சைவசமயம் - 2
முருகன் பாடல்கள்
அன்பருக்கு அன்பனே நீ வாவா முருகா
ஆறுபடை வீடுடையாய் வாவா முருகா
இன்பமய ஜோதியே நீ வாவா முருகா
ஈசனுமாய் பாலகனே வாவா முருகா
உலகநாதன் மருமகனே வாவா முருகா
ஊமைக் கருள் புரிந்தவனே வாவா முருகா
எட்டுக்குடி வேலவனே வாவா முருகா
ஏறு மயில் ஏறியே நீ வாவா முருகா
ஜங்கரனுக் கிளையவனே வாவா முருகா
ஆறுமுக வேலவனே வாவா முருகா
ஒய்யாரி வள்ளி லோலா வாவா முருகா
ஓங்கார தத்துவமே வாவா முருகா
ஔவைக்குப தேசித்தவனே வாவா முருகா
அகில லோக நாயகனே வாவா முருகா
ஓடிவா நீ ஓடிவா நீ வாவா முருகா
ஆடிவா நீ ஆடிவா நீ வாவா முருகா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.