யோகாதிபதி சுக்கிரனுடன் உங்கள் ராசிநாதனான புதனும் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் இனி வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள்.
உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருப்பதால் சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பாவீர்கள். எந்த காரியத்தையும் இனி தள்ளிப்போட மாட்டீர்கள். தற்சமயம் குரு 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் செலவு, அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். ஆனால் 2.5.10 முதல் குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.
கணவன்-மனைவிக்குள் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்வதன் மூலம் பழைய பிரச்னைகள் நீங்கும். கைவலி, கால்வலி, முதுகுவலி, மூட்டுவலி என முனகிக் கொண்டிருந்த மனைவியின் உடல்நிலை சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வி.ஐ.பி. மூலமாக மகனுக்கு வேலை வாங்கித் தருவீர்கள். இதுவரை உதாசீனப்படுத்திய உடன்பிறந்தவர்கள் இனி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சகோதரியின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். புது சொத்து வாங்குவீர்கள்.
கோயில் கோயிலாக ஏறி இறங்கியும் ஒரு வாரிசுகூட இல்லையே என புழுங்கித் தவித்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். 1.9.10 முதல் 31.12.10 வரை உங்களின் தன, பாக்யாதிபதியான சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொத்து சேரும்.
ஜென்மச்சனி இருப்பதால் சில விஷயங்களில் கொஞ்சம் தடுமாற்றம், மறதி, ஏமாற்றம் வரக்கூடும். கை, கால், மூட்டு வலியால் அவதிப்படுவீர்கள். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் வரக்கூடும். தலைச்சுற்றல், வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். உணவு விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். வெளி உணவு கள் வேண்டாம். பழைய நண்பர்கள், உறவினர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். எவ்வளவு பணம் வந் தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு செலவினங்கள் அதிகரிக்கும். கடனை முழுமையாக அடைக்க முடியவி ல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
ஆனாலும் சனிபகவானை குரு 2.5.10 முதல் பார்க்க இருப்பதால் ஜென்மச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். நெடுங்கால லட்சியமான கனவு வீட்டை வைகாசி, கார்த்திகை மாதங்களில் கட்டி முடிப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த, பந்தங்களுடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.
கன்னிப் பெண்களே! அலட்சியத்தால் பாதியிலேயே படிப்பை விட்டீர்களே; இனி முழுமையாக முடித்து நல்ல நிறுவனத்தில் வேலைக்கும் சேர்வீர்கள். திருமணம் முடியும்.
மாணவர்களே! உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய கல்விநிறுவனத்தில் சேர்வீர்கள்.
வியாபாரிகளே! அனுபவமில்லாதவர்களின் ஆலோசனையைக் கேட்டு நஷ்டப்பட்டீர்களே! இனி உங்களின் அனுபவ அறிவால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். சந்தையில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்களுடன் கார்த்திகை, மாசி மாதங்களில் ஒப்பந்தம் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். உணவு, ஸ்டேஷனரி, கட்டட சாமான் கள், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். முரண்டு பிடித்த பங்குதாரர்களை சமாளிக்கும் வித்தையை அறிவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி விடுங்கள்.
உத்யோகஸ்தர்களே! 10ம் வீட்டில் கேது தொடர்வதால் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள். சில சமயங்களில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் அநாவசியமாக நுழையாதீர்கள். ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களில் மாற்றம் வரும். அயல் நாட்டு நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும். உங்கள் மேல் தொடரப்பட்ட வழக்கு சாதகமாக முடியும்.
கலைஞர்களே! உங்களின் திறமைக்கு வேறொருவர் உரிமை கொண்டாடி உங்களை சட்டச் சிக்கலில் சிக்க வைத்தார்களே! இனி அவற்றிலிருந்து மீள்வீர்கள். அரசியல்வாதிகளே! தேர்தலில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளே, நெல்லுக்குப் பதிலாக கரும்பு, சவுக்கு மூலம் ஆதாயமடைவீர்கள்.
இந்த விக்ருதி ஆண்டு, வெறுப்பிலிருந்த உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வருமானத்தை வாரி வழங்கும்.
பரிகாரம்:
சிதம்பரத்திலுள்ள தில்லை காளியை, அனுஷம் நட்சத்திர நாளில் தரிசியுங்கள். அனாதை உடலுக்கு ஈமச்சடங்கு செய்ய உதவுங்கள். சாதிக்கும் வல்லமை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.