உலக உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை
இரண்டாவது உலகப்போரின் பின்னர் குடித்தொகை திடீர் வளர்ச்சிப் போக்கில் சென்றது. விவசாயத்துறை உற்பத்தித்திறனில் வீழ்ச்சிப் போக்கில் சென்றது. உணவு உற்பத்திக்காக உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் பெரும்பகுதி எரிபொருள் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப் படுகின்றது. மக்களின் விலங்குணவு நுகர்வு அதிகரித்ததன் காரணமாக உணவுக்காக உற்பத்தி செய்யப்படும் ஒருபகுதித் தானியங்கள் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்டது. விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து சென்றமை போன்ற உலக உணவு பற்றாக்குறைக்கு பிரதான காரணங்களாக சுட்டிக் காட்டப்படுகின்றது.உலக உச்சி மாநாடுகளின் பிரகடனங்கள் எவையும் உலக உணவு உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை. ஒவ்வொரு நாடுகளும் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் பெரும் நிதியை உணவு உற்பத்தி அடிப்படை நடவடிக்கைகளுக்கு ஒதுக்கவேண்டும்.இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடு நில ஆக்கிரமிப்புக்கும் பொருளாதார சீரழிவுக்கும் வித்திடக்கூடிய வகையில் யுத்தத்திற்கு கூடிய நிதியை ஒதுக்கியதன் விளைவே ஒரு விவசாய நாடான இலங்கையில் ஒரு கிலோக்கிராம் அரிசி நூறுரூபா மேல் தென்பகுதியில் விற்கப்படுகின்றது .எனவே, ஒரு நாடு உணவு உற்பத்தியில் மேம்பட வேண்டுமாயின் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும். உட்கட்டமைப்புக் களான வீதி அமைத்தல், பாலம் அமைத்தல், நீர் வாய்க்கால்களை அமைத்தல், குளம் புனரமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து முதலீடுகளை மேற்கொள்ளல்.விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களுக்கு ஊக்கு விப்புக்களை வழங்கல், விவசாய கல்வியைப் புகட்டுதல் முறையான கமத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குதல். அத்துடன் பசளை, எரிபொருள் முதலான விவசாய உள்ளீடுக ளுக்குரிய விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்தி ருத்தல் .இரசாயன உரவகைகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியதான கூடிய விளைச்சல் தரவல்ல பயிர் இனங்களை அறிமுகம் செய்தல் இவ்விடய ங்களை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு அரசும் நிதி ஒதுக்கீடு செய்து மேற்தர ப்பட்ட செயற்பாட்டில் முதலீடு செய்தால் நிச்சயம் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். 2100 ஆம் ஆண்டு உலக சனத்தொகை தற்போது இருக்கும் சனத்தொகையைவிட இரண்டு மடங்காக உயரும் நிலை இருப்பதால் உலக உணவு உற்பத்தி யையும் இரண்டு மடங்காக அதிகரிக்க சகல தரப்பினரும் முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.