கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 13 ஜூன், 2010

சிம்மம் (09-06-10 தொடக்கம் 22-06-10)

உள்ளொன்று வைத்து புறமொன்று 
பேசத் தெரியாத நீங்கள்,அநியாயங்களை 
தயங்காமல் தட்டி கேட்பீர்கள் .
உங்கள் ராசிநாதன் சூரியன் 15 ம் திகதி முதல்
இலாப வீட்டில் அமர்வதால் மாறுபட்ட அணுகு
முறையால் பழைய சிக்கல்கள்,பிரச்சனைகளுக்கு
தீர்வு காண்பீர்கள்.மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த
உறவினர்கள் இனி பேசுவார்கள் .இலாப அதிபதி
புதன் 16 ம் திகதி முதல் ஆட்சி பெற்று அமர்வதால்
வரவேண்டிய பணம் கைக்கு வரும் .மூத்த
சகோதரர்கள் உதவுவார்கள் வீடு,வாகன பராமரிப்பு
செலவுகள் அதிகரிக்கும்.உங்களின் இரசனைக்கு
ஏற்றமாதிரி வீடு அமையும்.பாதச்சனி தொடர்வதால்
சில நேரங்களில் உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
எட்டில் குரு நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
செலவுகளை குறைக்கமுடியாமல் திண்டாடுவீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி இலாபம் உண்டு.பங்கு
தாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய
பொறுப்புக்கள் தேடி வரும்.

விட்டுக்கொடுத்து விட்டதைப் பிடிக்கும் நேரமிது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.