செய்முறை
(1)முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் விதை
நீக்கிய பேரீச்சம்பழத்தினை சிறுசிறு துண்டுகளாக
வெட்டிய பின்பு அதனுடன் சிறுசிறு துண்டுகளாக
வெட்டியபிளம்ஸ் சேர்த்து நன்றாககலக்க வேண்டும்.
(2) பின்பு இவையிரண்டையும் தேநிரில் ஊற வைக்க
வேண்டும்(பேரீச்சம்பழம் ,பிளம்ஸ்)இவையிரண்டும்
தேநீரில் மூழ்கி இருக்க வேண்டும்).
(3)அடுத்த நாள் ஒரு பாத்திரத்த்தில் உருக்கிய பட்டர்,
சீனி, முட்டை ஆகிய மூன்றையும் ஒன்றாய்சேர்த்து
சீனி கரையும் வரை நன்றாக அடிக்க வேண்டும்.
(4)சீனி நன்றாக கரையும் வரை கலந்து அடித்த பின்பு
அதனுடன் கோதுமைமா(மைதாமா).பேக்கிங்பவுடர்
கலந்துஅரித்து அடித்தகலவையுடன் வனிலாகலக்கவும்.
(5)அதன் பின்பு இக்கலவையுடன் .பேரீச்சம்பழக்கலவை
சிறு சிறு துண்டுகளாக வெட்டிய கயூ ஆகியவற்றை
போட்டு ஒரளவாக கலக்கவும்.
(6)அதன் பின்பு அளவான கேக் தட்டில் பட்டர் தடவி
அதில் கேக்கலவையை தட்டின் அரைவாசிஉயரத்திற்கு
ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் 20 நிமிடங்கள் அதன்
பின்பு 200 டிகிரியில் 20அல்லது 25 நிமிடங்கள் (உங்கள்
ஓவனின் வெப்ப தட்பத்தை பொறுத்து உள்ளது) பேக்
செய்யவும்.
(7 ) பேக்கிங்செய்தபின்பு செய்வதிற்கு இலகுவான சுவையான
சத்தான பேரீச்சம்பழ கேக் தயாராகிவிடும்.
´ கவனிக்க வேண்டிய விசயங்கள்-
(அ)நல்லதேயிலைதூளாக இருக்கவேண்டும்.
(அப்போது தான் கேக் நல்ல கொக்கோ
நிறமாகவும் அழகாகவும் இருக்கும்)
ஆயத்த நேரம்
40 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
(45- 50) நிமிடங்கள்
சனி, 19 டிசம்பர், 2009
கேக்வகைகள்-2
பேரிச்சம்பழகேக்
பேரீச்சம்பழத்தில் அதிகளவு இரும்புசத்து
நிறைந்ததுள்ளது பேரீச்சம்பழ த்துடன் கொழுப்பு
சத்து நிறைந்த பட்டரும,காபோவைதரேற்று
சத்து நிறைந்த மைதாமா(கோதுமை) மாவும் கயூ,
பிளம்ஸ் ஆகியவை சேர்ந்து பேரீச்சம்பழ கேக் மிக
மிக சுவையுடன் காணப்படும் .
தேவையான பொருட்கள்
பேரீச்சம்பழம் - 800 கிராம்
கோதுமை மா(மைதா மா) - 500 கிராம்
பட்டர்(உருக்கிய) - 500 கிராம்
சீனி - (350 - 400 ) கிராம்
முட்டை - 8 முட்டை
பிளம்ஸ்(வெட்டியசிறுசிறுதுண்டங்கள்) - 300 கிராம்
வனிலா - (2 - 4 ) தேக்கரண்டி
தேயிலை - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி
கயூ(சிறுசிறுதுண்டுகளாகவெட்டிய) - (100 )கிராம்
Labels:
சமையல் குறிப்புக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.