- லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும்.
- ஏறத்தாழ 1,800,000 ச.கி.மீs (700,000 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும்.[1] லிபியாவின் மக்கள்தொகையான 6.4 மில்லியன் பேரில் தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன.உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.
- 1951ஆம் ஆண்டு லிபியா இராச்சியம் என விடுதலைப்பெற்றது. 1969ஆம் ஆண்டு ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இன்றுவரை முவாம்மர் அல்-கடாபி ஆண்டு வருகிறார்.
- 2011ஆம் ஆண்டு எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. 23 பெப்ரவரி 2011 அன்றைய நிலவரப்படி லிபிய எதிர்த்தரப்பு பல கடற்கரைப் பிரதேசங்களையும் நகரங்களையும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாயுள்ளன கடாஃபியின் அரசின் கட்டுக்குள் தலைநகர் திரிப்பொலியின் சில பகுதிகளும் தெற்கு பாலைப்பகுதியான சபா நகரமும் மட்டுமே உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன
திரிப்பொலி
நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். லிபியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 1.69 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
விக்கிப்பீடியாவில் இருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.