தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் - கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர். Bawawlதமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo - தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர். Barawas - தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும். Serada தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன். Azegan Malbagad தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் - கருமைக் கருத்து, பகடு - எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம். கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion - திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின. தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும். மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன். மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம். இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்.. ஜப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்; சிந்து எழுத்துகளை பேராசிரியர் இரா. மதிவாணன் படித்துக் காட்டி 20 ஆண்டுகள் ஆன பின்னும் அது புகழ் பெற்ற ஆய்வாளர்களால் இன்னும் ஏற்கபடாமலேயே உள்ளது. ஈரெழுத்து சான்று இல்லாயினும் அவர் படித்த முறை சரியே. மெஹர்கார் சிந்து நாகரிகம் 9,000 ஆண்டுகள் தொன்மையான வை என்பதால் சிந்து வெளி முத்திரைப் பெயர்கள் பிற நாகரிகங்களில் உள்ளனவா? என்பதை அறிய அதற்கு மேற்கே அமைந்த எதியோபியா, எகிபது, போனீசியா, அக்காடு, ஈலம், பாபிலோன் நாகரிக மன்னர்களின் பெயர்களை ஆராய்ந்த போது அவை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கிய மாந்தர் பெயர்களோடும், தமிழ்நாட்டு பானை ஓட்டு சிந்து எழுத்துப் பொறிப்பு பெயர்களோடும் ஒத்தாக இருந்தது அத்துடன் கிழக்கு நாகரிகங்க ளான சீனம்,கொரியா, ஜப்பான் போன்ற நாட்டு நாகரிகமன்னர் பெயர்கள்களில் .பல தமிழ் வடிவில் இருந்தது . இப்பெயர் ஒற்றுமை யானது தமிழர் நாகரிகம் பிற எல்லா நாகரிகங்களுக்கும் தாய் நாகரிகம் என்பதையும் அறிய கூடியதாக இருந்தது.
திங்கள், 5 நவம்பர், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.