கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

வார ராசிபலன்: 26-08-2011 முதல் 01-09-2011 வரை



மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் செவ்வாய் 3-ஆமிடத்தில் சஞ்சரிப்பது சிறப்பாகும். இதனால் மன உறுதி கூடும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புக்கள் விலகும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிட்டும். புதன் 4-ல் உலவுவதால் மாணவர்களது நிலை உயரும். கடல் வாணிபம் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் அதிகம் பெறலாம். சூரியனும் சுக்கிரனும் 5-ல் அமர்ந்து, குருவால் பார்க்கப்படுவதால் மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புத்திசாலித்தனம் கூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். சனி 6-ல் இருப்பதால் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைத்து வரும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபடலாகாது. குடும்ப நலனில் அக்கறை தேவை. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். 30 -ஆம் தேதி முதல் குரு வக்கிரமாவதால் சுப காரியச் செலவுகள் அதிகமாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 26, செப்.1

திசைகள்: தெற்கு, மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.

எண்கள்: 1, 5, 6, 8, 9.

ரிஷபம்: கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய. 

ராசிநாதன் சுக்கிரன் 4-ல் உலவுவதால் நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் அனுகூலமான போக்கைக் காண்பார்கள். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். சூரியன் 4-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பத்தைக் காணலாம். இதர கிரகங்களிந் நிலை சீராக இராததால் அலைச்சல் அதிகரிக்கும். வீண்சண்டை, சச்சரவுகள் ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பிற மொழி, மத, இனக்காரர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியமாகும். 30-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் பண வரவு அதிகரிக்கும். நற்காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். புதிய பதவிகள், பட்டங்கள் சிலருக்குக் கிடைக்கும். அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் சுமுகமாகப் பழகினால் சங்கடங்களைப் பெருமளவுக்குக் குறைத்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட தேதி: ஆகஸ்ட் 26, செப்.1.

திசை: கிழக்கு, தென்கிழக்கு.

எண்: 1, 6. 


மிதுனம்: மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய. 
சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் மதிப்பு உயரும். பேச்சாற்றல் கூடும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அரசியல், நிர்வாகம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருமானம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்கள் நலம் பல பெறுவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். மக்களால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, வியாபாரம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். திரவப் பொருட்கள் லாபம் தரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சுபிட்சம் கூடும். போக்குவரத்துச் சாதனங்கள் லாபம் தரும். 30-ஆம் தேதி முதல் குரு வக்கிரமாவதால் தொழிலில் முழுக்கவனம் செலுத்தவும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 26, செப்.1.

திசை: கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.

எண்: 1, 3, 4, 5, 6. 

கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய. 
சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும், சூரியன் 2-ல் இருந்தாலும், தன் சொந்த வீட்டில் இருப்பதாலும் தோற்றப்பொலிவு கூடும். குடும்பத்தில் சலசலப்புக்கள் விலகும். குதூகலம் உண்டாகும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். வாக்கில் இனிமையும், கடுமையும் இரண்டுமே கலந்து இருக்கும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். 5-ல் ராகுவும், 12-ல் செவ்வாயும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும். புதன் ஜன்ம ராசியில் இருப்பதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. 30-ஆம் தேதி முதல் குரு வக்கிரமாவதால் சுப காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும்.

அதிர்ஷ்ட தேதி: ஆகஸ்ட் 26, செப். 1.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 6, 7, 8.

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய. 
ராசிநாதன் சூரியன் ஜன்ம ராசியிலேயே வலுத்து, குருவின் பார்வையைப் பெறுவதாலும் செவ்வாய், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் உங்கள் சுய பலம் கூடும். உடல்நலம் சீராக இருந்துவரும். அரசியல்வாதிகளும், அரசுப்பணியாளர்களும் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். பொருளாதார நிலை உயரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள், குடும்பப் பெரியவர்கள் ஆகியோரது அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தெய்வத் திருப்பணிகள் நிறைவேறும். தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். எதிர்ப்புக்கள் இருந்தாலும் சமாளித்து விட முடியும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். ஆன்மிகவாதிகள், இயந்திரப்பணியாளர்கள், இஞ்சினீயர்கள், மருத்துவர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். சனி 2-லும், ராகு 4-லும், புதன் 12-லும், இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அலைச்சல் அதிகமாகும். வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். 30-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் மக்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 26 (முற்பகல்), செப்.1.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.

எண்கள்: 1, 3, 6, 7, 9.

கன்னி: உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய. 
செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியங்களைத் திறம்பட ஆற்றி, வெற்றி பெறுவீர்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாரச் சாதனங்கள், நிலபுலங்கள் ஆகியவை லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாய் இருப்பார்கள். பச்சை நிறப்பொருட்கள் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் அதிகம் பெறலாம். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், கைவினைப் பொருட்கள் ஆகிய துறைகளைச்சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். ஜன்ம ராசியில் சனியும், 8-ல் குருவும் இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். சுப காரியங்கள் நிகழத் தாமதம் ஏற்படும். 12-ல் சூரியனும் சுக்கிரனும் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கண், தலை சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். 30-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் பொருளாதார நிலை உயரும். நல்ல வாய்ப்புகள் கூடிவரும்.

அதிர்ஷ்ட தேதி: ஆகஸ்ட் 26, செப்.1,

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 4, 5, 6, 9.

துலாம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய. 
சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். தந்தையால் நலம் அதிகம் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடிவரும். மன உற்சாகம் பெருகும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு அனுகூலமான போக்குத் தென்படும். கடல் வாணிபம் லாபம் தரும். திரவப்பொருட்களால் அதிகம் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும், 12-ல் சனியும் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வாரப் பின்பகுதியில் எதிலும் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. துர்கை, விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நலம் தரும். சங்கடங்களைக் குறைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 26, 30, செப். 1 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 3, 5, 6.


விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய. 
உங்கள் ஜன்ம ராசியில் ராகுவும், ராசிநாதன் 8-லும் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவைப்படும். அலைச்சலால் உடல் அசைதி ஏற்படும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவதன் மூலம் விபத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். குரு 6-ல் இருப்பதால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. மக்கள் நலனில் கவனம் தேவை. 7-ல் கேதுவும், 10-ல் சுக்கிரனும் இருப்பதால் வாழ்க்கைத்துணை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கூட்டாளிகளை நம்பி முக்கியப் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம். சிலர் முக்கிய நண்பர்களையோ, கூட்டாளிகளையோ விட்டுப் பிரிய வேண்டிவரும். 10-ல் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பதால் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். சனி 11-ல் இருப்பதால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கவே செய்யும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள். 30-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் பண வரவு அதிகரிக்கும். மக்கள் நலம் சீர்பெறும். நற்பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 30, செப்.1.

திசைகள்: கிழக்கு, மேற்கு.

எண்கள்: 1, 8. 

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய. 
உங்கள் ராசிநாதன் குரு 5-ல் அமர்ந்து, 9, 11-ஆம் இடங்களையும், உங்கள் ஜன்ம ராசியையும் பார்ப்பதுடன், சூரியன்,சுக்கிரன் ஆகியோரையும் பார்ப்பதால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள், அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோரது ஆதரவைப் பெற வாய்ப்புக் கூடிவரும். பண நடமாட்டம் கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தான, தர்மப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஆன்மிகவாதிகள், உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். 6-ல் கேது இருப்பதால் மனத்துணிவு கூடும். 7-ல் செவ்வாய் இருப்பதாலும் 12-ல் ராகு உலவுவதாலும் மற்றையோருடன் சுமுகமாகப் பழகவும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. 8-ல் உள்ள புதன் வியாபாரத்தில் வளர்ச்சி காண உதவுவார். மாணவர்களது நிலை உயரும். சனி 10-ல் இருப்பதால் செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபடவும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 30, 31, செப். 1.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 8.

மகரம்: உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய. 
செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். இஞ்சினீயர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புக்கள் இருந்தாலும் வரவேற்பும் கூடும். மாதர்கள் அளவோடு நலம் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். குரு 4-ல் இருந்தாலும் 8, 10, 12-ஆம் இடங்களைப் பார்ப்பதால் பிரச்னைகள் குறையும். தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும். 5-ல் கேது இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கெட்ட பழக்கங்களுக்கு இடம் தரலாகாது. புதன் 7-ல் இருப்பது சிறப்பாகாது. வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 26, செப்.1.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

எண்கள்: 4, 6, 9.

கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய. 
புதன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். திரவப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலைமையில் முன்னேற்றம் காண்பார்கள். பயணத்தின் மூலம் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் அனுகூலமான போக்கைக் காண்பார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். உடல்நலனில் அக்கறை செலுத்தவும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சங்கடங்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியமாகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உழைப்புக்குப் பின்வாங்கலாகாது. 30-ஆம் தேதி முதல் 3-ல் உள்ள குரு வக்கிரம் பெறுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்ப நலம் சீர்பெறும். சங்கடங்கள் குறையத் தொடங்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடுங்கள். கறுப்பு நிறமுள்ள ஏழைக்கும் வயதானவருக்கும் உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 26, 30, செப்டம்பர் 1 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

எண்கள்: 4, 5.

மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய. 
சூரியன், குரு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அலுவலகப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். மருத்துவர்கள் போற்றப்படுவார்கள். இரசாயனத்துறையினருக்கும் விஞ்ஞானிகளுக்கும் வரவேற்பு கூடும். பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கடன் உபத்திரவம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். சாதுக்கள், மகான்கள் ஆகியோரது தரிசனம் கிட்டும். சுப காரியங்கள் நிகழும். எதிர்ப்புக்கள் விலகும். 4-ல் செவ்வாய் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். புதன் 5-ல் இருப்பதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. 6-ல் சுக்கிரன் இருப்பதால் கலைஞர்களுக்குப் பிரச்னைகள் சூழும். மாதர்களுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். ஆடவர்களுக்குப் பெண்டிரால் சங்கடங்கள் அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. 7-ல் சனி இருப்பதால் கெட்டவர்களின் தொடர்பு கூடாது. கூட்டாளிகளால் அதிகம் அனுகூலத்தை எதிர்பார்க்க இயலாது. ராகு 9-ல் இருப்பதால் தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புத் தேவை. தந்தை நலம் ஒருநாள் போல் மறுநாளிராது; கவனம் தேவைப்படும். 30-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண அதிகம் பாடுபட வேண்டிவரும். வீண் வம்பு வேண்டாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 26, 30, செப்.1(முற்பகல்).

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு.

எண்கள்: 1, 3, 7. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.