கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 9 ஜூன், 2010

தமிழர்கள்

பொதுவாக சமயம் இனம் மொழி என 
மூன்று முக்கியமான விடயங்கள் 
ஒவ்வொரு சமுதாயத்துக்கும்  உண்டு.
தமிழ் மொழி பேசுகின்ற மக்களை  
தமிழர்கள் என்றும் அவர்கள் 5000 
ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை 
வரலாற்றைக் கொண்டவர்கள் என்றும் 
அந்த தமிழர்களுக்கு கிட்டத்தட்ட 2000 
 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட 
வரலாறு உண்டு என்பதும் பலருக்கும்  
தெரியும்.உலகம் முழுவதும் தமிழர்கள் 
பரந்து விரிந்து வாழ்ந்தாலும் தெற்காசிய 
திராவிட இனக்குழுவைச்சேர்ந்த மிகப்
பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா  
மற்றும் இலங்கையைச் சேர்ந்தவைகளாகும்.
தமிழர்களின் அடையாளம் தமிழ் மொழியை  
அடிப்படையாகக் கொண்டது என்பது ஒரு 
முக்கியமான விடயம் ஆகும் .தமிழர்களின் 
தோற்றம் பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும் 
தமிழ் இனம் என்பது தொன்மை வாய்ந்த 
மக்கள் இனங்களில் ஒன்று என்ற விடயம் உறுதி
ஆனது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.
இவ்வளவு பெருமைகளை தன்னகத்தேகொண்ட 
தமிழர்கள் இலங்கையிலே  செறிந்து வாழ்கின்ற 
இடம் யாழ்பாணம் ஆகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.