கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தாலாட்டுப் பாடல்கள் -2

ஆராரோ ஆராரோ
                  ஆரியவரோ ஆரியவரோ
ஆரடித்து நீயழுதாய்
                  கண்மணியே கண்ணுறங்காய்

கண்ணை யடித்தா ரார்
                   கற்பகத்தைத் தொட்டா ரார்
தொட்டவரைச் சொல்லியழு தோள்
                  விலங்கு போட்டு வைப்போம்

அடிததவரைச் சொல்லியழு
                 ஆக்கினைகள் பண்ணி வைப்போம்
பாட்டி அடித்தாளோ
                 பாலூட்டும் கையாலே

அத்தை அடித்தாளோ
                அமுதூட்டும் கையாலே
மாமன் அடித்தானோ
                மகிழ்ந்தெடுக்கும் கையாலே
அண்ணன் அடித்தானோ
                அனைத்தெடுக்குங் கையாலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.