செவ்வாய், 26 ஜனவரி, 2010
கொய்யாப்பழம்
கொய்யா மரத்தின் வேர்ப்பகுதி ,இலைகள்,
பட்டைப்பகுதி,செங்காய் இவையாவற்றிலும்
மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன .
கொய்யாமரத்தின் இலைகளை அரைத்து
வெட்டுகாயம்,புண் ஆகியவற்றின் மேல்
தடவினால் காயம் மிக விரைவாக
மாறிவிடும் அத்துடன் கொய்யாமரத்தின்
இலைகள் அல்சர்,பல்வலிக்கு நல்ல
மருந்தாகும்,கொய்யாகாயை தினமும்
சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள
சக்கரையின்அளவு பெருமளவுகுறையும்
என வைத்தியர்கள் கூறுகின்றனர் .
கொய்யாவின் இலைகளிருந்து
தயாரிக்கப்படும் கஷாயமானது இருமல்
தொண்டை ,இதயம் ஆகியவற்றில்
நோய்களுக்கு நல்ல மருந்தாகும்
அத்துடன் இளம் கொய்யாமரத்தின்
புது கிளைகளிருந்து தயாரிக்கப்படும்
கஷாயம் காய்ச்சலை குணப்படுத்தும்
கொய்யா மரத்தின் கிளைகளிருந்து
தயாரிக்கப்படும்கஷாயம் குழந்தைகளுக்கு
வரும் மந்தம்,இழுப்பு,காக்காய் வலிப்பு
போன்ற நோய்களுக்கு நல்லமருந்தாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.