கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 13 மே, 2010

பூனையும் நரியும்- 9

தொடரும் 


பூனை அன்று வராததை கண்ட
நரி தனது மனதில் இன்று
சிங்கனுக்கு சிங்கராஜா ஏதாவது
வேலையை கொடுத்து செய்ய
சொல்லியிருக்கலாம் என
நினைத்தது அதன் பின்பு சிங்கன்
நிச்சயமாக நாளை வருவார்
அப்போது எனது வினாவிற்கான
பதிலைத் தருவார் என்று தனது
மனதில் நினைத்துகொண்டது .
ஆனால் பூனையோ வேறு மாதிரி
நினைத்தது எனது பதிலை
நரியிடம் உடனே கூறிவிட்டால்
எனது மரியாதை என்னவாகிறது?
ஆகவே எனது பதிலை அறிய நரி
நிச்சயமாக காத்து கொண்டு
இருக்கவேண்டும் அப்படி என்றால்
தான் எனது சொல்லுக்கு மரியாதை
இருக்கும் அத்துடன் நானும்
சொகுசாக இருக்கலாம் ஆகவே
நான் இன்று வெளியே செல்லக்
கூடாது அப்படி வெளியே சென்றால்
நரியிடம் எனது பதிலைக் கூற
வேண்டி வரும் என நினைத்தது.

தொடரும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.