யாழ் கூழ்
தேவையான பொருட்கள்
ஒடியல் மா - 100 கிராம்
(சுத்தம் செய்தது) இறால் - 100 கிராம்
பாதியாக உடைத்த நண்டு - 8
மீன்தலை - 1
புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி
பயிற்றங்காய் - 10
புளி - ஒரு சின்ன உருண்டை
பாலாக்கொட்டை - 100 கிராம்
சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
நற்சீரகம் - சிறிதளவு
செத்தல் மிளகாய் - சிறிதளவு
செய்முறை
1. ஒடியல் மாவை அரிதட்டினால் நன்றாக
அரித்து கழுவி வைக்கவும்.
2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல்மிளகாய்
ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில்
நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.
3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து
வைக்கவும்.
4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன்
பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு
ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.
5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும்
பானைக்குள் போடவும்.
6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும்
சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்
வெள்ளி, 11 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.