கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 9 ஜூன், 2010

பலூடா வகைகள் - 1

தேவையான பொருட்கள் 

டின்பால் (கண்டேஸ்ட் மில்க்)  - 1  டின் 
தண்ணீர் - 5 டின் 
சீனி(சக்கரை) -2 மேசைக்கரண்டி 
ரோஸ் எசன்ஸ் - 3 தேக்கரண்டி  
கலரிங்(சிகப்பு அல்லது பச்சை ) - 3 தேக்கரண்டி 
தேசிக்காய் (எலுமிச்சம்பழச்சாறு) - 1 மேசைக்கரண்டி 
கசகசா - 2 மேசைக்கரண்டி 

செய்முறை 
(1)ஒரு பாத்திரத்தில் டின் பால்(கண்டேஸ்ட் மில்க்) ,சீனி
   (சக்கரை),தண்ணீர் ஆகியவற்றை போட்டு நன்றாக 
   கரைத்து வடித்துக் கொள்ளவும்.

(2)அதன் பின்பு வடித்த கலவையினுடன் கலரிங்,ரோஸ் 
     எசன்ஸ்,தேசிக்காய் சாறு (எலுமிச்சம்பழச்சாறு ),
      ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்  .

(3)அதன் பின்பு கசகசாவை சுத்தமாக்கிய பின்பு அதனை 
    அரைக்கப் தண்ணீரில் ஊறவைக்கவும் .

(4)கசகசா ஊறிய பின்பு இதனை ஏற்கனவே கலந்து 
    வைத்துள்ள கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

(5)அதன் பின்பு இக்கலவையை குளிருட்டியில் 
     5 - 6 மணித்தியாலம் வைத்து குளிருட்டவும். 

(6) பின்பு இக்கலவையை குளிருட்டிய பின்பு 
     வெளியே எடுக்கவும் அதன் பின்பு இக்
     கலவையை ஓரளவு சிறிய கிண்ணங்களில் 
     (கிளாசில் ) ஊற்றவும். 

(7) அதன் பின்பு இதனுடன் சிறிய ஜஸ்கட்டி 
      துண்டுகள் சிலவற்றை போட்டு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.