தக்கன் - 1940 ல் கோவை சூளூரில் கிட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலத்தில் தக்க இன்னன் என்ற பெயர் எழுத்ப்பட்டுள்ளது. பதவி ஏற்பு வரிசையில் 3 & 9 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் yamagata Aritomo 1888-91 & 1898-1900எனபவர். தமிழில் யாம கத்த அரி தாம > யாமன் கத்தன் அரி தாமன் என செம்மையாக படிக்கலாம். யாமன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். பின்பு யா > ஆ எனத் திரிந்து ஆமன் என சங்க இலக்கியத்தில் பயில்கின்றது. கத்தன் - சி.வெ. முத்திரையில் பயிலும் பெயர், அரி - அரியான் என அன் ஈறு பெற்று அரியான் குப்பம் என பதுச்சேரியில் ஓர் ஊருக்கு பெயராகி உள்ளது. தாமன் -- பல மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் எனற ஏரி உள்ளது. பதவி ஏற்பு வரிசையில் 16 & 22 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Yamamoto gonbee 1913-1914 தமிழில் யாம மத்த கான்வி > யாமன் மத்தன் கானவன் என செம்மையாக படிக்கலாம். சி. வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் மத் என்றும், ஈறு பெற்று மத்தன் எனறும் இப் பெயர் பயின்று வந்துள்ளது. பண்டைய போனீசிய திரை Ancient tyrian நாகரிக மன்னன் பெயர் Mattan இவன் பெயரில் அன் ஈறு இடம் பெறுவது தமிழ் அடையாளத்தை தெளிவாக சுட்டுகிறது. அன் ஆண் பால் ஈறு பல நாகரிகங்களில் அர்,அல், அம், ஐ, இ எனவும் முடிகிறது. அவவாறே கானவன் என்ற பெயர் கானவி என ஜப்பானில் வழங்குகிறது. பதவி வரிசையில் 20 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Takahashi Korekiyo தமிழில் தக்க கத்தி(ஹ>க, ஷ > த மூலம்) காரி கய்ய > தக்கன் கத்தி காரி கய்யன் என செம்மையாக படிக்கலாம். கத்தன் எனபதே கத்தி ஆகியது. காரி -- கடை ஏழு வள்ளல்களுல் ஒருவன் மலையமான் திருமுடிக் காரி, காரிக் கிழார் ஒரு புலவர். எகிபது நாகரிகத்தில் 4 ஆம் ஆள்குடியில்(Dynasty) ஒரு மன்னன் பெயர் MenKaure 2490- 2472 BC மேன் காரி. தமிழில் மேன் உயர்வான, மேலான என பொருள் தரும்; அன் ஈறு பெற்று மேனன் என்றாகும். 7 & 8 ஆம் ஆள்குடியில் பல மன்னர் காரியை பட்டமாகவே கொண்டுள்ளனர். அவருள் ஒருவன் Netri Kare 2150 BC நெற்றி காரி. பதவி ஏற்பு வரிசையில் 24 & 26 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Kato Takaaki தமிழில் காத்த தக்க அக்கி > காத்தன் தக்கன் அக்கி என செம்மையாக படிக்கலாம். காத்தன் - சி.வெ. முத்திரையில் இடம் பெறுகிறது; காத்தன்குடி ஈழத்தில் உள்ள ஓர் ஊர் பெயர்; காத்தமுத்து என இக்காலும் பெயர் தமிழில் வழங்குகிறது. அக்கன் என்பதே அக்கி ஆகியது. அன் ஈறு பெறாமல் அக் என பல நாகரிகங்களில் பயில்கின்றது. எதியோபியாவில் ஒரு மன்னன் பெயர் Gari Ak I (4404 BC) காரி அக். 6,400 ஆண்டுகள் பழமையான பெயர் இது. அக்கன் பிற நாகரிகங்களில் அக்கல் எனவும் வழங்கும்.
வியாழன், 8 நவம்பர், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.