வெயிலின் உக்கிரத்தால் சருமத்தில் ஏற்படும்
எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது '
வாழைப்பழ பேஸ்ட்'..
ஒரு வாழைப்பழத்துடன் (வெறும் வாழைப்பழம்
என்றால், அது பூவன் பழத்தையே குறிக்கும்)
சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால்
கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும்
தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும்.
பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி
பெறும்.இந்த வாழை - வெள்ளரி கலவையில்
பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன்
தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும்.
எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது
போல் முகம் பளிச்சிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.