2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
| துடுப்பாட்ட உலகக்கிண்ணம் 2011 ICC Cricket World Cup 2011 | |
| நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
|---|---|
| துடுப்பாட்ட வகை | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
| போட்டித்தொடர் வகை | தொடர் சுழல்முறை, வெளியேற்றம் |
| நடத்துனர்(கள்) | இந்தியா இலங்கை வங்காளதேசம் |
| வெற்றியாளர் | அறியப்படவில்லை |
| பங்குபற்றியோர் | 14 (104 அணிகளில் இருந்து) |
| மொத்தப் போட்டிகள் | 49 (ஆடவிருப்பவை) |
| அதிகாரபூர்வ வலைத்தளம் | 2011 உலகக்கிண்ணம் |
2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் 2011 பெப்ரவரி 19ல் இருந்து ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 14 நாடுகளைச் சார்ந்த அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும். மொத்தமாக 49 போட்டிகள் நடைபெற உள்ளன. 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை குறைவாக பங்கு பற்ற உள்ளன. மொத்தப் போட்டிகள் 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட இரண்டு குறைவானதாகும்.
இந்த உலககிண்ணப் போட்டிகளை பாக்கிஸ்தானும் உடனாக ஏற்று நடத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கைத் துடுப்பாட்ட அணியினர் சுடப்பட்ட நிகழ்வை அடுத்து பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை பாக்கிஸ்தானில் நடத்தும் உரிமைகளை இரத்து செய்தது. லாகூரில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குழுவின் தலைமையகமும் மும்பைக்கு மாற்றப்பட்டது. பாக்கித்தான் 14 ஆட்டங்களை, ஓர் அரையிறுதி உட்பட, நடத்துவதாக இருந்தது. அவற்றில் எட்டு இந்தியாவிற்கும் நான்கு இலங்கைக்கும் இரண்டு வங்காள தேசத்திற்கும் பிரித்துத் தரப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.