2011 ஏப்ரல் 1 முதல் 30 வரை |
மேஷம்:
சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் தோற்றப்பொலிவு கூடும். மன உற்சாகம் பெருகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நலம் ஏற்படும். கூட்டாளிகள் ஒத்துழைப்பு தருவார்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி பெறும்.
சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு அதிகமாகும். தொழிலாளர்களது கோரிக்கைகள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். கறுப்பு நிறப்பொருட்கள், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள், பழைய பொருட்கள் ஆகியவற்றின் மூலமும் விளைபொருட்களாலும் லாபம் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பக்தி மார்க்கத்திலும்,ஞான மார்க்கத்திலும் நாட்டம் கூடும். அறநிலையங்களில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
14-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது என்றாலும் 5-ஆம் இடத்துக்குரிய சூரியன் உச்ச ராசியில் உலவத் தொடங்குவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12 -ஆமிடம் மாறினாலும் உச்ச ராசியில் உலவத் தொடங்குவதால் வாழ்க்கை வசதிகள் பெருகும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிவரும். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும்.
அசுவினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்.1, 14, 17, 22, 24.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
எண்கள்: 6, 7, 8. மாதப்பின்பகுதியில் எண் 1 அதிர்ஷ்டம் தரும்.
ரிஷபம்:
கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய.
சூரியன், செவ்வாய், புதன், குரு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது எளிதில் நிறைவேறும். அரசுப் பதவி, பட்டம் கிடைக்கும். நிர்வாகத்திறமை கூடும். முக்கியஸ்தர்களுடைய தொடர்பு பயன்படும். எலக்ட் ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் நலம் உண்டாகும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிவார்கள். மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். விஞ்ஞானிகள் புகழ் பெறுவார்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, கைவினை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல திருப்பத்தைக் காணலாம்.
14-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். முக்கியஸ்தர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவது விசேடமாகும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிரிகள் கூட இப்போது உங்களுக்கு உதவுவார்கள்.
பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மறுமணம் புரியும் வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது.
ரோகிணி, மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்குப் பொருளாதார நிலை உயரும். சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு பாக்கியம் கிட்டும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப். 1, 3, 14, 17, 20, 21, 24 (பிற்பகல்).
திசைகள்: வடகிழக்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு.
எண்கள்: 1, 3, 5, 6, 8, 9.
மிதுனம்:
மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய.
ராசிக்கு 10-ஆமிடத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சூரியன், செவ்வாய், குரு ஆகியோருடன் கூடி இருக்கிறார். சுக்கிரன் 9-ல் உலவுவதும் விசேடமாகும்.இதனால் உங்கள் மதிப்பு உயரும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிரிகள் விலகிப் போவார்கள்.
போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். புதிய பதவிகளும் பட்டங்களும் உங்களைத் தேடிவரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும்.
சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் ஈடுபடுவீர்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மக்களால் பெற்றோருக்கு அனுகூலம் உண்டாகும். மாதர்கள் நலம் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மன உற்சாகம் பெருகும்.
14-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடத்துக்கு மாறுவது விசேடமாகும். உயர் பொறுப்புக்களைப் பெறுவீர்கள். தந்தையாலும், அரசாங்கத்தாராலும் நலம் கூடும். 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும், சுக்கிரன் தன் உச்ச ராசியில் உலவுவதால் நலம் புரிவார். மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஜலப்பொருட்களால் ஆதாயம் அதிகம் பெற வாய்ப்புண்டாகும். சுப காரியச் செலவுகள் ஏற்படும். சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்குத் தொழில் ரீதியாக நன்மைகள் பெருகும். புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் சாதனை பல ஆற்றுவார்கள்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்.1, 3, 14, 17, 20, 21, 22.
திசைகள்: வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.
எண்கள்: 1, 3, 5, 6, 9.
கடகம்:
புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய.
3-ல் சனியும், 6-ல் ராகுவும், 8-ல் சுக்கிரனும், 9-ல் குருவும் உலவுவதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். செயல்திறமை கூடும். பொதுநலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். உழைப்பு வீண்போகாது. தொழிலாளர்களது எண்ணம் ஈடேறும். விவசாயிகள் வளர்ச்சி காண்பார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்; அவர்களால் அனுகூலமும் உண்டாகும். போக்குவரத்துச் சாதனங்கள், தோல் பொருட்கள் ஆகியவை லாபம் தரும்.
கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். தான, தர்மப்பணிகளில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களால் அளவோடு நலம் உண்டாகும். தந்தையால் அனுகூலம் ஏற்படும்.
மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். வெளிநாடு சென்று தொழில் புரியவும், மேற்கல்வி பயிலவும் வாய்ப்பு உண்டாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.
14-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவதால் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் அனுகூலம் உண்டாகும்.
16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால் புதிய சொத்துக்கள் சேரும். சுகம் கூடும். மன உற்சாகம் பெருகும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். விநாயகரை வழிபடவும்.
பூச நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்.3, 14, 17, 20, 21, 22, 24.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 3, 4, 6, 8, 9.சிம்மம்:
மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.
கோசாரப்படி புதன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளதால் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான பாதை புலப்படும். ஆன்மிகவாதிகள், ஜோதிடர்கள், அறப்பணியாளர்கள், யோகா, த்யானம் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்கெல்லாம் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். இதர கிரகங்கள் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். பொருள் திரட்ட அரும்பாடுபட வேண்டிவரும். எதிலும் சுலபமாக வெற்றி பெற்றுவிட இயலாது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வயிறு, கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது. அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. பொருள் கொடுக்கல்-வாங்கல் இனங்களைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன்
செயல்படுவது அவசியமாகும். மறதியால் அவதி ஏற்படும். பெற்றோரால் மனக்குழப்பம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 14-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் அவர் தன் உச்ச வீட்டில் உலவுவதால் புனிதமான காரியங்களில் கலந்து கொள்வீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8 -ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கு மந்த நிலை விலகும். மாதர்கள் பிரச்னைகளிலிருந்து விடுபடுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். ஜாதகபலம் கூடியிருப்பவர்கள் கவலைப்படத்
தேவையில்லை. ஜாதகபலமும் இல்லாதவர்கள் கிரக வழிபாட்டிலும், இறைவழிபாட்டிலும் ஈடுபடுவது நல்லது. மகம், பூர நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்.1 (பகல்), 14, 17, 20, 22, 24.
திசைகள்: வடமேற்கு, வடக்கு.
எண்கள்: 5, 7.
கன்னி:
உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய.
குரு 7-லும், கேது 10-லும் உலவுவது விசேடமாகும். இதனால் உங்கள் அந்தஸ்துக்கும் மதிப்புக்கும் குறைவிராது. உடல்நலம் சீராகவே இருந்துவரும். நல்லவர்களது தொடர்பு நலம் சேர்க்கும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஆசிரியர்களது நிலை உயரும். த்யானம், யோகா, ஜோதிடம், அறநிலையம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள்.
ஜன்ம ராசியில் சனியும், 4-ல் ராகுவும் உலவுவதால் அலைச்சல் அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிவரும். தகுதிக்குக் குறைவான காரியங்களில் ஈடுபட நேரலாம். 6-ல் சுக்கிரனும், 7-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் உலவுவதால் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். பெண்களுக்குச் சோதனைகள் சூழும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். கூட்டாளிகளை நம்பி முக்கியமான பொறுப்புக்களை ஒப்படைக்கலாகாது.
14-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. உஷ்ணாதிக்கம் கூடும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும்.
வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எக்காரியத்திலும் வேகம் கூடாது. ஜாதக பலம் குறைந்திருப்பவர்களும், மாரக தசை நடப்பவர்களும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். சிறு கண்டம் ஏற்படும். இறை வழிபாடு நலம் கூட்டும். தினமும் காலை வேளையில் சிறிது நேரம் த்யானம் செய்யுங்கள்.
சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப். 1, 3, 17, 20, 21, 22, 24.
திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு.
எண்கள்: 3, 7.
துலாம்:
சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் சுக்கிரன் 5-ல் உலவுவது விசேடமாகும். சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் 6-லும், ராகு 3-லும் இருப்பதால் உங்கள் சுய பலம் கூடும். மன உற்சாகம் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். அரசுப் பணிகள் லாபம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கலைஞானம் கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பெண்களால் நலம் உண்டாகும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள்.
அரசுப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வு கிட்டும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், ஆகியவை லாபம் தரும். திரவப் பொருட்களைக் கொண்டு வியாபாரம் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும்.
6-ல் குருவும், 12-ல் சனியும் இருப்பதால் மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 6-ல் கூடியுள்ள கிரகங்கள் 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடுமெனத் தெரிவதால் சிக்கனத்தைக் கடைப் பிடிப்பது அவசியமாகும். உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறுசிறு பிரச்னைகள் தலைதூக்கும்.
14-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறுவதாலும், 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடத்துக்கு மாறுவதாலும் கணவன் மனைவியிடையே சலசலப்புக்கள் உண்டாகும். விட்டுக்கொடுத்துப் பழகுவது நல்லது. கூட்டாளிகளை நம்பி முக்கியப் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம். எதிர்ப்புக்கள் இருக்கும் என்றாலும் செவ்வாய் பலத்தால் சமாளித்துவிடுவீர்கள். கலைஞர்கள், மாதர்கள் ஆகியோர் மாதப்பின்பகுதியில் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. குரு, சனி ஆகிய கிரகங்களுக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்துவருவது அவசியமாகும்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். எடுத்த காரியத்தைத் திறம்பட ஆற்றுவீர்கள். பதவிச் சிறப்பு ஏற்படும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுகானுபவம் உண்டாகும். புதிய பொருள் சேரும். விசாக நட்சத்திரக்காரர்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. சிறுவிபத்துக்கு ஆளாக நேரலாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. சுபகாரியங்கள் தடை, தாமதப்படும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்.1, 3, 14, 17, 20, 21, 22, 24.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு.
எண்கள்: 1, 4, 5, 6, 9.
விருச்சிகம்:
விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.
ராசிக்கு 5-ஆமிடத்தில் குரு பலம் பெற்று உலவுவதாலும், சுக்கிரன் 4-லும், சனி 11-லும் சஞ்சரிப்பதாலும் உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல்நலம் சீராக இருந்துவரும். மன உற்சாகம் கூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். சுகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். மாதர்களது நிலை உயரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களின் சேர்க்கை நிகழும். தெய்வ காரியங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுநலப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும்.
ஜலப்பொருட்கள் லாபம் தரும்.
14-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறி, வலுப்பெறுவதால் செய்துவரும் தொழில் எதுவானாலும் அதில் வளர்ச்சி காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறி, அதிபலம் பெறுவதால் சுகம் கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெருகும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். தனவந்தர் சகாயம் கிட்டும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு.
எண்கள்: 1, 3, 6, 8, 9.தனுசு:
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய.
சூரியன், செவ்வாய், புதன், குரு ஆகியோர் 4-ல் உலவுவதாலும், சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் உங்கள் சுயபலம் கூடும். எதிர்ப்புக்கள் குறையும். அரசியல், நிர்வாகம், பொறியியல், வியாபாரம் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள்.
உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்புக் கூடும். ஜன்ம ராசியில் ராகு இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாது. 7-ல் கேது இருப்பதால் மற்றவர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. கூட்டாகத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
14-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும், உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டோனான சூரியன் தன் உச்ச ராசியில் உலவுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களாலும், தந்தையாலும் நலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் சுகானுபவம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். ரியல் எஸ்டேட் இனங்கள் லாபம் தரும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.
மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்.1, 3, 14, 17, 22, 24.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
எண்கள்: 1, 5, 6, 8, 9.மகரம்:
உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய.
சூரியனும் செவ்வாயும் 3-ல் உலவுவதால் உங்கள் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியங்களைத் திறம்பட ஆற்றி, வெற்றி பெறுவீர்கள். எதிரிகளின் கரம் வலுக்குறையும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். விளையாட்டு, விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுக்களும் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கும், அரசுப்பணியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். 2-ல் சுக்கிரன் இருப்பதால் மக்களால் அனுகூலம் உண்டாகும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு உண்டாகும்.
அதனால் மனமகிழ்ச்சியும் பெருகும். பேச்சில் இனிமை தவழும். மாதர்களுக்கும், கலைஞர்களுக்கும் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
புதன், குரு, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வியாபாரிகள், தொழில் அதிபர்கள் ஆகியோர் அகலக்கால் வைக்கலாகாது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். 14-ஆம் தேதி முதல் சூரியன் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் கூடும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். சகோதர நலம் சிறக்கும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காணலாம். துர்கையை வழிபடவும்.
திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்.1, 3, 17, 20, 21, 24 (பிற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு, தெற்கு.
எண்கள்: 1, 6, 7, 9. கும்பம்:
அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.
புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். பொருள்வரவு திருப்தி தரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருமானம் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்கள் நலம் கூடப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். போக்குவரத்துச் சாதனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் ஆதாயம் கூடும். தோற்றப்பொலிவு பளிச்சிடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பெற்றோரால் மக்களுக்கு அனுகூலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
சுகானுபவம் ஏற்படும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம்பெறும். 2-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் பேச்சில் கடுமையைக் குறைத்துக் கொண்டு, இனிமையைக் கூட்டிக் கொண்டால் நலம் கூடப் பெறலாம்.
5-ல் உள்ள கேது சிறுசிறு சங்கடங்களை அவ்வப்போது உண்டுபண்ணுவார். 8-ல் ராசிநாதன் சனி உலவுவதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறுசிறு பிரச்னைகள் சூழும். வேலையாட்களால் அதிகம் அனுகூலமிராது. 14-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவதால் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் செல்வ வளம் பெருகும். குடும்பநலம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழும். மன உற்சாகம் நிறைந்திருக்கும். பெற்றோரால் நலம் கூடப் பெறலாம். சனிக்கும் கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.
அவிட்ட, சதய நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்.1, 3, 14, 20, 21, 22, 24.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
எண்கள்: 3, 4, 5, 6.மீனம்:
பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய.
கோசாரப்படி சுக்கிரன், ராகு ஆகியோர் மட்டுமே அனுகூலமாக உலவுகிறார்கள். இதனால் கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்கள் நலம் பெறுவார்கள். வாழ்க்கை வசதிகள் பெருகும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும்.
புதியவர்களது தொடர்பு பயன்படும். குருவும் செவ்வாயும் ஒன்று கூடி ஜன்ம ராசியில் இருப்பதால் தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். மதிப்பு உயரும்.
சூரியன் ஜன்ம ராசியில் இருப்பதால் உஷ்ணாதிக்கம் கூடும். உடல்நலனில் கவனம் தேவை. எதிரிகள் இருப்பார்கள். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். அரசாங்கத்தாரால் கெளரவிக்கப்படுவீர்கள். 4-ல் கேது இருப்பதால் அலைச்சல் கூடும்.
தாய் நலனில் கவனம் தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் அதிகம் அனுகூலமிராது. 7-ல் சனி இருப்பதால் கெட்டவர்களின் தொடர்பு கூடாது. கூட்டாளிகளால் சில சங்கடங்கள் உண்டாகும். சனியைக் குரு பார்ப்பதால் அதிகம் சங்கடங்கள் ஏற்படாதவாறு காக்கப்படுவீர்கள்.
14-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. கண், முகம், தலை சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வீண் வம்பு வேண்டாம். 16-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் புதிய பொருட்சேர்க்கை நிகழும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சந்தோஷம் அதிகமாகும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். கேதுவுக்குப் பிரீதி செய்யவும். விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகமாகும்.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
எண்கள்: 4, 6.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.