கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 8 ஏப்ரல், 2010

பூனையும் நரியும்-4

தொடர்ச்சி ......

அடுத்த நாள் பூனை இரைதேடிக்கொண்டு
இருக்கும் போது அந்த வழியாக வந்த நரி
பூனை இரை தேடிக் கொண்டிருப்பதை
கண்டது. நரி பூனையிடம் தளபதியாரே
வணக்கம் என்று கூறியது சத்தம் கேட்ட
பூனை திரும்பி பார்த்தது அதன் பின்பு
பூனை நரிக்கு வணக்கம் கூறியது.அதன்
பின்பு நரி பூனையிடம் தாங்கள் நேற்று
என்னிடம் நாளை எனது வளைக்கு
வருவதை பற்றி யோசித்துவிட்டு வந்து
கூறுவதாக கூறினீர்கள் இன்று நீங்கள்
என்ன முடிவை எடுத்து இருக்கின்றீர்கள்
என்று கேட்டது அதற்கு பூனை சிறிது
நேரம் யோசித்துவிட்டு நான் இன்று
உன்னுடன் உனதுவளைக்கு வருகின்றேன்
என்று கூறியது.அதனை கேட்ட நரிக்கு
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது அது
தனது மனதில் இந்த காட்டின் ராஜாவான
சிங்கத்தின் தளபதியான இந்த சிங்கன்
என்னுடைய விருப்பத்தை மதித்து எனது
வளைக்கு வருவதாக  கூறுகின்றார்
ஆகவே நான் இவருக்கு தேவையான
உணவை கொடுத்து உபசரிக்க வேண்டும்
என்று நினைத்தது. அதன்பின்பு பூனையை
அழைத்து கொண்டு நரி தனது வளைக்கு
சென்றது பின்பு நரி தனது வளையில்
பூனைக்கு விருப்பமான உணவுகளை
பற்றி பூனையிடம் கேட்டு விட்டு
அவற்றை செய்து பரிமாறியது.

-தொடரும்   -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.