தன்னைச் சுற்றி இருப்பவர்களை வழி நடத்திச் செல்வதிலும் கெட்டிக்காரர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் துவண்டு கிடந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு என்றிருந்ததே! நிம்மதியாக சாப்பிடக் கூட முடியவில்லையே! இனி உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
மனைவிவழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகளை படிப்பில் மட்டுமின்றி இசை, ஓவியம், நடனம், விளையாட்டு என ஈடுபடுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமைந்து, திருமணம் நல்ல விதத்தில் முடியும். இளைய சகோதரருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுப்பீர்கள். இனி எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்துங்கள். காசு, பணம் இருந்து என்ன பிரயோஜனம்? வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று வாடிவதங்கிய தம்பதிகளுக்கு இந்த வருடத்தில் குழந்தை பாக்யம் உண்டாகும். 1.9.10 முதல் 31.12.10 வரை சேவகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் விலையுயர்ந்த ரத்தினங்கள், ஆடைகள் வாங்குவீர்கள். இளைய சகோதரர்களுக்கு திருமணம் முடியும்.
லாப வீட்டில் கேது நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். வழக்குகள் சாதகமாகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் மூலமாக சில காரியங்களை சாதிப்பீர்கள். டிரஸ்ட் தொடங்குவீர்கள்.
உங்கள் யோகாதிபதியான குருபகவான் 2.5.10 முதல் 8ம் வீட்டில் மறைவதால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகமாகும். குரு 8ல் மறைந்தாலும் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் வருமானம் குறையாது. திடீர் பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். 5ல் ராகு நிற்பதால் பூர்வீக சொத்தில் சட்டச் சிக்கல் வரும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது.
இந்த வருடம் முழுவதும் பாதச்சனி தொடர்வதால் யாருக்கும் சாட்சிக் கையெழுத்திடுவதோ, பண விஷயத்தில் பொறுப்பேற்றுக் கொள்வதோ வேண்டாம். மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் அநாவசியமாக நுழையாதீர்கள். காலில் அடிபடும். சிறு விபத்துகள் வரக்கூடும். என்றாலும் சனியை குரு பார்க்க இருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு மாறுவீர்கள். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள். வெகுநாட்களாக வராமலிருந்த பணம் இப்போது கைக்கு வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். வி.ஐ.பிகள், தொழிலதிபர்கள் நண்பராவார்கள். புது வண்டி வாங்குவீர்கள்.
கன்னிப்பெண்களே! நீங்கள் ஆசைப்பட்டபடி நல்ல மணமகன் வந்தமைவார்.
மாணவர்களே! விளையாட்டால் படிப்பில் நாட்டமில்லாமல் போனதே! இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும்.
வியாபாரிகளே! மாறிவரும் நவீன சந்தை நிலவரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திகைத்து நின்றீர்களே! உதவியாக இருக்க வேண்டிய வேலையாட்களும் உபத்திரவமாக இருந்தார்களே! இனி அந்த அவலநிலை மாறும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். கார்த்திகை, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். வங்கியில் வாங்கிய கடனை வட்டியும், முதலுமாக அடைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். புரோக்கரேஜ், ஹோட்டல், லாட்ஜ், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். வைகாசி மாதத்தில் புதிய வேலை கிடைக்கும். இப்போது வரும், அப்போது வருமென நெடுநாள் காத்திருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் கார்த்திகை, தை மாதங்களில் கிடைக்கும்.
கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
அரசியல்வாதிகளே, கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு அளிக்கும்.
விவசாயிகளே, மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். பழுதான பம்புசெட்டை மாற்றுவீர்கள்.
இந்த விக்ருதி ஆண்டு ஓய்வெடுக்க முடியாதபடி ஓட வைத்தாலும் தடைபட்ட காரியங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற உதவும்.
பரிகாரம்:
திருவண்ணாமலையில் உள்ள பகவான் ரமண மகரிஷியின் ஜீவ சமாதியை, உத்திராடம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். நல்லதே நடக்கும்.
வெள்ளி, 21 மே, 2010
விக்ருதி ஆண்டு ராசி பலன்
சிம்மம்
மற்றவர்களின் குற்றம் குறைகளை முகத்துக்கு நேரே சுட்டிக்காட்டும் நீங்கள்,
Labels:
ராசி பலன்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.