கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 13 மே, 2010

பாயாச வகைகள் - 1

கொண்டைக்கடலை பாயாசம் 

தேவையான பொருட்கள் 
கொண்டைக்கடலை - 1 கப் 
சீனி - 2 கப் 
பால் - 2 கப் 
நெய் - 3 தேக்கரண்டி 
ஏலக்காய்(உடைத்தது) - 5  
கயூ (முந்திரிப்பருப்பு) - 10
செய்முறை 
1 .உரலில் அல்லது கிரைண்டரில் (மிக்சியில்)கொடைக்கடலை,தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மெதுமையாக அரைத்துக்கொள்ளவும்.
2 .அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து அதில் கயூ(முந்திரிபருப்பு);நெய் ஆகியவற்றை போட்டு பொரிக்கவும் .
3 .அடுப்பில் இருந்து வாணலியை (தாட்சியை)இறக்கிய பின்னர் பொரித்தவற்றை வானொலியில்(தாட்சியில்)இருந்து எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும் 
4 .அதன் பின்பு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் அரைத்த கொண்டைக்கடலை, பால் சேர்த்து காச்சவும்.
5 .பால் பொங்கி வந்த பின்பு அதனுடன் சீனியை(சக்கரையை)சேர்த்து காச்சவும் 
6 .இவையாவும் கொதித்த பின்பு உடைத்த ஏலக்காய்,நெய்யில் பொரித்த கயூ(முந்திரிப்பருப்பு)ஆகியவற்றைப் போட்டு அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறவும் 
7 .அதன் பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.
8 .இறக்கிய பின்பு சுத்தமான சுவையான சத்துமிக்க கொண்டைக்கடலை பாயாசம் தயாராகிவிடும்.




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.