மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் .
3-ல் கேதுவும், 6-ல் சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவதாலும் சூரியன் ஜன்ம ராசியில் உலவினாலும் அவர் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டோன் ஆவதாலும், தன் உச்ச ராசியில் இருப்பதாலும் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். மன உற்சாகம் பெருகும். மக்களாலும், தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். வேதம், மந்திர, தந்திர சாத்திரங்களில் நாட்டம் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும். தொழிலாளர்களது கோரிக்கைகளில் ஒன்றிரண்டு நிறைவேறும். பொது நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான பொருட்களை வாங்குவீர்கள். 12-ல் சுபக்கிரகங்கள் உலவுவதால் சுபச் செலவுகளே அதிகம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நலம் உண்டாகும். வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள்,
இயந்திரப்பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். முருகனையும்,
திருமாலையும் வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட தேதி: ஏப்.22, 24, 27.
திசைகள்: கிழக்கு, மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 6, 7, 8.
உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும். தொழிலாளர்களது கோரிக்கைகளில் ஒன்றிரண்டு நிறைவேறும். பொது நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான பொருட்களை வாங்குவீர்கள். 12-ல் சுபக்கிரகங்கள் உலவுவதால் சுபச் செலவுகளே அதிகம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நலம் உண்டாகும். வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள்,
இயந்திரப்பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். முருகனையும்,
திருமாலையும் வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட தேதி: ஏப்.22, 24, 27.
திசைகள்: கிழக்கு, மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 6, 7, 8.
ரிஷபம்: கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் .
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் லாப ஸ்தானத்தில் உலவுவதால் மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். நிலபுலங்களின் சேர்க்கை நிகழும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். கலைஞர்களது எண்ணம் ஈடேறும். மாதர்கள் நலம் கூடப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிரிகள்
அடங்குவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். சூரியன், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணத்தால் சங்கடம் உண்டாகும்; பாதுகாப்பு தேவை. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 24, 27.
திசை: வடகிழக்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.
எண்: 3, 5, 6, 9.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 24, 27.
திசை: வடகிழக்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.
எண்: 3, 5, 6, 9.
மிதுனம்: மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம்
சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நலம் உண்டாகும். தகவல் தொடர்பு துறைகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளுக்கு வரவேற்பு கூடப் பெறுவார்கள். அரசுப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடை போடுவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். 5-ல் சனியும், குருவும் சுக்கிரனும் 10-லும் இருப்பதால் மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். ராகு, கேதுக்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். திடீர்க் கோபம் வரும்.
மற்றவர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. முன்பின் தெரியாதவர்களை நம்பலாகாது. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். கால் மூட்டு, நரம்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 27.
திசை: வடக்கு, கிழக்கு, தெற்கு.
எண்: 1, 3, 5, 6, 9.
மற்றவர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. முன்பின் தெரியாதவர்களை நம்பலாகாது. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். கால் மூட்டு, நரம்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 27.
திசை: வடக்கு, கிழக்கு, தெற்கு.
எண்: 1, 3, 5, 6, 9.
கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம்
சூரியன், குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்ப்புக்கள் விலகும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். குடும்ப நலம் சிறக்கும். பண வரவு திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். பேச்சில் கண்டிப்பும் கறாரும் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். அரசியலில் உள்ளவர்கள் பெரும்பதவி பெறுவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். கலைத்துறையினருக்கும், மாதர்களுக்கும் சுபிட்சம் கூடும். திறமை வீண்போகாது. அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பிதுரார்ஜித சொத்துக்கள் சேரும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். தொலைதூரப் பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கும் வேலைபார்க்க விண்ணப்பித்தவர்களுக்கும் அதற்கான வாய்ப்புக் கூடிவரும். விநாயகரை வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்.22, 24.
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு, தெற்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 4, 6, 8, 9.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்.22, 24.
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு, தெற்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 4, 6, 8, 9.
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்
ராசிநாதன் சூரியன் 9-ல் இருந்தாலும் தன் உச்ச ராசியில் இருப்பதால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையால் நலம் பெருகும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவைப் பெறுவீர்கள். புதன் 8-ல் இருந்தாலும் குருவுடனும் சுக்கிரனுடனும் கூடி இருப்பதால் நீசபங்கம் பெற்று, ராஜயோகத்தைத் தருவார். எதிர்பாராத பொருள் கைக்கு வந்து சேரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். 2-ல் சனி இருந்தாலும் குரு, சுக்கிரன், புதன் ஆகிய பொதுவான சுபக்கிரகங்களின் பார்வையையும், யோக காரகன் செவ்வாயின் பார்வையையும் பெறுவதால் சனியால் விளையக்கூடிய சங்கடங்கள் குறையவே செய்யும். நான்கு கிரகங்கள் 2 -ஆமிடத்தைப் பார்ப்பதால் செல்வநிலையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காணவும் முடியும். 5-ல் ராகு இருப்பதாலும், 5 -ஆம் வீட்டுக்கு அதிபதி குரு 8-ல் இருப்பதாலும் மக்களின் நடத்தையில் கவனம் செலுத்தவும். 8-ல் செவ்வாய் அமர்ந்து இருப்பதால் இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களால் மனச்சலனம் உண்டாகும்.
வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. 11-ல் உள்ள கேது ஞானமார்க்கத்தில் தெளிவை உண்டுபண்ணுவார்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 24, 27.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 5, 6, 7.
வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. 11-ல் உள்ள கேது ஞானமார்க்கத்தில் தெளிவை உண்டுபண்ணுவார்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 24, 27.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 5, 6, 7.
கன்னி: உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம்
உங்கள் ராசிக்கு 7-ல் உலவும் குருவும் 10-ல் சஞ்சரிக்கும் கேதுவும் ஆன்மிகப்பணிகளில் உங்களை ஈடுபடுத்துவார்கள். அதனால் மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். நல்லவர்கள் உங்களுக்குக் கை கொடுத்து உதவுவார்கள். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். தொழில் இருக்க, உபரி வருமானமும் வரும். திரவப்பொருட்கள் லாபம் தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். சூரியன், செவ்வாய், புதன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் அரசியல், நிர்வாகம், பொறியியல், வியாபாரம், ஏற்றுமதி-இறக்குமதி துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்.22, 24, 27.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு.
எண்கள்: 3, 7.
உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். சூரியன், செவ்வாய், புதன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் அரசியல், நிர்வாகம், பொறியியல், வியாபாரம், ஏற்றுமதி-இறக்குமதி துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்.22, 24, 27.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு.
எண்கள்: 3, 7.
துலாம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம்
3-ல் உலவும் ராகுவும், 6-ல் உள்ள செவ்வாயும் புதனும் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேறுவீர்கள். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். புதியவர்கள் உதவுவார்கள். பயணத்தால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். பொறியியல் துறை லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் வருமானம் கூடும். இயந்திரங்கள், எரிபொருட்கள், நிலபுலங்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். வழக்கில் நல்ல திருப்பத்தைக் காணலாம். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். 6-ல் குருவும் சுக்கிரனும் இருப்பதால் உடல்நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சூரியன் 7-ல் இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. விட்டுக் கொடுத்துப் பழகிவருவது அவசியமாகும். கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்.22, 24, 27.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தெற்கு.
எண்கள்: 4, 5, 9.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்.22, 24, 27.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தெற்கு.
எண்கள்: 4, 5, 9.
விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை .
சூரியன், குரு, சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். மக்களாலும், தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் கூடும். மகப்பேறு பாக்கியமும் சிலருக்குக் கிட்டும். கேளிக்கை, உல்லாசங்களில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி பெறுவீர்கள். உழைப்பு வீண்போகாது. உத்தியோகஸ்தர்கள்,
தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. துர்கையையும் விநாயகரையும் வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 24, 27.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 6, 8, 9.
தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. துர்கையையும் விநாயகரையும் வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 24, 27.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 6, 8, 9.
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
ஆகியோர் 4-ல் செவ்வாயுடன் கூடியிருப்பதாலும் சூரியன் 5-ல் உலவுவதாலும் சனி 10-ல் இருப்பதாலும் உங்கள் சுயபலம் கூடும். அறிவாற்றல் பளிச்சிடும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்கள் நலம் கூடப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு உண்டாகும்.
தந்தையால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் அதிகம் நலம் உண்டாகும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால் புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். அலைச்சலைத் தவிர்க்க இயலாது. பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். சர்ப்ப சாந்தி செய்யவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 24, 27.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 5, 6, 8, 9.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 24, 27.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 5, 6, 8, 9.
மகரம்: உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம்
செவ்வாய் 3-ல் இருப்பதாலும், கேது 6-ல் உலவுவதாலும் உங்கள் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பொறியியல் துறை லாபம் தரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். அதனால் மனத்தெளிவும் பிறக்கும். சுக்கிரன் 3-ல் இருப்பதால் கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ராசிநாதன் சனி 9-ல் அமர்ந்து, குருவின் பார்வையைப் பெறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 3-ல் குருவும், புதனும், 12-ல் ராகுவும் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். 4-ல் சூரியன் இருப்பதால் அலைச்சல் கூடும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. துர்கையை வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 24, 27.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
எண்கள்: 6, 7, 9.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 24, 27.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
எண்கள்: 6, 7, 9.
கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம்
சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும், செவ்வாய் 2-ல் இருந்தாலும் குரு, சுக்கிரனுடன் கூடி இருப்பதாலும் பல வழிகளில் பொருள் சேரும். முக்கியமான பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களது திறமை பளிச்சிடும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். அரசியல்வாதிகளுக்கும் மேடைப்பேச்சாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சட்ட வல்லுனர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரம் பெருகும். திரவப்பொருட்களால் ஆதாயம் அதிகம் கிடைக்கும்.
ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். வாக்கு வன்மை வெளிப்படும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். 5-ல் கேதுவும், 8-ல் சனியும் உலவுவதால் மக்களாலும் வேலையாட்களாலும் பிரச்னைகள் ஏற்படும். அதிகம் உழைக்க வேண்டிவரும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 27.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். வாக்கு வன்மை வெளிப்படும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். 5-ல் கேதுவும், 8-ல் சனியும் உலவுவதால் மக்களாலும் வேலையாட்களாலும் பிரச்னைகள் ஏற்படும். அதிகம் உழைக்க வேண்டிவரும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 27.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி
9-ஆம் வீட்டுக்கு அதிபதி செவ்வாயும் 10-ஆம் வீட்டுக்கு அதிபதியான குருவும் ஜன்ம ராசியில் இருப்பது மகா யோகமாகும். இதனால் உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையாலும், மக்களாலும் அனுகூலம் உண்டாகும். சுக்கிர பலத்தால் கலைத்துறையினருக்குப் புகழோடு பொருளும் சேரும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். புதிய பொருட்சேர்க்கை நிகழும். 10-ல் ராகு இருப்பதால் அயல்நாட்டுத் தொடர்புடன் கூடிய தொழில் வலுக்கும். பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். 2-ல் சூரியன் இருப்பதால் பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்கலாகாது. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்படும்; என்றாலும் சமாளித்து வருவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 4-ல் கேது இருப்பதால் அலைச்சல் கூடும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் பிரச்னைகள் சூழும். நிலபுலங்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புத் தேவை. சூரிய நாராயணரையும், விநாயகரையும் வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 24.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
எண்கள்: 3, 4, 6, 9.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 22, 24.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
எண்கள்: 3, 4, 6, 9.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.