கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 26 ஜனவரி, 2010

குழம்பு (கூட்டு)வகைகள்-2

 
கோழி இறைச்சி குழம்பு  தேவையானபொருட்கள்  கோழி இறைச்சி -500கிராம்  பால் -தேவையானளவு  மிளகாய்த்தூள் -தேவையானளவு  வெங்காயம்(வெட்டியது  ) -அரைப்பாதி  பெருஞ்சீரகம்(சோம்பு)-அரை தேக்கரண்டி  கடுகு-அரை தேக்கரண்டி  உப்பு-தேவையானளவு  எண்ணெய்-தேவையானளவு  கரம்மசாலத்தூள் -சிறிதளவு (விரும்பினாள்) கருவப்பிலை(நறுக்கியது)   -சிறிதளவு உள்ளி(வெட்டியது) -2  பற்கள்  மஞ்சள்தூள் -சிறிதளவு  வெட்டிய தக்காளிப்பழம்(சிறிய) -1  செய்முறை  1 .ஓரு பலகையில் கோழி இறைச்சியை      வைக்கவும் . 2 .அதன் பின்பு ஓரு கூரான கத்தியால் அதன்      தோலை அகற்றிவிட்டு தேவையான      அளவில் துண்டுகளாக வெட்டவும். 3 . வெட்டிய துண்டுகளை ஓரு பாத்திரத்தில்       போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள்      தூளை போட்டு கழுவவும். 4 . கழுவிய பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்       போட்டு வைக்கவும். 5 .அதன் பின்பு அடுப்பில் தாட்சியை     (வாணலியை)வைத்து அதில் எண்ணெய்      விட்டு சூடாக்கவும். 6 .எண்ணெய் சூடானதும் அதில் கடுகை      போட்டு வெடிக்க விடவும்  . 7 .கடுகு வெடித்ததும் அதில் வெங்காயம்,     உள்ளி (பூண்டு),கருவப்பிலை,வெட்டிய      தக்காளிப்பழம்(விரும்பினாள் ) சோம்பு     (பெருஞ்சீரகம்)ஆகியவற்றை  போட்டு       தாளிக்கவும். 8 .தாளித்த பின்பு அதில் வெட்டி மஞ்சள்தூள்      போட்டு கழுவிய கோழி இறைச்சி      துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி     சிறிது நேரம் மூடி வேக விடவும். 9 , அதன் பின்பு அதில் சிறிதளவு தண்ணீர்,      மிளகாய்த்தூள்,கரம்மசாலத்தூள்       ஆகியவற்றை போட்டு ஓரளவு       வேகவிடவும் . 10 .கோழி இறைச்சி துண்டுகள் ஓரளவு         வெந்ததும் அதனுடன் பாலை விட்டு        கலந்து வேகவிடவும். 11 . கோழி இறைச்சி வெந்து கறி ஓரளவு          தடிப்பானதும் கறியை அடுப்பிலிருந்து          இறக்கவும். 12 .அதன் பின்பு சுத்தமான சுவையான       செய்வதிற்கு  இலகுவான கோழி       இறைச்சி கறி தயாராகிவிடும். 13 . பின்பு ஓரு தட்டில் சோற்றினை       (சாதம்),இடியப்பம்,பரோட்டா,ரொட்டி      பாண் துண்டுகள் ,சப்பாத்தி,புட்டு,இட்லி,     ஆகியவற்றில் ஒன்றினை வைத்து      அதனுடன் கோழி இறைச்சி குழம்பு(கூட்டு)      கறியையும் வைத்து பரிமாறவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.