கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 21 மே, 2010

விக்ருதி ஆண்டு ராசி பலன்

மேஷம்
பொதுவுடைமை மற்றும் திடீர் புரட்சிக்கெல்லாம் சொந்தக்காரரான நீங்கள அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்.
பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நீங்கள் நியாயவாதிகளை காப்பாற்ற சில மாற்று வழிகளையும் கையாளுவீர்கள். உங்களின் பாக்யாதிபதியும் பிரபல யோகாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் விக்ருதி ஆண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். பணம் வரும். வீட்டில் நிலவி வந்த வாக்கு வாதங்கள், திருப்தியற்ற சூழ்நிலை மாறும். சுக்கிரன் உங்கள் ராசிக்குள்ளேயே நிற்பதால் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்கள் பாதகாதிபதி சனிபகவான் இந்த வருடம் முழுக்க 6ம் வீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் யோகம் உண்டாகும். தங்க நகைகள், ரத்தினங்கள் சேரும். இழுபறியாக இருந்த வழக்குகª ளல்லாம் வெற்றியடையும். கடன் பிரச்னையில் இருந்து விடுபடுவீர்கள்.
உங்கள் ராசிநாதனான செவ்வாய் 27.5.2010 வரை நீசகதியில் இருப்பதால் சோர்வு வந்து நீங்கும். ரத்தத்தில் ஹீமோ குளோபின், கால்சியம் சத்துகள் குறையும். 21.7.2010 முதல் 6.9.2010 வரை செவ்வாய் பாதகாதிபதியான சனியுடன் சேர்வதால் இந்த காலகட்டத்தில் சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், பண இழப்புகள், வீண்பழி வந்து நீங்கும். சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதும் வரும். சொத்து வாங்கும்போது மூல பத்திரத்துடன் சரிபாருங்கள். விற்கும்போது ஒரே தவணையில் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆகஸ்ட் மாதம் முழுக்க சுக்கிரன் 6ல் மறைவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்துவலி வந்து நீங்கும். முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் கேது தொடர்வதால் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் மூழ்கி முத்தெடுப்பீர்கள். வெளிமாநில புண்ணியதலங்கள் செல்வீர்கள். வி.ஐ.பிகளின் ந ட்பால் செல்வாக்கு அடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். குல தெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். மகளின் கல்யாணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல் நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். ராசிக்கு 9ம் வீட்டில் ராகு தொடர்வதால் தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். மருத்துவச் செலவுகளும் உண்டு. பிதுர்வழி சொத்துகளைப் பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். 14.4.2010 முதல் 1.5.2010 முடிய மற்றும் 7.11.2010 முதல் 20.11.2010 முடிய உள்ள நாட்களில் மட்டும் குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பார். மற்ற நாட்களில் எல்லாம் 12ம் வீட்டில் சென்று மறைவதாலும் உங்கள் ராசிக்கு விரய வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதாலும் வீண் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த சாட்சியமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். ரிசர்வ் வங்கி அங்கீகரிக்காத வங்கிகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். பிள்ளைகளின் படிப்புச் செலவு அதிகரிக்கும். வீடு கட்டும் சுபச் செலவையும் குருபகவான் தருவார். கன்னிப்பெண்களே! உங்களின் கவனம் உயர்கல்வி மீது திரும்பும். தள்ளிப்போன கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களே! நீங்கள் ஆசைப்பட்ட கல்லூரியில் உயர்கல்வியை தொடருவீர்கள். சிலருக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிட்டும். வியாபாரிகளுக்கு சரக்குகளெல்லாம் தேங்கிப் போனதே! வருடப் பிறப்பின்போது புதன் சாதகமாக இருப்பதால் அவையெல்லாம் விற்றுத் தீரும். ஆனி, ஆவணியின் பிற்பகுதி, புரட்டாசி, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ஹார்ட்வேர், ஹோட்டல், லாட்ஜிங், டிரான்ஸ்போர்ட் போன்ற துறைகளில் இருப்போர் ஏற்றம் பெறுவார்கள். லாப அதிபதி சனி 6ம் வீட்டில் நிற்பதால் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகஸ்தர்களே! சூழ்ச்சியாலும் மறைமுக எதிரிகளாலும் அவமானத்தை சந்தித்தீர்களே, இனி உங்கள் கை ஓங்கும். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். ஆனி, ஆடி, தை, மாசி மாதங்களில் வேறு சில வாய்ப்புகளும் தேடிவரும். 19.10.10 முதல் 28.11.10 வரை அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைஞர்களே, புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். அரசியல்வாதிகளே! ஜெயிக்கும் அணியில் இடம் பிடிப்பீர்கள். விவசாயிகளே, மகசூல் பெருகும். நிலத் தகராறு தீரும். இந்த விக்ருதி வருடம் உங்களின் சாதனைப் பட்டியலை நீட்டிக்கும்; பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும். பரிகாரம்: சஷ்டி திதி அல்லது உத்திர நட்சத்திர நாளில், திருத்தணி சென்று முருகனை வணங்குங்கள். சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிக் கூடத்தை புதுப்பிக்க உதவுங்கள். மேன்மேலும் வெற்றியடைவீர்கள். ______________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.