பார்ச்மென்ட் ஜசிங்
தேவையான பொருட்கள்
ஜெலட்டீன் -1 தேக்கரண்டி
தண்ணீர் -6 தேக்கரண்டி
ஜசிங் சீனி(சக்கரை)-200 கிராம்
ஜசிங் நிறங்கள் -விரும்பியது
செய்முறை
(1)ஓருகனமான பாத்திரத்தில் தண்ணீர்,
ஜெலட்டீன் ஆகியவற்றை கலந்து
அரைமணித்தியாலம் ஊறவைக்கவும்.
(2)அதன் பின்பு ஊறவைத்தவற்றை
அடுப்பில் வைத்து மூன்று
நிமிடங்கள் சூடு படுத்தினால்
பசை(பேஸ்ட்) போல உருண்டு
திரண்டு வரும் பின்பு அதனை
அடுப்பில் இருந்து இறக்கவும் .
(3)பின்பு இறக்கிய பாத்திரத்தில்
உள்ள பசையின்(பேஸ்ட்)அளவுக்கு
தேவையான அளவில் ஜசிங்சீனி
(சக்கரை) கலந்து பூரிமா அல்லது
இடியப்ப மா பதத்தில் குழைக்கவும்.
(4)அதன் பின்பு மாவை ஓரு பலகையில்
வைத்து கட்டையால் தேய்த்துக்
கொள்ளவும் .
(5)அதன் பின்பு அதில் பூ,பழங்கள் போன்ற
வடிவங்களை செய்து ஓருமணித்தியாலம்
அதனை காய விடவும் .
செவ்வாய், 9 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.