை ஆரம்பிப்பவரும் 8ஆம் எண்காரர்களேயாகும். “எட்டாவது பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த இடமெல்லாம் குட்டிச் சுவர்” என்பது பழமொழி. மக்களும் 8, 17, 26 ஆகிய தேதிகளைக் கண்டுதான் பயப்படுகிறார்கள். எந்த ஒரு நற்காரியத்தையும் தவிர்த்து விடுகிறார்கள். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், &ம் எண்ணை விதி எண்ணாக உடையவர்களும் 9&ம் எண்ணில் தங்களது பெயரை உடையவர்களும், தங்களது வாழ்வில் பல தோல்விகளையும், வேதனைகளையும், சில அவமானங்களையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதே 8&எண் கூறும் வாழ்க்கை நியதி! 8&ஆம் எண்ணில் பிறந்த அதிர்ஷ்டசாலிகள் (சனி வலிமை நல்ல நிலையிலிருந்தாலும்) பெருத்த தனவான்களாகவும், பல்வேறு தொழில்களை உடையவர்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள்!
தியாகிகளாகவும், அருளாளர்களாகவும், சிறந்த நீதிபதியாகவும், பேராசிரியர்களாகவும், அமைச்சர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும், கோடீஸ்வரார்களாகவும் இருப்பார்கள். ஆனால் 8&ஆம் எண்ணில் பிறந்த மற்றவர்கள் தங்களது பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியாமல் வாழ்க்கை முழுதும் தவிக்கின்றவர்களே. பெரும்பாலும் கொலை, களவு, கொள்ளை, கடத்தல், பொய்க் கையெழுத்து (திஷீக்ஷீரீமீக்ஷீஹ்) விபச்சாரம், குடி, சூது, வரசம், நம்பிக்கைத் துரோகம் போன்ற பல்வகை சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றார்கள். ஆனால் மேற்கொள்ள துர்ப்பலன்களைக் கண்டு வாசகர்களே பயப்படவேண்டாம்! 8 ம் எண்காரர்களும் அதிர்ஷ்டம் மிகுந்த வாழ்க்கை வாழ வேண்டுமெனில் தங்களது பெயரினை மிகவும் ஆராய்ந்து, நல்ல பெயர் ஒலியிலும், பெயர் எண்ணிலும் வைத்துக் கொண்டால், தங்களது கெட்ட விதியினைக்கூட மாற்றிவிட முடியும்! பல அன்பர்கள் பெயரை சீர்படுத்தி பலனடைந்துள்ளார்கள். எனவே கவலைப்படவேண்டாம். அது மட்டுமன்று பிரபல சினிமா நட்சத்திரங்களும், பெருத்த வியாபாரிகளும், மிராசுதார்களும், அதிகாரிகளும், கோடீசுவரர்களும் 8&ம் எண்ணில்தான் பிறந்துள்ளனர். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், ஈ.வெ.ரா பெரியார், ஜார்ஜ் பெர்னாட்ஷா, ஜே.ஆர்.டி. டாட்டா போன்றோரெல்லாம் இந்த எண்ணில் பிறந்து, வெற்றிகரமாக வாழந்தவர்கள்தான். தெய்வ நம்பிக்கை இவர்களிடம் தீவிரமாகவே உண்டு!
ஒன்று கடவுளே இல்லை! என்று வாதிடுவார்கள். அல்லது கடவுளே கதி! என்று இறைவனை நம்புவார்கள். தங்கள் நல்லதென்று நினைத்து, எடுத்துச் செய்கின்ற காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப்படாமல் செய்து முடிக்கும் வலிமை இவர்களுக்கு உண்டு. ஓரளவு பிடிவாத குணம் நிறைந்தவர்கள். இவர்கள் மேற்பார்வைக்குக் கடின மனமும் பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சமூகத்தில் பாதிக்கப்பட்டோரைக் கண்டால், அவர்களை ஆதரித்து வாழ்க்கையளிக்கத் தயங்க மாட்டார்கள். பலாப்பழம் போன்ற குணமடையவர்கள்.
பொது சேவைக்கான முயற்சிகள், எடுத்துக் கொண்டிருப்£ர்கள். தங்களது வாழ்க்கையிலும், எப்போதும் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். தங்களின் வசதிகளையும், பதவிகளையும், உறவினர்களையும் திடீரென ஒருநாள் ஒதுக்கிவிட்டு, மக்கள் சேவைக்கென ஓடிச் செல்பவர்கள் இவர்கள்தான். தனிமனித வாழ்ககையானாலும், சமுதா வாழ்க்கையானாலும் எட்டாம் எண்ணின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டால், பெரிய சோதனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் என்றே எண்கணிதம் சொல்கிறது! சாகதத்திலும், எந்த ஒரு கிரகமும் 8ம் இடத்தில்(இராசிக் சக்கரம்) இருந்தாலும் (சனியைத் தவிர) அல்து கோசாரத்தில் 8&ம் இடத்திற்கு வந்தாலும், அந்தச் சாதகர்கள், அந்தக் கிரகத்தின் காரணத்தால் பல துன்பங்களை நிச்சயம் அடைவார்கள் என்று சோதிட சாத்திரம் கூறுகிறது! 8&ம் எண்காரர்கள் பெரும் தத்துவ ஞானிகளாகவும், மனிதர்களுக்கு வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் விளங்குகிறார்கள்.
……………………………..
எண் 9 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – செவ்வாய் (Mars)
இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள் இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள். இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டு.
உடலும் சற்று முறுக்கேறி நிற்கும். நான்கு எண்காரர்களைப் போல் இவர்களுக்குக் கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும் நிறைந்திருக்கும். எனவே இவர்களுக்கு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எத்தொழிலிலும், பதவியிலும், நிர்வாகத்திலும் வல்லவர்கள். இவர்கள் ஓரளவு ஒல்லியானவர்களே! ஆண்களில் பெரும்பாலோர் மீசை வளர்ப்பதில் விருப்பம் உடையவர்கள். நாவன்மை மிகுந்தவர்கள். இவர்களில் அதிர்ஷ்டசாலிகள் மென்மேலும் அதிர்ஷ்டசாலிகளாகவும், துரதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த எண்காரர்களுக்கு உடலில் அடிக்கடி காயங்கள், விபத்துக்கள் போன்றவை ஏற்படும். ஆயினும் அதைக் கண்டு பயப்பட மாட்டார்கள். 9&ம் எண்ணில் பிறந்தவர்களின் பெயர்கள் 8&ம் எண்ணில் மட்டும் இருந்து விட்டால் தற்கொலை முயற்சிகளும், வாகனங்களால் விபத்து உண்டு. இந்தச் செவ்வாய்க் கிரக ஆதிக்கர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் லாரி, காளை மாண்டு வண்டிகள், குஸ்தி, நீச்சல் போட்டிகள், மிருகவேட்டை, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் மிகவும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.
சர்க்கஸ் விளையாட்டுக்களில் விருப்பமுடன் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். கார், சைக்கிள், லாரி, பஸ் ஆகியவற்றை மிகவும் வேகமாக ஓட்டுபவர்கள் இவர்கள் தான். இவர்கள் எதற்கும், எப்போதும் பயப்பட மாட்டார்கள்! மேலும் தங்களது நோக்கத்திற்காகக் கடுமையான உழைக்கவும் தயங்க மாட்டார்கள். இவர்கள் எப்போதும் அலைபாயும் மனத்தை உடையவர்களாக இருப்பார்கள். இறைவன் இவர்களின் மனத்தை அமைதியாக வைத்திருக்க அனுமதிப்பதில்லை போலும்! இவர்கள் நடப்பதில் மிகவும் பிரியமுடையவர்கள்! இவர்களுக்கு என்னதான் வசதியிருப்பினும் கால் தேய நடந்து செல்வதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும், தனியார் ஸ்தாபனங்களிலும் தலைமைப் பதவியில் இவர்கள் நன்கு புகழ் பெறுவார்கள். இவர்கள் உழைப்பதில் சுகம் காண்பார்கள். சோம்பலை இவர்கள் வெறுப்பவர்கள். ஊர் சுற்றுவதிலும் அலாதிப் பிரியம் உடையவர்கள். நடுரோட்டில் ஒரு நோஞ்சானை ரௌடி ஒருவன் தாக்கினால் அதைக் கண்டு பொறுக்காமல், அந்த முரடனுடன் தைரியமாகச் சென்று போராடுபவர்கள் இவர்கள்தான்.
சிறு வயதுகளில் மிகவும் சிரமப்பட்டாலும், தங்ளது மன உறுதியினாலும், விடா முயற்சியினாலும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறி விடுவார்கள். இவர்கள் சுதந்திரப் போக்கு உடையவர்கள்! அவசரக்காரர்கள்! உணர்ச்சி மயமானவர்கள்! பிடிவாத குணம் இயற்கையிலேயே உண்டு. ஆபத்து மிகுந்த தொழிலில் இறங்கி விடுவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்களின் சண்டைக் குணத்தால், குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்படும்.
தங்களை எல்லோரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு. எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள் கிடைத்தால்தான், இவர்கள் அவற்றில் மிகவும் தீவிரமாகவும், சிறப்பாகவும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்து முடிப்பார்கள். இல்லை என்றால் அவைகளை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள். பின்பு அந்தக் காரியங்கள் கெட்டழிந்தாலும்கூட அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள். இவர்களது திருமணம் இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள்.
தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும். சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

ஞாயிற்றுக்கிழமை


வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

வியாழன், 11 பிப்ரவரி, 2016

புதன், 10 பிப்ரவரி, 2016

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

திங்கள், 8 பிப்ரவரி, 2016

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்

மேஷ ராசி 

தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே மிகையான நேரத்திற்கு வேலை செய்யும். அனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்கள் சுலபமாக கோபமும், எரிச்சலும் அடைவார்கள். அதனால் தலைவலி, பல் வலி, பற்களைக் கடித்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாமே மேஷ ராசிக்காரர்களுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடியதே. 

ரிஷபம் 

தொண்டை, உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி மற்றும் கீழ் தாடையை கட்டுப்படுத்தும் சுக்கிரன் தான் ரிஷப ராசியை ஆளுகிறது. சுக்கிரன் வலுவாக இருந்தால், அழகிய, திடமான பற்கள் மற்றும் கூர்ந்து கேட்கக்கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்களுக்கு அடிக்கடி சளியும், காய்ச்சலும் பிடித்துக் கொள்ளும். சுக்கிரன் வலுவடைந்து இருந்தால், தீவிர தொண்டை தொற்றுக்கள், தைராய்டு, டான்சிலிடிஸ், தீவிர கழுத்து மற்றும் காது தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படுவார்கள. மேலும் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

மிதுனம் 

இரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்தை ஆள்வது புதன் கிரகமாகும். இது உடலில் உள்ள மூட்டுக்கள் மற்றும் சுவாச அமைப்பை ஆளுகிறது. அதனால் பொதுவான சளிக்கு ஆளாவார்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுனம் வலுவிழந்து கிடந்தால் தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசைநாண் அழற்சியால் அவர்கள் சுகவீனம் அடைவார்கள். 

கடகம் 

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி, வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. அதிக உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிப் பொங்கும் வகையில் உள்ள கடக ராசிக்காரர்கள், செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். சந்திரனின் ஆளுமையால் தங்கள் கோபம் அல்லது வலியை அவர்களால் போக வைக்க முடியவில்லை என்றால், குடல் பிரச்சனைகள், வயிற்றில் அல்சர் மற்றும் செரிமானமின்மையால் அவர்கள் அவதிப்படுவார்கள். 

சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்மம், இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் ஆளும். அதனால் அவர்கள் அதிகார தன்மையுடன், வாழ்க்கையில் அதிக தன்னம்பிக்கையுடன் விளங்குவார்கள். இருப்பினும், வலுவிழந்த சிம்மம் என்றால் இதயம், ஊக்கமின்மை மற்றும் முதுகு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். 

கன்னி 

என்ன உணவு உண்ண வேண்டும் என்பதையும், சுவை அரும்புகளை கட்டுப்படுத்தும் அனைத்து உறுப்புகளையும் ஆளும் கன்னி. அதனால் இயற்கையாகவே, அது வயிற்றையும், குடல்களையும் ஆளும். எதெற்கெடுத்தாலும் ஓடத்துடிக்கும் அவர்கள் பொதுவாக எல்லாவற்றிலும் அவசரமாக இருப்பார்கள். அவர்கள் மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான ஓய்வின்மையே இருக்கும். அதனால் உணவு அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தடையும். 

துலாம்  

நல்லதொரு வாழ்க்கையை துலாம் ராசிக்காரர்கள் விரும்புவார்கள். தங்களைச் சுற்றி சந்தோஷம் நிறைந்த குதூகல சூழ்நிலை நிலவ வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். அழகான அனைத்தையும் அவர்கள் விரும்புவார்கள். சுக்கிர கிரகத்தால் ஆளப்படும் துலாம் ராசி, சிறுநீர்ப்பை செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை ஆளும். இன்பத்தால் செழித்தோங்கும் துலாம் ராசிக்காரர்கள் எதையுமே அளவுக்கு அதிகமாக செய்யாமல் இருப்பதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் துயரத்தில் ஆழ்த்தப்படுவார்கள். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள். 

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். தங்களுக்கு சொந்தமானது என நினைப்பவற்றின் மீது அவர்கள் ஆட்டிப்படைக்கும் மற்றும் சொந்தம் கொண்டாடும் குணத்தை கொண்டிருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். சீரற்ற மாதவிடாய், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுக்கள் போன்றவைகள் இவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் ஆகும். 

தனுசு : 

குருவால் ஆளப்படும் தனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர்களின் பார்வையை பாதிக்கும், முதுகெலும்பில் காயத்தை ஏற்படுத்தும், நச்சுத்தன்மை பிரச்சனைகளை உண்டாக்கும்.

மகரம் 

கடின உழைப்பாளியான மகர ராசி, எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும். பிடிவாதம் நிறைந்தவர்களான இவர்கள், கடினமாக உழைத்து தங்கள் லட்சியங்களை அடைபவர்கள். அதனால் அவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்கும். 

கும்பம் 

சந்தோஷமாக இருக்கும் கும்ப ராசி, மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும். நரம்புகளின் ஓட்டத்திற்கும், உந்துவிசைக்கும் அவர்கள் பொறுப்பாகும். சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு, தங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கவில்லை என்றால் இதய நோய்கள், கீல்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள். 

மீனம் : 

அனிச்சைகளையும் நரம்பியல் அமைப்பையும் ஆளும். நடைமுறைக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போவதால், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இது அதிகமாகும் போது, அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, அவர்களுக்கு பல வியாதிகளை உண்டாக்கிவிடும்.