கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 10 மே, 2010

பச்சடி வகைகள் - 1

மாங்காய் பச்சடி


தேவையான பொருட்கள்
மாங்காய் (துருவியது) - 2 கப் 
பெருங்காயம் - சிறிதளவு 
தேங்காய் (துருவியது) -1 கப் 
பச்சை மிளகாய் - 10
மிளகு - 1 /2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி 
கறிவேப்பிலை - தேவையானளவு 
உப்பு - தேவையானளவு 

செய்முறை 

1 .கிரைண்டரில்(மிக்சியில்)துருவிய 
    தேங்காய் , பச்சைமிளகாய் , கடுகு 
   ஆகியவற்றை போட்டு ஒன்றிரண்
    டாக அரைக்கவும் .

2 .அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் 
    துருவிய மாங்காய் ,உப்பு ,
    பெருங்காயம்,எண்ணெய் ஒரு 
    தேக்கரண்டி,அரைத்தவைகள் 
   ஆகியவற்றை போட்டு நன்றாக 
    கலக்கவும் .

3 .அதன்பின்பு அடுப்பில் வாணலியை
     (தாட்சியை)வைத்து எண்ணெய் 
     விட்டு சூடாக்கிய பின்பு அதில் 
     கடுகை போட்டு தாளிக்கவும் .

4 .கடுகை தாளித்த பின்பு அதனை 
    எடுத்து அதனை ஏற்கனவே 
    கலந்து வைத்திருப்பவைகளுடன்
    சேர்த்து கலந்து பரிமாறவும் . 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.