கத்தரிக்காய் சலாட்
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்(பெரிது)-1
வெட்டிய பச்சைமிளகாய்-(1 -2 )
வெட்டிய வெங்காயம்(சிறிய ) -1
கருவப்பிலை -சிறிதளவு
பால் அல்லது ஜோக்கட்-தேவையானளவு
உப்பு -தேவையானளவு
மிளகுத்தூள்-சிறிதளவு
தேசிக்காய் சாறு -1 /2 தேக்கரண்டி
செய்முறை
(1)அடுப்பில் அல்லது தணலில் கத்தரிக்காயை
சுடவும் .
(2 )அடுப்பில் சுட்ட கத்தரிக்காயின் தோலை
அகற்றவும்.
(3)பின்பு கத்தரிக்காயின் உட்பகுதிய எடுத்து ஒரு
பாத்திரத்தில் போடவும் .
(4)அதன் பின்பு அதனுடன் தேவையான அளவு பாலை
அல்லது ஜோக்கட்டினை போட்டு நன்றாக மசிக்கவும் .
(தண்ணீர் ஆகவோ அல்லது கட்டியாகவோ
இல்லாத ஓரளவு தடிப்பான பதம்)
(5)அதன் பின்பு இதனுடன் சிறிய சிறிய வட்டமாக
வெட்டிய பச்சைமிளகாய் ,சிறிதுசிறிதாகவெட்டிய
வெங்காயம் ,சிறிதுசிறிதாகவெட்டிய கருவப்பிலை
உப்பு ,மிளகுத்தூள் ,தேசிக்காய்சாறு ஆகியவற்றை
போட்டு நன்றாக மசித்து கலக்கவும் .
(6)அதன் பின்பு சுவையான சத்தான செய்வதிற்கு
இலகுவான கத்தரிக்காய் சலாட் தயாராகிவிடும் .
(7)ஒரு தட்டில் சோறு(சாதம்)அல்லது பாண்
துண்டுகளை வைத்து அதனுடன் கத்தரிகாய்
சலாட்டை வைத்து பரிமாறவும்.
குறிப்பு
(1)கத்தரிக்காய் அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும் .
(2)கத்தரிகாய் சலாட்டுக்கு சிறிது
சிறிதாக வெட்டிய தக்காளிப்
பழத்தையும் சேர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.