கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 9 ஜூன், 2010

யாழ்ப்பாணம் - 1

யாழ்ப்பாணத்தின் தரைஅமைப்பு 


கடல் மட்டத்தில் இருந்து 9 அடி உயரத்தில் உள்ளதுடன் 
40 அடி என்ற ஆகக்கூடிய உயரத்தில் கீரிமலை உள்ளது. 
யாழ்ப்பாணம் என்றால் அதன் தரைத்தோற்றம், புவியியல் 
அமைப்பு, சமுக அமைப்பு, வரலாறு, பண்பாடு என பல பிரிவுகள் 
 முக்கியமாக உள்ளடக்கப்பட வேண்டும்.பல ஆண்டுகளுக்கு 
முன்னர் தென்னிந்தியாவும் இலங்கைத்தீவும் தற்போது இந்து 
சமுத்திரத்தில் அமிழ்ந்து கிடக்கின்ற பெரு நிலப்பரப்பான 
லெமூரியா கண்டம் எனும் பகுதிகளாக விளங்கின என்று 
 புவியியல் மற்றும் கடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
ஏறக்குறைய 12000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்

கோளினால் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபோது 
 தென்னிந்தியாவும் இலங்கைத்தீவும் இரு நாடுகளாக பிரிந்தன.
 பிற்காலத்தில் ஏற்பட்ட இன்னுமொரு கடற்கோளினால் 
இலங்கையின் வட பாகத்தில் இரண்டு தீவுகள் உருவாகின. 
மேற்கே மிகப்பெரிய தீவும் கிழக்கே சிறிய தீவும் காணப்பட்டதாக 
வரலாறுகள் கூறுகின்றன.காலந்தோறும் ஏற்பட்ட பூகம்பங்களாலும் 
பிரளயங்களாலும் மேற்கே இருந்த பெரிய தீவு பல தீவுகளாக 
பிரிக்கப்பட்டது. காரைதீவு, வேலணை, மண்டைதீவு, அனலைதீவு,
 நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளும் வலிகாமமும் அந்த 
பெருந்தீவின் பகுதிகள் என குறிப்பிடப்படுகின்றன. கிழக்கே ஒன்றாக 
இருந்த எருமைத்தீவு என்று சொல்லப்படுகின்ற சிறு தீவு களப்பு 
கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி எனும் 
பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.