கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 21 மே, 2010

விக்ருதி ஆண்டு ராசி பலன்

கடகம் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள்,
என் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருப்பீர்கள். மண் மணம் மாறாதவர்களான நீங்கள் கண்டம் தாண்டிப் போனாலும் கலாசாரத்தை மறக்க மாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன் 9ம் வீட்டில் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பணப்பிரச்னை மற்றும் சொன்னதை செய்து முடிக்க முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலையால் சிரமப்பட்டிருப்பீர்கள். வருடம் பிறக்கும்போது உங்கள் யோகாதிபதியான குரு 8ல் மறைந்திருந்தாலும் 2.5.10 முதல் ராசிக்கு 9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் தள்ளிப்போன காரியங்கள் உடனே முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. இழுபறியாக இருந்த அரசு விஷயங்களை வி.ஐ.பிகள் மூலமாக முடிப்பீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசியை 2.5.10 முதல் பார்க்க இருப்பதால் அலட்சியம், மறதி, சோம்பல் எ ல்லாம் நீங்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சருமநோய், முதுகுவலி, சளித் தொந்தரவிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதி செவ்வாய் 27.5.10 வரை உங்கள் ராசிக்குள்ளேயே நீசகதியில் செல்வதாலும், 21.7.10 முதல் 6.9.10 வரை செவ்வாய் சனியுடன் சேர்வதாலும் 13.2.11 முதல் 25.3.11 வரை செவ்வாய் 8ல் சென்று மறைவதாலும் மனைவிக்கு உடல்நலக் குறைவும், சகோதரவகையில் அலைச்சலும் சிறு விபத்துகள், பொருள் இழப்புகளும், சொத்து வாங்குவது, விற்பதில் பிரச்னைகளும் வந்து நீங்கும். எனவே இக்கால கட்டத்தில் எதிலும் எச்சரிக்கை தேவை. வைகாசி மாதப் பிற்பகுதி மற்றும் ஆவணி மாதத்தில் எதிர்பாராத பணவரவு உண்டு. திருமணம் கூடிவரும். சிலருக்கு சொத்து அமையும். புரட்டாசி, கார்த்திகை மாதங்களில் தொட்ட காரியங்கள் துலங்கும். காற்றோட்டமில்லாது, குடிநீர் வசதி இல்லாது ஒரு குகையில் வாழ்வதைப்போல் வாழ்ந்தீர்களே! இனி எல்லா வசதிகளும் கூடிய வீட்டில் குடிபுகுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க 3ம் வீட்டிலேயே சனி தொடர்வதால் நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். ராகு 6ம் வீட்டில் வலுவாக இருப்பதால் அரைகுறையாக நின்றுபோன வீடு கட்டும் பணி முழுமையடையும். தெலு ங்கு, ஹிந்தி பேசுபவர்களால் திடீர் யோகமுண்டு. அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 12ல் கேது நிற்பதால் சில நேரங்களில் அலைச்சல், தூக்கமின்மை வந்து செல்லும். நெடுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த குல தெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். கன்னிப்பெண்களே! வயதானவர்களைப்போல அவ்வப்போது கால் வலிக்கிறது, கை வலிக்கிறது என்றீர்களே! வாடி வதங்கியிருந்த உங்கள் உடலும் முகமும் இனி மலரும். திருமணம் உடனே முடியும். அதிக சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வீர்கள். மாணவர்களே! ஞாபகசக்தி அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். வியாபாரிகளே! பரபரப்பாக வியாபாரம் சூடுபிடிக்கும். பாக்கிகளை வசூலிப்பதில் இனி தாமதமிருக்காது. நீசப்பொருட்களான இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் வரும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் ஆதாயம் அதிகரிக்கும். கார்த்திகை மாதத்தில் விலகிச்சென்ற ஏஜென்ஸி மீண்டும் கைக்கு வரும். சிலர் சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமையும், ஒருவித மனப் போராட்டமும் இருந்ததே! திறமையிருந்தும் பெரிய பொறுப்புகளை தராமல் உங்களை ஓரங்கட்டினார்களே, இனி உங்கள் கை ஓங்கும். தொந்தரவு தந்த உயரதிகாரி உங்களை புரிந்து கொள்வார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை, மாசி மாதங்களில் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். கலைஞர்களே, பல சிக்கல்களிலிருந்து வெளிவர முடியாமல் தவித்தீர்களே! பெரிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளே, தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விவசாயிகளே, கடன் பிரச்னை ஓயும். இந்த விக்ருதி ஆண்டு வாழ்க்கையின் புது அத்தியாயத்தை தொடங்கி வைக்கும். பரிகாரம்: திங்கட்கிழமை அல்லது அஸ்தம் நட்சத்திர நாளில், காஞ்சி காமாட்சியம்மனை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள். காலணி தைப்பவர்களுக்கு உதவுங்கள். எண்ணங்கள் பூர்த்தியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.