சனி, 31 ஜூலை, 2010
திருக்குறள் அதிகாரம் - 18 - 8
வெஃகாமை
(8)
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் .
கருத்து
செல்வம் சுருங்காமைக்குக் காரணம் ஏது
என்று ஆராய்ந்தால், பிறர் விரும்புகின்ற
அவனிடமுள்ள பொருளைத் தான்
விரும்பாமை ஆகும்.
(8)
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் .
கருத்து
செல்வம் சுருங்காமைக்குக் காரணம் ஏது
என்று ஆராய்ந்தால், பிறர் விரும்புகின்ற
அவனிடமுள்ள பொருளைத் தான்
விரும்பாமை ஆகும்.
Labels:
திருக்குறள்
வெள்ளி, 30 ஜூலை, 2010
வியாழன், 29 ஜூலை, 2010
திருக்குறள் அதிகாரம் - 18 - 7
வெஃகாமை
(1)
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன் .
கருத்து
பிறர் பொருளைக் கவர விரும்புவதால்
உண்டாகும் ஆக்கத்தை விரும்பாதிருத்தல்
வேண்டும் . அதனால் உண்டாகும் பயன்
சிறப்பில்லாததாகும்.
(1)
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன் .
கருத்து
பிறர் பொருளைக் கவர விரும்புவதால்
உண்டாகும் ஆக்கத்தை விரும்பாதிருத்தல்
வேண்டும் . அதனால் உண்டாகும் பயன்
சிறப்பில்லாததாகும்.
Labels:
திருக்குறள்
திருக்குறள் அதிகாரம் - 18 - 6
வெஃகாமை
(6)
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத குழக் கெடும் .
கருத்து
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன்.
பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத
குற்றங்களை நினைக்கக் கெடுவான்.
(6)
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத குழக் கெடும் .
கருத்து
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன்.
பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத
குற்றங்களை நினைக்கக் கெடுவான்.
Labels:
திருக்குறள்
புதன், 28 ஜூலை, 2010
திருக்குறள் அதிகாரம் - 18 - 5
வெஃகாமை
(5)
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின் .
கருத்து
பொருளை விரும்பி எவரிடத்தும்
அறிவில்லாத செயல்களைச் செய்தால்,
நுணுகி ஆராய்ந்து பெற்ற விரிந்த
அறிவினால் ஆகும் பயன் யாது?
(5)
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின் .
கருத்து
பொருளை விரும்பி எவரிடத்தும்
அறிவில்லாத செயல்களைச் செய்தால்,
நுணுகி ஆராய்ந்து பெற்ற விரிந்த
அறிவினால் ஆகும் பயன் யாது?
Labels:
திருக்குறள்
செவ்வாய், 27 ஜூலை, 2010
பணமாற்றிடு
Labels:
பண மாற்றிடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






