கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 1 மே, 2010

விளையாட்டுப் பாடல்கள் - 2

சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
                  தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
                  கோவிற் புறாவே சாய்ந்தாடு
பச்சைக் கிளியே சாய்ந்தாடு
                  பவளக் கொடியே சாய்ந்தாடு

சோலைக் குயிலே சாய்ந்தாடு
                  தோகை மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
                  கற்பகத் தருவே சாய்ந்தாடு
கண்ட தேனே சாய்ந்தாடு
                  கனியே பாலே சாய்ந்தாடு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.