சனி, 26 டிசம்பர், 2009
கிழங்கு வகைகள் -1
கரட்
கரட்டினை மஞ்சள் முள்ளங்கி எனவும்
அழைப்பர் இது மஞ்சள்சிகப்பு(ஓரஞ் )
நிறத்தில்வேரில் திரண்டு கொழுத்த
நீளமான கூம்பினைப்போல உள்ள ஒரு
வேர்கிழங்கு . கரட் மத்திய ஆசியாவினை
தனது பிறப்பிடமாக கொண்டது. ஆனால்
கரட் 3000 ஆண்டுகளுக்கு முன்பு
ஆப்கானிஸ்த்தானின் சில பகுதிகளில்
பயிரிடப்பட்டன. இது அம்பெலிஃபெரா என்ற
தாவர குடும்பத்தைச் சேர்ந்தது ஆரம்ப
காலங்களில் கரட் வெளிர்மஞ்சள், ஊதா, சிகப்பு
போன்ற நிறங்களில் காணப்பட்டன.ஆனால்
17 ஆம்நூற்றாண்டில் ஆரஞ்சுநிறமான கரட்டுகள்
முதன் முதலில் நெதர்லாந்து நாட்டில்
பயிரிடப்பட்டன கரட்டில் பீட்டாக் காரோட்டீன்
எனப்படும் ஒருவகை சத்து அதிகமாக உள்ளது.
ஆகவே தான் நாங்கள் கரட்டை சாப்பிடும் போது
இதில் உள்ள பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து
எமதுஉடலில்சென்று உயிர்ச்சத்து Aயாக மாறுகிறது
கரட்டின் சாறு உடல்நலமருந்தாகவும் பயன்படுத்தப்
படுகிறது. கரட்டினை நாங்கள் சாப்பிட்டால் எமது
கண்பார்வை மேம்படும் கரட்டில் புற்றுநோய் தடுப்பு
குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆய்வுக்களில்
கண்டறியப்பட்டு உள்ளது. கரட் இயற்கையாகவே
இனிப்புச்சுவையானது ஆகவே தான் இதனைபச்சை
யாக சாப்பிட்டாலும்மிகவும் சுவையாக இருக்கிறது
ஆனால் கரட்டைசமைத்து சாப்பிடுவதை விட பச்சை
யாக சாப்பிட்டால் இதில் காணப்படுகின்ற பலசத்துக்
கள் வீணாகாமல் எமக்கு கிடைக்கும். கரட்டில் உயிர்
சத்து 'ஏ' நிறைந்து உள்ளது இச்சத்து ஆரோக்கியமான கண்களுக்கும்,சருமத்திற்கும்,உடல்வளர்ச்சிக்கும் மிக
மிக உதவும் கரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் என்ற
சத்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை
கரைக்கும் திறன் கொண்டது. எமது உடலில் உள்ள
அதிகப்படியான கொழுப்புகளை தினமும் கரட் சாப்பிடு
வதன் மூலம் சற்று குறைக்க இயலும், கரட் எமது
உடலில் உள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அதனை
விருத்தியும் செய்கின்றது,எமது குடலில் புண்கள்
உண்டாகாமல் தடுக்கின்றது,எமது வாயில் ஏற்படும்
துர்நாற்றத்தை போக்கும் வல்லமை கொண்டது.
அத்துடன் பாதி வேக வைத்த முட்டையுடன், கரட்
மற்றும்தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி
அதிகரிக்கும்.கரட்சாற்றுடன் தேசிக்காய்சாறு சிறிதளவு
கலந்து சாப்பிடால் எமது உடலில் உள்ள பித்த
கோளாறுகள் காணாமல் சென்றுவிடும்,கரட்டில்
நார்ப்பொருள், கொழுப்புமாச்சத்து, புரதம் ,உயிர்சத்து
a ,b1,b2,b3,b6 ,c , கல்சியம்,இரும்பு, மக்னீசியம்,சோடியம்,
பொட்டாசியம், செம்பு, சக்தி, தாதுக்கள்,ஈரப்பதம்/நீர் நாகம்,குரோமியம்,குளோரின், கரோட்டீன், தையாமின்
ரைப்போஃப்ளேவின், நியாசின்.போலிக்அமிலம்,கொலின்
ஆகிய சத்துகள் காணப்படுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.