சனி, 27 பிப்ரவரி, 2010
உலகநீதி
ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம்
போகாத இடம்தனில் போகவேண்டாம்
போகவிட்டு புறம்சொல்லித் திரியவேண்டாம்
வாகாரு குறவடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.
கருத்து
படிக்காமல் ஒருநாளும் இருக்ககூடாது
எவர் மீது அவதூறான சொற்களை சொல்லக்
கூடாது ;தாயை மறக்க கூடாது:
வஞ்சகர்களுடைய சிநேகிதம் கூடாது :
செல்லத்தகாத இடங்களுக்கு போக கூடாது:
ஒருவரை பார்க்கும் போது அவரை புகழ்ந்தும்
அவரை பார்க்காத போது இகழக்கூடாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.