கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 21 மே, 2010

விக்ருதி ஆண்டு ராசி பலன்

துலாம்
யதார்த்தமான பேச்சால் எல்லோரையும் ஈர்க்கும் நீங்கள் இன, பேதம் பார்க்காமல் எளிமையாகப் பழகுவீர்கள்.
குரு பகவான் 5ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி புதன் 7ம் வீட்டில் வலுவாக நிற்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியுண்டு. பழைய கடன் தீரும். வருமானம் உயரும். இழந்த புகழ், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில் கல்யாணம், சீமந்தம், காது குத்து என்று களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள்தான் இருக்குமே தவிர அன்புக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் வருங்காலத்திற்கு நல்ல பாதையை அமைத்துக் கொடுப்பீர்கள். சித்திரை, ஆனி, ஆவணி அல்லது தை மாதத்தில் மகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 6வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். ஆனால், புதுக் கடன் வாங்க வேண்டி வரும். வருடம் முழுவதும் ராசிக்கு 3ம் வீட்டில் ராகு வலுவாக இருப்பதால் தைரியத்தை இழக்க மாட்டீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகளும் தேடி வரும். வாகனம் வாங்குவீர்கள். ஏழரைச்சனி தொடர்வதால் தலைச்சுற்றல், விபத்து, வீண் சந்தேகம், குழப்பம் வந்துபோகும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். 2.5.10 முதல் குருபகவான் 6வது வீட்டில் மறைவதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். மறைமுகப் பகைகள் வரும். நல்லதைச் சொன்னாலும் அதை தவறாக எடுத்துக் கொள்கிறார்களே என வருந்துவீர்கள். உணவு விஷயங்களில் அதிக அக்கறை காட்டுங்கள். அடிக்கடி கொழுப்பு, சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அரசுக் காரியங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். 9ம் வீட்டில் கேது நிற்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவு, அவருடன் கருத்து மோதல்கள் என வரக்கூடும். நிரந்த வேலையி ல்லாமல் தவித்தவர்களுக்கு ஆடி, ஆவணி மாதங்களில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். 1.9.10 முதல் 31.12.10 முடிய உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்வதால் செல் வாக்கு கூடும். வீட்டை கட்டி முடிப்பீர்கள். என்றாலும் 13.10.10 முதல் 26.11.10 முடிய சுக்கிரன் வக்ரமடைவதால் உடல்நிலை பாதிக்கும். எதிலும் நிதானம் தேவை. கன்னிப் பெண்களே! ஏழரைச்சனி நடைபெறுவதால் காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்காதீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் நல்லபடியாக முடியும். மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாட வேண்டிவரும். வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி புது யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களை வைகாசி மாதத்தில் மாற்றுவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் வேலையாட்களுக்கு முன்பணம் அதிகம் தரவேண்டாம். பெரிய முதலீடுகளை தவிர்க்கப் பாருங்கள். கம்ப்யூட்டர், செல்போன், கட்டட உதிரி பாகங்கள் மற்றும் ஹோட்டல் மூலம் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை, தை, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகஸ்தர்களே! நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். ஆவணி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களின் சொந்த விஷயத்தில் அநாவசியமாக நுழையாதீர்கள். கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! கட்சிப் பூசலில் தலையிடாமல் ஒதுங்கியே இருங்கள். விவசாயிகளே! விளைச்சல் குறைந்து நஷ்டப்பட்டீர்களே! இனி இயற்கை உரங்களை போட்டு வளமாக்கப் பாருங்கள். இந்த விக்ருதி ஆண்டு சின்னச்சின்ன இடையூறுகளைத் தந்தாலும் பக்குவப்படுத்தி வருட முடிவில் வசதியாக்கும். பரிகாரம்: புனர்பூச நட்சத்திர நாளில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள். மன நோயாளிகளுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.