உலக உணவு நெருக்கடிக்கான காரணம்:-
உலக உணவு நெருக்கடிக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. சனத்தொகை அதிகரிப்பு பெருந்தொகை உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் நிலவிய காலநிலை சீர்கேடுகள், உயிரியல் எரிபொருள் தயாரிப்பின் மீதான தீவிர நாட்டம், அமெரிக்காவின் ஸ்திரமற்ற கொள்கைகளால் தோன்றிய பொருளாதாரச் சரிவுஃஉலகில் அதிகளவு சனத்தொகை கொண்ட நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாட்டில் உள்ள மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இந்த மக்கள் தமது உணவில் அதிகளவு இறைச்சியைச் சேர்க்கத் தொடங் கியிருக்கிறார்கள். 100 கலோரி சக்தியுடைய இறைச்சித்துண்டை உருவாக்குவ தற்காக 700 கலோரி விலங்குணவைத் தயாரிக்க வேண்டும். விலங்குகளுக்கு உணவாக மனிதர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக உற்பத்தி செய்ய ப்படும் தானியங்களை விடவும் பலமடங்கு தானியத்தை உற்பத்தி செய்வது அவசியம். இது தானியங்களுக்கான கேள்வியை அதிகரித்து உணவு நெருக்கடிக்கு வித்திடு கின்றது.சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறை வடை தல் மற்றும் அதிகமாக கோதுமை விளையும், அவுஸ்திரேலியாவில் நிலவிய வரட்சி சோளம் முதலான தானிய வகைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எதனோல் முதலான இரசாயனங்கள் உயிரியல் எரிபொருட்களை உற்பத்தி செய்தல். இதனால் உணவு உற்பத்திக்கான விவசாய நிலங்களின் அளவும் குறைகின்றது. அத்துடன் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதனால் விவசாயச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.இதுவும் உணவு உற்பத்திகளின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். அரிசி, கோதுமை மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கும் போது உலகவிநியோக ஸ்தர்கள் பதற்றமடைகிறார்கள். அவர்கள் விநியோகிக்கப்படும் அரிசியை ஒட்டு மொத்தமாக விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றார்கள் இதனால் விலைத் தளம்பல் ஏற்படுகின்றது. உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் ஏற்றுமதியை நிறுத்தி விடுகின்றது. இதன் காரணமாக முற்றாக இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் தத்தளிக்கின்றன. இந்தியா, பிரேசில் போன்ற அரிசி ஏற்றுமதி நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்ததால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டதை நாம் அறிவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.