யாழ்ப்பாணம் என்ற பெயர் எப்படி வந்தது என்று நாம்
ஆராய்ச்சி செய்தால் யாழ் இசைக்கருவிக்கும்
யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை
காணலாம் .இந்தியாவிலுள்ள சோழ நாட்டில் இருந்து
வந்த பாணன் ஒருவன் ஜெயதுங்கராஜன் முன்னிலையில்
அவனுடைய வாத்தியமான யாழை வாசித்து அவரை
மகிழ்வித்தமையால் மணற்றியின் தென்மேற்கு
பாகத்தை பரிசாகப் பெற்றான்.பரிசாகப் பெற்ற பிரதேசம்
காடாக காட்சியளித்ததாம்.அந்தப் பாணன் காட்டை
அழித்து குடியேறுவதற்கு ஏற்ற இடமாக மாற்றினான்.
அவனும் அவனது சுற்றத்தவர்களும் குடியேறிய
இடத்திற்கு யாழ்ப்பாணம் என்ற பெயர் வழங்கப்பட்டது.
காலப்போக்கில் குடாநாடு முழுவதற்கும் அப்பெயர்
வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.